Discuss here about politics - 3. தினமும் அரசியல் பேசலாம் வாங்க - 3.

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒடிசா சிறுமியின் ரத்தநாள கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் முகத்தை சீரமைத்து டாக்டர்கள் சாதனை

z-f0ec90dcP1582252mrjpg.jpg

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியின் பிறவி ரத்தநாள கட்டி அகற்றப்பட்டு முகம் சீரமைக்கப்பட்டது. சிறுமியிடம் நலம் விசாரிக்கிறார் மருத்துவமனை டீன் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம். உடன் ரத்தநாள அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் க.இளஞ்சேரலாதன், ஆர்எம்ஓ ரமேஷ் மற்றும் டாக்டர்கள்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் ஒடிசா சிறுமியின் பிறவி ரத்தநாள கட்டி அகற்றப்பட்டு முகம் சீரமைக்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி சிறுமி தபசந்தி தகுவ (12). தந்தை டீக்கடையில் வேலை செய்து வருகிறார். சிறுமிக்கு பிறவி லேயே வலது பக்க மேல் உதடு மற்றும் ஈரலில் கட்டி இருந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திராட்சை கொத்து போல் கட்டி வளர்ந்துவிட்டது. இந்த கட்டியால் சிறுமி பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்.

புவனேஷ்வர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டார். ஆனால், டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு கட்டியை அகற்றுவது கடினம் என்று தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து, உறவினர் ஒரு வரின் உதவியுடன் சிறுமி சிகிச்சைக் காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரி சோதனை செய்து பார்த்ததில் மேல் உதடு, மூக்கு மற்றும் கண் ணுக்கு போகும் ரத்தநாளங்கள் ஒன்று சேர்ந்து தேன்கூடு போன்ற வடிவமைப்பு கொண்ட இடத்தில் பிறவிலேயே ஏற்பட்டுள்ள ரத்த நாள கட்டி என்பது கண்டுபிடிக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறைத் தலை வர் டாக்டர் க.இளஞ்சேரலாதன் தலைமையில் இண்டர்வென்ஷ னல் ரேடியாலஜிஸ்ட் பெரியகருப் பன், டாக்டர் சி.சண்முகவேலா யுதம், பா.தீபன்குமார், தளவாய் சுந்தரம், மயக்கவியல் டாக்டர்கள் சித்ரா தேவி, நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழுவினர் முதலில் சிறுமி யின் வலது தொடையில் சிறிய துளையிட்டு அங்குள்ள ரத்தக் குழாயில் நவீன கருவியின் உதவி யுடன் வேதியியல் பொருளை தேன்கூடு போன்ற அமைப்பில் செலுத்தி ரத்தத்தை உறைய வைத்தனர்.

பின்னர் கட்டியை அகற்றி முகத்தைச் சீரமைத்தனர். இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிறுமி நலமாக இருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் க.இளஞ்சேர லாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒடிசா சிறுமிக்கு செய்யப்பட்டது மிகவும் சிக்கலான அறுவை சிகிச் சையாகும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படும். அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை முழுமையாக நிறுத்தி வெற்றிகர மாக கட்டி அகற்றப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய் வதற்கு ரூ.8 லட்சம் வரை செல வாகும். ஒரு லட்சம் பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகின் றனர். அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2017-2018-ம் ஆண்டில் மட்டும் 48 நோயா ளிகளின் பிறவி ரத்தநாள குறை பாடு கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு டாக்டர் க.இளஞ் சேரலாதன் தெரிவித்தார்.

சிறுமியின் பிறவி ரத்தநாள கட்டியை அகற்றி முகத்தை சீர மைத்த டாக்டர்கள் குழுவினரை மருத்துவமனை டீன் எஸ்.பொன் னம்பல நமச்சிவாயம் பாராட்டி னார். அப்போது மருத்துவமனை ஆர்எம்ஓ ரமேஷ் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
காஷ்மீர் என்கவுன்ட்டர்: முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்தவர் உட்பட மூன்று தீவிரவாதிகள் சிக்கினர்

வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டர் தாக்குதலில் முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்த மனான் வானி உட்பட மூன்று தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர்.

