Drumstick (3in1) Magic

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
Drumstick (3in1) Magic sl1946.jpg

முருங்கை ஊறுகாய்


என்னென்ன தேவை?


முருங்கைக்காய் - 10
நல்லெண்ணெய் - 50 மி.லி.
மிளகாய் வற்றல் - 4
எலுமிச்சை பழம் - 1
மஞ்சள் பொடி - சிட்டிகை
பெருங்காயப்பொடி, தனிவத்தல் பொடி,
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப.


எப்படிச் செய்வது?


முருங்கைக்காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிய பின், தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் தோல் விலக்கி, அதன் சதைப்பாகத்தை ஒரு ஸ்பூனினால் வழித்து எடுத்து வைக்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், காரத்துக்குத் தேவையான தனிவத்தல்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கடாயில் தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். மஞ்சள், வத்தல்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைத்த கலவையை வாணலியில் இடவும். நன்றாக வதக்கி எண்ணெய் கக்கும்போது தேவையான அளவு எலுமிச்சைச்சாறு கலக்கவும். இப்போது சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் தயார்!






முருங்கை சூப்


முருங்கைக்காய் வேகவைத்த நீரை கீழே கொட்டவேண்டாம். வேகவைத்த காய்களை ஊறுகாய்க்கு எடுத்துக்கொண்ட பிறகு, அந்த நீரில், சூடாக இருக்கும்போதே மிளகுத்தூள், உப்பு, ஒரு டீ ஸ்பூன் மைதா சேர்த்தால் சுவையான முருங்கை சூப் தயார்!


முருங்கை சாதம்


ஒரு கிண்ணத்தில் முருங்கைக்காய் ஊறுகாயை எடுத்துவைத்த பிறகு, அதே வாணலியில் சிறிது ஊறுகாயோடு கொஞ்சம் சாதம் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையாக இருக்கும்!

-dinakaran
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Thank you sir for the முருங்கை சாதம் recipe.
Thank you sir for the
முருங்கை சூப் recipe.
Thank you sir for the
முருங்கை ஊறுகாய் recipe. thank you very much for all the recipes.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
முருங்கை ஊறுகாய் unknown pickle thank you
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.