Environment !

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#81
மிக உறுதியான வைரத்தை ரப்பர் போல் வளைக்க முடியும் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்

1524227516284.png

உலகில் மண்ணிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் மிக உறுதியானது வைரம். வைரத்தை மற்ற பொருட்களால் வெட்ட முடியாது. அதனால் வைரத்தை வெட்ட வைரமே பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் வைரத்தின் வளையும் தன்மை மற்றும் விரிவடையும் தன்மையை அதிகரிக்கும் புதிய முறையை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் வைரத்தை குறிப்பிட்ட அளவிற்கு ரப்பர் போல் வளைக்கவும், விரிவுபடுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளனர்.


இயற்கையாக கிடைக்கும் வைரத்தை வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். பின்னர் மிகச்சிறிய வைர ஊசி தயாரிக்கப்படுகிறது. நனோ அளவில் இருக்கும் இந்த ஊசியின் மேல் பகுதியை வளைத்தால், அது வளைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். இந்த ஊசியை விரிவாக்கவும் முடியும்.

இந்த கண்டுபிடிப்பு மூலம் வைரங்கள் பயன்படுத்தப்படும் சென்சிங், தகவல் சேமிப்பு, மருத்துவம், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#82
மெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

1524229916536.png

சென்னை கடல் நீரில் உள்ள மாசு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய 5 கடற்கரையில் உள்ள மொத்தம் 192 மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோடை மற்றும் மழைக் காலங்களில் உள்ள நீரின் மாதிரிகளை சேகரித்து, மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகள் அதிகரித்து நீர் மாசடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியாக செல்லும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியாக்கள் அதிகரித்து, கடல் நீர் மாசு அடைந்து உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.இதில் மெரினாவில் சேகரிக்கப்பட்ட நீரில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மெரினா கடலில் குளிப்பதால் செரிமான பிரச்சினை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுமாம்.

இதேபோல் மற்ற கடற்பகுதியிலும் கழிவுகள் கலப்பதால் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒப்பீட்டு அளவில் கோவளம் கடல் நீரில் குறைந்த அளவு மாசு கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#83
அடிக்கிற வெயிலுக்கும் ஆயிரம் காரணம் இருக்கு.. நமக்கென்ன தெரியும்? நிபுணர்கள் சொல்கிறார்கள்

1524315260298.png

|
கோடைக் காலத்தின் மிகக் கோரத் தாண்டவம் சென்னையில் நேற்று தொடங்கிவிட்டது. அதிக வெப்பமான முதல் நாளான நேற்று சென்னையில் 36.60 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்தது.

தமிழகத்துக்கு கிழக்குப் பகுதியில் இருந்து வீசும் காற்றின் திசை, மேற்கு திசையில் இருந்து மாறும் போது இப்படி வெப்பநிலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய துணை மேலாளர் ஒய்.இ.ஏ. ராஜ், எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசுகையில், இது காற்றின் திசை மாறும் காலம். ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் அது நிகழும். வறண்ட மேற்குப் பகுதியில் இருந்து காற்று வீசும். ஏப்ரல் 15ம் தேதி வரை நமக்கு பசுமையான கிழக்குப் பகுதிகளில் இருந்து காற்று வீசும். அதனால், வெப்பநிலை ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும். தற்போது காற்றின் திசை மாறுகிறது. எனவே, கோடை வெப்பம் தகிக்கும். எனினும், ஒவ்வொரு நாளும் நிலவும் வெப்பத்தின் அளவானது காலையில் எந்த விதமான காற்று வீசுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்தார்.

கடற்கரை காற்றால் சென்னை மக்கள் ஓரளவுக்கு தப்பிக்கிறார்கள். கடும் வெப்பத்தை கடல் காற்று ஓரளவுக்கு மட்டுப்படுத்தும். ஆனால், வெள்ளிக்கிழமை போதிய கடல்காற்று இல்லாததே வெப்பத்துக்குக் காரணம். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையப் பக்கத்தில், நேற்று இரவு 9 மணிக்குக் கூட 31 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நீடித்தது. 82% அளவுக்கு புழுக்கம் காணப்பட்டது.

