Discuss here about politics - 2. தினமும் அரசியல் பேசலாம் வாங்க - 2.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
காஷ்மீரில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், "காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இன்று (சனிக்கிழமை) அத்துமீறி தீவிரவாதிகள் நுழைய முயன்றனர். அப்போது இந்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார்.

தீவிரவாதிகளுடனான இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் நடத்தி வருகின்றனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
துப்பாக்கி முனையில் ரூ.35 லட்சம் பணம் பறிப்பு: காரில் வந்த முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை

வடமேற்கு டெல்லியைச் சேர்ந்த மாடல் டவுன் பகுதியில் ஒரு தொழிலதிபரின் ஊழியர்களிடம் இருந்து முகமூடிக் கொள்ளையர்கள் 35 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மாடல் டவுன் காவல் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

உலோக தொழிலில் ஈடுபட்டுவரும் வியாபாரி ஒருவரின் காரை வழிமறித்து முகமூடிக்கொள்ளையர்கள் இந்தக் கைவரிசையைக் காட்டியுள்ளனர். வியாபாரியிடம் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் மேலாளர் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

தொழிலதிபரின் வேலைநிமித்தமாக அவர்கள் கார் வடக்கு டெல்லியின் முக்கிய சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அவர்களது காரை ஹரியாணா பதிவு எண் கொண்ட எஸ்யுவி கார் ஒன்று வேகமாக வந்து இடைமறித்தது. அந்தக் காருக்குள் முகமூடி அணிந்த நான்கு பேர் காருக்குள் இருந்தனர்.

காரிலிருந்து இரண்டுபேர் மட்டும் இறங்கினர். ஓட்டுநர் அருகிலிருந்த கார் கண்ணாடியை உடைத்து, துப்பாக்கி முனையில் கார் சாவியை எடுத்தனர். காரின் பின்பகுதியைத் திறந்து அதிலிருந்து ரூ.35 லட்சம் அடங்கிய பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். முகமூடிக் கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘‘காரில் பணம் எடுத்துச்செல்லப்படுவது பற்றி அவர்களுக்கு எப்படித் தெரியும். இதைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டுதான் இவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்பதால் இது உள்ளூர்காரர்களின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது’’ என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
AR-1.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம்: நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை திறப்பு

நாட்டில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமான வசதிகளுடன் கூடிய பசுமை வழிச்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். டெல்லி - மீரட் இடையேயான இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு சுங்கக் கட்டணம், விதிமீறலுக்கு தானாகவே அபராதம் விதிக்கும் வசதிகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.

தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 11,000 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் எனப்படும் பசுமை வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக மீரட் செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதால் அதில் பயணம் செய்தால் பல மணிநேர ஆகும். எனவே நவீன வசதிகளுடன் டெல்லி - மீரட் இடையே அதிநவீன சாலை அமைக்கப்பட்டு வருகிறது.


மொத்தம் 135 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. வழிநெடுகிலும் உள்ள விளக்குகள் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் வேகத்தை கேமராக்கள் மூலம் கணக்கிட்டு, அதிவேக வாகனங்களுக்கு தானாக அபராத ரசீது வசூலிக்க முடியும். மேலும், இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் வசதியும் உள்ளது.

இந்த சாலை பணிகளின் ஒருபகுதி நிறைவு பெற்றதையடுத்து, இன்று திறந்து வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி இந்த பாதையை இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் இந்த சாலை வழியே பயணம் செய்தார். சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்கள் பிரதமரை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த புதிய நெடுஞ்சாலை வழியாக டெல்லியில் இருந்து 85 கி,மீ தூரத்தில் உள்ள மீரட் நகரை 45 நிமிட பயண நேரத்தில் சென்றடைய முடியும்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
காத்திருந்து காவு வாங்கிய ஸ்டெர்லைட்: தோட்டாக்களுக்கு பலியானவர்களின் சோகக் கதைகள்

திரும்பிய பக்கமெல்லாம் அழுகையும் கண்ணீருமாய் நிற்கிறார்கள் மக்கள். தூத்துக்குடி துயரக்குடியாகி நிற்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டம் இப்படித்தான் முடியும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். கலவரத்திலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான உயிர்களின் எண்ணிக்கை 13. மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாகத் தூத்துக்குடி மக்கள் போராடிவருகிறார்கள். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்திவந்தனர் தூத்துக்குடி மக்கள். இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ அறிவித்தது.

