Easy Ways to Prevent Kidney Stones - சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க
சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் தாங்க முடியாத வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. அதோடு சிறுநீர் பாதையிலும் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பது, தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்கிறார் மதுரை மீனாட்சி மிஷன் சிறுநீரியல் மற்றும் ஆண்மையியல் துறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முரளி. அவர் கூறியதாவது: ‘சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் பல்வேறு அளவுள்ள கற்கள் உருவாகக்கூடும். முக்கியமாக கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. யூரேட் அல்லது அபூர்வமாக சிஸ்டீன் கற்கள் தோன்றலாம்.

நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பரம்பரையாக வருகிறது. சிறுநீரகக் கல் மிகச்சிறிய துகள் அளவில் இருந்து மிகப்பெரியளவு அதாவது பிறந்த குழந்தையின் தலையளவு கூட வளரும். இவை சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, வெளியில் அறிகுறிகள் தென்படாது. கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் உள்வரிப்படலமான சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரும். கண்ணுக்குத் தெரியும் அளவில் சிறுநீர் ரத்த சிவப்பாக இருக்கும் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்யும் போது ரத்தச் சிவப்பணுக்கள் மிகுதியாகக் தென்படும். வயிற்று வலியோடு இந்த அறிகுறியும் இருந்தால் சிறுநீரக கல் உருவாகி உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

சிறுநீர் தொற்றும் ஏற்படும். கீழ்புற நீர்ப்பாதையில் தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும், எரிச்சலும், அடிவயிற்று வலி, காய்ச்சல் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது அவசியம். மேலும் கற்கள் நீர்பாதையை அடைக்கும் போது சிறுநீரகத்தில் நீர் வீக்கம் உண்டாகும். அப்போது வயிற்றில் கட்டி இருப்பது போல் உணரலாம். அறிகுறி இல்லாத நாள்பட்ட சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரின்மை உருவாகும்.

சிகிச்சை முறை: சிறுநீர் குழாயில் கீழ்ப்பகுதியில் காணப்படும் 4 மி.மீ. அளவை விட சிறிய கற்களில் 90 சதவீதம் தானாக வெளியேறி விடுகின்றன. அளவு 6 மி.மீ.க்கு மேல் இருந்தால் 20 சதவீதம் மட்டுமே தானாக வெளியேறும். நோயாளிகள் தாராளமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேறி, அதன் மூலம் கற்களும் வெளியேறி விடும். வாழைத்தண்டு அல்லது மாற்று மருந்துகள் சிறுநீர் பெருக்கியாக செயல்படுகின்றன. வலி மிகுதியாக இருப்பின் டாக்டரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளலாம்.

பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நீக்கம் தேவைப்படும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும். சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படும். இந்த கற்களை பரிசோதித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பாட்டி வைத்தியம்

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.

வெயில் காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.

புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
டயட்

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க சாப்பிட மற்றும் குறைக்க வேண்டிய உணவுகள் பற்றி உணவு ஆலோசகர் ஜெயந்தி கூறியதாவது: பால், பால்பொருட்களை குறைந்தது ஒரு நாளைக்கு 300 மி.லி கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். தானியங்களில் கம்பு தவிர மற்ற தானியங்கள், பருப்பு வகைகளில் கடலைப்பருப்பு, உளுந்து, பாசிப்பயறு, பாசிபருப்பு, உலர்ந்த பட்டாணி சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளை முள்ளங்கி, பாகற்காய், அவரைக்காய், சவ்சவ், கொத்தவரங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், மாங்காய், பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், அன்னாசிப்பழம், ஆப்பிள், பப்பாளி, பிளம்ஸ், வாழைப்பழம், எலுமிச்சை, தர்பூசணி, பேரிக்காய் போன்ற காய்கறி, கிழங்கு மற்றும் பழ வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு படுக்க செல்லும் முன்னரும் தூக்கத்தில் எழுந்தும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆட்டு இறைச்சியை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். கோழி மற்றும் மீன் கொஞ்சம் சாப்பிடலாம். இரவில் ஒருமுறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.

குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்: காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், பசலைக்கீரை, வெள்ளரி, முருங்கைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கருணைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, திராட்சை, கொய்யா, நெல்லி, பலா, நாவற்பழம், சீதாப்பழம், மாதுளை, மாம்பழம். சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். -
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: Easy Ways to Prevent Kidney Stones - சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தட&#

ஏன் வருகிறது சிறுநீரக பாதிப்பு?இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் ஹர்மோனையும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும், எலும்புகளின் உறுதிக்கு பயன்படும் ஹார்மோனையும் சுரக்கசெய்வது உள்ளிட்ட பணிகளில் சிறுநீரகம் தீவிரமாக பங்கேற்கிறது. செல்கள் புரதத்தை பயன்படுத்தியது போக எஞ்சிய கழிவுகள், நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறி இரத்தத்தில் கலந்துவிடும். இவற்றை பிரித்தெடுத்து வெளியேற்றுவது தான், சிறுநீரக மண்டலத்தின் முக்கிய வேலையாகும்.

நமது உடம்பில் சேரும் அசுத்த இரத்தத்தில் இருந்து யூரியா போன்ற கழிவுகளை அகற்றி உடம்பை நல்ல நிலையில் வைப்பது தான் நெப்ரான்களின் பணியே. பொதுவாக, வெளி சிறுநீரக குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. இது பெண்களுக்கு வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. உடலை பொறுத்தவரையில் கழிவுகள் என்பவை உடலை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவை. இவை இரத்தத்தில் சேர்ந்தால் உடல் முழுமையாக சீரழிந்துவிடும்.

உலகின் மிக சிறந்த, நுண்ணிய சுத்திகரிப்பு தொழிற்சாலையான சிறுநீரகங்கள் பாதிக்கப்பட என்ன காரணம்.?இன்னதுதான் என்று ஓரே ஒரு காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது... இந்த செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவும் ஏற்படும்.... திடீரெனவும் ஏற்படும். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

நமக்கு நாமே மருத்துவராகி மருந்து கடைகளிலும் உள்ளுர் பெட்டிக்கடைகளிலும் வாங்கி விழுங்கும் மாத்திரைகள்... கொண்டாடவோ, துக்கத்தை போக்கவோ என ஏதாவது காரணத்திற்காக குடிக்கும் மது, சிகரெட், ஆகியவை மிக முக்கிய காரணங்கள்.... கவனிக்காமல் விட்ட நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதிகள்.. இப்படியாக பற்பல காரணங்களால் சிறுநீரகம் பழுதடைகிறது.

நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவுப் பொருட்களை, சிறுநீரனை வெளியேற்றும் தன்மை, மற்றும் உடலில் உள்ள கனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அடையும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டுவலி, தலைவலி, முதுகு வலிக்கு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சர்க்கரைநோய் மற்றும் உயர்இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்ட முறையற்ற மருந்துகளினால் சிறுநீரகங்கள் செயலிழந்து, உடலில் திரவம் மற்றும் தேவையற்ற கழிவுகள் இரத்தத்தில் சேர்ந்து அசோடிமியா, மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஜன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும். முக்கியமாக இரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல் முக்கிய காரணமாகும். கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரகங்கள் கண்டிப்பாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டுவலி என்று தவிப்பவர்கள் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டாலும் மாற்று மருத்துவர் துணையின்றி மற்றவர் கூறும் ஆலோசனைப்படி அதிக அளவில் உலோகங்கள் கலக்கக்ப்பட்ட தரமற்ற லேகியங்களை உட்கொண்டாலும் அதுவே சிறுநீரகத்தை பாதிக்கும். இணைப்பு திசுக்கள் நோய்களினாலும் எய்ட்ஸ் நோயினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். உடல் வலியை போக்க உதவும் மருந்துகள், காசநோய்க்கான பல்வேறு வகையான மருந்துகள் ஆகியவற்றினாலும் சிறுநீரக நோய்கள் உண்டாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழக்க நேரிடும்.

புகைபிடிக்கும் போது சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்துவிடும்..தேவைக்கு குறைவான இரத்தம் சிறுநீரகத்துக்கு செல்வதால் சிறுநீரகத்தின் செயல் திறன் குறையும். சீரான இரத்த ஓட்டம் இல்லாததால் சிறுநீரகப்புற்றுநோய், சிறுநீரகப்பை புற்றுநோய், வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். புகை தான் சிறுநீரகம், சிறுநீரகப்பையின் முதல் எதிரி..

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம், நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ, எடுக்கும் போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறும் பாதைகளில் படிந்து நாளடைவில் இவையே படிகங்களாக சிறுநீர் வெளியேறும் பாதைகளில் படிந்து பின் கற்களாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. பாரா தைராய்டு மிகுதி நோயும், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள், சிறுநீரகநோய்கள் போன்ற நோய்களும் சிறுநீர்ப்பையில் கற்கள் ஏற்பட முக்கியமான காரணமாகும். சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போனடற வேதியல் பொருட்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக காரணமாகிறது-. இருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்றாலும் அதை நம் அக்குபஞ்சர் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து திரும்ப வராமல் தடுக்கலாம்..

