Do's and Don'ts for BP patients -இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண&#302

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,963
Location
Atlanta, U.S
#1இரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்கவேண்டும்.

முடிந்தளவு மன அழுத்தம் குறைக்கும் தியான முறைகளை பின்பற்றலாம். இந்த இரத்த கொதிப்பிற்கு மலச்சிக்கலும் முக்கிய காரணமாகும். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அதுபோன்று மலம்கழித்தலும் குறித்த காலத்தில் முடிக்கவேண்டும்.

மலச்சிக்கல் இல்லாமல் கவனித்து கொள்ளவேண்டும். அதிக அளவு பழம், சுத்த பசும் பால் மற்றும் நிறைய தண்ணீர் அருந்திவந்தால் இந்த மலச்சிக்கல் வராது.

செய்யக்கூடாதவை :

இரத்த கொதிபுள்ளவர்கள் அதிகநேரம் ஓய்வின்றி கண்விழித்தல் கூடாது. உணர்சிகளை தூண்டக்கூடிய சினிமா அல்லது செயல்களை தவிர்க்க வேண்டும். மிதமிஞ்சிய உடலுறவு கூடாது. அதிகளவு கோபத்தினை காட்டக்கூடாது.

காபி, டீ ,கோகோ பானங்களை தவிர்க்கவேண்டும். புகையிலை சம்மந்தமான எதையும் பயன்படுத்த கூடாது மற்றும் மது அருந்தகூடாது.
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,544
Likes
40,141
Location
france
#2
Re: இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டிய&#2997

நல்ல பதிவு உபயோகமா இருக்கு...
 

fatima15

Friends's of Penmai
Joined
Jun 4, 2013
Messages
316
Likes
548
Location
New York
#3
Re: இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டிய&#2997

Thanks for sharing Thenu.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#5
Re: இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டிய&#2997

இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு இவை இரண்டுக்கும் வித்யாசம் உண்டா?
இரத்த அழுத்தம் அளவை கண்டு பிடிக்க bp மானிடர் இருக்கு.
இரத்த கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது?அளவிடுவது?
வயசான காலத்தில் .......எனக்கு இப்படி ஒரு சந்தேகம்....... .
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,963
Location
Atlanta, U.S
#6
Re: இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டிய&#

இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு இவை இரண்டுக்கும் வித்யாசம் உண்டா?
இரத்த அழுத்தம் அளவை கண்டு பிடிக்க bp மானிடர் இருக்கு.
இரத்த கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது?அளவிடுவது?
வயசான காலத்தில் .......எனக்கு இப்படி ஒரு சந்தேகம்....... .


அய்யோ.... இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நான் அழுதுடுவேன்....
நீங்க கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கும் சந்தேகம் வருது...., ரெண்டும் ஒன்றா...?? or இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கா....??
யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்....!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,963
Location
Atlanta, U.S
#7
Re: இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டிய&#
அதிக இரத்த அழுத்தத்தை இரத்தக் கொதிப்பு (Hypertension) என்று கூறுகிறோம். இரத்த அழுத்தம் குறைந்தால் லோ பிரஷர் (Hypotension) என்று கூறுகிறோம்.

இரத்த அழுத்தம், இரத்த குழாய்களின் தன்மை, இரத்தத்தின் தன்மை, இருதய துடிப்பின் அளவு போன்றவற்றிற்கேற்ப மாறுபடும். சிஸ்டாலிக் பிரஷர் இரத்தக் குழாய்களின் தன்மையை காட்டுவதாகும்.


உடற்பயிற்சி, கடின வேலைகள், ஓடுதல், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் போது இதயத்துடிப்பை அதிகமாக்கி தற்காலிக இரத்த குழாய்கள் இரப்பர் தன்மையுடன் விளங்கும்.


