Discuss here about politics - 2. தினமும் அரசியல் பேசலாம் வாங்க - 2.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 12 பேரை போலீஸார் சுட்டுக்கொன்ற விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு கள ஆய்வு நடத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்த மனுவை ஏ ராஜராஜன் என்பவரின் வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையால், அப்பகுதிச் சுற்றுச்சூழல் மாசுடுபடுகிறது, சுகாதாரக்கேடு உண்டாகிறது, அதை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினார்கள். கடந்த 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லும் போது, போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 12 பேர் இரக்கமின்றி, சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மிகவும் கவலையளிக்கக்கூடிய, மனித உரிமைகள் மீறப்பட்ட தீவிரமான இந்த விஷயத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிடாமல், தமிழக அரசிடமும், போலீஸ் டிஜிபியிடமும் மட்டும் அறிக்கை கேட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்பட்டு வேகமாகத் தலையிடாவிட்டால், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீஸார் மக்களைச் சுடும் சம்பவங்கள் தொடர்ந்துவிடும்.

ஆதலால், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களைக் கள ஆய்வு நடத்த வேண்டும், அல்லது, சார்பில்லாத அமைப்பு மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இதில் விரைந்து செயல்படாமல் இருந்தால்,போலீஸார் தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை எல்லாம் அழித்துவிடுவார்கள். ஆதலால், இதில் விரைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட உத்தரவிடவேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக அறிவிப்பு

தூத்துக்குடி தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் சார்பாக நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி மாநில திமுக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (மே 25) மாவட்ட தலைநகரங்கள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் நேற்று திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய குடியரசுக் கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் புதுச்சேரியில் நாளை (மே 25) காலை சுதேசி காட்டன் மில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டு புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக முடிவு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தெற்கு மாநில அமைப்பாளர் எம்எல்ஏ சிவா இன்று கூறியதாவது:

''தூத்துக்குடியில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினர்களைப் பார்க்க வந்தவர்கள் மீதும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்று, இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். பொதுமக்கள் மீது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் தமிழக அரசின் மீது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல- ஒட்டுமொத்த தமிழக, புதுச்சேரி மக்களும் ஆத்திரத்திலும், கடும் கோபத்திலும் இருக்கிறார்கள்.

தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், அதிமுக அரசின் அலட்சியத்தால் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ள விபரீதமான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டு நாளை ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இப்போராட்டத்துக்கு புதுச்சேரி மாநிலத்தில் திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
சிகிச்சையின் போது என்னென்ன சாப்பிட்டார்?- ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியீடு

z-download 4.jpg


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த நேரத்தில் தனக்கு வேண்டிய உணவு குறித்து கைப்பட எழுதிய பதிவுகள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில் உடல் நலம் தேறிவந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.


ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரம் அவரை யாரும் சந்திக்கவில்லை என்று ஒரு கருத்தும், சிலர் சந்தித்தார்கள் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் பெரிதாக பிரச்சினை கிளப்ப அதுகுறித்து ஒரு நபர் ஆணைய விசாரணை அமைக்கப்பட்டது.

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதில் பலரும் தங்கள் தரப்பு சாட்சியத்தை அளித்து வருகின்றனர். இடையில் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ திடீரென ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.

ஆறுமுகசாமி ஆணையத்திலும் அதை அளித்தார். ஜெயலலிதா சிகிச்சையில் நன்கு உடல்நிலை தேறி வந்தார், திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும்விதமாக அந்த வீடியோ அமைந்தது.

இதற்கிடையே ஆறுமுக சாமி ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதா தரப்பு மருத்துவர் சிவகுமார் ஜெயலலிதா பேசிய ஆடியோ தொகுப்பின் பென் டிரைவை அளித்துள்ளார்.

அதில் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட அனுபவத்தை ஜெயலலிதா பேசுவதாக அமைந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2, 2016 அன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட உணவுப் பட்டியலையும் மருத்துவர் சிவக்குமார் அளித்தார். அதில் பச்சை கலர் மையில் தனக்கு வேண்டியதை எழுதியுள்ளார்.

அதில் அதிகாலை 4.55க்கு லோட்டஸ் தண்ணீர், 5-05 லிருந்து 5.35 காலை உணவு இட்லி 1.5, பிரட் 4 ஸ்லைஸ், காஃபி 400 மில்லி, இளநீர் 230 மில்லி

5.45 மணிக்கு க்ரீன் டீ 200 மில்லி, 8 மணிக்கு ரிவைவ் 200 மில்லி, 8.55க்கு ஒரு ஆப்பிள், 9.40க்கு காஃபி 120 மில்லி, போர்பன் பிஸ்கெட் 5, காலை 11.35 மணிக்கு பாஸ்மதி ரைஸ் ஒரு கப்.

