Do not beleive in the slimming advertisements-எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்ட&#30

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்


‘ஐயோ பிரபு குண்டாகுறாரே, கனவுக்கன்னி நமீதா புஷ்டி ஆயிட்டாங்களே, அஞ்சலி ஊதிக்கிட்டே போறாங்களே’ன்னு தன்னலம் பார்க்காமல் மக்களை பற்றி யோசிக்கும் சமூகம் நம்ம தமிழ்ச் சமூகம். இப்போது உலகில் உள்ள உடற்பருமன்காரர்களின் எண்ணிக்கை கடந்த 25 வருடங்களில் இரட்டிப்பாகியிருக்கிறது.

2013ல் அமெரிக்க மருத்துவக் கழகம் உடற்பருமன் என்பதை ஒரு நோயாகவே அறிவித்து விட்டது. ‘இது சும்மா பீர் தொப்பை’, ‘சின்ன வயசுலேந்து இப்படித்தான் இருக்கேன்’, ‘குழந்தை டெலிவரி ஆனதுக்கப்புறம் இப்படியாயிடிச்சு’ என்ற எந்த நொண்டிச்சாக்கும் எடுபடாது!

குண்டாக இருக்கிறீர்களா? உங்களுக்கு நோய் உள்ளது. சரி செய்ய வேண்டும். குண்டானவர்களுக்கு ஃபிளைட் டிக்ெகட் விலை பிற்காலத்தில் கூடலாமாம். ‘ப்ளேன் அதிக வெயிட் எதுக்கு சுமக்கணும்? பெட்ரோல் அதிகமா யூஸ் ஆகுது, மைலேஜ் தா்றதில்ல, அதனால எக்ஸ்ட்ரா காசு குடு’ன்னு கேக்கிறாங்க. ‘இல்லப்பா நான் பாக்கதான் குண்டு, வெறும் காற்றடைத்த பையடா’னு சொல்லி எஸ்கேப் ஆக முடியாது!

‘டாக்டர், நான் காலைல ஒரு இட்லி, மதியம் தினையரிசி சாப்பாடு, நைட் ரெண்டு கம்பு தோசைதான் சாப்பிடுறேன்... சர்க்கரை, ஸ்வீட் சேத்துக்கறதில்ல... டெய்லி வாக்கிங் போறேன்... அப்பயும் வெயிட் குறைய மாட்டேங்குது...’ ஒரு லெவலுக்கு மேல் டயட்டும் எக்சர்சைஸும் கை கொடுப்பதில்லை. சிலருக்கு நன்றாக வெயிட் குறைகிறது... பலருக்கு குறைவதில்லை.

எவ்வளவோ பேர் பச்சைக் காய்கறியும் சூப்பும் குடித்து பசியுடன் இருந்து வெயிட் குறைக்க ட்ரை செய்வதை பார்த்திருக்கிறோம். இருபது வருடம், முப்பது வருடம் என வாழ்க்கை முழுதும் டயட் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இதிலென்ன விசேஷம் என்றால், எடை குறைத்தால், நம்முடைய மற்ற நோய்களின் தன்மைகளும்
குறைகின்றன என்பதுதான்.அதிகம் சாப்பிடுவதால் மட்டும் எல்லோருக்கும் பருமன் வருவதில்லை. மரபணு, ஹார்மோன், மனநோய், குடல் பாக்டீரியா போன்ற காரணங்களும் உள்ளன. இதற்கான வைத்தியம் மட்டும் எப்படி ஒன்றாக இருக்கலாம் என உலகத்திலேயே கில்லி விஞ்ஞானப் பத்திரிகையான நேச்சர் (Nature) கேட்கிறது.

இப்போது குண்டு புஷ்கான் குழந்தைகளை பார்த்தால்தான் பயமாக இருக்கிறது. பஸ்ஸில் இந்த மாதிரி சிறுவர்கள் உட்கார இடமில்லாமல் நின்றால், பெரியவர்களே பாவப்பட்டு எழுந்து கொண்டு அவர்களை உட்காரச் சொல்லும் துயர காமெடிகளும் நடக்கிறது. ஒருவர் இத்தனை வருடம் குண்டாக இருந்தால் இன்னின்ன நோய்கள் வரும் என கணக்கு இருக்கிறது.

அப்படியானால் குழந்தைப் பருவத்திலேர்ந்தே மிக குண்டாக இருக்கும் குழந்தைகள்? கண்டிப்பாக நோய் வரும். ஆள் வளர வளர இதயமும் பெரிதாகும். ஏனென்றால் உடல் முழுதும் அது ரத்தம் அனுப்பி வைக்க வேண்டும், அதனால் பெரிதாகி ஸ்ட்ரெயின் ஆகிறது. எலும்புகள் அதிக எடையை தாங்கித் தாங்கி சீக்கிரம் வீக் ஆகிவிடும். ஜாயின்டுகள் தேய ஆரம்பிக்கும். இது வயதானால் எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று. குண்டு குழந்தைகளுக்கோ, இது 20-30 வருடம் சீக்கிரம் வந்து விடும். இதில் பலருக்கு பிரஷர், சுகர், இதய நோய், கிட்னி நோய்கள் வரலாம்.