வானி உட்பட மூன்று தீவிரவாதிகள் ஹந்த்வாரா பகுதியின் சத்குண்ட் கிராமத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதைத் தொடர்ந்து அதிகாலையில் இருந்து அப்பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே தேடுதல் வேட்டையைத் தொடங்க சிறிது நேரம் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அப்போது தீவிரவாதிகளைச் சரண் அடையக் கூறி, போலீசார் தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். ஆனால் முயற்சி ஏதும் பதிலளிக்காததால், தாக்குதல் தொடர்ந்தது.இதில் வானி உட்படத் தீவிரவாதிகள் தப்பிச் செல்ல முடியாதபடி சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்புக்காக விண்ணப்பித்த மனான் வானி, கடந்த ஜனவரி மாதம் தீவிரவாத அமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
சுவர்களுக்கிடையில் எலும்புக்கூடு: பால்கனியில் சுவரை இடித்த போது பயங்கர அதிர்ச்சி

புதுடெல்லி துவாரகா பகுதியில் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது இரண்டு சுவர்களுக்கு இடையில் முளைத்திருந்த தாவரங்களை அகற்றும் பணியின் போது எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

எலும்புக் கூட்டைக் கண்டு பீதியில் உறைந்த 2 தொழிலாளர்கள் விஷயத்தை வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்க அவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் அனுப்பினார்.

நீலச்சட்டை அணிந்திருந்த ஒரு நபரின் எலும்புக்கூடு அது. பிப்ரவரி 2016 முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் 24 வயது ஜெயப்பிரகாஷ் என்பவரின் எலும்புகூடு அது என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஜெயபிரகாஷின் மாமா தலைமறைவானதும் போலீஸ் தரப்பில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஜெயப்பிரகாஷ் மாமா விஜய் குமார் மஹாரானா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வீட்டின் உரிமையாளர் விக்ரம் சிங். இவருக்கு வயது 87. தாப்ரியின் சாணக்கியா பிளேசில் தான் வாடகைக்கு விட்ட 3வது தளத்தின் பால்கனியை பழுதுபார்க்க வேலைக்கு ஆட்களை அமர்த்தியிருந்தார். இவர் 2015-ல் வீட்டின் 3வது தளத்தை மேற்கு வங்கத்திலிருந்து வருவதாகத் தெரிவித்த விஜய் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இவர் தன் உறவினர் ஜெய் உடன் இங்கு தங்கியிருந்துள்ளார், இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் வெளியில்தான் உணவு அருந்தி வந்துள்ளனர். இப்படியிருக்கையில் 2 மாதம் சென்ற பிறகு வீட்டு உரிமையாளரிடம் விஜய் தன்னுடன் தங்கியிருந்த மருமகன் ஜெய்யைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். வீட்டு உரிமையாளர் போலீசுக்கு தகவல் அளிக்குமாறு விஜய்யிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பிப்ரவரி 12, 2016-ல் காணவில்லை புகார் பதிவு செய்யப்பட்டது. ஜெய்யின் தாயாரும் மகனைக் காணாமல் பரிதவித்து வந்துள்ளார்.

மண், தாவரம் கேட்ட விஜய்:

இதே காலக்கட்டத்தில்தான் விஜய் வீட்டு உரிமையாளரிடம் கொஞ்சம் மண், தாவரங்கள் இருந்தால் அழகுபடுத்த உதவும் என்று கேட்டுள்ளார். அதைக் கொண்டு பால்கனியில் இருசுவர்களுக்கிடையில் உள்ள இடைவெளியில் அவர் தாவரங்களை வைத்துள்ளார். இதற்கு 2 மாதங்களுக்குப் பிறகு வீட்டை விஜய் காலி செய்துள்ளார்.

“திங்களன்று தொழிலாளர்களை வைத்து சுவற்றை இடிக்கச் சொன்னேன். அங்கிருந்து தாவரத்தையும், மண்ணையும் அகற்றச் சொன்னேன். இதை செய்த போது அங்கு எலும்புக்கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே தெரிவிக்க நான் போலீஸை வரவழைத்தேன்” என்றார் வீட்டு உரிமையாளர்.

இதனையடுத்து தாப்ரி போலீஸ் நிலைய ஆபீசர், குற்றப்புலனாய்வுத் துறை ஆகியோர் இடத்துக்கு விரைந்து புகைப்படங்கள், வீடியோ எடுத்தனர்.

தீன் தயாள் மருத்துவமனையில் பரிசோதனைக்காக எலும்புக்கூடு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, டி.என்.ஏ சோதனை நடத்தி அது ஜெய்யின் எலும்புதானா என்று கண்டறியப்படும்.

ஜெய் பணியிலிருந்து திரும்பவில்லை என்று மாமா விஜய் அளித்த புகார் போலியானது என்று போலீஸார் இப்போதைக்கு முடிவெடுத்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி: செயல் தலைவர் பாஜகவுக்கு தாவல்



சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராம்தே இன்று அக்கட்சியில் இருந்து விலகி அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.



ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.



சத்தீஸ்கரில் முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 12-ம் தேதியும், 2-ம் கட்டத் தேர்தல் நவம்பர் 20-ம் தேதியும் நடைபெறுகிறது. மத்திய பிரதேசம், மிஸோரம் மாநிலங்களுக்கு நவம்பர் 28-ம் தேதியும், ராஜஸ்தான், தெலங்கானாவுக்கு டிசம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.



இந்த மாநிலங்களில் தற்போது உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. எதிரணியைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் இழுக்க பல கட்சிகளும் முயன்ற வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ராஜ நரசிம்ம ரெட்டியின் மனைவி பத்மினி ரெட்டி நேற்று முன்தினம் திடீரென பாஜகவில் இணைந்தார். ஆனால் சில மணிநேரங்களிலேயே அவர் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பினார். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராம்தே அக்கட்சியில் இருந்து விலகி அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அப்போது சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் உடன் இருந்தார். ராம்தே பாஜகவில் இணைந்தது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நான்கு முறை எம்எல்ஏவாகன ராம்தே காங்கிரஸ் முக்கிய தலைவராக இருந்து வந்தார்.



டெல்லியில் இன்று காலை சத்தீஸ்கர் தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் ராம்தே கட்சி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைமையுடன் சமீபகாலமாக அதிருப்தியுடன் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.



தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
#MeToo: மத்திய அமைச்சர் அக்பர் மீது அமெரிக்க பெண் பத்திரிக்கையாளரும் பாலியல் புகார்

z-akbar2PNG.jpg

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவம் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.



மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி மற்றும் மற்றொரு பத்திரிகையாளரும் புகார் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஏறக்குறைய 40 ஆண்டு கால பத்திரிகை அனுபவம் கொண்டவர். பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் இந்த இரு பெண் பத்திரிகையாளர்களிடம் தவறாக நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் எம்.ஜே அக்பருக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அக்பர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



இந்தநிலையில் எம்.ஜே. அக்பர் மீது அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் ஒருவரும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சிஎன்என் பத்திரிக்கையாளரான மஜ்லி டி புயு காம்ப் என்பவர் இந்த புகாரை கூறியுள்ளார்.



அவர் 18 வயதாக இருந்தபோது அக்பரின் கீழ் பணியாற்றியதாகவும் அப்போது அவர் தன்னடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘எனது நன்றியை தெரிவிப்பதற்காக அவருக்கு கையை நீட்டினேன். ஆனால் 55 வயதான அவர் தனது நாக்கை, 18 வயதான எனது வாயில் வைத்து முத்தமிட்டு விட்டார்’’ எனக் கூறியுள்ளார்.



தமிழ் ஹிந்து

This is 99900 Posts
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
'முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்' எனக் கூறுவது சரியல்ல: தமிழிசை கருத்து



ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே முதல்வர் பதவி விலக வேண்டும் எனச் சொல்வது சரியானதல்ல என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என, திமுக, பாமக, மதிமுக, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே முதல்வர் பதவி விலக வேண்டும் என்பது சரியானது அல்ல என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக, சேலத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஊழல் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது கவலையளிக்கிறது. சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என அதிமுக தரப்பில் சொல்கிறார்கள்.



ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சியினர், அவர்கள் மீது குற்றச்சாட்டு வந்தபோது யாரும் பதவி விலகவில்லை. ஆனால், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சொன்னவுடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவது சரியான நடவடிக்கை அல்ல” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
‘எங்களை யாரும் தடுக்க முடியாது; சபரிமலைக்கு விரைவில் வருவோம்’: பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய்பேட்டி



பரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில், விரைவில் சபரிமலைக்குச் செல்வேன் என்று பூமிமாதா பிரிகேட் அமைப்பின் தலைவரும், பாலின சமத்துவ ஆர்வலருமான திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.



மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதைக் கையில் எடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பூமாதா பிரிகேட் அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் அதில் வெற்றி பெற்றார். அனைத்துப் பெண்களும் தர்ஹாவுக்குள் நுழைவதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்தார்.





இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுப் பெண்கள் வரை சாமி தரிசனம் செய்ய நூற்றாண்டுகளாகத் தடை இருந்தது. இந்தத் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இளம் வழங்கறிஞர்கள் அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டவர் திருப்தி தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.



