Discuss here about politics - 2. தினமும் அரசியல் பேசலாம் வாங்க - 2.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்; அமைதி காக்க வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தமிழக அரசு சட்டபூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதை ஏற்று தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு திமுக, மதிமுக, தேமுதிக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013-ல் அந்த ஆலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு தொழிற்சாலை முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்து, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மூடுதல் உத்தரவை ரத்து செய்து தொழிற்சாலையை இயக்குவதற்கு 31.5.2013 அன்று தனது உத்தரவில் அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதா 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையின் 2018-2023 ஆண்டுக்கான உரிமத்தைப் புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்தது. இதனை பரிசீலனை செய்ததில், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.

1. தொழிற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

2. உப்பார் ஆற்றங்கரை மற்றும் தனியார் நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர உருக்குக் கழிவுகளை அகற்றுவதற்கும், உருக்குக் கழிவுகள் உப்பாற்றில் கலப்பதை தடுப்பதற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

3. தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரம் முடிவடைந்து விட்டது. ஆனால், தொழிற்சாலை தீங்கு விளைவிக்கும் மற்றும் பிற கழிவுகள் விதிகள் 2016-ன்கீழ் அங்கீகாரம் பெறாமல், கழிவுகளை தொடர்ந்து வெளியேற்றி வந்துள்ளது.

4. தொழிற்சாலை காற்றின் தரத்தை அறிவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைடு, மிதக்கும் துகள்கள் மற்றும் சல்ஃபர்-டைஆக்ஸைடு போன்ற காரணிகளை வாரிய ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும்போது, ஆர்சனிக் போன்ற கன உலோகக் காரணியையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், காற்றில் ஆர்சனிக் இல்லை என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

5. ஜிப்சம் கழிவுகளை சேகரிப்பதற்கான குளங்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியதை தொழிற்சாலை நடைமுறைப்படுத்தவில்லை.

மேற்கூறிய காரணங்களினால், உரிமம் புதுப்பிப்பதற்கான தொழிற்சாலையின் விண்ணப்பத்தினை 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. மேலும், வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக் கூடாது என்று 12.4.2018 நாளிட்ட நடப்பாணையின் மூலம் இந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9.4.2018 தேதியிட்ட நிராகரித்தல் ஆணையை எதிர்த்து, இந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இம்மனு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் வாதிட்ட தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைவழக்கறிஞர், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார்.

தமிழக அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் நபர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல்துறை வாகனங்களைத் தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, கூடுதலாக காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தமிழக அரசு சட்டபூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸாரின் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 144 தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, போலீஸார் தடியடி நடத்தி பொதுமக்களைக் கலைக்க முற்பட்டனர்.

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களைக் கலைக்க முற்பட்டனர். மேலும், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்களில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “2013-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆலையைத் திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.

தமிழக அரசு மக்களுடைய உணர்வை மதிக்கின்ற அரசாக உள்ளது. மக்களின் உணர்வுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆலைக்கு எதிரான வாதங்களை தமிழக அரசு கடுமையாக முன்வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மக்கள் விரும்புகின்ற எந்தவொரு திட்டத்திற்கும் தமிழக அரசின் ஆதரவு உண்டு. மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. இந்த நிலையில் வன்முறை என்பது எதற்குமே தீர்வாகாது. வன்முறையால் சாதித்து விடலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு உட்பட்டது என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே சென்று கலவரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதா என்பது விசாரணைக்குப் பின் தான் உண்மை நிலை தெரியவரும். தொலைக்காட்சிகளில் இதுகுறித்த செய்தி ஒளிபரப்ப தடை செய்யுமாறு தமிழக அரசு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. யார் செய்தாலும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடியில் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் கலவரம் நடைபெற்றுள்ளது கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும்.

நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளபோது இதுபற்றி பேச முடியாது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக அரசின் நிலைப்பாடும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிலைப்பாடும் ஒன்று தான். எந்த சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து பின்னர் தெரியவரும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும்.

துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் குறித்து முதல்வர் வருந்தினார். இந்த கலவரம் குறித்த அறிக்கையை அரசு வெளியிடும்'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
பாஜக எதிர்ப்பு தலைவர்களை ஒன்றிணைத்த பதவியேற்பு விழா; கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒரே மேடையில் அகிலேஷ் -மாயாவதி

கர்நாடக மாநில புதிய முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். துணை முதல்வராக காங்கிரஸைச் சேர்ந்த பரமேஸ்வரும் பொறுப்பேற்றுக் கொண்டார். மாயாவதி, அகிலேஷ் யாதவ் உட்பட நாடுமுழுவதும் இருந்து பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத, பகுஜன் சமாஜ் கூட்டணி 38, சுயேச்சைகள் - 2 இடங்களில் வெற்றி பெற்றனர். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், மஜதவை ஆதரித்தது. ஆனால் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, கடந்த 17-ம் தேதி எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


இதையடுத்து மஜத மாநில தலைவர் குமாரசாமி காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் சேர்த்து 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைத்தார்.