வானிலை பற்றி அறிவிப்புகளை வெளியிடும் பிரதீப் ஜான் இது குறித்து கூறுகையில், மிக பலமான கடற்கரை மேகக் கூட்டங்கள், கடற்காற்றை தரைப் பகுதிக்கு வர விடாமல் தடுத்ததாகப் பதிவிட்டுள்ளார்.

அடுத்து வரும் நாட்களில், வெப்பநிலையானது இதே போல 35 டிகிரி செல்சியஸ் முதல் 36.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸை கடந்துவிட்டது. கரூர் பரமதியில் 41.2 டிகிரி, வேலூரில் 41.1 டிகிரி, திருத்தணியில் 41 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#84
உலகில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

1525406829044.png

உலகில் ஆண்டுதோறும் 7 கோடி மக்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் இறக்கின்றனர். 10 ல் 9 பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'காற்று மாசடைந்த முதல் 20 நகரங்களில் இந்தியாவில் உள்ள 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் வாரனாசியில் மாசு மிக அதிக அளவில் உள்ளது. இதையடுத்து, டெல்லி, கான்பூர், கவாலியர், பரைதாபாத், கயா, ஆக்ரா, பாட்னா, முசாபர்நகர், ஸ்ரீநகர், குருகான், ஜெய்ப்பூர், பட்டியாலா மற்றும் ஜோத்பூர் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகள் மிகவும் மாசடைந்து காணப்படுகின்றன. இப்பகுதிகளில் சல்பேட், நைட்ரேட் மற்றும் கார்பன் போன்ற மாசுக்கள் காற்றில் கலந்து உள்ளன. இதனால் மக்களுக்கு இதய பிரச்சனை, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன ' எனக்குறிப்பிட்டுள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#85
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது - நாசா ஆய்வில் தகவல்

1526699560509.png


பூமியின் நிலத்தடி நீர்மட்டத்தை (நன்னீர்) அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலக அளவில் 34 மண்டலங்களை சுமார் 14 ஆண்டுகளாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதன் முதற்கட்ட தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளனர்.

இதில் பூமியின் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரமாகவும், உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்து கொண்டே போவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு மோசமான நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை சுழற்சி உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் ஏற்கனவே பிரச்சினைகள் உருவாகி இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்காலத்தில் வட இந்தியாவில் போதுமான மழை இருந்தபிறகும் அரிசி, கோதுமை போன்ற பயிர்களுக்காக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சியதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

இது எதிர்கால வறட்சிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், பூமியை பொறுத்தவரை நிலத்தடி நீரே மிகவும் அத்தியாவசிய வளமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#86
அமெரிக்க ஹவாஸ் தீவில் எரிமலை வெடித்ததால் பூமியில் விரிசல்

1526841426779.png


அமெரிக்காவின் ஹவாஸ் தீவில் கிலாயுயா என்ற எரிமலை உள்ளது. அது கடந்த 3-ந்தேதி முதல் வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து லேசான புகை வெளியேறி வந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து எரிமலை குழம்பு வழிந்தோடுகிறது. கரும்புகை வெளியேறுகிறது. நாலாபுறமும் பாறைகள் சிதறுகின்றன.

எனவே பாதுகாப்பு கருதி கோனா கடற்கரை பகுதியில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கிளாயுயா எரிமலை வெடித்ததின் அதிர்வு காரணமாக அங்கு பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. முன்னதாக அப்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் நிறுவனங்களின் ஜன்னல்கள் கதவுகள் ‘படபட’ வென அடித்தன. அதன் பின்னர்தான் எரிமலையில் இருந்து கியாஸ் மற்றும் குழம்பு வெளியேறியது.