மேற்கண்ட அனைத்தும் சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படுவதற்கான காரணங்கள். இவற்றை நமது விழிப்புணர்ச்சியின் மூலமும், யோகா, தியானம் போன்றவற்றின் மூலமும் குணப்படுத்த முடியும். ஆனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்பட்டால் சிறுநீரகத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, சிறுநீரகங்கள் உடனடியாக செயலிழக்கும்.

சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புண்டு.. சில வலிகளுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை என்றாலும் பக்கவிளைவுகள் கண்டிப்பாக உண்டு அத்துறை சார்ந்த மருத்துவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.. எனவே கவனமுடன் இருந்து சிறுநீரக செயலிழப்பை தவிர்ப்போம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: Easy Ways to Prevent Kidney Stones - சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தட

கிட்னி பாதிப்பிற்கு டயாலிசிஸ் தீர்வல்ல...


வாந்தி, அசதி, கை, கால் வலி, சாப்பிட முடியாதது, எடைகுறைவு ஆகியவை ஏற்பட்டால் அசட்டையாக இருக்கக்கூடாது. அதற்கு காரணம் என்னவென்று பரிசோதித்து பார்த்தால் கிட்னி செயல்பாடு 80 சதவீதம் பாதித்துள்ளதும், 20 சதவீதம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதும் தெரியவரும். 20 சதவீத பயன்பாட்டில் உள்ள கிட்னி ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டு வரை அதே செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் மாற்று கிட்னி பொருத்துவதற்கான 3 மாத பரிசோதனைகளை முடித்து விடலாம்.

இதற்கிடையே மாற்று கிட்னிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலையில் கிட்னி 15 சதவீத செயல்பாட்டு அளவிற்கு வந்துவிடும். கிட்னி 15 சதவீத செயல்பாட்டிலிருந்து 10 சதவீத செயல்பாட்டை அடைவதற்குள் மாற்று கிட்னி பொருத்திவிட வேண்டும். மாற்று கிட்னி பொருத்துவதே கிட்னி பாதிப்பிற்கான ஒரே தீர்வான சிகிச்சை. மாற்று கிட்னி பொருத்தாமல் டயாலிசிஸ் செய்வது தற்காலிக நிவாரணம். ஒவ்வொருவருக்கும் 2 கிட்னி உள்ளது. சிலருக்கு இரண்டும் படிப்படியாக செயலிழந்து வரும்.

இவ்வாறு பாதிக்கப்படும் கிட்னிகளை உடனடியாக அகற்றிவிட்டு மாற்று கிட்னி பொருத்தாமல் டயாலிசிஸ் செய்ய முடிவெடுத்தால், அதை வாரத்திற்கு 3 முறை மட்டுமே செய்யலாம். அதற்கு மேல் செய்யகூடாது. ஒரு முறை டயாலிசிஸ் செய்தால் 4 மணி நேரம் மட்டுமே ரத்தத்தை சுத்திகரிக்க முடியும். இவ்வாறு வாரத்திற்கு 12 மணி நேரம் மட்டுமே ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வது உடல் நலத்திற்கு போதுமானதல்ல. இவ்வாறு டயாலிசிஸ் மேற்கொள்ள நாளை ஒதுக்குவதால் வேலைக்கு செல்ல முடியாது. இயல்பு வாழ்க்கை பாதிக்கும். மேலும் தொடர்ந்து டயாலிசிஸ் செய்வது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இத்தகைய பிரச்னைகளை சந்திக்காமல் நேரடியாக மாற்று கிட்னி பொருத்துவது முக்கியமானது. அவசரமானது. கிட்னி 20 சதவீத செயல்பாடு நிலையை அடைந்தவுடன் மாற்று கிட்னி பொருத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதை நவீன சிகிச்சை மூலம், மாற்று ரத்தவகை உள்ளவர்களின் கிட்னியையும் உடல் ஏற்றுக்கொள்ள புதிய நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளது என்கின்றனர் சிறுநீரக சிகிச்சை மருத்துவர்கள். 20 சதவீத பயன்பாட்டில் உள்ள கிட்னி ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டு வரை அதே செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் மாற்று கிட்னி பொருத்துவதற்கான 3 மாத பரிசோதனைகளை முடித்து விடலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: Easy Ways to Prevent Kidney Stones - சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தட&#3

கிட்னியைக் கவனியுங்கள்

*கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம்,

முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

*சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

*நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது

ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

*காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Kidney Care

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள
சாப்பிட வேண்டிய உணவுகள்

உடலில் இரத்தத்தைத் சுத்தப்படுத்தும் ஒரு முக்கிய உறுப்பு தான் சிறுநீரகம். இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அளவுக்கு அதிகமான தண்ணீரை பிரித்துத்தெடுத்து, சிறுநீர்பைக்கு அனுப்பிவிடுகிறது.