இதன்படி பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் துணை முதல்வராக பதவியேற்றார். இருவருக்கும் ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் நாடுமுழுவதும் இருந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் கட்சித் தலைவர்களுக்கும் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் மூலம் அந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக பதவியேற்பு விழா மாறியது.

பாஜக எதிர்ப்பு தலைவர்கள்

விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவி்ந்த் கேஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேசமயம், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விழாவில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்பதை தவிர்க்கும் பொருட்டு அவர்கள் விழாவில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் உட்பட 1 லட்சம் பேர் விழாவில் பங்கேற்றதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட குமாரசாமி, அம்மாநில சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமார் சபாநாயகராக பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக பெங்களூருவில் பிற்பகலில் நல்ல மழை பெய்தது. இதனால் பதவியேற்பு விழா நடந்த மைதானத்தில் இருக்கைகள் நனைந்தன. கொட்டும் மழையில் பதவியேற்ற குமாரசாமிக்கு அவரது கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

5 ஆண்டுகள் நீடிக்குமா?

அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 22, மஜதவுக்கு முதல்வர் பதவி உட்பட 12 இடங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் கூடுதல் அமைச்சர்கள் வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் சித்தராமையா உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, முதல்வர் பதவியில் குமாரசாமி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்க அனுமதிக்க கூடாது என்று சில எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இருப்பதால் அவர்களும் முதல்வர் பதவியில் அமர வாய்ப்ப தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். எனினும் இதுபற்றி பிறகு முடிவு செய்யலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
2-வது நாளாக துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் பலி: தீ வைப்பு, நாட்டு வெடிகுண்டு வீச்சு, தடியடி சம்பவங்களால் தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு- உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக நேற்றும் வன்முறை சம்பவங்கள் நீடித்தன. வாகனங்களுக்கு தீ வைப்பு, வெடிகுண்டு வீச்சு, போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. நேற்று நடந்த போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த ஏடிஜிபி தலைமையில் 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ள னர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ரான போராட்டம் 100-வது நாளை எட்டியதை தொடர்ந்து நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீ ஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 19 போலீ ஸார் உள்ளிட்ட 83 பேர் காய மடைந்தனர்.


கலவரத்தில் காயமடைந்தவர் கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பிமகேந்திரனுக்கும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் கார்த்திக் (20), நேற்று முன்தினம் இரவில் உயி ரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 10 ஆனது.

2-வது நாளாக கலவரம்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நேற்று அதிகாலை முதலே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிக அள வில் திரண்டனர். அவர்கள் பிணவறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை பணியிட மாறு தல் செய்ய வேண்டும். ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சரட்கர் தலைமை யில் போலீஸார் வந்து, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லு மாறு எச்சரித்தனர். ஆனால், அவர்கள் மறுக்கவே லேசான தடி யடி நடத்தி விரட்டினர். மருத்துவமனையின் முன் பகுதிக்குச் சென்ற போராட்டக்காரர்கள் அங்கு நின்று முழக்கமிட்டனர். அருகேயுள்ள ராஜாஜி பூங்கா முன்பிருந்து சிலர் மருத்துவமனையை நோக்கி கற்களை வீசினர். இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைவரையும் போலீஸார் தடி யடி நடத்தி விரட்டி அடித்தனர்.

வெடிகுண்டு வீச்சு

இதனால், மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தநேரத்தில் மருத்துவமனை முன்புள்ள சாலையில் ஏராளமா னோர் திரண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. அவை சாலையில் விழுந்து வெடித்துச் சிதறின. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீ ஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். கூட்டத் தில் இருந்தவர்கள் அண்ணா நகர், டுவிபுரம் பகுதிகளில் உள்ள குறுகிய சந்துகளில் சிதறி ஓடினர். போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று தடியடி நடத்தினர்.

துப்பாக்கிச் சூடு

அப்போது, ஒரு கும்பல் அண்ணா நகர் 6-வது தெருவில் பூட்டிக் கிடந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடியது. அங்கு விரைந்த போலீஸார் அவர்களை விரட்டியடித்தனர். மேலும், ரப்பர் குண்டுகளை கொண்டு சுட்டனர். இதில், பலத்த காயமடைந்த தூத்துக்குடி மாப்பிளையூரணி ராமதாஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். இதனால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

மேலும், போலீஸார் நடத்திய ரப்பர் குண்டு துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். தடியடி யில் ஒருவர் காயமடைந்தார். இவர்கள் 8 பேரும் துத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர்.

