Do handshakes make you sick? - கை குலுக்கினால் நோய் தொற்றும்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கை குலுக்கினால் நோய் தொற்றும்!

அப்படியா ?
தெரிந்தவர், தெரியாதவர்... யாரைச் சந்திக்கிற போதும் கை குலுக்குவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். இந்தப் பழக்கம் நோய்க் கிருமிகள் பரவக் காரணமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?கைகுலுக்கிக் கொள்வது குறித்து அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒருவர் மட்டும் கையில் கிளவுஸ் அணிந்திருந்தார். மற்றொரு வர் கிளவுஸ் அணியவில்லை.



இருவரும் மாற்றி மாற்றி கைகளைக் குலுக்கிக்கொண்டனர். பின்னர், ஒருவர் அணிந்திருந்த கிளவுஸை ஆராய்ச்சி செய்தபோது, அதில், ஏராளமான இ.கோலி பாக்டீரியா பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கைகளையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கைகுலுக்கல் செய்யும் போது, இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நோய் பரவுவதும் அறியப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் கைகுலுக்கல் பழக்கத்தையே விட்டுவிட்டனர். அங்கு கைகுலுக்கலுக்கு பதிலாக, குத்துச் சண்டை இடுபவர்கள் போல கையை மடக்கிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் கைகளை லேசாக குத்திக் கொள்கிறார்கள் (ஃபிஸ்ட் பம்ப்). இதன்மூலம் கிருமிகள் பரவுகிற அபாயம் 90 சதவிகிதம் குறைகிறதாம்.

அடுத்த முறை உங்களை நோக்கி கைகள் நீள் கிற போது கவனமாக இருங்கள்! பாரம்பரிய தமிழ் வணக்கத்தில் நோய் தொற்றும் பிரச்னை இல்லை!
 

shinninglikeme

Friends's of Penmai
Banned User
Joined
Jun 8, 2013
Messages
217
Likes
99
Location
Mumbai
#2
HAndshakes may not make you sick but yes frequently washing hands with soap before consuming food will make one healthy.
Clean air , water and food is the basic right of one and should practice this.
Many Low Cost Water Purifier have been launched so that people from even remote areas can afford Healthy Living
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.