கிளாயுயா எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. அதில் இருந்து வெளியான கரும்புகை விண்ணில் பரவியது. அதை மரத்தின் மீது ஏறி ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#87
இந்த 5 பயங்கரமான விளைவுகள்தாம் காலநிலை மாற்றம் நிகழ்வதற்கான நிஜ சாட்சிகள்!

திடீரென பெயர் தெரியாத மர்ம நோய்கள் மனிதர்களிடம் பரவுவதும் பல்வேறு பலிகளுக்குப் பின் அந்த நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதும் மனிதகுலம் காப்பாற்றப்படுவதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இந்த மர்ம நோய்களையெல்லாம் விட ஒரு சொல்தான் உலக நாடுகள் பலவற்றுக்குமான அச்சமாக இருக்கிறது. அதுதான் `காலநிலை மாற்றம்’.

சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காலநிலை மாற்றம் மாறியிருப்பதற்கு அதன் விளைவுகளே சாட்சி. இயற்கையினைச் சமநிலைப்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் முயன்று வருகிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்கக் காலநிலை மாற்றத்தால் பூமிக்கோ மனிதர்களுக்கோ ஒன்றும் இல்லை என்ற பரப்புரைகளும் நிகழ்ந்து வருகின்றன. காலநிலை மாற்றம் நிகழ்வதற்கான ஆதாரங்களைப் பார்க்க சூப்பர் கம்ப்யூட்டரெல்லாம் தேவையில்லை. இந்தக் கட்டுரையில் இருக்கும் ஐந்து விளைவுகள் போதும். இதை அடிக்கடி செய்திகளிலோ, ஆராய்ச்சி முடிவுகளிலோ பார்க்கலாம். இந்த ஐந்து விளைவுகளும்தாம் காலநிலை மாற்றத்தின் ஆதாரங்கள்.கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு

காற்று மாசுபாட்டுக்கு முழுமுதற் காரணம் எனப் பள்ளி வகுப்புகளில் படித்திருப்போம். காற்று மாசுபாடு மட்டுமல்ல பூமியைச் சூடாக்கும் பசுமை இல்ல வாயுக்களின் ஆதிமூலமும் இந்த CO2 தான். பூமியில் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 70 சதவிகிதத்துக்கும் மேலே கார்பன் டை ஆக்ஸைடினால்தான் நிகழ்கிறது. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு பார்ட்ஸ் பெர் மில்லியன் (parts per million (ppm)) என்ற அளவால் அளக்கப்படுகிறது. கடந்த 8,00,000 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்குப் பூமியின் கார்பன் டை ஆக்ஸைடு அளவு தற்போது உயர்ந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக 400ppm குள் இருந்த அளவு 2013ல் அசால்ட்டாக 400ஐத் தாண்டியது. கடந்த ஐந்து ஆண்டுக்குள் அதன் அளவு மடமடவென உயர்ந்து தற்போது 412.03ppmல் நிற்கிறது. 400ஐத் தாண்டும்போதே எச்சரிக்கை மணி அடித்த அறிவியலாளர்கள் தற்போது அபாயச் சங்கை ஊதுகின்றனர். கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது மிக முக்கியமான விசயம். பரவலாக மரபுசார் ஆற்றலைப் பயன்படுத்தப்படுவதே கார்பன் டை ஆக்ஸைடின் அதீத வெளியீட்டுக் காரணம். மரபுசார் ஆற்றலைப் படிப்படியாகக் குறைத்து சூரிய ஆற்றல், காற்றாலை போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம்தான் CO2 அளவைக் குறைக்க முடியும். இல்லையென்றால் புவி வெப்பமயமாதலின் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.
வறட்சி