அ.குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களாகப் போராட்டம் நடந்தும் மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் குறைந்தபட்ச பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லை. ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுகூட போராட்டக்காரர்களைப் பிளவுபடுத்தும் வேலைகள்தான் நடந்தன. பேச்சுவார்த்தையின் இறுதியில், முற்றுகைப் போராட்டத்தைக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடத்தலாம் என யோசனை சொன்னார் ஏ.எஸ்.பி. இதை ஒரு பிரிவினர் ஏற்றாலும், பெரும்பகுதியினர் முற்றுகைப் போராட்டம் நடத்துவதில் குறியாக இருந்தனர். முகம் தெரியாத நபர்கள் குறிப்பிட்ட வண்ணங்களில் உடையணிந்து ஆங்காங்கே வன்முறையைத் தூண்டிவிட்டதாக போலீஸ் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் சொல்கிறார்கள். அதேபோல், போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய நபர்களைக் குறிவைத்து சுட்டது போலீஸ் என்ற தகவலும் மிரள வைக்கிறது. “தவிர்க்க முடியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் முழங்காலுக்குக் கீழ்தான் சுடப்படவேண்டும் என்பதுதானே விதி. அப்படியிருக்க இடுப்புக்கு மேலே குறிவைத்தது ஏன்?” என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரி ஒருவர், “100 நாள் போராட்டத்தை அரசு கவனித்ததுபோல ஆலை நிர்வாகமும் கவனித்திருக்கும். இந்தக் கால அவகாசத்தில் ஆலை தரப்பில் தங்களுக்கான ஆதரவாளர்களையும் எப்படியும் உருவாக்கி இருப்பார்கள். அப்படி அவர்களால் வளைக்கப்பட்ட நபர்கள் மூலம் வன்முறை தூண்டிவிடப்பட்டிருக்கலாம். இதுபோன்ற போராட்டக்களத்தில் திட்டமிட்டு நான்கு பேர் ஒரு வாகனத்துக்குத் தீ வைக்கும்போது எதுவுமறியாத அப்பாவிகள் சிலரும் அவர்களோடு சேர்ந்துகொள்வது இயற்கை. அப்படித்தான் கலவரம் பரவியிருக்க வேண்டும். இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். காவல் துறை பணிக்கு வருபவர்களுக்கு முன்பெல்லாம் ஓராண்டுகாலம் கட்டாயப் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால், இப்போது மூன்று மாதம் பயிற்சி முடிவதற்குள்ளாகவே பந்தோபஸ்து உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனால், அவர்கள் முழுமையான பயிற்சி ஏதுமில்லாமல் சராசரி மனிதர்களாகவே பணிக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், இக்கட்டான நேரங்களில் பிரச்சினைகளை சமாளிக்கும் உத்திகள் தெரியாமல் திணறுகிறார்கள்” என்று சொன்னார்.

“ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் கலவரமாக வெடித்ததற்கு காரணம் வெளியாட்கள் ஊடுருவலே” என்கிறார் நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கார். அதில் எத்தனை உண்மையோ... துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர்களுக்குப் பின்னால் ஏகப்பட்ட சோகக் கதைகள்.

வக்கீலாகி கோர்ட்டுக்குப் போவான்னு நெனச்சேனே..!

துப்பாக்கிச் சூட்டில் வாயில் குண்டுபாய்ந்து உயிரிழந்த ஸ்னோலினுக்கு 17 வயதுதான்! 12-ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு கல்லூரி கனவில் இருந்தவர். ஸ்னோலினின் தந்தை ஜாக்சன் மீன்பிடி தொழிலாளி. “வக்கீலாகி, மீனவர்கள் பிரச்சினைக்காக, சட்டப்படி போராடுவேன்னு அடிக்கடி சொல்லுவா என் மவ. பாளையங்கோட்டை சட்டக் கல்லூரியில் சேர்க்குறதுக்கு என்ன வழின்னு விசாரிச்சுட்டு இருந்தேன். இப்படிப் பிணவறைக்கு போவான்னு நினைச்சுகூட பார்க்கலியே..!” என்று அழுத ஜாக்சனை நம்மால் தேற்ற முடியவில்லை.

