Discuss here about politics - 2. தினமும் அரசியல் பேசலாம் வாங்க - 2.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
‘‘தாஜ்மஹாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் இடித்து தள்ளிவிடுங்கள்’’ - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் அரிய பொக்கிஷமான தாஜ்மஹாலை பாதுக்காக முடியவில்லை என்றால் அதனை மூடிவிடுங்கள் அல்லது இடித்துதள்ளி விடுங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.

தாஜ்மஹாலை உரியமுறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் பிறக்கப்பட்டபோதிலும் அவற்றை செயல்படுத்தவில்லை. தாஜ் காரிடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

‘‘உலகின் அரிய பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் இருந்து வருகை தருகின்றனர். இதன் மூலம் பெரிய அளவில் அந்நிய செலவாணியை மத்திய அரசு ஈட்டி வருகிறது. ஈபில் டவர் உட்பட பிறநாடுகளில் உள்ள உலக அதிசயங்களை பாதுகாக்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதேசமயம் தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் எத்தனையோ அதிசய பொக்கிஷங்கள் இருந்தாலும், அவற்றில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம்.

தாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது. அதுபோலவே தாஜ்மஹாலை பாதுகாக்க நீண்டகால அடிப்படையில் திட்டத்தை உத்தர பிரதேச அரசு தயாரிக்கவில்லை. இந்த அக்கறை இன்மையால் தாஜ்மஹாலின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குரியாகி வருகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிகிறது; நீதிமன்ற நிபந்தனையை நிறைவேற்ற நேரமில்லையா? - பாரதிராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அவர் பெற்ற முன் ஜாமீன் நிபந்தனை உத்தரவை நிறைவேற்ற நேரமில்லையா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி 18-ம் தேதி சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்ததுடன், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாரதிராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவை மே 23-ம் தேதி விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி இயக்குனர் பாரதிராஜா மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டதுடன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென புதிய மனுவை பாரதிராஜா தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இயக்குநர் பாரதிராஜா பற்றிய செய்திகள் வருகின்றன. அதற்கெல்லாம் செல்ல முடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்ற முடியவில்லையா? நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாக தாக்கல் செய்யாமல் புதிய மனுவாக தாக்கல் செய்ததும் தவறு என்பதை சுட்டிக்காட்டினார். இதற்கிடையில் புகார்தாரர் நாராயணன் பாரதிராஜாவின் மனு மீதான கால அவகாசம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் புதிய மனுவை தாக்கல் செய்துள்ள பாரதிராஜாவுக்கு, கால அவகாசம் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய நாராயணனுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
ராகுல் காந்தி - பா.இரஞ்சித் திடீர் சந்திப்பு

z-kapng.png

இயக்குநர் பா.இரஞ்சித்துடன் அரசியல், சமூகம், திரைப்படம் குறித்துப் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா. இரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கபாலி, மெட்ராஸ், காலா போன்ற மாபெரும் வெற்றி படங்களின் பின்னால் இருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்தையும், நடிகர் கலையரசனையும் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தேன். அரசியல், திரைப்படம், சமூகம் குறித்து நாங்கள் பேசினோம். அவர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது. எதிர்காலத்திலும் இது போன்ற உரையாடல்கள் தொடரும் என்று எதிர்நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்

இயக்குனர் பா. இரஞ்சித் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு, ''மதச்சார்பற்ற அரசியலமைப்புக்கு சாதி மற்றும் மதம் ஆகியவை எத்தகைய அச்சுறுத்தல்களைத் தருகிறது என்பதை பற்றி பேசினோம். நமது உரையாடல்கள் முழு வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு தேசியத் தலைவர் அனைத்து தரப்பு மக்களின் சித்தாத்தங்களுடன் தொடர்பில் இருப்பது உற்சாகம் அளிக்கிறது'' என்று தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
கோயில் சிலைகள் திருட்டுபோவதை வேடிக்கை பார்க்க மாட்டோம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கோயில் சிலைகள் காணாமல் போவது, கடத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகளை பாதுகாப்பது தொடர்பாகவும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு செய்து தரவேண்டிய வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

வழக்கில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவேண்டிய கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகததால் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாதேவன் கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகும்போது அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் கேட்டார். இதையடுத்து வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி மகாதேவன் ஒத்தி வைத்தார்.