வரலாற்றில் வறட்சிகள் இல்லாமல் இல்லை. சோளக்கஞ்சியைச் சண்டைப் போட்டு வாங்கிக் குடித்த வறட்சிக் கதைகளை நம் தாத்தா பாட்டிகளிடம் இன்றும் கேட்கலாம். இவையெல்லாம் அரிதாக ஏற்படும் வறட்சிகள். இயற்கையில் இவற்றுக்கு இடம் உண்டு. ஆனால் இப்போது ஏற்படும் வறட்சிகளெல்லாம் செயற்கையாய் நிகழ்பவை. வறட்சியின் அளவு D0 விலிருந்து D44 வரை பிரிக்கப்படுகிறது. D33யைத் தாண்டினாலே அந்த வறட்சியின் தாக்கம் பயங்கரமானது. மழை பொய்த்துப் போவது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. இதற்கான காரணங்களுக்குள்தாம் காலநிலை மாற்றம் ஒளிந்துள்ளது. ஆறுகளையும் நிலத்தடி நீரையும் கபளீகரம் செய்துவிட்டு தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை என இயற்கையைக் கூற முடியாது. இதற்கு கண்முன்னே உதாரணமாகத் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடப்பவை இருக்கிறது. ஒருசொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நகரகமாக கேப்டவுன் மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு ஏன் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைச் செய்தித்தாள்களில் படித்திருப்போம். இவையெல்லாம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட வறட்சியே. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு நீர்நிலைகளையும் நிலத்தடி நீரையும் கவனமாகக் கையாள்வது வறட்சியைத் தடுக்கலாம்.


உலகளாவிய சராசரி கடல் மட்டம் ( Global Mean Sea Level (GMSL))

காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாக இவற்றைக் காணலாம். புவிவெப்பமயமாதலால் துருவப் பகுதி பனிக்கட்டிகள் உருகி கடலின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. கடல்நீர்மட்ட உயர்வு மில்லி மீட்டர் அளவில் அளக்கப்படுகிறது. வருடத்துக்கு 3.4மிமீ என்ற அளவில் கடல்நீர் மட்டம் உயர்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் இந்த அளவுக்கு நீர்மட்டம் உயரவில்லை. 20 ம் நூற்றாண்டை விட இந்த அளவு பெரியது. கடல் நீர்மட்ட உயர்வால் பல்வேறு சிறிய தீவு நாடுகள் கடலுக்குள் மூழ்கும் நிலையில் இருக்கின்றன. சில தீவு நாடுகளில் கடல் பெருமளவு உட்புகுந்துவிட்டது. 2015 பாரிஸ் பருவநிலை அறிக்கையில் கூட இந்த விளைவுகளைக் கருத்தில் கொண்டு நாம் விரைவாகச் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலில் சொன்ன மாதிரியே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம்தான் இதனையும் கட்டுப்படுத்த முடியும்.கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature (SST))

கடல் நீர்மட்டம் உயர்வதைப் போன்றே இந்த விளைவும் புவி வெப்பமயமாதலால்தான் நிகழ்கிறது. கடல்நீரானது வெப்பத்தை உறிஞ்சக் கூடியது. புவிப்பரப்பின் வெப்பம் உயரும்பொழுது கடல்நீரின் மேற்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. 2016ல் தான் இந்தவெப்பநிலை அதிகபட்சமாக 0.75 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பதிவாகியுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் அதிகமான வெப்பநிலை. இந்த அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் கடல் வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பாதிக்கப்படும். கடற்சூழலியலில் பெரிய மாற்றங்களே நிகழலாம் என்கின்றனர். பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவதுதான் இதன் தீர்வாகவும் இருக்க முடியும்.