தாயைத் தூக்கிக் குடுத்துட்டு துடிக்குது இந்தப் பிள்ளைக..!

திரேஸ்புரம் ஜான்சி துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இன்னொரு பெண். அவரது அண்ணன் ரெஜி நம்மிடம், “எஸ்.பி வண்டியை மறிச்சு, நின்னு பிரச்சினை செய்ததால சுட்டோம்னு போலீஸ் பொய் சொல்றாங்க. மூத்த மக வீட்டுக்கு மீன் கொண்டு போனா என் தங்கச்சி. கலவரத்தைப் பார்த்து, பயந்துபோய் நின்னவ, என்ன நடக்குதுன்னு சுத்திச் சுத்தி பார்த்துட்டு இருந்துருக்கா. அந்தக் கணமே பாஞ்சுவந்த தோட்டா ஒண்ணு அவ மூளைய சிதைச்சுருச்சு. தங்கச்சி வீட்டுக்காரரு ஜேசுபாலன் மீன்பிடி தொழிலாளி. இவுகளுக்கு ஒரு ஆணும், மூணு பொண்ணுமா நாலு பிள்ளைங்க. தாயைத் தூக்கிக் குடுத்துட்டு பிள்ளைங்க துடிக்குற துடியத்தான் பார்க்கவே முடியல” என்றார்.

கடைசி வரைக்கும் ஓட்டு வீட்டை மாத்த முடியலியே..!

லூர்தம்மாள்புரம் கிளாஸ்ட்டனுக்கும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஓட்டு வீட்டை இடித்துவிட்டு, கான்கிரீட் வீடு கட்ட வேண்டும் என்பது அவரது நெடுநாள் கனவு. அது நிறைவேறுவதற்குள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிவிட்டார் கிளாஸ்ட்டன். அவரது நண்பர் ராஜா நம்மிடம், “கிளாஸ்ட்டனுக்கு ஒரு மகனும் மகளும் இருக்காங்க. மகனை இன்ஜினீயரிங்கும், மகளை நர்சிங்கும் படிக்க வைக்கணும்ன்னு ஆசைப்பட்டான். ஆனா, பெருசா வருமானம் இல்லாததால பையனைப் படிக்க வைக்க முடியல. ‘இந்த ஓட்டு வீடு மழைக்கு ஒழுகுது. அதை மாத்திட்டு கான்கிரீட் வீடா போடணும்’ன்னு அவன் சொல்லிக்கிட்டே இருந்தது இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு சார்” என்றார். கிளாஸ்ட்டனை நினைத்து நினைத்து அழுது புலம்பி அவ்வப்போது மயங்கி விழுகிறார் அவரது தாய் எஸ்தர்.

சடங்குக்குப் பத்திரிகை கொடுத்தவருக்கு சடங்கு செய்ய வெச்சுட்டாங்க..!

கிருஷ்ணராஜபுரம் அந்தோணி செல்வராஜின் மரணம் கொடூரமான ரணம். மகளுக்கு அடுத்த மாதம் 18-ம் தேதி பூப்புனித நீராட்டு விழா. அதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் வீட்டின் மூலையில் கிடக்கின்றன. அந்தோணி செல்வராஜின் சகோதரர் ராஜேஷ், “ஒரு தனியார் கம்பெனியில் அண்ணன் வேலை செஞ்சாரு. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்துக்குப் பக்கத்துலதான் அண்ணனோட ஆபீஸ். சத்தம் கேட்டு வெளியே, சும்மா வந்து நின்னவரைச் சுட்டுக் கொன்னுருக்காங்க. மகளோட சடங்குக்குப் பத்திரிகை கொடுத்துட்டு இருந்தவருக்கு, சடங்கு செய்ய வச்சுட்டாங்க” என்று புலம்பினார். பூப்புனித நீராட்டு விழாவுக்காக எடுத்திருந்த புதுத்துணிகள், அந்த வீட்டின் ஒரு மூலையில் கவனிப்பாரின்றி கிடந்தன.