இதற்கு சிறுநீரகம் நன்கு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் டாக்ஸின்கள் சேர்வதுடன், சிறுநீரக கற்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கவும் ஒருசில உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.

இங்கு சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா!!!

தர்பூசணி தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது அதிக அளவில் சிறுநீரை உற்பத்தி செய்து, உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.

எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு குறையும். மேலும் எலுமிச்சை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட பெரிதும் உதவும்.

பெர்ரிப் பழங்கள் பெர்ரிப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதோடு, நோய்களை எதிர்த்துப் போரராடும் பொருட்கள் பல நிறைந்துள்ளன. மேலும் இது சிறுநீரகங்களில் இருந்து யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவு அவ்வப்போது பெர்ரிப் பழங்களை சாப்பிடுங்கள்.

ஆப்பிள் ஆப்பிளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

பூசணி விதைகள் பூசணி விதைகளில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு குறையும்.

இஞ்சி இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு நல்லது. மேலும் இது இரத்தம் மற்றம் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது.

மஞ்சள் அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்து வந்தால், சிறுநீரகங்களில் பிரச்சனைகள் அல்லது நோய்த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, சிறுநீரகங்கள் நன்கு செயல்படும்.

கொத்தமல்லி கொத்தமல்லியை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி, அந்த நீரை குளிர வைத்து, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Re: Easy Ways to Prevent Kidney Stones - சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தட&am

சிறுநீரகம் காக்க எளிய வழிகள்

வி.சந்திரசேகர்

சிறுநீரகவியல் மருத்துவர்
நா
ம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு, உடலுக்குத் தேவையான விதத்தில் அவை மாற்றப்பட்டு, ரத்தத்தின் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இப்படி, ஊட்டச்சத்துக்கள் உடைக்கப்படும்போது, நச்சுப்பொருட்களும் உருவாகின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியை சிறுநீரகங்கள் செய்வதுடன், உடலில் நீர்ச்சத்து சமநிலையில் இருக்கவும் உதவுகின்றன. சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில விஷயங்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தைத் கட்டுக்குள் வைத்திருத்தல்

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது சிறுநீரகத்தின் நுண்ணிய வடிகட்டி அமைப்பைப் பாதிக்கும். இதனால், ‘அல்புமின்’ என்ற புரதம் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். முதலில், இது மைக்ரோ அளவில் வெளியேறும். மேலும் மேலும் பாதிக்கப்படும்போது, மேக்ரோ அளவில் வெளியேற ஆரம்பித்துவிடும். மேலும் உடலில் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் தங்க ஆரம்பித்துவிடும். ரத்தத்தில் உள்ள நச்சு மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்றும் திறனை சிறுநீரகம் இழந்துவிடும். பல்வேறு உடல்நலக் குறைபாட்டையும் ஏற்படுத்தும்.

உயர்ரத்த அழுத்தத்தின்போது, இதயம் அதிகமாகத் துடிக்கும். இதனால், இதயம் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, கண் நோய்கள், சிறுநீரகப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, ரத்த அழுத்தம் 120/80-க்குக் கீழ் என்ற அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் இருந்தால் வாழ்க்கைமுறை மாற்றத்துடன், மருத்துவரின் ஆலோசனையின்படி தேவை எனில் மாத்திரை மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உப்பு அளவைக் குறைக்க வேண்டும்
ஒருநாள் தேவையைக் காட்டிலும் அதிக அளவில் சோடியம் உப்பை உணவில் சேர்க்கிறோம். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, சிறுநீரகத்தில் கல் உருவாக வழிவகுக்கும். ஒரு நாளைக்கு ஆறு கிராமுக்்கும் குறைந்த அளவு உப்பு (ஒரு தேக்கரண்டி)எடுத்துக்கொண்டாலே போதும். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், அதைவிடக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

