Easy Ways to Save Your Heart - இதயம் காக்க என்ன செய்யலாம்?

chan

Well-Known Member
#1
இதயம் காக்க என்ன செய்யலாம்?

 சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்.

 நோ ஃபாஸ்டிங்... நோ ஃபீஸ்டிங்! (பட்டினியும் கூடாது. விருந்தும் வேண்டாம்!)

 காய்கறி சாலட் அவசியம் சாப்பிட வேண்டும்.

 வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம்.

 ஆரோக்கியமான சுத்தமான புதிதாகச் சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

 அதிகக் காரம், புளிப்பு, இனிப்பு, கொழுப்பைக் குறையுங்கள்.

 அதிகம் இனிப்பு இல்லாத கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

 நார்ச்சத்து நிரம்பிய பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள்.

 

Important Announcements!