மணம் முடித்த மூன்றே மாதத்தில் மரணக் கோலம்!

மூன்று மாதங்களுக்கு முன்பும் அந்த வீட்டின் வாசலில் புதுப் பந்தலும் கொண்டாட்டமுமாய் இருந்தது. காரணம், அப்போது மணிராஜின் திருமணம். ஆனால், இப்போது மணிராஜின் வீட்டில் போடப்பட்டிருக்கும் பந்தல் சோகத்தின் குறியீடு. அவரது சகோதரர் ரமேஷ்கண்ணன், “அண்ணியைக் கூட்டிட்டு வாரேன்னு சொல்லிட்டு அண்ணன் கிளம்புனான். போற வழியில் பைபாஸ் ரோட்டுல பேரணியைப் பார்த்து நின்னவன், பைக்க நிறுத்திட்டு என்ன நடக்குதுன்னு பார்த்துருக்கான். நொடிப் பொழுதுல சுட்டுக் கொன்னுட்டாங்க சார். அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி மூணு மாசம்தான் ஆகுது” என்றார்.

இதுக்கா இலங்கையிலருந்து இங்க வந்தோம்..?

தூத்துக்குடி, மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்த பி.கே.கந்தையாவும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்களில் இவரும் ஒருவர். கந்தையாவின் மனைவி செல்வமணியால் பேசக்கூட முடியவில்லை. ஒரே மகன் ஜெகதீஷ்வரன் கால் மேல் கால் போட்டபடி ஏதோ யோசித்தும், சிரித்தும் கொண்டிருக்கிறார். மனநலம் பாதித்த அவருக்கு, தந்தை இறந்ததையே இன்னும் உணர முடியவில்லை. இவரது எதிர்காலத்தையும் வாழ்வியல் உத்திரவாதத்தையும் சேர்ந்தே அந்தத் தோட்டா பறித்துள்ளது!

ஒரு போராளியா அவரோட ஆசை நிறைவேறிருச்சு... ஆனா, நாங்க..?

குறுக்குச்சாலை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் தமிழ்ப்பற்றால் தனக்குத்தானே இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டவர். இவரது இயற்பெயர் மாரிச்சாமி. புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தமிழரசனை போலீஸார் குறிவைத்து சுட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. “தமிழரசன், ஸ்டெர்லைட் தொடங்க திட்டம் போட்ட காலத்திலிருந்தே எதிர்த்துப் போராடிட்டு இருக்கார். என் வீட்டுக்காரர் இறந்த பின்னாடி, எங்கக் குடும்பத்துக்கும் பாதுகாப்பா இருந்தவர். போராட்டமே வாழ்க்கைன்னு திருமணமும் செஞ்சுக்கல. இப்போ 44 வயசு ஆச்சு. ‘ஒரு போராளியா களத்துல நிக்கும்போதே சாகணும்கிறதுதான் ஆசை’ன்னு அடிக்கடி சொல்லுவாரு. ஒரு போராளியா அவரோட ஆசை நிறைவேறிடுச்சு. ஆனா, நாங்கதான் ஆதரவை இழந்து நிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அழுதார் அவருடைய அண்ணி வளர்மதி.

‘வருங்காலம் நம்மைப் போற்றுமடா!’

சிவந்தாகுளம் சாலையில் கார்த்திக்கின் வீடு. கார்த்திக்கின் அப்பா முத்துப்பாண்டியிடம் பேசினோம். “பி.ஏ., மூணாவது வருசம் படிக்க இருந்தான். எப்பவும் தமிழ், தமிழர்ன்னுதான் சொல்லிட்டு இருப்பான். ஃபாரினுக்குப் போகணும்… நிறைய சம்பாதிக்கணும்... தமிழுக்குப் பாடுபடணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். காலேஜ் படிப்பு இன்னும் ஒரு வருசம் இருக்கும்போதே பாஸ்போர்ட்டுக்கு அலைஞ்சான். வெளிநாடு போயிருக்கக் கூடாதான்னு இப்பத் தோணுதே…” வார்த்தைகளில் உடைந்துபோகிறார் அவர். ‘வருங்காலம் நம்மைப் போற்றுமடா...’ இதுதான் கார்த்திக் கடைசியாகப் போட்ட முகநூல் பதிவு!

