Encouraging child to sleep in his/her own bedroom is good or not

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#1


VGM Friends

எனக்கு ரொம்ப நாளா இந்த டவுட் இருக்கு. பசங்க நம்ம கூட தூங்கிறது நல்லதா இல்லை தனியா தூங்கிறது நல்லதா. சிலர் சொல்றாங்க தனியா தூங்கினா தான் தன்னம்பிக்கை வரும்ன்னு, சிலர் சொல்றாங்க நம்ளோட தூங்கிறது தான் அவங்களை குடும்பத்தோட ஒட்டுதலா இருக்க வைக்கும்ன்னு... எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு, ப்ளீஸ் நீங்க உங்க கருத்துக்களை சொல்லுங்க.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
நல்ல கேள்வி ரம்யா .

ரெண்டுமே சரிதான் . அதாவது கொஞ்ச வருஷம் வரை , அவங்களை நம்ம கூட படுக்க வச்சுட்டு , அதுக்கு அப்புறம் , தனியா படுக்க வைக்கிறது தான் ரொம்ப நல்லது .

அப்போதான் , பயம் எதுவும் இல்லாம , நல்ல தன்னம்பிக்கையோட வளருவாங்க . எதையும் தனியாவே எதிர்கொள்ளும் தைரியம் வளரும் .

நான் , என் பையன் விஷயத்தில் செய்தது என்னன்னா ,

6 வயசு வரை எங்களோட படுக்க வச்சேன் . 7 வயசுலேர்ந்து , அவனைத் தனி பெட்ரூமில் தான் படுக்க வச்சேன் .

இதுக்கு முன்னாடி அவங்களை மென்டல்லி தயார் செய்யணும் .

"நீ இப்போ பெரிய பையனா /பெண்ணா ஆகிட்டே இருக்கே இல்லையா . அதனால , தனியா படுத்தாதான், அப்பா மாதிரி நல்ல தைரியசாலியா வர முடியும் . அப்புறமா , நீயே எல்லாத்தையும் தனியா செய்ய முடியும் . பயமாவே இருக்காது .

சப்போஸ் , உனக்கு பயமா இருந்தா , இந்த night lamp போட்டு இருக்கேன் பாரு , அதனால உனக்கு தைரியம் வரும் . உடனே நீ அம்மா ன்னு கூப்பிடு , நான் உடனே வந்துடுவேன் . பக்கத்து ரூம்ல தானே நாங்க இருக்கோம் . அதனால எப்பவும் உன் கூடதானே இருப்போம் , பயமே இல்ல "

இந்த மாதிரி சொல்லி அவங்களுக்கு முதலில் தைரியம் உண்டு பண்ணனும் . கொஞ்ச நாள்லயே அவங்களுக்குப் பழகிடும் .

தவிர, நீங்க இன்னொண்ணு கண்டிப்பா செய்யணும் .

அவங்களுக்கு ஏத்த மாதிரி ரூம் செட் செய்யணும். சுவரெல்லாம் அங்கங்க அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி .

தவிர , நடு இரவுல , ஒரு தரம் ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போகணும். அப்போதான் பெட் வெட்டிங் இருக்காது .

இந்த மாதிரி தனியா படுக்க வச்சா , ரொம்ப தைரியம் கிடைக்கும் .

நான் இப்படிதான் செய்தேன

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine March 2015. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#3
hi ramya

enakkum same doubt than...........please friends konjam solunga .....ethu nallathu nu ?
 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#4
wow...super jayakka........

nursery room mathiri set seitha easya irukum illaya?avangaluku lonliness irukkathu same time happy avum feel seivanga ..

ini ipadi try seiyalam .......

thanks jayakka........
 
Last edited:

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#5
ஜெயந்திகா நீங்க சொல்றது கரெக்ட் இப்ப எங்க வீட்டு கதை கேளுங்க

இதுக்கு முன்னாடி நாங்க அபார்ட்மென்ட்ல இருந்தோம் அப்ப என்னோட பையன் ஆறு வயசு ஆனதும் அவனே வந்து என் ப்ரண்ட்ஸ் தனி ரூம்ல தூங்குறாங்க நானும் தூங்கிறேன் என்றான் சரின்னு அவனுக்கு பெட் எல்லாம் புதுசா வாங்கி அவனுக்குன்னு ஒரு ரூம் குடுதிட்டோம்.

