Discuss here about politics - 2. தினமும் அரசியல் பேசலாம் வாங்க - 2.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
சிக்னல் கோளாறை சரிசெய்ய இனி சில நிமிடங்கள் போதும்; தெற்கு ரயில்வேயில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்- சென்னை கடற்கரை, அரக்கோணம் உட்பட 100 ரயில் நிலையங்களில் சோதனை ஓட்டம்

ரயில்வேயில் சிக்னல் கோளாறை சில நிமிடங்களில் சரிசெய்யும் வகையில் தெற்கு ரயில்வே புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

நம் நாட்டில் ஓடும் ரயில்களில் 10-ல் 4 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் தண்டவாள பராமரிப்புப் பணி பிரதான காரணமாக இருந்தாலும், அடுத்த முக்கியப் பிரச்சினையாக இருப்பது சிக்னல் தொழில்நுட்ப கோளாறுதான்.

அதிலும், மும்பை, டெல்லி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் ரயில்கள் இயக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களால் அடிக்கடி சிக்னல் தொழில்நுட்பம் கோளாறு ஏற்படுகிறது. இதனால், 2 முதல் 4 மணி நேரம் வரையில் ரயில்சேவை பாதிக்கும்.

எனவே, இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ரயில்வேயில் சிக்னல் தொழில்நுட்ப அதிகாரிகளால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் இதுகுறித்து ஓராண்டாகத் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொண்டு புதிய தொழில்நுட்பத்தை, சிக்னல் பிரிவு மூத்த பொறியாளர் ஜோதி கண்டுபிடித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம், அவர் கூறியதாவது:

ரயில்கள் இயக்கத்தைக் கண்காணித்து, சீராகவும் பாதுகாப்பாகவும் இயக்க சிக்னல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமாக இருக்கிறது. சிக்னல் இயக்கத்தை பாதைகளோடு கொண்டு செல்ல ஆங்காங்கே பாயின்ட்கள் (ஒவ்வொரு 63 மீட்டருக்கும் ஒரு பாய்ன்ட்) அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவதி

சாதாரணமாக முக்கிய வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டால், கோளாறு ஏற்பட்டுள்ள பாயின்ட் பகுதியை தொழில்நுட்ப அலுவலர்கள் கண்டுபிடிப்பார்கள். அதன்பிறகு, சிக்னல் பழுது சரிசெய்யப்பட்டு, ரயில்கள் வரிசையாக இயக்கப்படுகின்றன. இந்தப் பணியை மேற்கொள்ள சுமார் 2 முதல் 4 மணி நேரம் வரை ஆகிவிடும். இதனால், ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்படுவார்கள். தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்களும் பணிச் சுமையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சிக்னல் பழுதை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவர வேண்டுமென சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை தலைமை அதிகாரி எம்.இளவரசன் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் நான் இதை ஆர்வமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டேன். இந்தப் பிரச்சினையை வெளிநாடுகளில் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தேன்.

கூடுதலாக 5 மணிநேரம்

வழக்கமான பணியைக் காட்டிலும் தினமும் இதற்காக 5 மணி நேரம் கூடுதலாக எடுத்துக் கொண்டு ஓராண்டு பணியாற்றினேன். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிய தெற்கு ரயில்வே அதிகாரி டி.எம். ஸ்ரீதர் முக்கிய வழிகாட்டியாக இருந்து சில ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிலையில், சிக்னல் கோளாறு ஏற்பட்ட அடுத்த 2 நிமிடங்களில் எங்கே கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் காணும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளேன். இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் சர்க்யூட் இணைத்து புதிய பட்டன் வசதி சம்பந்தப்பட்ட ரயில் நிலைய மேலாளர்களின் அலுவலகத்தில் அமைக்கப்படும்.

இதனால், சிக்னல் கோளாறு ஏற்பட்ட 2 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கிடைக்கும். எந்த இடம் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். பிறகு, சம்பவ இடத்துக்கு தொழில்நுட்ப அலுவலர்கள் சென்று, அடுத்த 10 முதல் 15 நிமிடங்களில் பழுதை சரி செய்யலாம்.