ராணுவத்தில் சேர ஆசைப்பட்ட ரஞ்சித்!

புஷ்பாநகர் பாஸ்கரின் மனைவி முத்துலெட்சுமி, மகன் ரஞ்சித்குமாரின் மரணச் செய்தி கேட்டதிலிருந்தே மயங்கி மயங்கி விழுகிறார். மகனின் சட்டையை எடுத்து நெஞ்சோடு அணைத்து விம்முகிறார். ரஞ்சித்குமாரின் தந்தை பாஸ்கரிடம் பேசினேன். “நான் வீடுகளுக்கு கான்கிரீட் போடுற கான்ட்ராக்டர். ரஞ்சித் எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படிச்சிருந்தான். ராணுவத்தில் சேரணும்ன்னுதான் ரொம்ப ஆசைப்பட்டான். செவ்வாய்க்கிழமை எம்புள்ள குண்டடிபட்டுச் செத்துருக்கான். அதுக்கு முந்துன வெள்ளிக்கிழமைகூட ரத்ததானம் பண்ணிருக்கான். இதுவரை பத்துத் தடவைக்கு மேல ரத்ததானம் பண்ணிருப்பான். சமூக சேவையில் அவனுக்கு ஈடுபாடு ஜாஸ்தி. கை கால்ல சுட்டுப்போட்டுருந்தாக்கூட, முடமாகியாச்சும் எங்ககூட இருந்திருப்பான். தலையிலயே சுட்டுருக்காங்க…” என்றவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

பால் காய்ச்ச இருந்தவனுக்கு பால் ஊத்த வெச்சுட்டாங்களே..!

அண்ணாநகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான காளியப்பன் 22 வயது இளைஞர்! கூலி வேலை பார்க்கும் அப்பா கோபாலகிருஷ்ணன் அடிக்கடி உடல் சுகவீனத்திலும் படுத்துக்கொள்ள, அந்தக் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாய் இருந்தவர் காளியப்பன். இப்போது அவர் இல்லாத சோகத்தில் அடித்துப் புலம்புகிறது அந்தக் குடும்பம். கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். “இப்போதான் புதுசா வீடு கட்ட ஆரம்பிச்சோம். ‘அப்பா, கொஞ்சம், கொஞ்சமா காசு சேர்த்து இந்த வீடு கட்டுறோம். மேல தங்கச்சிகளுக்கு தனி ரூம், அது, இது’ன்னு பட்டாம்பூச்சி மாதிரி படபடன்னு பேசிக்கிட்டே இருப்பான். வீடு அஸ்திவாரம் போட்டு, நிலை நாட்டுனதோட நிக்குது. குலக் கொழுந்தை தூக்கிக் கொடுத்துட்டு இனி யாருக்கு வீடு கட்டப் போறோம்? அவனுக்கு நிச்சயதார்த்தம் முடிச்சு அக்டோபர்ல கல்யாணம் வச்சுருந்தோம். வீடும் கட்டி முடிக்கல… கல்யாணமும் முடிக்கல… பால் காய்ச்ச இருந்தவனுக்கு பால் ஊத்த வெச்சுட்டாங்களே..!” என்று கதறினார். முதல்நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பலத்த காயம் அடைந்த காளியப்பன், மறுநாள் அண்ணாநகர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளார்.

கடைசி நிமிடங்களிலும் கெஞ்சிய செல்வசேகர்!