அப்போது எதிர்மனுதாரரான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் வழக்கை நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே அண்ணாமலையார் பஞ்சலோக சிலை மாயமானதாகவும், ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் காணாமல் போனதாகவும் சில சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், மர வேலைப்பாடுகள் அழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

சிலை கடத்தல் குறித்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தினந்தோறும் சிலைகள் மாயமாகி வருவதை உயர் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் சிலைத் திருட்டு என்பது தொடர்கிறது. தமிழகத்தில் சிலைத் திருட்டு தொடர்வது என்பது தமிழக அரசு, இந்து அறநிலைத்துறை நிர்வாகத்தின் மோசமான நிலையை எடுத்துக்காட்டுகிறது. சிறிய கோயில், பெரிய கோயில் என்பது பிரச்சினை இல்லை. சிலைகள் மக்களின் நம்பிக்கை.

தொடர்ந்து சிலைகள் திருடப்படும்போது அதுகுறித்த புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் மகாராஜனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஸ்ட்ராங் ரூம் அமைக்க இன்று அட்டவணை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. சிலைகளை பாதுகாக்க களம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் இன்று அட்டவணை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரும் , சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியும் வராததால் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
முத்தலாக்கில் பாதிக்கப்பட்ட பெண் 3 மாத சித்திரவதைக்கு பின் உயிரிழப்பு

முத்தலாக்கில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கணவனால் தொடர்ந்து அடிவாங்கியதோடு அறையில் பூட்டப்பட்ட நிலையில் உணவின்றி வாடியதாகக் கூறப்படுகிறது. அப்பெண் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்தார்.

ரஸியாவின் சகோதரி இதுகுறித்து தெரிவிக்கையில், உயிரிழந்த என் சகோதரிக்கு ஆறு வயதில் ஒரு குழந்தையுண்டு. ஒரு தொலைபேசி அழைப்பின்மூலம் அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டார். அது மட்டுமின்றி வரதட்சனை கேட்டு உணவு கொடுக்காமல் எனது சகோதரியை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டார்.

ஒரு மாதம் பூட்டப்பட்ட அறைக்குள் உணவு கொடுக்காமல் அவர் தனது உறவினர் வீட்டுக்குப் போய்விட்டார். எனக்கு தகவல் கிடைத்தவுடன் சகோதரி இருந்த வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தேன். ஆனால் போலீஸார் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை'' என்றார்.

மேரா ஹக் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பார்ஹத் நக்வி, ஏஎன்ஐயிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், ‘‘ரஸியாவின் கணவர் நஹீம் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இதைப்போன்ற கொடுமையை தனது முதல்மனைவிக்கும் செய்துள்ளார்.

ரஸியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பலனின்றி பின்னர் லக்னோவில் உள்ள பெரிய மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் அவர் குணமாகாத நிலையில் திரும்பவும் ஊருக்கே கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்’’ என பார்ஹத் நக்வி தெரிவித்தார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும்; புதிய தர வரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவு- உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மொழி பெயர்ப்பு தவறு காரண மாக 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தர வரிசைப் பட்டி யல் தயாரித்து கலந்தாய்வு நடத்தவும் அதுவரை தற்போது நடைபெறும் கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாளில் தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் எம்பியுமான டி.கே.ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:

நாடு முழுவதும் மே 6-ல் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.

தவறாக மொழிபெயர்ப்பு

இந்த நீட் தேர்வில் தமிழ் வினாத் தாளில் 49 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். மேலும் பிளஸ் 2 மதிப்பெண் கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சிபிஎஸ்இ சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தேர்வு நடத்துவது, தேர்வு முடிவெடுப்பது மட்டுமே சிபிஎஸ்இ வேலை. வினாத் தாள் ஆங்கிலத்தில் இருந்து தமி ழில் மொழி மாற்றம் செய்யும் போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சிபிஎஸ்இ-யால் உறுதி செய்ய முடியாது.

தமிழ் மொழியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டே ஆங் கில வினாத்தாள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. ஒவ் வொரு மாநிலத்திலும் இந்த முறையே பின்பற்றப்பட்டது. பிராந்திய மொழியில் புழக்கத்தில் உள்ள அகராதியை அடிப்படை யாக வைத்தே மொழிபெயர்ப்பு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

தேர்வு முடிவில் அவசரம் ஏன்?