ஆனால், இந்தத் தீர்ப்புக்கு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பல்வேறு நகரங்களில் பேரணிகள், போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் விரைவில் சபரிமலைக்குச் செல்வதாக திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மும்பையில் மலையாள சேனல் ஒன்றுக்கு பூமிமாதா பிரிகேட் அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் பேட்டி அளித்தார்.



அப்போது அவர் கூறுகையில், ''சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு எங்கள் அமைப்பினர் செல்லும் தேதியை விரைவில் தெரிவிப்போம். பெண்களுக்கான அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இப்போது சம உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதால், எங்களை யாரும் தடுக்க முடியாது'' என்று தெரிவித்தார்.



திருப்தி தேசாயின் பேட்டிக்குப் பதிலடி கொடுத்து, கேரள பாஜகவின் தலைவர் பி.எஸ் சிறீதரன் பிள்ளை அளித்த பேட்டியில், ''பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிராகத் திருப்தி தேசாய் சவால் விடுக்கக்கூடாது. சபரிமலை ஐயப்பனை பக்தர்கள் மிகுந்த உணர்வுப்பூர்வமாக நேசிக்கிறார்கள். அனைத்து தரப்பின் நலன்களுக்காக, திருப்தி தேசாய் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். ஆயிரக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.



சபரிமலை தந்திரி குடும்பத்தின் உறுப்பினர் ராகுல் ஈஸ்வர் கூறுகையில், ''கோயிலின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மீறாதவரை நாங்கள் தொடர்ந்து காந்திய வழியில் போராட்டத்தை நடத்துவோம். நாங்கள் திருப்தி தேசாய்க்கு கூறுவதெல்லாம், கேரளாவில் உள்ள வேறு எந்த ஐயப்பன் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், சபரிமலைக்கு மட்டும் வராதீர்கள் என்று கூறுகிறோம்'' எனத் தெரிவித்தார்.



வரும் 18-ம் தேதி முதல் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட்டு, 5 நாட்கள் பூஜை நடைபெறும்.



இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வரும் 17-ம் தேதி பாஜகவின் மகிளா மோச்சா அமைப்பின் சிறப்பு வழிபாடும், போராட்டமும் சபரிமலைக்குச் செல்லும் வழியில் நடத்தப்பட உள்ளது.



கேரளா மகிளா காங்கிரஸ் அமைப்பின் தலைவர் லத்திகா சுபாஷ் கூறுகையில், ''சபரிமலையின் பாரம்பரியத்தை உடைக்கவும், மீறவும் முயல்வோர் சபரிமலைக்குச் செல்லாமல் இருப்பதே சிறந்தது. காங்கிரஸ் கட்சி மதத்தில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறது. பக்தர்களின் நம்பிக்கையுடனும், உணர்வுகளுடன் ஒருபோதும் விளையாடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்'' எனத் தெரிவித்தார்.



உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சபரிமலை தந்த்ரி குடும்பத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

z-PARITHIjpg.jpg

முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 58.



தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர் 1991-ம் ஆண்டு அதிமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, திமுக சார்பில் ஒரே எம்எல்ஏவாக இருந்தார். அப்போது சட்டப்பேரவையில் ஒரே திமுக எம்எல்ஏவாக இருந்து திறன்பட பணியாற்றினார்.



தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
''காய்கறிகளையே சாப்பிடச் சொல்கிறீர்களா?'' - இறைச்சிக்கு தடைகோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி



மக்கள் அனைவரும் சைவமாக வேண்டுமென்பதுதான் உங்கள் விருப்பமா? அவர்களை காய்கறிகளையே சாப்பிடச் சொல்கிறீர்களா என்று இறைச்சிக்கு தடை கோரும் மனுவை விசாரித்த நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.



இறைச்சி வர்த்தகம் மற்றும் தோல் தொழில் மீதான தடை விதிக்கக் கோரும் பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்திற்கு நேற்று வந்தது,



இம்மனுவை தாக்கல் செய்த, 'ஆரோக்கிய செல்வம் நன்னெறி உலக வழிகாட்டி இந்தியா அறக்கட்டளை' (ஹெல்தி வெல்தி எதிகல் வேர்ல்டு இந்தியா டிரஸ்ட்) என்ற அமைப்பு,



அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் மாடு, மீன், பன்றி, கோழி உள்ளிட்ட அனைத்து வகையான இசைச்சிகள் மற்றும் இறைச்சி தொடர்பான உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் தடைவிதிக்க வேண்டுமென தமது மனுவில் கோரியிருந்தது.



நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை, மதன் பி. லோகூர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.



விசாரணையின்போது பேசிய மனுதாரரின் வழக்கறிஞர், ''இறைச்சி ஏற்றுமதி மற்றும் அதன் துணைத் தொழிலான தோல் வர்த்தகம் இரண்டுமே சமூக விரோதம் மற்றும் காண்டுமிராண்டித்தன மானதாகும். ஆனால் அந்நிய செலாவணி பற்றி பேசும்போது நாட்டின் செலவில், இதற்கு மிகப்பெரிய விலை கிடைக்கிறது என்று பேசுகிறோம்.



உலகம் முழுவதும் உள்ள இறைச்சிக்காக ஆடுமாடுகள் கொல்லப்படும் கூடங்களும் தோல் பதனிடுதலும் சமூகத்திற்கு எதிரான, அருவறுப்பான மற்றும் அபாயகரமான குற்றமாகும். மேலும் இந்த அருவறுப்பான தொழிலில் இருந்து வெளிவரும் பரவலான மாசுபாடு பற்றி இறைச்சி ஏற்றுமதியாளர்கள் பேசுவதில்லை'' என்று தெரிவித்தார்.



விசாரணை ஒத்திவைப்பு



அப்போது குறுக்கிட்ட நீதிபதி மதன் லோகூர் ''ஆக, நாடு முழுக்க முழுக்க காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு சைவமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று நீதிபதி லோகூர் கேட்டதில், மனுவை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது.



எனினும், மனுதாரரின் வழக்கறிஞர் ''தனது வாதங்களை முன்வைக்க வாய்ப்பளிக்க வேண்டும்'' என்று விடுத்த வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்தார். மேலும் பூஜா விடுமுறை தினங்களுக்குப் பின்னர் இம்மனுவை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.



பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் உள்நாட்டு தனியார் இறைச்சி உற்பத்தியை இந்த அறக்கட்டளை குறிப்பாக எதிர்க்கவில்லை, இதில் மனுதாரர் வலியுறுத்தி கூறியுள்ளது என்னவென்றால், ''தீவிரமான விலங்கின இறைச்சித் தொழிலில் பெருமளவில் ஆண்ட்டிபயாடிக் எனப்படும் நோய்எதிர்ப்புச் சக்தி மருந்துகள் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பரவும் வெப்ப நோய்கள் பொதுமக்களை அதிக அளவில் பாதிக்கிறது,'' என்பதுதான்.



இறைச்சி வர்த்தகம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் பொது சுகாதாரத்தை தீவிரமாக பாதிக்கின்றன, இத்தொழில்களை மேலும் அனுமதித்தால் நமது கால்நடை செல்வங்கள் நாளுக்குநாள் குறைவது ஒருபக்கம், இன்னொரு பக்கம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் மாசு கலப்படம் ஏற்படுவது மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவதும் தொடர்ந்து நடைபெறும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
#மீ டூ எதிரொலி: 'பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுடன் இனி நடிக்க மாட்டேன்'- அக்‌ஷய் குமார் அதிரடி



ஹவுஸ்புல் 4' படத்தின் இயக்குநர் சஜித் கான் மற்றும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, 'ஹவுஸ்புல் 4' படப்பிடிப்பை ரத்து செய்த அக்‌ஷய், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் உடன் இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.



முன்னதாக, நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின் போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என பரபரப்புப் புகார் கூறினார். அவருக்கு நடிகை ட்விங்கிள் கண்ணா ஆதரவு தெரிவித்தார்.



இதற்கிடையே தனுஸ்ரீ, ''நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்கள்; ஆனால் உங்கள் கணவர் நானா படேகருடன் 'ஹவுஸ்புல் 4' படத்தில் நடிக்கிறாரே?'' என்று ட்விங்கிள் கண்ணாவிடம் கேள்வி எழுப்பினார்.



இந்நிலையில் அக்‌ஷய் குமார் 'ஹவுஸ்புல் 4' படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார்.



இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அக்‌ஷய், ''வெளிநாட்டில் இருந்து இப்போதுதான் இந்தியா திரும்பினேன். வெளியாகும் செய்திகள் அனைத்தும் என்னை மிகவும் பாதிக்கின்றன. அடுத்தகட்ட விசாரணை முடியும்வரை 'ஹவுஸ்புல் 4' படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொண்டேன்.



பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் உடன் இனி நடிக்க மாட்டேன். பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானவர்களில் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.



தமிழ் ஹிந்து
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.