பேய்க்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வசேகர் முதல் நாள் போராட்டத்தின்போது போலீஸாரின் தடியடியால் படுகாயம் அடைந்தார். பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். சிகிச்சையில் தங்களைப் பார்க்க வந்த மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களைப் பார்த்து, “நாசகார ஸ்டெர்லைட்டை எப்படியாச்சும் மூடுங்கய்யா...” என்று கெஞ்சியிருக்கிறார் செல்வசேகர். நம்மிடம் பேசிய அவரது சித்தி மகன் ஜெயக்குமார், “செல்வசேகர் இன்னும் கல்யாணம்கூட பண்ணல. பொதுசேவைன்னா முன்னாடி நிப்பான். சின்ன வயசுல இருந்தே பொதுக்காரியத்தில் அவனுக்கு ஈடுபாடு அதிகம். போலீஸ் லத்தியால தாக்கிக் கீழே தள்ளி, நெஞ்சுலயே மிதிச்சுருக்காங்க. தலையில் பலத்த காயம் இருந்ததால், அதுக்கு சிகிச்சை நடந்த நேரத்துலயே செத்துட்டாப்ல… போலீஸ் மிருகத்தனமா மிதிச்சே கொன்னுருக்காங்க… செல்வசேகர்கூட பிறந்தது ரெண்டு அக்கா. ஒரு அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல… அப்பாவும் இறந்துட்ட நிலையில, அம்மாவுக்கும் அக்காவுக்கும் ஆறுதலா இருந்தவன அநியாயமா அடிச்சுக் கொன்னுட்டாங்க” என்றார்.

என்ன பேசி என்னத்த செய்யப் போறோம்...

துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியர் காலனி, சண்முகத்தின் வீட்டுக்கும் சென்றேன். அந்த வீட்டுக்குள் இருந்து, பீறிட்டுவரும் அழுகையுடன் வெளியில் வந்த உறவுகள், “என்ன பேசி என்னத்த செய்யப் போறோம்... நாங்க யாருக்கிட்டயும் எதுவும் பேசுறதா இல்ல...” என்று ஆற்றாமையுடன் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டனர்.

ஊருவிட்டு ஊருவந்து உயிரைவிட்ட பரிதாபம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியைச் சேர்ந்த ஜெயராமனும் கலவரத்தில் பலியாகியிருக்கிறார். இரு சக்கர வாகனத்தில் ஊர், ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்துவந்த இவர், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் களப்பணியாளர். ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக ஊருவிட்டு ஊருவந்த இவரும் உயிரைவிட்டது தாங்க முடியாத சோகம். ஜெயராமனின் இறப்பால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில்விட்டதுபோல் நிற்கிறார்கள் அவரது மனைவி பாலம்மாளும் மகள் நந்தினியும்!

காட்சிகள் வேகவேகமாக மாறுகின்றன. ஆளுக்கொன்று பேசுகிறார்கள். ஆனால், ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்’ என்ற அரசின் ஒற்றை வரி அறிவிப்பை மட்டுமே அந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுதான் அவர்களின் ரணத்துக்குக் கொஞ்சமாவது ஆறுதல் சொல்லும். இப்போதாவது தமிழக அரசு அத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்குமா?

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
செயல்திறனுக்கு ஏற்ப இனி அரசு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் செயல்திறனுக்கு ஏற்ப இனி மத்திய அரசு நிதி கிடைக்க உள்ளது.

நடப்பு 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தங்கள் தேவைக்கு ஏற்ப கேட்கும் போது பிரித்து வழங்கப்படும். இந்த நிதியுடன் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமலில் இருந்த சர்வ சிக் ஷா அபியான், ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக் ஷா அபியான் மற்றும் ஆசிரியர்கள் கல்வி திட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் சதவிதம், மாணவர் தேர்ச்சி உள்ளிட்ட பள்ளியின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் பல்வேறு வகை செயல்திறன்களின் அடிப்படையில் இந்தத் தொகை பிரித்து வழங்கப்பட உள்ளது. குறிப்பாக கிராமப்புற பள்ளிகள் இந்த திட்டத்தால் அதிகம் பலன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இதுபோன்ற புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு, நாடு முழுவதிலும் உள்ள மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. சிறந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக பலன் கிடைக்கும்” என்றார்.