வாகனங்கள் தீ வைப்பு

பாதுகாப்புக்காக வெளிமாவட்டங்களில் இருந்து போலீஸார் வந்த காவல்துறைக்கு சொந்த மான 2 பேருந்துகள் பிரையன்ட் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு திருமண மண்டம் முன்பு நிறுத்தப்பட்டிருந்தன. அந்த பேருந்துகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்துவிட்டு தப்பியோடியது. இதில் ஒரு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. மற்றொரு பேருந்தில் லேசான சேதம் ஏற்பட்டது.

திமுக பிரமுகர் கார் எரிப்பு

துப்பாக்கிச் சூடு, தடியடியில் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வந்தார். அவருடன் வந்த விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து என்பவரது காரை 3-ம் கேட் மேம்பாலம் பகுதியில் ஒரு கும் பல் வழிமறித்து தீ வைத்தது. இதனால் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பியோடினர். கல்வீச்சு தாக்குதலில் அந்த வழியாக வந்த 8 வாகனங்கள் சேதமடைந்தன.

வன்முறை சம்பவங்கள் தொடர்ந்ததால் தூத்துக்குடி மாநகரம் 2-வது நாளாக நேற்றும் கல வர பூமியாக காட்சியளித்தது. ஏடிஜிபி விஜயகுமார் தலைமையில், ஐஜிக்கள் சைலேந்திரகுமார் யாதவ், வரதராஜூ உள்ளிட்ட 5 ஆயிரம் போலீஸார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை நிறுத்தம்

இதற்கிடையே உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி நேற்று பகல் 1 மணி அளவில் தொடங்கியது. 10 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், 4 நீதித்துறை நடுவர் கள் முன்னிலையில் பிரேத பரிசோதனையை தொடங்கினர். இது, முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 2 உடல் கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மத்தியக் குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டது. முன்னதாக பரிசோதனை செய்த உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; மவுனம் கலைத்தது மத்திய அரசு

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுதொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசை கோரியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகஅறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

மக்கள் அமைதி காக்க வேண்டும். அந்த பகுதியில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், தூத்துக்குடியில் நிலைமை மோசமடைந்தது தொடர்பாகவும் அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை கோரியுள்ளோம்’’ எனக் கூறியுள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 93% தேர்ச்சி: 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வில் 93.36 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 30 பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றிலிருந்து 3 ஆயிரத்து 143 மாணவிகள் உட்பட மொத்தம் 5 ஆயிரத்து 908 மாணவர்கள் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 516 பேர் (93.36 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.26 சதவீதம் அதிகமாகும்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 400 மதிப்பெண்களுக்கும் அதிகமாக 416 மாணவர்களும், 450- மதிப்பெண்களுக்கும் அதிகமாக 40 மாணவர்களும் பெற்றுள்ளனர். ஒரு மாணவி சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மொத்தமுள்ள 70 பள்ளிகளில், 30 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 20 பள்ளிகளில் மட்டுமே 100 சதவீத சேர்ச்சி கிடைத்திருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூடுதலாக 10 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது, “இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஆசிரியர்களின் கடின உழைப்பும், மாணவர்களின் ஒத்துழைப்பும்தான் காரணம். 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை ஊக்கப்படுத்தி, அவ்வாறு தேர்ச்சி அளிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறோம். சில பள்ளிகளில் ஒருவர் தோல்வியடைந்ததால், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட முடியவில்லை என அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். அதற்கான காரணங்களை ஆராய்த்து தேர்ச்சியை மேலும் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு என இரு தேர்வுகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய கோயம்பேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை எஸ்.மிருணாளினி கூறும்போது, “பள்ளிக்கு வராத மாணவர்களை, வீட்டுக்கே சென்று அழைத்து வந்து பாடம் நடத்தினோம். பெற்றோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினோம். காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம். அதன் மூலம் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை வழங்க முடிந்தது” என்றார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்வர் விளக்கம்: துணை முதல்வர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடந்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மத்திய உள்துறை அறிக்கை கேட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆளுநர் அழைத்ததன் பேரில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று இரவு 9.25 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்றனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரும் அவர்களுடன் சென்றனர்.

சுமார் 30 நிமிட நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தற்போது அங்குள்ள நிலவரம் குறித்தும் ஆளுநரிடம் முதல்வர், துணை முதல்வர், டிஜிபி ஆகியோர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
3 மாநிலங்கள் நிராகரித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்த தமிழகம்: சுற்றுச்சூழல் அமைப்பு குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் நச்சு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் மஹாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்கள் நிராகரித்த நிலையில் தமிழகம் அதற்கு அனுமதி தந்ததாக சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தமிழக அரசு மீது கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில், தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையம் என்ற தொண்டு நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை இந்தியாவில் அமைக்க பல இடங்களில் இடம் தேடியது. தாமிர ஆலையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதி கொடுப்பது என்பது எளிதான வி‌ஷயம் அல்ல.