குழந்தைகளை காலையில் ஒரு மணி நேரம் ஓடச் சொல்லுங்கள். நீங்களும் ஓடுங்கள். நொறுக்குத் தீனிகள் வாங்குவதையே நிறுத்த வேண்டும். காலையும் இரவும் முதலில் நிறைய காய்கறி சூப் குடித்து முக்கால் வயிறு நிரம்பிய பின் சாப்பிட ஆரம்பிக்கச் சொல்லுங்கள். 123 மருந்துகளை ஆராய்ந்ததில் ‘ஆர்லிஸ்டாட்' என்ற சுமாரான காஸ்ட்லி மாத்திரை மட்டுமே மார்க்கெட்டில் உள்ளது. மாத்திரையை நிறுத்தினால் மீண்டும் பழையபடிக்கு வெயிட் கூடி விடலாம். ‘சாப்பிட்டாச்சுப்பா போதும்’ என்று நினைக்க வைக்கிற ஹார்மோன்உடலில் உள்ளது. அதைத் தூண்டி விடுவது, கிள்ளி விடுவது என பல ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

டி.வி.யை போட்டால் மார்க்கெட் போன கிழ ஃபாரின் மாடல்கள், ‘ஈ’ என இளித்துக் கொண்டு, வயிற்றில் எதையோ கட்டி, ஒண்ணும் செய்யாமல் வெயிட் குறைக்கலாம் என்கிறார்கள். இதனால் வெயிட் குறையாது, நம் பணம்தான் குறையும். டி.வி.யில் வரும் ஸ்லிம் மாத்திரைகளும் இப்படியே. அவர்கள் வெயிட் குறையவில்லை...

ஜஸ்ட் போட்டோஷாப்பில் போய் எடிட் செய்கிறார்கள். நம்மாளுகதான் வழுக்கைத் தலையில அமேசான் காட்டு எண்ணெய் தடவினா முடி
வளரும்னு நினைக்கற பயலுவலாச்சே... ‘இந்த ஸ்லிம் மாத்திரையும் வாங்கிப் போடுவோம்’ என்று ஏமாறுகிறார்கள். மக்களே ஒண்ணு யோசிங்க. செல்போன், பேன்ட்-சட்டை, பெல்ட், பேன், லைட் இதெல்லாம் நாமளா தேடிப்பிடிச்சு இருக்குனா கண்டுபுடிக்கிறோம்? நல்ல விஷயம்னா அது நாம பார்க்கிற முக்காவாசிபேர் வச்சிருப்பாங்க. நாமும் வாங்குவோம். உண்மையான வைத்தியமும் அதுதான்.

அப்பன்டிசைட்டிஸ்க்கு என்ன வைத்தியம்னு உங்களுக்கு தெரியுமில்லையா? ஆமா, வெட்டி எரிய வேண்டியதுதான். அந்த மாதிரி ஒல்லியாவுறதுக்கும் ஒரு நல்ல வைத்தியம் வருதுன்னா உங்களுக்கு தெரியாம இருக்காது. எல்லோரும் அதை பயன்படுத்தும் போது நாமும் பயன்படுத்துவோம். இப்போதைக்கு உடற்பருமனுக்கு மருந்து இல்லை. டாட். ஆராய்ச்சி சுண்டெலி மாதிரி தெரியாத ஐட்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது. ஆனானப்பட்ட அம்பானியின் மகனே குண்டு பாய்தான்! அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி, ஏன் குழந்தைகள் பருமனாவதை தடுக்க இயக்கம் ஆரம்பிக்க வேண்டும்? எல்லோருக்கும் இந்த பெல்ட்டையோ இல்லை இந்த டகால்டி மாத்திரையையோ ஏன் பார்சல் அனுப்பக்கூடாது? அது வேலை செய்யாது என அவர்களுக்குத் தெரியும்!

டயட், எக்சர்சைஸ், மாத்திரைகள் கொடுத்து பலன் இல்லாதவர்களுக்கு பேரியாட்ரிக் சர்ஜரி செமையாக பலன் தரும். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு 40-50 கிலோ குறைத்து ஜாலியாக வருவார்கள். வயிற்றை சுத்தமாக வெட்டி எறிந்து விட்டு எலுமிச்சை சைஸுக்கு மாற்றி விடுவார்கள். ஒரு இட்லி என்ன, கால் இட்லி சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். உடலின் எனர்ஜி தேவைக்காக எல்லா கொழுப்பும் சொய்ய்ய்யங் என கரைந்து விடும்.