புதிய திட்டத்தின்படி எந்த செயல்திறனுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என்ற விவரம் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. உதாரணமாக நூலக வளர்ச்சிக்கு மாதம் ரூ.5000 முதல் ரூ.20,000, விளையாட்டுப் பயிற்சிக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட உள்ள இந்த விவரங்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகள் தங்கள் செயல்திறனை அதிகரிக்கலாம்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
ஆகம விதி மீறல்களால் அரசுக்கு ஆபத்து: செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் எச்சரிக்கை

ஆகம விதிமுறைகளில் அரசு தலையிடக் கூடாது. விதி மீறல்களால் தமிழக அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் முறைப்படி ஆகம விதிகளை கடைபிடிப்பதில்லை. கோயில்களின் வரவு செலவு விவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விவகாரங்களில் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து வழிபாட்டு முறைகளிலோ, சம்பிரதாயங்களிலோ தலையிட அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பாதுகாப்பு குறித்து விசாரணை

கன்னியாஸ்திரிகள் சிலர் அண்மையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் பைபிளுடன் சென்றுள்ளனர், இது தவறான செயல். அதேபோல, கோயிலுக்குள் நுழைந்த ஒரு நபர், காலணியை வீசியுள்ளார்.இந்த சம்பவத்தால் கோபமடைந்த அவரது தங்கை சமயபுரம் மாரியம்மனால்தான் கோயில் யானை, பாகனை கொன்றுள்ளது. கோயில்களில் ஆகம விதிமீறல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சிக்கு பேராபத்தாக முடியும்.

கட்டண தரிசன முறை கூடாது

ஆகம விதிமுறைகளில் அரசு தலையிடக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் கோயில் சொத்துகள் கேட்பாரற்று உள்ளன. உரிய அனுமதியின்றி பலர் அவற்றை அனுபவித்து வருகின்றனர். அத்தகைய சொத்துகள் அனைத்தும் உடனடியாக மீட்கப்பட வேண்டும்.

கோயில்களில் கட்டண தரிசனம் செய்வது தவறான நடைமுறை. உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும்.ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்தது தவறானது என்றார்

தமிழ் ஹிந்து

This is 95850 Posts
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
‘அரசு பங்களா அல்ல; கன்ஷிராம் நினைவகம்’-யோகிக்கு மாயாவதி அதிரடி கடிதம்

உபியின் முன்னாள் முதல்வரான மாயாவதி தன் அரசு பங்களா காலி செய்யும் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தம் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட கன்ஷிராம் நினைவகத்தில் தாம் தங்கியிருந்ததாக யோகி ஆதித்யநாத்திற்கு மாயாவதி கடிதம் அளித்துள்ளார்.

உபியின் முன்னாள் முதல்வர்கள் ஆறு பேர் தங்கியுள்ள அரசு பங்களாக்களை காலி செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ல் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து உபி அரசு சார்பில் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால், உபியின் முன்னாள் முதல்வர்களான என்.டி.திவாரி, கல்யாண்சிங் மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் தமது பங்களாக்களை காலி செய்வதில் இறங்கியுள்ளனர்.

ஆனால், பகுஜன் சமாஜ் தலைவியான மாயாவதி இந்த விவகாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அவரது கட்சியின் பொதுச்செயலாளரான சதீஷ் சந்திர மிஸ்ரா மற்றும் உபி சட்டப்பேரவை கட்சி தலைவரான லால்ஜி வர்மா ஆகியோரால் அந்த கடிதம் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் மாயாவதி, ’எங்கள் கட்சியின் ஆட்சியில் ஜனவரி 13, 2011-ல் நடந்த அமைச்சரவை கூட்ட முடிவின்படி லக்னோவின் 13 ஏ மால் அவென்யூவின் அரசு பங்களா, கன்ஷிராம் நினைவகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதன் இரு அறைகளில் கட்சியின் அனுமதியுடன் முதல் அமைச்சராக இருந்த நான் தங்கினேன். இப்போது நீதிமன்ற உத்தரவின்படி அதை காலி செய்ததால் அந்த இருஅறைகளும் இனி நினைவகத்திற்கே சேர வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உபி அரசின் நோட்டீஸ் பெற்ற பின் மாயாவதி அந்த பங்களாவில் கன்ஷிராம் நினைவகம் என புதிய பெயர் பலகையை கடந்த வாரம் திடீர் எனத் தொங்க விட்டிருந்தார். இதை மறுக்கும் வகையில் உபி அரசு சார்பில் அந்த பங்களா, மாயாவதி முதல்வராக இருந்தமையால் அவருக்காக ஒதுக்கப்பட்டதாக உத்தரவு நகலை வெளியிட்டுள்ளது.