போதுமான அளவு தண்ணீர்
உடல் நீர்ப்பதத்துடன் இருக்கவும், நச்சுக்களை சிறுநீரகம் வெளியேற்றவும் தண்ணீர் உதவுகிறது. மேலும், உடலின் வெப்பநிலை சீராகவும், ரத்தம் கட்டித்தன்மை அடைந்து விடாமலும் காக்கிறது. மேலும் போதுமான அளவு நீர் குடித்து, சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பாக்டீரியாத் தொற்றையும் தடுக்கிறது. நமக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை, நம்முடைய உடலே கேட்கும். பொதுவாக ஒன்றரை முதல் இரண்டரை லிட்டர் அதாவது, நாள் ஒன்றுக்கு 8 - 10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். நான்கைந்து லிட்டர் என்று அருந்தினால் அது, ரத்தத்தில் சோடியம் அளவையும் சிறுநீரகத்துக்கு அதிகப்படியான வேலைப்பளுவையும் கெடுத்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.


சிறுநீர் கழிக்காமை...

சிறுநீரகத்தின் முக்கிய வேலையே, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துவதுதான். இதனால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், நச்சுடன் சேர்த்து பிரிக்கப்பட்டு சிறுநீர்ப்பைக்கு அனுப்பப்படும். 150 மி.லி அளவு சேர்ந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். அப்போது, உடனடியாக ரெஸ்ட் ரூம் சென்றுவிடவேண்டும். இல்லையெனில், சிறுநீர்ப்பை தன் கொள்ளளவைத் தாண்டி சேமித்துவைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகும். இதனால் சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படும். மேலும், பாக்டீரியா வளர்வதற்கும் வழிவகுக்கும்.

சரியான உணவு
ஜங்க்ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், எண்ணெயில் பொரித்த உணவு உட்கொள்ளும்போது, அது சிறுநீரகத்தையும் பாதிக்கிறது. சிறுநீரகத்துக்குப் பலம் தரும் மீன், கீரை, பூண்டு போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை எடுத்துக்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்டவை, பாக்கெட் உணவுகள் மற்றும் அப்பளம், ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

ஆரோக்கியமான பானங்கள்
காபி மற்றும் குளிர் பானங்களில் உள்ள காஃபின் என்ற ரசாயனம் உடலில் உள்ள நீர்ச்சத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதனால், சிறுநீரகம் அதிகப்படியான வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகும். காபி, டீ மற்றும் கார்பனேட்டட் குளிர் பானங்கள், சோடா போன்றவற்றைத் தவிர்த்து, தினமும் பழச்சாறுகள், இளநீர் அருந்தலாம். இதனால், உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் கிடைக்கும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் ஆக்சலேட் அமிலம் அதிகம் உள்ள கீரை மற்றும் பீட்ரூட்டைத் தவிர்க்க வேண்டும்.

மது மற்றும் சிகரெட்
மது அருந்துவதால் உடலில் உள்ள எலக்ட்ரோலெட் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதை சரிப்படுத்த ஹார்மோன் சுரப்பு நிகழ்கிறது. சிகரெட் புகைக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகின்றன. மேலும், சிறுநீரகப் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

தினசரி உடற்பயிற்சி
உடல் பருமனாக உள்ளவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தேவையான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்ளுதல் போன்றவை உடலைப் புத்துணர்வாக வைத்திருப்பதுடன் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்.


சுய மருத்துவம்

டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரைகள் அல்லது மருந்து டோஸ் அளவு அதிகரித்தாலும், சிறுநீரகத்தின் வேலைப் பளுவும் அதிகரித்துவிடும். எந்த ஒரு மருந்தாக இருந்தாலும் டாக்டர் பரிந்துரையின்றி எடுக்கக் கூடாது. பொதுவாக வலி நிவாரணிகளை மருத்துவர் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்கின்றனர். ஒருநாள் எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், அதையே தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது அது சிறுநீரகத்தைப் பாதிக்கும். சில மாற்று மருத்துவ மருந்துகளில் உலோகம் அதிக அளவில் இருக்கும். இதுவும் சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்கலாம். அதேபோல வைட்டமின், தாது உப்புக்கள் மாத்திரையாக இருந்தாலும் சரி, இயற்கை மூலிகை மருந்தாக இருந்தாலும் சரி டாக்டர் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் சிறுநீரகத்தைப் பாதுகாக்கலாம்.