துருவப் பகுதிகளின் பரப்பு குறைதல்

துருவப்பகுதிகளின் பனிக்கட்டிகள் வெறுமனே கடல்பகுதிக்கானது மட்டுமல்ல. அவை சூரிய ஒளியைப் பிரதிபலித்துக் குளிர்விக்கும் பணியைச் செய்கின்றன. பூமியின் துருவப்பகுதிகளின் குளிர்த்தன்மை துருவப் பனிக்கட்டிகளின் மூலம்தான் சமநிலையில் வைக்கப்படுகிறது. பூமியைக் குளிர்விப்பதிலும் இதற்கான பங்கு அதிகம். கடல்நீரைக் குளிர்விப்பதும் இவையே. காலநிலை மாற்றத்தின் விளைவில் இவற்றின் அளவுகள் சுருங்கி வருகின்றன. துருவப் பனியின் பரப்பு குறைந்தால் புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும். கடந்த ஐந்து வருடங்களில் 150 லிருந்து 250 கியூபிக் கிலோமீட்டர் வரை குறைந்துள்ளது.மிகவும் கூர்ந்து கவனித்தால் மேலே இருக்கும் ஐந்து ஆதாரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றின் விளைவு மற்றொன்றைத் தாக்கும். இப்படித்தான் காலநிலை மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. நாம் ஒரு பிரச்னைக்கு மட்டும் தீர்வு கண்டுபிடிக்க முயன்றால் பயனில்லை. காலநிலை மாற்றத்தை முற்றிலும் போக்கும் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கொள்கை அளவில் உலக நாடுகள் இணைந்து முன்னெடுக்க வேண்டிய செயல்பாடு இது. அரசுக்கான அழுத்தங்களைக் கொடுப்பதில் தனிநபர்களின் பங்கு இருக்கும். கண்முன்னே நிற்கும் பெரிய பிரச்னையை மனிதகுலம் இணைந்துதான் எதிர்கொள்ள வேண்டும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#88
கேரளத்தில் இருந்து கல்லாறு வனப் பகுதிக்கு இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள்

கல்லாறு வனப் பகுதியில் மண்ணில் அமர்ந்து தாதுக்களை உறிஞ்சும் லைம் வகை பட்டாம்பூச்சிகள். வனப் பகுதியில் அதிக அளவில் காணப்படும் மர்மோன் வகை பட்டாம்பூச்சி.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கல்லாறு வனப் பகுதியில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்து வருவதால் அப்பகுதியின் உயிர்ச்சூழல் தன்மைக்கேற்ப கேரளத்திலிருந்து பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது கல்லாறு வனப் பகுதியில் நிமிடத்துக்கு 100 என்ற அளவில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இடப்பெயர்ச்சியாகும் அதிசய நிகழ்வு நடைபெற்று வருவதாக அப்பகுதியில் பட்டாம்பூச்சி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வக் குழுவினர் தெரிவித்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைக்குட்பட்ட நீலகிரி மலையின் அடிவாரத்தில் உள்ளது கல்லாறு வனப் பகுதி. இயற்கை எழில்மிக்க சூழலில் மரம், செடி, கொடிகளுடன் கூடிய அரியவகை தாவரங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
உதகை சாலை சில்வர் பாலம் முதல் கல்லாறு பழப் பண்ணை வரை உள்ள வனப் பகுதி நல்ல நீர்வளம், சீதோஷ்ணம், விதவிதமான மலர்கள் என சிறந்த உயிர்ச்சூழலை கொண்டு விளங்குகிறது.

இதனால் இடப்பெயர்ச்சி காலங்களில் பல்வேறு வகையான பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும் ஈர்க்கும் பகுதியாக கல்லாறு வனப் பகுதி உள்ளது.
தற்போது இங்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒய்ல்டு லைப் ரேங்லர்ஸ் என்ற தன்னார்வக் குழுவினர் இடப்பெயர்ச்சியாகும் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லாறு பழப் பண்ணை பகுதி, கோத்தகிரி சாலை, உதகை சாலைக்குள்பட்ட வனப் பகுதிகளில் இந்த ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணக்கெடுப்பில் 7 பேர் வரை பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பட்டாம்பூச்சி இடப்பெயர்ச்சி குறித்து ஒய்ல்டு லைப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்வின் கிங்ஸ்லி கூறியதாவது :

பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சிக்கு கோடை மிகவும் ஏற்ற காலமாகும். கல்லாறு வனப் பகுதியில் நல்ல கோடை மழை பெய்து வருவதால் தற்போது சிறந்த இயற்கை சூழல் நிலவி வருகிறது.

