Ear care tips

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1


நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்கயையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது. ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் ஓட்டை விழுந்தால் அது கேட்கும் திறனை பாதிக்கும்.
காதில் எண்ணெய் விடுவதும் தவறான செயல். ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம். காது வலி, காது அடைப்பு, போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது நல்லது. காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும்.
தேவைப்பட்டால் மெல்லிய பருத்து துணி மூலம் சுத்தப்படுத்தலாம். காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவியாகும்.
தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம். ஜலதோசம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப்பலமாக சிந்த கூடாது. இவ்வாறு செய்தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
பெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்பதும் ஸ்பீக்கரில் அலறும் இசையைக் கேட்பதும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயல்கள். தொடர்ந்து செல்போனில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் பாட்டுக்கேட்பதையும் தவிர்க்கவும்.
சிலருக்கு எந்த காரணமும் இன்றி காதுகேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம்.இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சனைகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.