மாயாவதியில் செயல் குறித்து அதிர்ச்சி அடைந்த மனுதாரரான எஸ்.என்.சுக்லா, குறிப்பிட்ட தேதிக்குள் அனைவரையும் காலி செய்ய வேண்டும் என வலியுறுத்து உபி அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதை செய்யாதவர் மீது உச்ச நீதிமன்ற உத்தரவு மீறல் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் சுக்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்..

இதனிடையில், சமாஜ்வாதி நிறுவனரான முலாயம்சிங் யாதவும் தனக்கு மாற்று பங்களா இன்னும் கிடைக்கவில்லை எனவும், அதுவரை தாம் சந்தை மதிப்பிலான வாடகையை மாதந்தோறும் அரசுக்கு அளிப்பதாக அனுமதி கேட்டிருக்கிறார். இவரது மகனும் கட்சித் தலைவருமான அகிலேஷ்சிங் யாதவ் ஏற்கனவே, இருவருடம் உபி முதல்வர் யோகியிடம் காலஅவகாசம் கேட்டிருக்கிறார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
சம்பளம் தராததால் ஆத்திரம்; 2 பஸ்களை எரித்த கிளீனர் கைது

z-27 05majanDeva Buses fire.jpg

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சம்பளம் தராத ஆத்திரத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகளுக்கு கிளீனர் நேற்று தீ வைத்தார்.

தேவகோட்டையில் இருந்து பெங்களூரு, சென்னை, புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் நிறுவன பேருந்துகளை தேவகோட்டை கருதாவூருணி கண்டதேவி சாலையில் உள்ள தனியார் இடத்தில் நிறுத்துவது வழக்கம். இதில் பெங்களூரு செல்லும் பேருந்தில் ஓசூர் மூக்கண்டம் பள்ளி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (52) கிளீனராக உள்ளார். தனியார் நிறுவனத்தில் சம்பள பாக்கியாக ரூ. 5200 தர வேண்டும். அதுகுறித்து ஓட்டுநரான திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகனிடம் நேற்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் செந்தில்குமார் கேனில் இருந்த டீசலை எடுத்து பேருந்து மீது ஊற்றி தீ வைத்தார். இதில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. அப்போது அருகே இருந்த பேருந்துக்கும் தீ பரவியது. இதில் இரு பேருந்துகளும் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

பின்னர் 2 பேருந்துகளும் எரிவதைக் கண்ட செந்தில்குமார் அச்சத்தில், தனது உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் செந்தில்குமாரை காப்பாற்றி போலீஸில் ஒப்படைத்தனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
நக்ரோடா தாக்குதல் வழக்கு: ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி காத்ரி கைது

நக்ரோடா தாக்குதல் வழக்கு தொடர்பாக ஜெய்ஷ் இ முகமது (ஜேஇஎம்) தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பின் போலீஸார் (என்ஐஏ) நேற்று கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள நக்ரோடா ராணுவ முகாம் மீது 2016-ல் ஜேஇஎம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கை என்ஐஏ போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஜேஇஎம் இயக்கத்தைச் சேர்ந்த சையத் முனீர் அல் ஹசன் காத்ரி என்ற தீவிரவாதியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் வடக்கு காஷ்மீர் பகுதியின் குப்வாரா மாவட்டத்திலுள்ள லோலப் பகுதியைச் சேர்ந்தவர்.

ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாருடன் இணைந்து என்ஐஏ போலீஸார், காத்ரியைக் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக என்ஐஏ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ கைதான காத்ரி, லோலப் பகுதியிலுள்ள மற்ற ஜேஇஎம் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இவர் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத இயக்கங்கள், தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார். 2016-ம் ஆண்டு நடந்த தாக்குதலின்போது பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய 3 தீவிரவாதிகளுடன் காத்ரி இணைந்துள்ளார். பின்னர் அனைவரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு முன்பு ஜம்முவில் உள்ள ஓட்டலில் அனைவரும் தங்கினர். தாக்குதலின்போது பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகளை நக்ரோடா ராணுவ முகாம் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார் காத்ரி. அதன் பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்” என்றார். - ஐஏஎன்எஸ்

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.