வயது ஆக ஆக நரை எப்படி தோன்றுகிறதோ அதுபோல குழாய்கள் கடின தன்மை பெறுகின்றன. இரத்த அழுத்தத்தை கண்டிறிய “
ஸ்பிக்மோ மோன மீட்டர்” என்ற கருவி பயன்படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினர்களுக்கு 120/80 mm of Hg. இரத்த அழுத்தம் வயதிற்கேற்ப மாறுபடும் சிஸ்டோரிக் பிரஷர் 100-140 வரை இருக்கலாம். டயஸ்டோஸிக் பிரஷர் 60-90 வரை இருக்கலாம்
அறிகுறிகள்:

லேசான தலை சுற்றல்
மயக்கம்
தூக்கமின்மை
படபடப்பு
தலைவலி

வயதானவர்கள் அவ்வப்பொழுது மருத்துவரிடம் இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது நல்லது ஒழுங்காக மருத்துவம் பார்த்துக் கொண்டால் இரத்த கொதிப்பின் பின் விளைவு நோய்களின் மாரடைப்பு, பக்கவாதம் சிறுநீரக பழுது போன்றவற்றிலிருந்து காத்துக் கொள்ளலாம்.காரணங்களும், நிவர்த்திக்கும் முறைகளும்:

1. கொலஸ்ட்ரால்:-
நாம் உண்ணும் உணவில் நடுத்தர வயதிற்கு பின் கொழுப்பு சத்து மிகுந்த உணவு பொருள்களை தவிர்த்தல் நன்று. உணவில் மாமிச வகைகள், மீன், முட்டை முதலியவைகளை நீக்கி சைவ உணவு சாப்பிடலாம், மூட்டை வெள்ளை கரு சாப்பிடலாம்.

எண்ணெய் பதார்த்தங்களை குறைக்கவும். அதிக கொழுப்பு சத்து உடம்பின் பல்வேறு பாகங்களில் சேமிக்கப்படுகிறது. இரத்த குழாய்களின் உடற்பகுதிகளிலும் கொலஸ்ட்ரால் படிந்து இரத்தக் குழாயின் துவாரத்தை குறைத்துவிடுகின்றன. எனவே இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கின்றது. பெரும் பான்மையான இரத்த கொதிப்பு நோயாளிகள் இந்த வகையை சார்ந்தவர்கள்தான். இரத்தத்தில கொலஸ்ட்ரால் 250/100-க்கு அதிகமானால் ஆபத்து. 2. புகை பிடித்தல்:- சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை, பொடிபோடுதல் இவையாவும் இரத்த குழயை பாதிக்கும். இரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையை இழக்க செய்து கடினமாக மாற்றிவிடும். பெரும்பான்மையான நோயாளிகள் புகை பழக்கத்தை விட்டவுடன் பிரஷர் நார்மலுக்கு வந்துவிடும்.


3. சர்க்கரை வியாதி:-

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை இல்லாமல் இருந்தால் இரத்தக் குழாய்களை பாதிக்கிறது. ஆரம்ப காலங்களில் சீராக தோன்றும் இரத்த அழுத்தம் படிப்படியாக அதிகமாகும். நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை சிகிச்சையின் போது 180 மி.கி. குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

4. உடல்பருத்தலும், உடற்பயிற்சி இன்மையும்:-

உடற்பயிற்சியின்மை உடல்பருமனை கூட்டுகின்றன. உடல் பருமனை சமாளிக்க இருதயம் அதிகமான வேலை பளுவை ஏற்று நாளடைவில் இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி போன்ற பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் இதயம் நாளடைவில் பலவீனமடைகிறது. மதுபழக்கம், பகலில் தூங்குதல் போன்றவைகளும் உடற்பளுவை கூட்டுகின்றன. சிறுநீரக கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகள் சீர்கேடுகளினாலும் இரத்த கொதிப்பு தோன்றலாம். சுரப்பிகள் சீர் கேடுகளினாலும் இரத்த கொதிப்பு தோன்றலாம். பிரசவ காலத்தில் பெண்களுக்கு தற்காலிகமாக இரத்த கொதிப்பு ஏற்படும். சில பெண்களுக்கு கடைசி மாதங்களில் முகம், கை கால்கள் வீக்கம் இருந்தால் பிரஷர் அதிகமாக இருக்கும். டாக்சீமியா எனப்படும் இந்தக் குறைக்கு தகுந்த மருத்துவம் செய்யாவிடில் பிரசவத்தின் போது ஜன்னி போன்ற ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தலாம்.