மதிய உணவு 2 மணியிலிருந்து 2.35 வரை பாஸ்மதி ரைஸ் 1.5 கப், தயிர் 1 கப், கிர்னி பழம் அரை கப், மதியம் 2.45க்கு ஜான்வியா என்கிற மாத்திரை, மாலை 5.45க்கு காபி 200 மில்லி.

இரவு உணவு மாலை 6.30 லிருந்து 7.15க்குள் வால்நட், உலர் பழங்கள் அரை கப், இட்லி உப்புமா 1 கப், தோசை 1, பிரட் 2 ஸ்லைஸ், பால் 200 மில்லி, பின்னர் 7.25க்கு மிக்னர் என்ற மாத்திரையும், ஜான்வியா என்ற மாத்திரையும் என தனது கைப்பட எழுதியுள்ளார்.

அவரது எடை 106.9 கிலோவாக இருந்துள்ளது. தனது உணவைக் கடுமையான கட்டுப்பாட்டுடன் கடைப்பிடித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் ஆறுமுகசாமி ஆணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
மஹாராஷ்டிர முதல்வர் குறித்து உத்தவ் தாக்ரே வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சை: தேர்தல் ஆணையத்தில் புகார்

மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டது பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் உள்ள பால்கர் மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் பாஜகவினரும், சிவசேனா கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தொண்டர்களிடம் பேசுவது போன்ற ஆடியோவை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் முதல்வர் பட்நாவிஸ் பேசுகையில், ''நம்முடைய பால்கர் தொகுதியை யாரேனும் கைப்பற்றுவதற்குப் போட்டியாக வந்தால், நம்முடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்தால், அவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மிகப்பெரிய தாக்குதலை நடத்தவேண்டும். பாஜக யாரென்று வெளிப்படுத்த வேண்டும். எவ்வளவு பெரிய விலை கொடுத்தாலும், இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு எந்த விஷயத்தையும் பயன்படுத்தலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பட்நாவிஸ் பேசுவதாகக் கூறப்படும் இந்த ஆடியோவை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே வெளியிட்டு, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வலியுறுத்தியுள்ளன.

ஆனால், இது போலியானது, சித்தரிக்கப்பட்ட ஆடியோ என்று பாஜக மறுத்துள்ளது. முதல்வர் பட்நாவிஸ் பேசிய ஒட்டுமொத்த உண்மையான ஆடியோவை பாஜக விரைவில் வெளியிடும். நவீன தொழில் நுட்பங்களை சிவசேனா கட்சி தவறாகப் பயன்படுத்துகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், ’’சிவசேனா வெளியிட்ட இந்த ஆடியோ குறித்து முதல்வர் பட்நாவிஸ் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கையைச் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்க வேண்டும்.

ஒருவேளை இந்த ஆடியோ உண்மையாக இருந்தால், முதல்வர் பட்நாவிஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேசமயம், போலியாக இருந்தால், உத்தவ் தாக்கரே மீது பட்நாவிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறுகையில், ’’சிவசேனா கட்சி முழுமை பெறாத ஆடியோவையும், தங்களின் தேவைக்கு ஏற்றார்போல் எடிட் செய்தும் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம், தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளோம். விரைவில் பட்நாவிஸ் பேசியது தொடர்பான முழுமையான ஆடியோவை வெளியிடுவோம்’’ எனத் தெரிவித்தார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
மோடி அரசு 4 ஆண்டு நிறைவு: ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு விமர்சித்த ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில்,அவரின் ஆட்சி குறித்து ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தக் கூட்டணியின் பிரதமராக மோடி, கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பதவி ஏற்றார். மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ம் ஆண்டு தொடங்குகிறது.

இந்த 4 ஆண்டுகளில் தங்கள் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பாஜக பெருமையாகப் பேசி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு விமர்சித்துள்ளார்

மோடியின் ஆட்சியில் முக்கிய 4 துறைகளான வேளாண்மை, வெளியுறவுத்துறை, பெட்ரோல் டீசல் விலை, வேலைவாய்ப்பு, ஆகியவற்றில் தோல்வி அடைந்துவிட்டது(எப்) என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தத் துறைகளில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தாத காரணத்தால், தோல்வி அடைந்துவிட்டது என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், ஆட்சியைக் குறித்தும், தனது சுயபெருமை குறித்து மக்களிடம் பேசுவதிலும், ஆட்சியை விளம்பரப்படுத்தி கவர்ச்சிகரமாக ஸ்லோகன் உருவாக்குவதால் ஆகியவற்றுக்கு ஏபிளஸ் மதிப்பும் (முதலிடம்) ராகுல் அளித்துள்ளார்.