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர்அகமது அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில் கூறியிருப்பதா வது:

வழக்கு தாக்கல் செய்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அதை செய்யாமல், வழக்கு தாக்கல் செய்த அன்றே தேர்வு முடிவுகளை வெளியிட்டது நியாயமற்றது.

மேலும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது தமிழக மருத்து வக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இப்போதைக்கு வெளியிடப்படாது என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட் டது.

நீட் தேர்வு முடிந்ததும் விடை சுருக்கத்தை வெளியிடுமாறு நீதிமன்றம் கேட்டபோது, அதற்கு சிபிஎஸ்இ மறுத்துவிட்டது. தேசிய அளவில் நடைபெறும் இதுபோன்ற தேர்வில் இவ்வாறான போக்கை கடைபிடிப்பதை ஏற்க முடியாது.

மாணவர்களுக்கு பாராட்டு

நீட் தேர்வு வினாவில் உள்ள தவறைப் புரிந்து பதில் எழுதிய மாணவர்களைப் பாராட்ட வேண்டும். இதை மேம்போக்காகக் கருதாமல் மாணவர்களின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் (பள்ளிக்குச் சென்று படிக்காதவர்கள்) நீட் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. ஏழை மாணவர்கள் பலர் பால் பாக்கெட் போட்டும் வீடு வீடாக நாளிதழ்களை போட்டும் பள்ளிக் குச் செல்லாமல் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர்.

அவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே தனியாகப் படிக்கின்றனர். அப்படி இருப்பவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க என்ன காரணம். இவ்வளவு மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும், அறிவியல் பாடங்களில் செய்முறை அறிவு பெற்றிருக்க வேண் டும் என்பதால், அந்த மாணவர் கள் நீட் தேர்வை எழுத விடாமல் தடுக்கப்படுகின்றனரா?

பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்கள் மட்டும் முக்கியமல்ல, இதுபோல் தனியாகப் படிக்கும் மாணவர்களையும் அரசும் கல்வி அமைப்புகளும் ஊக்கப்படுத்த வேண்டும். தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை அறிவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புகிறது.

இந்த வழக்கில் மொழி மாற்றத் தில் தவறு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொழி மாற்றத்தில் தவறு நிகழ்ந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் 2 வாரத்தில் புதிய தரவரி சைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும். அதுவரை தற்போதைய தரவரிசைப் பட்டியலையும் கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

புதிய தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத் துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
சிவில் நீதிமன்றங்களுக்கும் ‘தாரூல் கஜா’வுக்கும் முரண்பாடு ஏற்படாது: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் விளக்கம்

இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்க நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் மாவட்டங்கள்தோறும் ‘தாரூல் கஜா’ எனப்படும் ஷரீயத் நீதிமன்றம் அமைக்க முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தி நேற்று ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட பல நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இதில் சில நாளிதழ்களில் ‘தாரூல் கஜா’ மற்றும் சிவில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து குழப்பம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியானது. ஷரீயத் நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து நேற்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேக்கி கருத்து கூறி இருந்தார்.

அவர் கூறும்போது, “மதச்சார்பிலான விஷயங்களை ஷரீயத் நீதிமன்றங்களில் பேசலாம். ஆனால், நாட்டில் அனைவரும் சிவில் நீதிமன்றங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இது இஸ்லாமியக் குடியரசு நாடு அல்ல. எனவே, கிராமம், நகரம், அல்லது மாவட்ட அளவிலானது என எதுவாக இருந்தாலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘தாரூல் கஜா’ என்பது சிவில் நீதிமன்றம் அல்ல எனவும், அதில் இஸ்லாமியர்களின் ஷரீயத் சட்டம் அறிந்த காஜிக்கள் முன்னிருந்து பிரச்சினைகளை பேசித்தீர்ப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை மீது ஷரீயத் முறையில் ஆராய்ந்து பேசி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், மற்ற சிவில் பிரச்சினைகள் எதுவும் இதில் விவாதிக்கப்படாது எனவும் கூறி உள்ளனர். சிவில் நீதிமன்றங்களுக்கு இணையாக ‘தாரூல் கஜா’ இருப்பதாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டபோது, தம் மதம் சார்ந்த சட்டங்களை கடைப்பிடிக்க இஸ்லாத்தில் இடம் இருப்பதாக முஸ்லிம் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளரான ஜபர்யாப் ஜிலானி கூறும்போது, “நாங்கள் அமைக்