பாராட்டும் சான்றிதழும்

இந்தப் புதிய தொழில்நுட்பச் செயல்பாடு குறித்து ஈரோடு – கரூர் வழித்தடத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, தற்போது வில்லிவாக்கம், அம்பத்தூர், விழுப்புரம், திருச்சி, சென்னை கடற்கரை, அரக்கோணம் உட்பட 100 ரயில் நிலையங்களில் சோதனை ஓட்டம் அடிப்படையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, படிப்படியாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததற்காக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷிரேஸ்தா எனக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜாதி, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேட்டி

குடும்ப அரசியலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்தது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “வளர்ச்சியை மையமாகவும், நோக்கமாகவும் கொண்டு பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் வாழ்க்கைத் தரம் உயர அரசு பாடுபட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்கள் மூலம் பாஜக தலைமையிலான அரசு தனது அரசியல் மனோபலத்தை, எதிரி நாடுகளுக்கு உணர்த்தியது. குடும்ப அரசியலுக்கும், ஜாதி அரசியலுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முற்றுப்புள்ளி வைத்தது. வளர்ச்சி அரசியலை தொடங்கி வைத்தது.

கறுப்புப் பண ஒழிப்புக்கு முக்கியத்துவம் தருவோம் என்று பாஜக 2014 தேர்தலின்போடு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவையும் (எஸ்ஐடி) அரசு அமைத்தது. மேலும் ராணுவ அதிகாரிகளின் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த ஒரு ரேங்க் ஒரு பென்ஷன் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டது.

கிராம வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி என்பதை மோடி தலைமையிலான அரசு உணர்ந்துள்ளன. எனவே கிராமப் பகுதிகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.மோடி அரசின் திட்டங்களால் 22 கோடி ஏழை குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். இதன்மூலம் மக்களுக்கான அரசு இது என்பதை உணர முடியும். பல கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். அதனால்தான் 2014-ல் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையை மக்கள் அளித்தனர்.

4 ஆண்டு காலத்தில் 7.25 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 5.22 கோடி குடும்பங்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 31.52 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பாஜக அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2019-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும்” என்றார். - பிடிஐ

தமிழ் ஹிந்து

This is 50th Posts (Today)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
சமயபுரம் யானை மிரண்டு பலி வாங்கியது ஏன்?: பாகன்களுக்கு பயிற்சி அவசியம் என்கிறார் விலங்கு உளவியலாளர்

கோயில் யானைகள் மிரள்வதற்கும், அவற்றுக்கு மதம் பிடிப்பதற்கும் பல்வேறு அகவியல், புறவியல் மற்றும் உளவியல் காரணங்கள் இருப்பதாக, திருநெல்வேலியிலுள்ள விலங்கு உளவியலாளரும், வனத்துறை ஆராய்ச்சியாளருமான எஸ்.சேதுராமலிங்கம் தெரிவித்தார்.

திருச்சி அருகே சமயபுரம் மாரியம்மன் கோயில் பெண் யானை மசினி நேற்று முன்தினம் மிரண்டு, பாகன் கஜேந்திரனை தூக்கி வீசி, மிதித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோயில் யானைகள் அவ்வப்போது மிரள்வதும், மதம் பிடிப்பதும், உயிரிழப்புகள் நிகழ்வதும் தொடர்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து சேதுராமலிங்கத்திடம் கேட்டோம்.

அவர் கூறியதாவது:

சமயபுரம் கோயில் யானை `மசினி’ மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறது. பாகனை அது நான்கு கால்களாலும் மிதித்ததில் இருந்து, அதனுள் இருக்கும் வன்மத்தை உணரமுடிகிறது. இவ்வாறு கோயில் யானைகள் நடந்துகொள்வதற்கு புறக்காரணங்கள், அகக்காரணங்கள் இருக்கின்றன.

வவ்வால்கள்

ஒலி மாசுபாடு யானைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக பறவைகள் எழுப்பும் தொடர்ச்சியான இரைச்சல் யானைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். பெரும்பாலும் நமது கோயில்களில் அதிகப்படியாக பழந்தின்னி வவ்வால்கள் இருக்கின்றன. இவை, எழுப்பும் அல்ட்ரா சவுண்ட் யானைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். சமயபுரத்தில் வவ்வால்கள் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒலி மாசுபாடும் ஒரு காரணியாக இருக்கலாம். மோட்டார் பம்ப் செட் அதிர்வுகள், சரியாக எரியாத டியூப் லைட் எழுப்பும் ரீங்காரம், ஜெனரேட்டர் ஒலி மற்றும் அதிர்வு போன்றவை யானைகளை மிரள வைக்கும்.