ஒரு வருஷம் கழிச்சு என்னோட தம்பி பெங்களூர் வந்தான் வேலைக்கு, அப்ப அவனும் ஹரிஷும் ஒரே ரூம் ஷேர் பண்ணிகிட்டாங்க அப்புறம் என் தம்பி marriage ஆகி ஒன்னரை வருஷம் முன்னாடி தனியா போட்டான் இவன் அதுல இருந்து எங்க கூட வந்து தூங்குறான்.

அவனுக்கு பயம் எல்லாம் ஒன்னும் கிடையாது. அவங்க அப்பா கூட தான் தூங்குவானாம். எங்க மாமியார் ஊர்ல இருந்து வந்தா அவங்க இருக்கிற வரை ஹரிஷ் அவங்களோட தான் தூங்குவான். இப்ப பத்து வயசு ஆகுது நான் என்ன பண்றது.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#6
@ ரம்யா இது ஒரு நல்ல கேள்வி. ஜெயந்தியின் பதிலும், விளக்கங்களும் ஏற்புடையவையே.

இன்னைக்கு வரைக்கும் என் பையன் எங்க கூட தான் தூங்கறான். அல்லது வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்தா அவங்களோட தூங்கறேன்னு சொல்லுவான். அவனுக்கு எப்பவுமே தனிமை பிடிக்காது. அவனை சுற்றி உறவுகள் இருந்து கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவன். பிறந்ததிலிருந்தே அப்படி வளர்ந்து விட்டான்.

இனிமேல் தனியே படுக்கும் பழக்கத்தை அவனே விரும்பி ஏற்றுக் கொண்டால் தான் உண்டு.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#7
@ ரம்யா இது ஒரு நல்ல கேள்வி. ஜெயந்தியின் பதிலும், விளக்கங்களும் ஏற்புடையவையே. இன்னைக்கு வரைக்கும் என் பையன் எங்க கூட தான் தூங்கறான். அல்லது வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்தா அவங்களோட தூங்கறேன்னு சொல்லுவான். அவனுக்கு எப்பவுமே தனிமை பிடிக்காது. அவனை சுற்றி உறவுகள் இருந்து கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவன். பிறந்ததிலிருந்தே அப்படி வளர்ந்து விட்டான். இனிமேல் தனியே படுக்கும் பழக்கத்தை அவனே விரும்பி ஏற்றுக் கொண்டால் தான் உண்டு.
இவனும் கிருஷ்ணா மாதிரி தான் அவனுக்கும் கதை பேசிட்டு தூங்கனும் அது ஒன்னும் தப்பு இல்லையில சுமிகா அவனா வந்து தூங்கிறேன்னு சொல்றவரை பேசாம விட்டுடவா.
 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#8
enga veetilum ithe kathai than oduthu ..........enga kuda than enga pasqanga thoonguranga........ana en periya paiyan en amma vandha mattum aavnga kuda paduthukkuran.....matha nerathula enga kuda than.........

suma sonnathu pola avangala thaniya thoongura pazhakkam erpattal than undu pola ......
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#9
இவனும் கிருஷ்ணா மாதிரி தான் அவனுக்கும் கதை பேசிட்டு தூங்கனும் அது ஒன்னும் தப்பு இல்லையில சுமிகா அவனா வந்து தூங்கிறேன்னு சொல்றவரை பேசாம விட்டுடவா.
எனக்கு அவனை வலுக்கட்டாயமாக தனியே படுக்க வைப்பதில் விருப்பம் இல்லை, அதனால் நான் அவன் விருப்பப்படியே விட்டுவிட்டேன். எனக்கு அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#10
enga veetilum ithe kathai than oduthu ..........enga kuda than enga pasqanga thoonguranga........ana en periya paiyan en amma vandha mattum aavnga kuda paduthukkuran.....matha nerathula enga kuda than.........

suma sonnathu pola avangala thaniya thoongura pazhakkam erpattal than undu pola ......
ஷரவன் உங்களுக்கு பிரச்சனை இல்லை பா. உங்களுக்கு ரெண்டு பசங்க நீங்க கொஞ்ச நாள் கழிச்சு அவங்க ரெண்டு போரையும் சேர்ந்து ஒரு ரூம்ல தூங்க சொல்லலாம்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.