Ectopic Pregnancy-ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பமா' அப்படி&#29

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பமா' அப்படினா என்ன?[/h]
முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும்.

* கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும்.

* ஆனால் சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள்.

* ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது. நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது.

* அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.

* அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்? முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும்.

* உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது.

கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.


 

Attachments

meghna sid

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2014
Messages
3,519
Likes
11,545
Location
salem
#2
Re: ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பமா' அப்படினா &#2

Thelivaana vilakam chan....

Karuvuruthal nikalvu fellopian tube la thaan nadakum....

Early scanning is best to avoid tubal rupture...

Good job... Congrats....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: Ectopic Pregnancy-ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பமா' அப்படி

தகவலுக்கு நன்றி
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.