கும் ‘தாரூல் கஜா’வை நீதிமன்றம் எனக் கூற முடியாது. இங்கு வருபவர்கள் கூறும் பிரச்சினைகளை ஷரீயத் சட்டம் அறிந்த காஜி கேட்டு, அவர்களின் குறைகளை இஸ்லாமிய முறைப்படி தீர்த்து வைப்பார். பிரச்சினைகள் மீது 100 சதவீதம் ஷரீயத் முறையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். இதில், உடன்பாடு இல்லாதவர்கள் சிவில் நீதிமன்றங்களை அணுக அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே, இதனுடன் சிவில் நீதிமன்றத்திற்கு எந்த முரண்பாடும் ஏற்படாது” என்றார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
பிஹார் மாநிலத்தில் இரவில் காதலி வீட்டுக்கு சென்ற காதலனுக்கு திருமண யோகம்

பிஹார் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவில் ரகசியமாக நுழைந்த ஒருவரை திருடன் என நினைத்து பிடித்து வைத்தனர். ஆனால் அந்த வீட்டில் உள்ள தனது காதலியைப் பார்க்கவே அவர் அங்கு சென்றது தெரியவந்ததால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

ரோடாஸ் மாவட்டம் மஹாராஜ் கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த விஷால் சிங் (எ) தேஜு ராணுவத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரும் பக்கத்து ஊரில் (பராதி) உள்ள அவரது உறவினர் பிகாரி யாதவின் மகள் லட்சுமி குமாரியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்த விஷால், கடந்த 11-ம் தேதி இரவு தனது காதலியின் வீட்டில் ரகசியமாக நுழைந்துள்ளார். அப்போது தரை தளத்தில் உள்ள அறையில் குமாரி மட்டும் இருந்துள்ளார். மற்றவர்கள் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். எனினும் விஷால் நுழைந்ததைப் பார்த்துவிட்ட ஒருவர், திருடன் நுழைந்துவிட்டதாக கூச்சலிட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி விஷாலை பிடித்து அடிக்க முற்பட்டனர். அப்போது வேறு வழியின்றி விஷாலும் குமாரியும் காதலை ஒப்புக் கொண்டனர். எனினும், விஷாலை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரது குடும்பத்தினருக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். விஷாலின் தாத்தாவும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான பஞ்சு யாதவ் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

இதனிடையே, இரண்டு ஊர்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விஷாலும், குமாரியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, 12-ம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் செய்துவைக்கப்பட்டது.

போலீஸ் வாழ்த்து புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரி பிரமோத் குமார் சிங் கூறும்போது, “விஷாலுக்கும் குமாரிக்கும் திருமணம் செய்து

வைக்க இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களை வாழ்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு செய்திகளைப் பரப்ப வேண்டாம்: மீடியா ஒன் நிறுவனம்

அட்-ப்யூரோ நிறுவனத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவன இயக்குநர் திமோதி மோசஸ் வெளியிட்ட விளக்க அறிக்கையில், ''தற்போது மீடியா ஒன் குளோபல் என்டர்டேயின்மென்ட் நிறுவனம், லதா ரஜினிகாந்த் மற்றும் அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான சர்ச்சைகள் பற்றி ஊடகங்களில் பல தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகள் வெளியாவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த சர்ச்சைகள் அனைத்தும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் (MOU) மூலம் தொடங்கியது. அந்த உடன்படிக்கைகளின் படி அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திடமிருந்து கடன் தொகையாக ரூ.20 கோடி மீடியா ஒன் நிறுவனம் பெற்றுக்கொண்டது. ரஜினிகாந்த் நடித்த, ‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காக அத்தொகையை மீடியா ஒன் நிறுவனம் கடனாக வாங்கியது. மேலே கூறப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் கீழ் லதா ரஜினிகாந்த் உறுப்பினர் இல்லை.

