Don't Degrade Your Wife - மனைவியை மட்டம் தட்டுவது

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#1
உங்கள் மனைவியை மட்டம் தட்டுவது, குறை கூறுவதால் அவருக்குள் ஏற்படும் மாற்றங்கள்!!
பெண்கள் என்னதான் பட்டங்கள் முடித்தாலும், உலகே போற்றும் அளவில் திகழ்ந்தாலும் தன் கணவனிடம் தான் முதல் பாராட்டுதலை எதிர்பார்ப்பாள். இதை யார் ஒருவராலும் ஈடுயிணை செய்ய முடியாது. சில ஆண்கள் மனைவியை திட்டுவதும், குறைக் கூறுவதும் தங்கள் கவுரவம் என்பது போல கருதுகிறார்கள் போல. ஆனால், உண்மையில் இது ஆண்மகனாக இருப்பதற்கான இழுக்கு.
உங்கள் மனைவி தவறே செய்தாலும் கூட, அடிக்கடி அவர் செய்யும் செய்களில் தவறுகள் நிகழ்ந்தாலும் கூட அதை நீங்கள் தான் அரவணைப்புடன் எடுத்துக் கூறி அவருக்கு புரியவைக்க வேண்டும். அதற்கு மாறாக அவரை மட்டம்தட்டி குறைக் கூறுவதால், அவருக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் குறைந்து, குடும்பத்தார் மீது வைத்திருந்த காதல் சிதைந்து போகிறது…
தன்னம்பிக்கை இழப்பு
திருமணத்திற்கு பிறகு ஓர் பெண்ணுக்கு தன்னம்பிக்கையும், பாராட்டுதலும் அதிகமாக கணவனிடம் இருந்து தான் கிடைக்கும். மற்றவரை விட தன் கணவனின் பாராட்டை தான் ஓர் பெண் மிகவும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல், அடிக்கடி தன் கணவன் தன்னை மட்டம்தட்டி குறைகூறினால் அவள் மனதளவில் தன்னம்பிக்கை இழந்துவிடுகிறாள்.
விரக்தி
நிறைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு விரக்தியடைய பெரும் காராணமாக இருப்பது இந்த மட்டம்தட்டுவது தான். இது அவர்களை எதிர்மறை செயல்களில் ஈடுபட தூண்டுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் உங்கள் மனைவியை மட்டம்தட்டவோ, குறைகூறவோ வேண்டாம்.
பாசம் குறையும்
மட்டம்தட்டுவதால் கணவன் மீது மட்டுமின்றி குழந்தைகள், உறவினர் என அனைவரின் மீதும் அந்த பெண் வைத்திருக்கும் பாசம் குறைகிறது.
தனிமை
தான் என்ன செய்தலும் மட்டதட்டினால், தான் எந்த செயலுக்கும் லாயக்கு இல்லை என்பது போல உணரும் அந்த பெண் தனிமையை உணர ஆரம்பிக்கிறார்.

மன அழுத்தம்
யாரும் தன்னை மதிக்காமல் இருப்பது, தனிமை போன்றவை அந்த பெண்ணுக்கு மன அழுத்தம் அதிகரிக்க பெரிய வாய்ப்பாக அமைகிறது.
இல்லற வாழ்க்கையில் நாட்டம் குறையும்
நீங்கள் உங்கள் மனைவியை மட்டம்தட்டி குறைகூறிக் கொண்டே இருந்தால், அவருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபடும் நாட்டம் குறைந்து விடும். மனதளவில் பாதிக்கபடுவது தான் இதற்கு காரணமாக அமைகிறது.
எரிச்சல்
வீட்டில் சின்ன, சின்ன சண்டைகள் ஏற்பட்டாலோ, குழந்தைகள் சிறிய தவறுகள் செய்தாலோ கூட எரிந்து விழ தொடங்குவார்கள். காரணமே இன்றி கோவம் வர ஆரம்பிக்கும். இதற்கு காரணம் நீங்கள் மட்டம்தட்டுவது தான்.
பாராட்டுதலின் அவசியம்
பாராட்டுதல் தான் சிறந்த ஊக்கமளிக்கும் செயலாகும். அதிலும் மனைவிகளுக்கு தன் கணவனிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு தான் மிகவும் முக்கியமானது. புதியதாக அவர் உங்களுக்காக சமைக்கும் போது, வேலை இடங்களில் அவர் முன்னேற்றம் காணும் போது, சிறிய அளவில் அவர் சாதித்தாலும் கூட பாராட்ட வேண்டும்.
பண்பாக பேசுதல்
தவறுகள் ஏற்படுவது சாதாரணம் அதற்காக கோவமாக நடந்துக் கொள்வது என்றுமே தீர்வளிக்காது. பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும். பண்பாக பேசுங்கள், நீங்கள் தான் அவருக்கு அரவணைப்பாக இருந்து எது நல்லது, எது கேட்டது. எதை எப்படி செய்ய வேண்டும் என்று கூற வேண்டும்.
இல்லறம் சிறக்கும்
வீணாக மட்டம்தட்டி, குறை கூறி அவரை மனதளவில் பாதிப்படைய செய்து இல்லற வாழ்க்கையை சீர்குலைக்காமல். பண்பாக பேசி, பாராட்டி, அரவணைத்து உங்கள் இல்லறம் சிறக்க உதவிடுங்கள்!
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
அருமையான பதிவு சிஸ். :clap2::clap2::clap2::clap2:

குழந்தைகளுக்கு மட்டுமில்லை , மனைவிக்கும் பாராட்டு, ஊக்கம் தேவை என்று அதிகம் பேசப்படுவதில்லை. தற்போதைய nuclear family ஸ்டைலில் , தன் கணவன் , தன் பிள்ளைகள் என்று தன் உலகத்தை சுருக்கிக் கொண்ட ஒவ்வொரு மனைவியையும் உற்சாகமாகவும், உயிர்ப்புடனும் வைத்திருப்பதே இந்த பாராட்டு தான்.
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,539
Likes
140,718
Location
Madras @ சென்னை
#3
Nice info kaa.

:thumbsup​
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#4
நல்ல பகிர்வு


பாராட்டு மனதிற்கு தாலாட்டு
வாலாட்டும் மன சோர்வுகளை அகற்றும்
அன்பென அனைத்து சீராட்டும் செறிவூட்டும்
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#5
அருமையான பதிவு சிஸ். :clap2::clap2::clap2::clap2:

குழந்தைகளுக்கு மட்டுமில்லை , மனைவிக்கும் பாராட்டு, ஊக்கம் தேவை என்று அதிகம் பேசப்படுவதில்லை. தற்போதைய nuclear family ஸ்டைலில் , தன் கணவன் , தன் பிள்ளைகள் என்று தன் உலகத்தை சுருக்கிக் கொண்ட ஒவ்வொரு மனைவியையும் உற்சாகமாகவும், உயிர்ப்புடனும் வைத்திருப்பதே இந்த பாராட்டு தான்.
என்னமோ தெரியல, பொதுவாக ஆண்கள் மனம் விட்டு பாராட்டுவதில்லை...திருச்சி சிவா எம் .பி அவர்கள் தன மனைவி இறந்ததும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்...நான் இங்கு அதை எதோ ஒரு த்ரெடில் போஸ்ட் பண்ணியிருந்தேன்......காலம் கடந்து உணர்வதாக அருமையா எழுதியிருந்தார்!! ஆண்கள் டிசைன் அப்படித்தான் போல!!
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#7
நல்ல பகிர்வு


பாராட்டு மனதிற்கு தாலாட்டு
வாலாட்டும் மன சோர்வுகளை அகற்றும்
அன்பென அனைத்து சீராட்டும் செறிவூட்டும்
எல்லோரும் அதற்குத்தானே ஏங்குறோம் !!!
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#8
என்னமோ தெரியல, பொதுவாக ஆண்கள் மனம் விட்டு பாராட்டுவதில்லை...திருச்சி சிவா எம் .பி அவர்கள் தன மனைவி இறந்ததும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்...நான் இங்கு அதை எதோ ஒரு த்ரெடில் போஸ்ட் பண்ணியிருந்தேன்......காலம் கடந்து உணர்வதாக அருமையா எழுதியிருந்தார்!! ஆண்கள் டிசைன் அப்படித்தான் போல!!
என்னால என்னைக்குமே மறக்க முடியாத பதிவு சிஸ் அது(திருச்சி சிவா உணர்வுப்பூர்வமா சொன்ன, காலங்கடந்து உறவுகளை உணர்ந்து என்ன பயன் ?). நான் கூட சித்ரா அவங்க எழுதுன கதைய விமர்சனம் பண்ணப்போ அத குறிப்பிட்டிருந்தேன்.
 

porkodit

Minister's of Penmai
Joined
Jul 15, 2011
Messages
3,162
Likes
8,910
Location
Tiruvannamalai
#9
Arumaiya pathivu selvi ka.......... Very nice..........
 

punithaselvaraj

Friends's of Penmai
Joined
Nov 25, 2013
Messages
169
Likes
240
Location
pune
#10
ஆண்கள் எப்பவும் பெண்களை மட்டம் தட்டி பேசுவது அவங்க தன்நம்பிக்கையை அழித்து அவங்கல தன் ஆளுமை கீழே இருக்க வைக்க போடும் திட்டம்னு நினைக்கிறேன்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.