திருச்சியில் தற்போது வெயில் சுட்டெரிக்கும் நிலையில் யானையின் வசிப்பிடத்தை குளுமையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தெளிப்பான் மூலம் யானைகளை குளிக்க வைக்கலாம்.

யானைகளின் கால்களின் அடிபாகத்தில் பாக்டீரியாக்கள் தொற்றால் osteo meylitis என்ற நோய் பாதிப்பு ஏற்படுகிறது. யானைகளை தார் சாலையில் நடக்க வைப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்நோய் வருகிறது. யானைகளின் எலும்பு மற்றும் நகங்களை இந்த பாக்டீரியா அரித்துவிடும். மாதந்தோறும் யானைகளின் பாதங்களில் உள்ள நகங்களை வெட்டி, சுத்தம் செய்ய வேண்டும்.

யானையின் எச்சத்தை பரிசோதித்தால் அதில் குடல் புழுக்கள், முட்டைகள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரியவந்தால் உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதும், தரமான உணவை அளிப்பதும் அவசியம்.

உளவியல் காரணங்கள்

பொதுவாக யானைக்கு 6 வயதுக்குமேல் பாலுணர்வு நாட்டம் ஏற்படும். இது துணை தேடும் பருவம். 9, 10 வயதுகளில் பாலுணர்வு உச்சகட்டத்தில் இருக்கும். பெண் யானைகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படும். இந்நேரங்களில் பாகன்கள் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பெண் யானையின் சிறுநீரை ஆய்வகத்தில் பரிசோதித்தால் அதிலிருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை கணக்கிடலாம். இந்த ஹார்மோன் அதிகமிருந்தால் யானைக்கு பாலுணர்வு அதிகம் இருக்கிறது என்பது தெரியவரும். அவற்றை துணையுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்தால் யானைகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க முடியும்.

தாய்விட்டுச் சென்ற அனாதை குட்டியாக இருந்தபோது யானை மசினி பிடித்து வரப்பட்டு, 4 ஆண்டுகள் பயிற்சி அளித்து வளர்க்கப்பட்டு, பின்னர் சமயபுரம் கோயிலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. குட்டி யானைகள் பெரும்பாலும் செல்லமாக வளர்க்கப்படும். அவ்வாறு செல்லமாக வளர்ந்த யானையை, கோயிலுக்குள் தங்க வைத்திருக்கிறார்கள். இங்குள்ள கட்டுப்பாடான சூழ்நிலை யானைகளை மிரள வைக்கிறது.

சிவப்பு சட்டை கூடாது

யானைகளுக்கு சிவப்பு நிறம் பிடிக்காது. இதையறியாத பல பாகன்கள் சிவப்பு சட்டை, வேட்டி அணிகிறார்கள். யானைகளுக்கு எது பிடிக்காது, எது பிடிக்கும் என்பது குறித்தும், அவற்றின் உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த விஷயங்கள் குறித்தும் பாகன்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

கோயில் யானைகள் இருக்கும் பகுதிகளில் கால்நடை மருத்துவர், உளவியலாளர், விஞ்ஞானி, பொதுமக்கள் பிரதிநிதி உள்ளிட்டோரை கொண்ட சிறப்பு குழுவை அமைத்து மாதந்தோறும் யானைகளை பரிசோதித்து, அவற்றுக்கான உடல், உளவியல் பிரச்சினைகளை அறிந்து நிவர்த்தி செய்தால், யானைகள் மிரள்வதும், உயிர்பலிகள் நிகழ்வதும் தடுக்கப்படும் என்றார் அவர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
பால்கர் மக்களவைத் தொகுதியில் நாளை இடைத்தேர்தல்; எப்படியாவது வெற்றி பெற வேண்டும்- மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் ஆடியோவால் சர்ச்சை

மகாராஷ்டிராவின் பால்கர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அந்த மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். அவரது பேச்சு அடங்கிய ஆடியோவை சிவசேனா வெளியிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 2014 முதல் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆரம்பம் முதலே பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் பால்கர் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சிந்தாமன் வங்கா கடந்த ஜனவரி 30-ம் தேதி உயிரிழந்தார். அந்த தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் நேருக்கு நேர் மோதுகின்றன.