ஆனால், சர்வதேச அளவில் உயர்த்திப் பேசப்பட்ட யோகாவுக்கு பி மைனஸ் கிரேடும் வழங்கியுள்ளார். அதாவது தொடக்கத்தில் யோகாவை முன்னெடுக்க முயற்சித்த பாஜக அரசு, பின்னாளில் அதில் கவனம் செலுத்தாமல் பி மைனஸ்அளவுக்கு சென்றுள்ளது.

இதை ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மரணம்

z-26CHRGNGURU.jpg

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு நேற்று காலமானார். அவருக்கு வயது 57.

வன்னியர் சங்கத்தின் தலை வர் மற்றும் பாமக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு. சில ஆண்டுகளாக நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் தங்கி ஓய்வு எடுத்து வந்த அவருக்கு கடந்த மார்ச் 12-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. சுவாசத்தை சீராக்க டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப் பட்டது.

குருவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எடுத்து வந்தனர்.

அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை சுவாசக்கருவி இல்லமால் சுவாசிக்க வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு காலையில் ஒன்றரை மணி நேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் என தினமும் மொத்தம் 3 மணி நேரம் சுவாசக்கருவி இல்லாமல் அவர் சுவாசித்தார். நேற்று உடல்நிலை மோசமடைந்ததால், அவர் காலமானார். ஜெ.குருவின் மறைவு, பாமகவினரை சோகத் தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
பிரதமர் மோடியின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூற ஓராண்டு போதாது: தமிழிசை பேட்டி

பிரதமர் நரேந்திர மோடியின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூற ஒராண்டு போதாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நிறைவடைந்து இன்றுடன் (சனிக்கிழமை) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனைக் கொண்டாடும் விதமாக, தமிழக பாஜக தலைவர் அக்கட்சியின் தலைமையகமான தி.நகரில் அமைந்துள்ள கமலாலயத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “எத்தனை எதிர் விமர்சனங்கள் வந்தாலும் வருங்காலத்தில் பாஜக மட்டும் தான் நிலையாக இருக்கும். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும் என 70 சதவீதத்திற்கும் மேலான மக்கள் சொல்வதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதனால், பாஜக நிச்சயம் அடுத்த தேர்தலிலும் ஆட்சியை அமைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற ஒராண்டு போதாது. அந்தளவிற்கு எங்களின் சாதனைகள் இருக்கின்றன.

தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பாஜக ஆட்சி பற்றி எதிர்மறை தகவல்கள் வேகமாக பரப்பப்படுகின்றன” என தமிழிசை தெரிவித்தார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
விழிப்புணர்வு இல்லாத சமூகம் சுதந்திரத்தை இழக்கும்: நீதிபதி செலமேஸ்வர்

விழிப்புணர்வு இல்லாத சமூகம் அதற்கென அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள சுதந்திரங்களைக்கூட இழந்துவிடும் என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கூறியிருக்கிறார்.

மேலும், "ஒரு சிவில் சமூகமானது நாட்டின் சட்டமியற்றல் நடவடிக்கைகள், அவற்றை செயல்படுத்தும் அரசாங்கம், நீதித்துறை என எல்லாவற்றையுமே தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீதித்துறையானது மாநிலத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. அது நாட்டின் ஓர் அங்கமே" எனக் கூறியிருக்கிறார்.

ஆந்திரப் பிரதேசம் வர்த்தக கூட்டமைப்பின் 90-வது ஆண்டு விழாவை முன்னிட்டு "ஜனநாயகத்தைப் பேணுவதில் சிவில் சமூகத்தின் பங்கு" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, "ஒரு சிவில் சமூகமானது நாட்டின் சட்டமியற்றல் நடவடிக்கைகள், அவற்றை செயல்படுத்தும் அரசாங்கம், நீதித்துறை என எல்லாவற்றையுமே தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீதித்துறையானது மாநிலத்துக்கு அப்பாற்பட்டது அல்லது. அது நாட்டின் ஓர் அங்கமே

இவற்றில் எந்த ஒரு துறை சரியாக இயங்காவிட்டாலும் மக்கள் சுதந்திரம்தான் பாதிக்கப்படும். சுதந்திரம் தைரியமானவர்களுக்கானது. கோழைகளுக்கு அது ஒருபோதும் வசப்படாது. அரசியல் சாசனம் அளித்துள்ள சுதந்திரத்தை யாரும் பறிக்க முடியாது என்பதை நீங்கள் தொடர்ந்து நிலைநாட்டிக்க் கொண்டே இருந்தால்தான் அதை நீங்கள் நீண்டகாலத்துக்கு அனுபவிக்க முடியும்.

பெரும்பாலான சமூகம் விழிப்புடன் இல்லாததன் காரணாத்தாலேயே அத்தகைய சுதந்திரத்தை இழந்திருக்கிறது. அதன் பின் இழந்த சுதந்திரத்தை மீடக் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது.

