Effect of Levulose Containing Sweets on Blood - டயாபடீக் ஸ்வீட்ஸ்” சரியா? தவறா?

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
உறவினர் ஒருவர் நடமாடும் சர்க்கரை ஆலை என்று கிண்டல்செய்யும் அளவுக்கு உடல் முழுக்க சுகர் கொண்டவர். லீவ்லோஸ் ஸ்வீட்ஸ் (Levulose Sweets) சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று யாரோ சொன்னதைக் கேட்டு, தீபாவளிக்கு நிறைய வாங்கிவந்து, பல நாள் ஆசை தீர்ந்தது என்று அளவுகடந்து சாப்பிட்டார். கொஞ்ச நேரத்தில் சுகர் கன்னா பின்னாவென எகிறி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தீபாவளி துயரமானதாகிவிட்டது அவரது குடும்பத்துக்கு.

லீவ்லோஸ் என்றால் என்ன? லீவ்லோஸில் தயாரிக்கப்படும் இனிப்புகள், நிஜமாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது தானா? சர்க்கரை நோயாளிகளுக்காகவே, சென்னையில் ‘டயாபடீக் டிசைர்’ என்ற பெயரில்


உள்ள ஒரு பிரத்யேக ஸ்வீட் கடையின் மேலாளர் முரளிதரனை சந்தித்தோம்.

‘இங்கு ஸ்வீட்கள் அனைத்துமே சர்க்கரை நோயாளிகளுக்கெனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறன. சர்க்கரைக்குப் பதிலாக எந்தவித வேதியல் கலப்புப் பொருளும் இன்றி, இயற்கையாகவே பழங்களில் இருந்து கிடைக்கும் லீவ்லோஸைப் பயன்படுத்தி,் குலோப்ஜாமூன், லட்டு, பால்கோவா, மைசூர்பாகு, ஜாங்கிரி என அனைத்து வகையான ஸ்வீட் களையும் தயாரித்து விற்கிறோம்.

சர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஸ்வீட்னர்களில், ஒருவிதக் கசப்புஉணர்வு இருக்கும். ஆனால் லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட உணவுப்பொருளை உண்ணும்போது, கசப்புஉணர்வு இருக்காது. மற்றொரு சிறப்பான விஷயம் சர்க்கரை சேர்க்கப்பட்ட ஸ்வீட் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அதில் பாதி அளவுதான் லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட ஸ்வீட்களை சாப்பிடமுடியும். ஏனெனில் தித்திப்பு அதிகம் என்பதால், திகட்டும்.

தற்போது, இந்தியாவில் லீவ்லோஸ் கிடைப்பது இல்லை. எனவே அயல்நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். பழங்களில் இருந்து இயற்கை சர்க்கரையான லீவ்லோஸைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். அதிக செலவாகும். ஒரு கிலோ சர்க்கரையின் விலையைவிட மூன்று மடங்கு அதிகமானது ஒரு கிலோ லீவ்லோஸின் விலை. லீவ்லோஸை நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள்களில்கூட சர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்’ என்றார்.

லீவ்லோஸ் இனிப்புவகைகள் எந்த அளவுக்கு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது என்பதைத் தெரிந்துகொள்ள சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கருணாநிதியிடம் கேட்டோம். ”கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையை சுக்ரோஸ் என்போம். பழங்களில் இருந்து கிடைக்கக்கூடிய ஃபிரக்டோஸின் வேறு வடிவங்களில் ஒன்றுதான் லீவ்லோஸ். உணவுப் பொருளிலுள்ள சர்க்கரை எவ்வளவு அளவு, எவ்வளவு நேரத்தில் ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் குறிப்பது கிளைசமிக் குறியீடு. சர்க்கரையின் கிளைசமிக் குறியீட்டு எண் 69. ஆனால், லீவ்லோஸின் கிளைசமிக் குறியீட்டு எண் 19தான். அதேசமயம் லீவ்லோஸ், சர்க்கரையைவிட 1.7 மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. தற்போது பயன்படுத்தப்படும் சர்க்கரையை உண்டால், ஒருவருக்கு எந்த அளவுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்குமோ, அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே, லீவ்லோஸ் இனிப்புப் பொருளை உண்டால் அதிகரிக்கும்.

லீவ்லோஸில் கலோரியின் அளவும் குறைவுதான். என்றாலும், லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகளில் நெய், எண்ணெய் போன்ற பொருள்கள் சேரும்போது அதன் கலோரி அதிகமாகிவிட வாய்ப்பு உள்ளது.

லீவ்லோஸ், இயற்கையான இனிப்புப் பொருள் என்பதால், இன்சுலின் போட்டுக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள்கூடச் சாப்பிடலாம். ஆனால் அனைத்துச் சர்க்கரை நோயாளிகளுமே, ஒரு நாளைக்கு 20 கிராம் அளவுக்குள் மட்டுமே, லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட இனிப்புகளை உண்ண வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு என்பதால் அளவு மீறினால் பிரச்னைதான். லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட இனிப்புப் பண்டங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப்பொருள் கொண்டிருக்கும், கலோரி அளவைவிட 30% குறைவானது. எனவே, உடல்பருமன் அதிகமாக உள்ளவர்கள், இதய நோயாளிகளும்கூடக் குறைந்த அளவு எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை’ என்றார்.


கலோரியில் கவனம்!

ப்ரீ டயாபடீக் உள்ளவர்கள், சர்க்கரை நோய் வந்தவர்கள் இரு தரப்பினரும் அதிகம் கவனிக்க வேண்டியது கலோரி அளவைத்தான். இனிப்பு மற்றும் கார வகைகளில் கலோரி அதிகமாக இருக்கும். லீவ்லோஸ் ஸ்வீட்ஸ் விற்கப்படும் கடைகளில் இனிப்புப் பண்டம் வாங்கும் போது அதில் கலோரியின் அளவு அச்சிடப்பட்டு இருக்கிறதா, தரநிர்ணயம் செய்யப்பட்ட குறியீடு இருக்கிறதா, என்பதைப் பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

இனிப்பு டிப்ஸ்:

சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்வீட் வீட்டில் தயாரிக்கும்போது கலோரி அளவில் கவனம் செலுத்த வேண்டும். மைதாவுக்குப் பதிலாகக் கோதுமை பயன்படுத்தலாம்.

ஸ்வீட் தயாரிக்கும்போது நெய், வெண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்க்கக் கூடாது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதை 120 டிகிரிக்கு மேலே சூடுபடுத்தக் கூடாது.

நன்றி-விகடன்
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
பகிர்வுக்கு நன்றி .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.