சிந்தாமன் வங்காவின் மகன் ஸ்ரீநிவாஸ் சிவசேனா சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேந்திர காவித் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவர் பால்கர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தொலைபேசி உரையாடல் ஆடியோவை சிவசேனா நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில் பட்னாவிஸ் கூறியிருப்பதாவது: சிவசேனா நமது முதுகில் குத்திவிட்டது. இந்த நேரத்தில் பாஜகவினர் அமைதியாகக் இருக்கக்கூடாது. அவர்களை (சிவசேனா) திருப்பி தாக்க வேண்டும். இடைத்தேர்தலில் பாஜக எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அவர்களில் சிலர் (சிவசேனா) ரவுடிகளாக செயல்பட்டால் அதே ரவுடி பாணியில் நான் அவர்களை எதிர்கொள்வேன். உங்கள் (பாஜக) பின்னால் நான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். இதனிடையே முதல்வர் பட்னாவில் தனது முழு உரையாடல் ஆடியோவை நேற்று வெளியிட்டார். “எனது உரையாடலை தங்களுக்கு சாதகமாக வெட்டி, ஒட்டி சிவசேனா வெளியிட்டுள்ளது. முழு ஆடியோவை நானே வெளியிட்டுள்ளேன். இந்த விவகாரத் தில் எதையும் சந்திக்கத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
நாடு முழுவதும் 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி: கிழக்கு, தெற்கிலும் கால் பதிக்க முயற்சி

நாடு முழுவதும் 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கிழக்கு, தெற்கு மாநிலங்களிலும் கால் பதிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. அப்போது 8 மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சி நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கில் பஞ்சாபை தவிர்த்து இதர மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. இதேபோல வடகிழக்கில் மொத்தமுள்ள 8 மாநிலங்களில் மிசோரமை தவிர்த்து இதர 7 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

தற்போது பாஜகவின் கவனம் கிழக்கு மாநிலங்களான மேற்குவங்கம், ஒடிசா மற்றும் தென்மாநிலங்கள் மீது திரும்பியுள்ளது. இந்த மாநிலங்களிலும் ஆழமாக கால் ஊன்ற பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வசீகரத்தால் இந்த முயற்சி வெற்றி பெறும் என்று பாஜக மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியபோது, “கடந்த 4 ஆண்டுகளில் பாஜக அபார வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போது தேசிய, பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன. இதுவே எங்கள் வெற்றிக்கு சான்று” என்று தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸிடமிருந்து 12 மாநிலங்களை பாஜக தட்டிப் பறித்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அந்த கட்சிக்கு 44 எம்.பி.க்கள் மட்டுமே கிடைத்தனர். அப்போதுமுதல் காங்கிரஸ் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.

கர்நாடகாவில் அண்மையில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தது. அங்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துள்ள காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இதை தவிர்த்து பஞ்சாப், மிசோரம், புதுச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த எம்.பி. ஒருவர் கூறியபோது, “மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் சரிவை சந்தித்தது உண்மைதான். ஆனால் இப்போது காற்று எங்கள் பக்கம் வீசத் தொடங்கியுள்ளது. பல்வேறு மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே காலஅவகாசம் உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. கர்நாடக முதல்வராக குமாரசாமி அண்மையில் பதவியேற்றபோது 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். இதை காங்கிரஸ் தலைவர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று மாநிலங்களின் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. மேலும் இது காங்கிரஸுக்கு அக்னி பரீட்சையாகவும் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேர்ச்சி மதிப்பெண்களில் புதிய மாற்றம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு முதல் கட்டாயப் பொதுத்தேர்வாக அறிவிக்கப்பட்டதால் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்றது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி முடிவடைந்தது.

கடந்த 2011 முதல் 2017 வரை 7 ஆண்டு காலமாக 10-ம் வகுப்புத் தேர்வு கட்டாய பொதுத்தேர்வாக நடத்தப்படவில்லை. மாணவர்கள் விரும்பினால் பொதுத்தேர்வாகவும், இல்லாவிட்டால் பள்ளி அளவிலான வருடாந்திரத் தேர்வாகவும் எழுதிக்கொள்ளலாம். இந்த ஆண்டிலிருந்து, கட்டாய பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (மே 26-ம் தேதி) வெளியாகின. இதில், நாடு முழுவதும் 83.01 சதவீத மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மாலை 4:00 மணியளவில் வெளியிடப்படுகிறது. இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். cbseresults.nic.in, results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்.நாடு முழுவதும் 16 லட்சத்து 88 ஆயிரத்து 144 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்?