இதை தவிர்ப்பதற்கு வழி இருக்கிறது. ஒரு சமூகம் விழிப்புடன் இருந்தால் அது சார்ந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தால் சுதந்திரம் பறிபோகாது. பாதுகாப்பாகவே இருக்கும்" என்றார்.

விவாதங்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்

அவர் மேலும் பேசும்போது, "விவாதங்கள் நீடிக்கும்வரை ஜனநாயகம் சிறப்பாக இருக்கும். விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் அது அபாயகரமான சமிக்ஞை. உங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் மதிப்பு மரியாதையுடன் இத்தேசத்தில் வாழ வேண்டும் என்றால் அதற்கு ஜனநாயக முறையில் அரசாங்கம் நடக்க வேண்டும்.

நீதித் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். நாடாளுமன்ற நடைமுறைகள் உன்னதமாக இருக்க வேண்டும். அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் முடங்கிவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

இத்தேசத்தில் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் உருவாக்கப்பட்டது செலமேஸ்வர் என்ற தனி நபரையோ அல்லது ஏதோ எக்ஸ், ஒய்., இசட்டையோ மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. மக்களை அரசாங்கத்தின், சட்டமியற்றல் அமைப்பின் அதிகார துஷ்பிரயேகங்களில் இருந்து காப்பாற்றவே அவை உருவாக்கப்பட்டன" எனப் பேசினார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
எழும்பூர் திருமண மண்டபத்தில் மொய்ப் பணம் ரூ.5 லட்சம் திருட்டு: காவல் ஆணையர் அலுவலகம் அருகில் துணிகரம்

எழும்பூரில் திருமண மண்டபத்தில் பரபரப்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி மொய்ப் பணம் ரூ.5 லட்சம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆணையர் அலுவலகம் எதிரில் புனித அந்த்ரேயா சர்ச் உள்ளது. இங்கு திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்கும். நேற்று மாடம்பாக்கம், வேங்கை வாசலைச் சேர்ந்த ஆல்வின் சார்லஸ் (62) மகள் திவ்யாபாலாவின் திருமணம் நடந்தது.

ஏராளமான உறவினர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். சமூகத்தில் பெரிய மனிதர் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் மணமக்களுக்கு மொய் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினர். திருமணத்தில் பெண் வீட்டாருக்கு மட்டும் அதிக அளவில் மொய்ப் பணம் வந்தது.

திருமண பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு மணமக்கள் வீட்டார் போல் மண்டபத்தில் புகுந்த மர்ம நபர்கள் மண்டபத்தில் இருந்த மொய்ப் பணம் ரூ.5 லட்சம் மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிச் சென்றனர். திருமண பரபரப்பு ஓய்ந்தவுடன் மணமகளின் தந்தை தனது கையில் வைத்திருந்த பணப்பையைப் பார்த்தபோது பணம், செல்போன் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இரவு 12 மணி அளவில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். திருமண வீட்டில் திருட்டு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,751
Likes
140,854
Location
Madras @ சென்னை
எங்களின் 4 ஆண்டு ஆட்சியில் வளர்ச்சி பேரியக்கமாக மாறியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

பாஜகவின் 4-ஆண்டுகள் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி என்பது பேரியக்கமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ம் ஆண்டு தொடங்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அமோகமாகவெற்றி பெற்ற மோடி, கடந்த 2014-ம் ஆண்டு, மே 26-ம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அவர் பிரதமர் பதவிக்குவந்து இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது. இது குறித்து ட்விட்டரில் மக்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

‘‘2014, மே 26 இந்த நாளில்தான் நாங்கள் தேசத்தை மாற்றத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கில் எங்கள் பயணத்தை தொடங்கினோம். கடந்த 4 ஆண்டுகளாக, தேசத்தில் வளர்ச்சி என்பது மிகப்பெரிய இயக்கமாக மாறி இருக்கிறது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தேசத்தின் வளர்ச்சிக்காக ஈடுபட்டுள்ளனர். 125 கோடி மக்களும் நாட்டை வளர்ச்சியின் மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் நான் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் அரசின் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு நான் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் ஆதரவும், அரவணைப்பும் ஒட்டுமொத்த அரசுக்கும் மிகப்பெரிய ஊக்கமாகவும், வலிமையாகவும் அமையும்.

எங்களுக்கு இப்போது இருக்கும் இதே அர்ப்பணிப்பு உணர்வோடும், துடிப்போடும், உத்வேகத்தோடும் தேசத்தின் மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்போம். மக்களுக்கு ஆதரவான, நலம் பயக்கும் முடிவுகளையே தொடர்ந்து என்னுடைய அரசு எடுத்து வருகிறது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியாதான் முதன்மையானது.

புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்காக மக்களுக்கு ஆதரவான முடிவுகளையும், நேர்மையுடன் சிறப்பாக செயல்பட இருக்கிறோம்’’ என பிரதமர் மோடி தெரிவித்தார்

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.