மேலும் இந்த உடன்படிக்கைகளின் படி அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கு ’கோச்சடையான்’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும் விநியோகிப்பதற்கான முழு உரிமையும், உடன் குறைந்தபட்ச உத்தரவாத லாபத்தை கடன் தொகைக்கு ஈடாக எடுத்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. உடன்படிக்கைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட ரூ.20 கோடியில் ரூ.10 கோடி மட்டுமே முன்பணமாக கொடுத்தது அட்-ப்யூரோ நிறுவனம். இதன் காரணமாக ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியாவதில் பல வாரங்கள் தாமதமானது. இன்றைய தேதிப்படி மீடியா ஒன் நிறுவனம் ரூ.10 கோடி கடன் தொகையில், ரூ.9.2 கோடி உடன்படிக்கைகளின் படி சரிவர கட்டியுள்ளது. மேலும் ரூ.80 லட்சத்தை உடன்படிக்கைகளின் படி கட்ட முடிக்கவும் உறுதியாய் உள்ளது.

உடன்படிக்கைகளின் ஒப்பந்த மீறலாய், அட்-ப்யூரோ நிறுவனம் கடிதம் வழி கடந்த 11.11.2014 அன்று கோரியது. மீடியா ஒன் நிறுவனம் மொத்த தொகையாக ரூ.10 கோடியும், வட்டியாக ரூ.4.30 கோடியும், 6 மாத கால கணக்கின்படி, ஓராண்டிற்கான 80% வட்டி விகிதத்தை கட்டுமாறு கோரப்பட்டது. இது உடன்படிக்கைகளின் கீழ் ஒவ்வாத கோரிக்கை மட்டுமின்றி விதிமீறலாகும். இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டு, விசாரணையில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அட்-ப்யூரோ நிறுவனம், மீடியா ஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. மேலும் அட்-ப்யூரோ நிறுவனம் பொது வழக்குகளை தொடர்ந்துள்ளது. மேலும் மீடியா ஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது பொய்யாய் புனையப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் புகார் கொடுத்துள்ளது.

லதா ரஜினிகாந்த் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்குதாரரோ நிர்வாக இயக்குனரோ இல்லை. மேலும் அட்-ப்யூரோ நிறுவனத்தின் கோரிக்கைக்கு மீடியா ஒன் நிறுவனம் மட்டுமே பொறுப்பாகும் என்பது தெளிவுபடுத்தபடுகிறது. மீடியா ஒன் நிறுவன விவகாரங்களில் லதா ரஜினிகாந்துக்கு எந்தப் பங்கும் இல்லை. மேலும் அட்-ப்யூரோ நிறுவனத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேல் குறிப்பிட்டுள்ளபடி, மீடியா ஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்தின் நற்பெயருக்கு அவதூறு விளைவிக்கவும், பணம் பறிக்கவும் அட்-ப்யூரோ நிறுவனம் இத்தகைய செயல்களில் ஈடுப்பட்டு வருவது தெளிவாகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
சாலை விபத்தில் பலியான தம்பதியின் 2 மகள்களுக்கு ரூ. 1.45 கோடி இழப்பீடு: உயர் நீதிமன்ற லோக் அதாலத்தில் தீர்வு

சாலை விபத்தில் பலியான தம்பதியின் 2 மகள்களுக்கும் ரூ. ஒரு கோடியே 45 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தூர் பாலம் அருகே கடந்த 2009 ஜன. 17 அன்று நடந்த விபத்து ஒன்றில் விஜயேந்திரன் மற்றும் கலைச்செல்வி தம்பதி அரசு விரைவுப் பேருந்து மோதி பலியாகினர்.

இதையடுத்து விஜயேந்திரனின் 2 மகள்களும் தங்களுக்கு ரூ. 94 லட்சம் இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ரூ.85 லட்சத்து 39 ஆயிரத்தை வட்டியுடன் வழங்க வேண்டுமென போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த லோக்-அதாலத்திற்கு மாற்றப்பட்டது. அதையடுத்து நேற்று நடந்த லோக் அதாலத்தில் விபத்தில் இறந்த தம்பதியின் 2 மகள்களும், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் நிர்வாக இயக்குநர் பாஸ்கரனும் கலந்துகொண்டனர்.

நீதிபதிகள் இருதரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அதன்படி ரூ. 1 கோடியே 5 லட்சத்தை போக்குவரத்துக்கழகம் வழங்க ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் விபத்தில் பலியான நாளிலிருந்து வட்டியைக் கணக்கிட்டு ரூ. 1 கோடியே 45 லட்சத்தை இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை, விபத்தில் பெற்றோரை இழந்த விஜயேந்திரனின் 2 மகள்களிடமும் நீதிபதி சி.சரவணன் நேற்று வழங்கினார்.

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.