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தேர்ச்சி முறையில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு விதமான தேர்ச்சி முறை பின்பற்றப் படுவதால் இந்த ஆண்டு மாணவ, மாணவியரின் நலன் கருதி தேர்ச்சி முறையை தளர்த்தியுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இண்டர்னல் மற்றும் தேர்வில் சேர்த்து 33 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். கேள்விக்கு பதில் அளித்து அதில் எழுத்து தவறுகள் இருந்தால் 2 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிகிறது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
பெட்ரோல் விலை 1 பைசா குறைப்பு: மோடியின் சேட்டைத்தனமா?- ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஒரு காசு குறைத்துள்ளது மோடியின் சேட்டைத் தனமாக இருந்தால் அது அவரின் மோசமான ரசனையாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகத் தேர்தல் காரணமாகக் கடந்த ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்து இம்மாதம் 14-ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால், கடந்த 15-ம் தேதியில் இருந்து நாள் ஒன்றுக்குச் சராசரியாக லிட்டருக்கு 25 முதல் 30 காசுகள் வரை உயர்த்தி வந்தன.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் 80 டாலருக்கும் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

கடந்த 14 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.30 காசுகளும் உயர்ந்தன. இந்நிலையில், 14 நாட்களுக்குப் பின் இன்று பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாகக் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 60 காசுகள் குறைத்து ரூ.77.83 ஆகவும், டீசல் லிட்டருக்கு 56 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.68.75 ஆகவும் அறிவித்தன. இதனால், வாகன ஓட்டிகள் ஓரளவுக்குப் பெருமூச்சு விட்டு நம்மதி அடைந்தனர்.

ஆனால், அடுத்த ஒருமணிநேரத்தில் அந்த விலைக் குறைப்பு தவறானது, கணக்கீடு செய்வதில் தவறு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த எண்ணெய் நிறுவனங்கள் அந்த விலைக் குறைப்பை வாபஸ் பெற்றன. அதற்குப் பதிலாக பெட்ரோல், டீசல் இரண்டிலும் லிட்டருக்கு ஒரு காசு குறைத்துள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அன்புள்ள பிரதமர் மோடி, நீங்கள் பெட்ரோல், டீசல் விலையில் இன்று லிட்டருக்கு ஒரு காசு குறைத்துள்ளீர்கள். வெறும் ஒரு காசு மட்டும்தான். இந்த விலைக்குறைப்பு ஆலோசனை, சேட்டைத்தனம் உங்களுடையதாக இருந்தால், இது சிறுபிள்ளைத்தனம், மோசமான ரசனையாகும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நான் கடந்த வாரம் விடுத்த சவாலுக்கு நீங்கள் ஒரு காசு குறைத்துள்ளது சரியான பதில் அல்ல.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் “தனியார் தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30 மணிக்கு சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் தொகுத்து வழங்குகிறார். குடும்பத்தில் கணவர் மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் பல்வேறு தனிமனித மற்றும் குடும்பப் பிரச்சினைகளில் தலையிடுகிறார்.

மேலும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும். தொகுப்பாளரின் கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பெண்களுக்கு சரியான முறையில் மரியாதை அளிப்பதில்லை. விவரம் தெரியாத ஆண், பெண்களை குறிவைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்த நிகழ்ச்சி பொதுநலத்தைப் பாதிப்பதாக உள்ளது. மேலும் அந்த தனியார் தொலைக்காட்சி தகவல் ஒளிபரப்பு விதிகளை மீறிச் செயல்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அத்தொலைக்காட்சி, 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைகால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழ் ஹிந்து

This is 75th Posts (Today)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
ரூ.2 லட்சத்தை ‘கொள்ளையடித்த’ குரங்கு - எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என போலீஸ் குழப்பம்

ஆக்ராவில் வங்கியில் இருந்து வெளியே வந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை அங்கிருந்த குரங்கு ஒன்று பறித்துச் சென்றது. இந்த ‘கொள்ளை’ குறித்து எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்பது தெரியாமல் போலீஸார் குழம்பியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘நை மண்டி’ பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பன்சால். அங்கு கடை வைத்திருக்கும் அவர் தனது மகள் நான்சியுடன் இரு தினங்களுக்கு முன்பு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்றார். வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, பிளாஸ்டிக் பையில் சுற்றி தனது மகளிடம் கொடுத்துள்ளார் விஜய் பன்ஸால்.