5. உணர்ச்சி வசப்படுதல்:-

அடிக்கடி கோபப்படுதல், படபடப்புடன் இருத்தல், ஒரு செயல் நடக்கம் முன்பே பல கற்பனைகளை செய்து கொண்டு அனாவசியாமாக பயப்படுதல், எப்போதும் ஒரு பதற்றத்துடன் இருத்தல் போன்றவைகளும் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தலாம். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் உகந்தவை தியானம், யோகா போன்ற மனநல பயிற்சிகளையும்
மேற்கொண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.பின்விளைவுகள்:

1. மாரடைப்பு:
இரத்த கொதிப்பு உள்ள நோயாளிகளின் இதய இரத்தக் குழாய்களை ரப்பர் தன்மை குறைவதும், கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்பு கட்டிகள் இரத்த குழாயை அடைப்பதாலும் மாரடைப்பு தோன்றுகிறது.

2. மூளையில் இரத்த குழாய்களின் பாதிப்பு:

மூளையில் உள்ள ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இரத்தத்திற்கு தக்கவாறு கைகள், கால்களை செயலிழக்க செய்து பக்கவாதம் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

3. சிறுநீரக கோளாறுகள்:

தொடர்ந்து இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக பழுது ( சுநயேட கயடைரசந ) ஏற்படலாம். இரத்த குழாய்கள் சுருங்கி செயலிழக்கமின்றி சிறுநீரில் அல்புமினை வெளியேற்றும் இரத்ததில் யூரியா 40 மி.கி. மேல் அதிகமாகும். நாளடைவில் கால்களில் வீக்கமும் ஏற்படலாம்.

4. இதய செயலின்மை (Vertricular failure)

அதிக நாள்பட இதயம் அதிகமாக வேலை செய்வதால் பலவீனமடைந்து இடது வென்டிரிக்கிள் வீங்க ஆரம்பிக்கும். படிப்படியாக ஹார்ட் பெய்லியர் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதபோல இரத்த கொதிப்பு பல்வேறு உபாதைகளுக்கு அடிகோலுகிறது.இது இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்....
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#8
Re: இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டிய&#2997

நல்ல பதிவு தேனு
அங்கிள் & thenu
ரெண்டும் ஒன்னு தான் ...ரத்த அழுத்தம் , ரத்தக்கொதிப்பு ...BP..
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,963
Location
Atlanta, U.S
#9
Re: இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டிய&#

நல்ல பதிவு தேனு
அங்கிள் & thenu
ரெண்டும் ஒன்னு தான் ...ரத்த அழுத்தம் , ரத்தக்கொதிப்பு ...BP..

தேங்க்ஸ் நளினி....
ஒண்ணுதான்னு தெரிஞ்சாலும் .... தீடிர்னு ஒரு சந்தேகம்... அதை கிளியர் பண்ணிக்கணும் இல்லே...!
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#10
Re: இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டிய&#

தேங்க்ஸ் நளினி....
ஒண்ணுதான்னு தெரிஞ்சாலும் .... தீடிர்னு ஒரு சந்தேகம்... அதை கிளியர் பண்ணிக்கணும் இல்லே...!
ரெண்டு பேரும் இன்னைக்கு இங்க வந்திருக்கோம்
நாளைக்கு யார் லீவ் போடுரானு பார்ப்போம் தேனு ..;)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.