நோய்த்தொற்று
நோய் பரப்பும் கிருமி சிறுநீர்ப்பாதை வழியாக சிறுநீர்ப்பையை அடைந்து, வளர்ச்சி அடைவதால் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று ஏற்படுகிறது. இது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. சுகாதாரமற்ற அல்லது பொதுக் கழிப்பறைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சிறுநீர் கழித்த பிறகு, நன்றாக நீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்தத் தொற்றைத் தவிர்க்கலாம்.

சிறுநீரகப் பாதிப்புக்கான வாய்ப்பு உள்ளவர்கள்

சர்க்கரை நோயாளிகள்

உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள்

நெருங்கிய ரத்த வழி உறவில், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள்

உடல் பருமனானவர்கள்

உடல் உழைப்பு இன்றி இருப்பவர்கள்
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
Re: Easy Ways to Prevent Kidney Stones - சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தட&am

சிறுநீரகம்

1சிறுநீரகத்தின் பணி என்ன?
உடலுக்குத் தேவையான குளூக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கி வைத்துக் கொண்டு, ரத்தத்தில் உள்ள யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருட்களைப் பிரித்தெடுத்து, வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது. வீட்டுக்கு எப்படி கழிப்பறை முக்கியமோ, அதுபோல் நம் உடலுக்கு சிறுநீரகம் முக்கியம்.

2சிறுநீரகம் பாதிப்படைவது எதனால்?

கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் வலி நிவாரண மாத்திரைகளின் பக்க விளைவுகள், உணவு நச்சுகள், உடற் பருமன் உயிரணுக்கள் உற்பத்தியாகும் பையில் வீக்கம் போன்ற காரணங்களால், சிறுநீரகம் பாதிக்கப்படைகிறது.

3சிறுநீரகம் செயலிழந்ததற்கான அறிகுறிகள்?
திடீர் சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என, இருவகை உண்டு. உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து போனால் அல்லது மருந்து ஒவ்வாமையினால், திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். முகம் வீங்குவது, உடலில் நீர்க்கோர்த்து உடல் பருமன் ஆவது போன்றவையே, திடீர் செயலிழப்பின் அறிகுறிகள்.

4நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்?
சிறிது சிறிதாக, சிறுநீர்ப் பிரிவதில் சிரமம், குறைந்த அளவில் சிறுநீர் பிரிவது. பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு, உடல் அரிப்பு, முகம் மற்றும் கை, கால்களில் வீக்கம் தோன்றுவது போன்றவையே, நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்.

5சிறுநீரில் ரத்தம் வருவதற்கான காரணம்?
சிறுநீர் வெளியேறும் குழாய் மற்றும் சிறுநீர் பையில் கற்கள் அடைத்திருந்தால், சிறுநீரில் ரத்தம் வரும்; அது ஆபத்தான அறிகுறி.

6சிறுநீரக பாதிப்பை கண்டறிய எப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்?
நாற்பது வயதை கடந்தோர், நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், பரம்பரை ரீதியாக சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பத்தை சேர்ந்தோர், சிறுநீரகத்தில் கல் உள்ளோர், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ளோர், ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பான, ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்து கொள்வது நல்லது.

7உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துமா?
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. தொடர்ந்து ரத்த அழுத்தம், 140/ 90 மி.மீ., பாதரச அளவு இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

8சிறுநீரக பாதிப்பு ஏற்படாமலிருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்?
ஒருவருக்கு தினமும், 5 கிராம் உப்பே போதுமான அளவு. ஆனால் தென்னிந்தியாவில், 20 கிராம் உப்பை தினம் எடுத்துக் கொள்கிறோம். இதை குறைக்க வேண்டும். உப்பு நிறைந்த பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், சமையல் சோடா, சிப்ஸ், ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

9 சிறுநீரக பாதிப்பு உள்ளோர் புரத உணவுகளை தவிர்க்க வேண்டுமாமே?
சிறுநீரக செயலிழப்பு உள்ளோர், தாங்கள் உட்கொள்ளும் புரத உணவுகளில், கவனமாக இருக்க வேண்டும். புரத உணவின் வகையிலும், அளவிலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக விலங்கின் இறைச்சிகள், மீன், கோழி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும், புரதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

10 புகைப்பிடிப்போருக்கு, சிறுநீரக பாதிப்பு இருக்குமாமே?
சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால், உடலுக்குள் நுழையும் நிகோட்டின் ரத்தக்குழாய்களை சுருக்கிவிடும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இவ்வாறு அதிகரித்த ரத்த அழுத்தம், சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.