‘பிஎம்ஐ 40க்கு மேல் இருக்கிறது, என்ன செய்து பார்த்தும் பலன் இல்லை' என்றால், உடனே போய் இதைச் செய்து விடுங்கள். உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றாக பழுதடைவதற்கு முன் காப்பாற்றலாம். ‘ஐயோ ஆபரேஷனா’ என்று பயப்படுபவர்களுக்கு, அட்மிட் ஆகி ஆபரேஷன் செய்து ஒரு வாரத்தில் எல்லா வேலையும் பார்க்கலாம். இதனால் கிடைக்கும் நன்மையை பாருங்கள்.

ஆயுட்காலம் கூடும், ஓடலாம், டான்ஸ் ஆடலாம்... ‘ஏய் குண்டூஸ்’ என்கிற கிண்டல்களை தவிர்க்கலாம், பஸ்ஸில் மூணு பேர் சீட்டில் மூணாவது ஆளாக உட்காரலாம்... புட்போர்ட் அடிக்கலாம்... காலேஜ் பசங்க போடும் கலர் கலர் கம்மி சைஸ் டிரெஸ்ஸை நாமும் வாங்கலாம்... சில நேரம் சிக்ஸ்பேக் கூட வைக்கலாம்... ஒரு நோயும் இல்லாமல் மஜாவாக இருக்கலாம்... இரவில் நசுங்கி விடுவோம் என பயமில்லாமல் மனைவி உங்களுடன் இருக்கலாம் (!) என பல நன்மைகள். ஜோசியர் சொல்வது போல தடைப்பட்ட கல்யாணம் நடக்கும்... சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்...

நோய்கள் விலகும்... உற்சாகமாக இருப்பீர்கள்... ராசியான நிறம் பச்சை. ஏனோ தெரியவில்லை, இந்த ஆபரேஷன் செய்த பலருக்கு சர்க்கரை நோய் இல்லாமல் போய் விட்டதாம்!இந்த வகை பேரியாட்ரிக் மேட்டர்கள் ஆபரேஷன் இல்லாமல் வாய் வழியாக குழாய் விடும் எண்டோஸ்கோப்பி முறையில் செய்யலாமா என யோசிக்கிறார்கள். வயிற்றில் ஒரு பலூனை வைத்து முக்கால்வாசி தண்ணீர் அல்லது காற்றை நிரப்பி விடுவது. வயிறு ஃபுல்லாக இருக்கிறது என மூளையை ஏமாற்றி நம்ப வைத்து கம்மியாக சாப்பிடுவோம். ஒரு மாத்திரை.

சாப்பாட்டுக்கு முன்னால் அதை விழுங்கி னால், அது பொய்ங் என உப்பி விடும். பசிக்காது. எடை குறைந்து விடும் என்கிறார்கள். ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரின் டூ பாத்ரூமை குடல் நோய் இருக்கும் நபரின் குடலுக்கு மாற்றுவது இப்போது குடல் நோய்காரர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரம். இதைப் பெற வாரக்கணக்கில் வெயிட்டிங் லிஸ்ட் உண்டு.

இதனால் உடற்பருமனையும் நல்ல பாக்டீரியாக்கள் மூலம் குறைக்க முடியும் என மதர் பிராமிஸ் செய்கிறார்கள். ‘எந்தக் கடையில அரிசி வாங்குற’ என நம்மைக் கேட்டவர்களை, எதையாவது செய்து ஒல்லியாகி ஒரு செல்ஃபி எடுத்து வாட்ஸ்ஸப்பில் அனுப்புகிற சுகம் இருக்கே... அதை நினைத்துக் கொண்டே முயற்சிகள் செய்யுங்கள். நீண்ட ஆரோக்கிய வாழ்வு உங்களுக்கே!

நம்மாளுகதான் வழுக்கைத் தலையில அமேசான் காட்டு எண்ணெய் தடவினாமுடி வளரும்னு நினைக்கற பயலுவலாச்சே... ‘இந்த ஸ்லிம் மாத்திரையும் வாங்கிப் போடுவோம்’ என்று ஏமாறுகிறார்கள்! அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி, ஏன் குழந்தைகள் பருமனாவதை தடுக்க இயக்கம் ஆரம்பிக்க வேண்டும்? எல்லோருக்கும் இந்த பெல்ட்டையோ இல்லை இந்த டகால்டி மாத்திரையையோ ஏன் பார்சல் அனுப்பக் கூடாது? அது வேலை செய்யாது என அவர்களுக்குத் தெரியும்!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Re: Do not beleive in the slimming advertisements-எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்ட

Thanks for the caution
 
Thread starter Similar threads Forum Replies Date
R Marriage 3
A Ask Question 1
N Weight Loss Diet and Guide 4
L Ask Question 2
P Ask Question 2

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.