பின்னர் இருவரும் நடந்தபடியே வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அந்த குரங்குகள் அவர்களை தாக்க முயன்றன. அதில் ஒரு குரங்கு நான்சி கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு ஓடியது.

அந்த குரங்கை விரட்டியபடி விஜய் பன்சால் சென்றார். வங்கி ஊழியர்கள் சிலரும், அந்த பகுதி மக்களும் அவரது உதவிக்கு ஓடி வந்தனர். ஆனால் குரங்கு அருகில் இருந்த கட்டடத்தின் மாடிக்கு தாவிச் சென்று அமர்ந்து கொண்டது. அனைவரும் அந்த குரங்கிடம் கெஞ்சினர்.

சிலர் கதைகளில் வரும் சம்பவம்போல, குரங்கிற்கு சாப்பிடும் பொருட்களை வாங்கி வீசினர். இதனை பிடித்து டென்ஷன் இன்றி சாப்பிட்ட அந்த குரங்கு அசரவில்லை. சற்று நேரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதில் இருந்து ரூபாய் நோட்டுக்களை கிழித்தபடியே வீசி ஏறிந்தது. சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இதுபோலவே வீசி எறிந்த குரங்கு, பின்னர் மீது பணத்துடன் அங்கிருந்து ஓடியது.

அனைவரும் குரங்கை விரட்டிச் சென்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து குரங்கு ஓடி மறைந்தது. 60 ஆயிரம் ரூபாயை குரங்கிடம் இருந்து மீட்ட விஜய் பன்சால், மீதமுள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார். பின்னர் இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றார்.

ஆனால் போலீஸாரோ, இந்த சம்பவம் தொடர்பாக எப்படி வழக்கு பதிவு செய்வது என குழம்பிபோயுள்ளனர். குரங்கு தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்ளையடித்ததாகவோ அல்லது பணத்தை பறித்துச் சென்றதாகவோ வழக்கு பதிவு செய்ய முடியாது எனக் கூறினர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விஜய் பன்சால் புகார் அளித்துள்ளார். உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குரங்கை தேடி பணத்தை மீட்டு தருமாறு கோரியுள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
குண்டு பாய்ந்த நிலையிலும் துப்பாக்கிச் சண்டை: மாடு கடத்தியவர்களை மடக்கி பிடித்த போலீஸார்

ஹரியாணா மாநிலத்தில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையிலும், கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்கள், கடத்தல்காரர்களை மடக்கி பிடித்து, மாடுகளை மீட்டனர்.

போலீஸாரால் அதிகம் தேடப்பட்டு வரும் குற்றவாளி மாடு கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுபா அலியாஸ் சபுதீன், ஹரியாணா மாநிலத்தில் மிவாட்டுக்கு அருகிலுள்ள பல்லா கிராமத்தைச் சேர்ந்தவர். இவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஏற்கெனவே போலீஸ் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அலியாஸ் உட்பட சிலர் டாடா 407 வாகனத்தில் மாடுகளை ஏற்றிக்கொண்டு ரிவாரி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனை அடுத்து அவ்வழியே சென்று போலீஸார் பாதையை குறுக்கே மறித்து நின்றனர். பாதையை மறித்து நிற்கும் போலீஸாரைப் பார்த்ததும் மாடு கடத்தல்காரர்கள் தங்கள் பாதையை மாற்றினர். இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களை நோக்கி பல்வேறுமுறை துப்பாக்கியால் சுட்டனர்.

மஜ்ரி கிராமத்தில் இருந்த பாரிகாடுகளை உடைத்துவிட்டு தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள் போலீஸாரை நோக்கி சுடத் தொடங்கினர்.

அதில் இரண்டு போலீஸ்காரர்கள் மீது குண்டு பாய்ந்தது. போலீஸ் படையினர், சோடாவாஸ் பத்மாடா கிராமம் அருகே, அச்சமின்றி தங்கள் உயிரை பணயம் வைத்து, மாடு கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைதுசெய்து அவாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் ரன்பீர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் ரவி தத் ஆகிய இருவர் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதால் இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.