Don't Leave Your Kids Alone - குழந்தைகளை எங்கும் தனியாக விடாத

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#1
நாளை நம் பிள்ளைகளுக்கும் இப்படி நேரலாம்.. குழந்தைகளை எங்கும் தனியாக விடாதீர்கள்


ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய கொடுமையான காட்சி இது. நாளை நம் பிள்ளைகளுக்கும் கூட இப்படி நேர்ந்து விடலாம். எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளை (எந்த வயதினராக இருந்தாலும் சரி) அறிமுகம் இல்லாதவர்களிடம் விட்டுச் செல்லக் கூடாது என்பதற்கு இது நல்ல பாடம். இது ஒரு வர்த்தக மாலில் நடந்த அக்கிரமச் சம்பவம். அங்குள்ள பொம்மைக் காரில் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு உலா வருகிறார் அந்த மாலின் ஊழியர் ஒருவர்.








தனிமையான இடத்திற்கு வந்ததும் பொம்மைக் காரை நிறுத்தி விட்டு அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கிறான் இந்தக் கயவன். அந்தக் குழந்தை அவனிடமிருந்து விடுபட முயன்றும் முடியாமல் வலுக்கட்டாயமாக அணைத்து முத்தமிடுகிறான் இந்த வக்கிரப் புத்தி நபர். இதை யாரோ ஒருவர் மறைந்திருந்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்தப் பக்கமாக சிலர் சத்தம் போட்டபடி வந்ததைத் தொடர்ந்து அந்த வக்கிரப் புத்தி மனிதன் அந்தச் சிறுவனை விட்டு விட்டு எழுகிறான்.



எந்த இடத்திற்குச் சென்றாலும் உங்களது பிள்ளைகளை சம்பந்தம் இல்லாதவர்களிடம் தனிமையில் விட்டு விடாதீர்கள்.. ஆண் குழந்தைகளைக் கூட சீரழிக்கத் தயங்காத மிருகங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#2
Re: குழந்தைகளை எங்கும் தனியாக விடாதீர்கள்....!

இத்தகைய சம்பவங்களால் நெஜமாவே குழந்தைகளை கொஞ்சவும் பயமா இருக்கிறது இப்பல்லாம் - எங்கடா தப்பா நெனச்சு தப்பிடுவாங்களோன்னு!!!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#3
Re: குழந்தைகளை எங்கும் தனியாக விடாதீர்கள்....!

இத்தகைய சம்பவங்களால் நெஜமாவே குழந்தைகளை கொஞ்சவும் பயமா இருக்கிறது இப்பல்லாம் - எங்கடா தப்பா நெனச்சு தப்பிடுவாங்களோன்னு!!!!


உண்மைதான்..... சில வஞ்சகம் பிடித்த மனிதர்களால்...., நல்லவர்களுக்கும் கெட்டப் பெயர் தானே...!!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.