இதன் சீரழிவுகளை தெரிந்து கொண்டவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். மஹாராஷ்டிரா, குஜராத், கோவா இந்த ஆலையை தொடங்க முதலில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆலையை தொடங்க முடியவில்லை. இந்த சூழலில்தான், ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க தமிழகம் ஒப்புக் கொண்டது.

தமிழக அரசும் ஒப்புக் கொண்டது. ஸ்டெர்லைட் ஆலை தொடக்கத்தில் 4 லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த ஆலையை தொடங்குவதற்காக, ஸ்டெர்லைட் நிர்வாகம் தவறான தகவல்களை தந்து சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்புகளிடம் இருந்து அனுமதி பெற்றது.

அரிய கடல் வளத்தை கொண்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தான் தேசிய கடல் பூங்கா உள்ளது. அப்படிப்பட்ட இடத்திலேயே தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்று விட்டனர்.

இதுபோன்ற நச்சு ஆலைகளை அமைக்கும் முன்பாக அப்பகுதி மக்களிடம் தகவல்களை தெரிவித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒப்புதலுடன் தான் ஆலையை அமைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அப்படி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.

மாறாக அதுபோன்ற ஆலோசனைக்கூட்டங்கள் நடந்ததாக போலியான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. இந்த ஆலை தொடங்கப்ப்டடு நச்சுப் பொருட்கள் வெளியேறுவதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

பல நீதிமன்றங்களும் இதனை சுட்டுக்காட்டியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை இயக்கும் வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியுள்ளதை எங்கள் அமைப்பு நடத்திய ஆய்வுகளிலும் உறுதியாகியுள்ளன’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
எல்லையில் பாக். தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி: 76 ஆயிரம் கிராம மக்கள் வெளியேறினர்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். எல்லைப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதால் ஆர்னியா நகரம் மற்றும் சுமார் 100 கிராமங்கள் வெறிச்சோடின.

ஜம்மு காஷ்மீரில் ஜம்மு, கதுவா, சம்பா ஆகிய மாவட்டங்களில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்று 9-வது நாளாக தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் சம்பா மாவட்டத்தில் இருவர், கதுவா மாவட்டம் ஹிரா நகர் பகுதியில் ஒருவர், ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ்.புரா பகுதி யில் இருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆர்னியா நகரம் மற்றும் சுமார் 100 கிராமங்கள் வெறிச்சோடிக் காணப்படுகிறன. சர்வதேச எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆர்னியா வில் 18,500 பேர் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இங்கு கால் நடைகளைப் பராமரிக்கவும் வீட்டில் திருட்டுப் போவதை தடுக்கவும் ஒவ்வொரு பகுதியிலும் சிலர் மட்டுமே தங்கியுள்ளர். இவர்களுடன் பாதுகாப்புக்காக போலீஸார் உள்ளனர்.

இதுபோல் ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வெளியேறிய அனைவரும் உறவினர் வீடுகள் அல்லது அரசு முகாம்களில் தங்கியுள்ளனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,910
Likes
140,860
Location
Madras @ சென்னை
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் உடலைப் பதப்படுத்தும் விவகாரம்; மாற்றம் கோரிய தமிழக அரசு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் உடலை வரும் 30-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற தமிழக அரசு வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்ட்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர் உடற்கூறு ஆய்வில் தனியார் மருத்தவரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, மறு உத்தரவு வரும்வரை உடற்கூறு ஆய்வு செய்த உடல்களைப் பாதுகாக்க உத்தரவிட்டு அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு வழக்கு மே 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி உடல்களைப் பாதுகாக்கும் நிலையில், உடலைக் கேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்துவதால் அரசு எப்படி செயல்பட வேண்டும் என விளக்கமளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்து இன்று முறையிட்டது. இந்த வழக்கை இன்று மதியம் நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அமர்வு விசாரித்தது.

அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, உடல்களைக் கேட்டு உறவினர்களிடமிருந்து கடிதம் வந்துள்ளது, நீதிமன்ற உத்தரவால் உடலைத் தர முடியவில்லை என்பதால் அங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், இறந்தவர்கள் உடல்களின் மீதான கண்ணியத்தைக் காக்க வேண்டியுள்ளது என வாதிட்டார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, அரசின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன் குடும்பத்தினரையே கொன்று ஆதரவற்றோர்களாக மாற்றிய காவல்துறை அவர்களின் கண்ணியத்தைக் காக்கிறோம் என்று தெரிவிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், உடலை ஒப்படைக்கக்கூடாது என்ற உத்தரவில் மாற்றம் கோரி குடும்பத்தார் யாரும் வராத நிலையில் அரசு ஏன் விளக்கம் கேட்கிறது என கேள்வி எழுப்பினர்.

பின்னர் அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், பலியானவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அரசின் இன்றைய இடைக்கால மனு மீது மனுதாரர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.