இதனால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பட்டாம்பூச்சிகளின் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது கேரளப் பகுதியிலிருந்து வரும் லைம், காமன் மர்மோன், பிளெய்ன் டைகர் வகை உள்ளிட்ட பட்டாம்பூச்சிகள் ஆனைகட்டி வழியே கல்லாறு வனப் பகுதிக்கு பல்லாயிரக்கணக்கில் வந்து மீண்டும் பவானி ஆற்றோரம் வழியே பவானிசாகர் அணைப்பகுதிக்கு இடப்பெயர்ச்சியாகின்றன.
தற்போது ஒரே நேரத்தில் கல்லாறில் குவியும் ஆயிரக்கணக்கான ஆண் பட்டாம்பூச்சிகள் தரையில் அமர்ந்து மண்ணில் உள்ள தாது உப்பை உறிஞ்சும் செயலில் ஈடுபடுவது கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.

இவ்வாறு உறிஞ்சப்படும் தாது உப்புகள் இனப்பெருக்கத்தின்போது பெண் பட்டாம்பூச்சியின் உடலில் செலுத்தப்படுவதால் அதன்மூலம் ஆரோக்கியமான முட்டைகள் இடுவது சாத்தியம் என்பதற்காகவே இந்த தாது உப்பு உறிஞ்சும் செயல் நடைபெறுகிறது.

மேலும் இந்த வனப் பகுதியில் பட்டாம்பூச்சிகளுக்குத் தேவையான நல்ல சீதோஷ்ணம், நீர்வளம், உயிர் தாவரங்கள், தேன் வளம் நிரம்பிய மலர்கள்அதிக அளவில் காணப்படுவதால் இந்த உயிர்ச்சூழலை நாடிவரும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பட்டாம்பூச்சி இடப்பெயர்ச்சி குறித்து மேலும் நன்கு அறிந்து கொள்ளும்வகையில் தென் இந்தியா முழுவதுமுள்ள பட்டாம்பூச்சி ஆர்வலர்களை ஒன்றிணைத்து முதன்முறையாக ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இடப்பெயர்ச்சியின்போது பட்டாம்பூச்சி புறப்படும் இடம், கடந்து செல்லும் பாதை, சேருமிடம் போன்ற கூடுதல் தகவல்களை உடனுக்குடன் பரிமாறி கொள்ள முடியும் என்றார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#89
Twin satellites to chase water changes on Earth

A pair of identical, sportscar-sized satellites are poised to zoom around the Earth and track changes in water and ice, offering new insights into global warming and sea level rise, Nasa said on Monday.

Groundwater, oceans, lakes, rivers and ice sheets will be monitored by the Gravity Recovery and Climate Experiment Follow-On (GRACE-FO), a joint mission between the US space agency and German Research Centre for Geosciences (GFZ). A SpaceX Falcon 9 rocket will propel the satellites to an orbit about 310 miles (500 kilometers) above the Earth. The pair will fly 137 miles (220 kilometers) apart, or about the distance from Los Angeles to San Diego.


Nasa has spent $430 million on the mission, and Germany has spent about $91 million. The new pair of satellites will pick up where the first GRACE mission left off, having completed its 15-year mission in 2017. “Water is critical to every aspect of life on Earth — for health, for agriculture, for maintaining our way of living,” said Michael Watkins, GRACE-FO science lead and director of Nasa’s Jet Propulsion Laboratory in Pasadena, California.“You can’t manage it well until you can measure it. GRACE-FO provides a unique way to measure water in many of its phases, allowing us to manage water resources more effectively.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#90
”விஞ்ஞான ஆராய்ச்சிக்காகவே 333 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன!” - ஜப்பான் சொல்லும் விபரீத காரணம்


ஜப்பானில் வருடாந்திர கோடை ஆராய்ச்சியில் 333 திமிங்கிலங்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டுள்ளன. அதில் 120-க்கும் மேற்பட்டவை கர்ப்பிணித் திமிங்கிலங்கள் என்ற புள்ளிவிபரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. சர்வதேச திமிங்கிலம் ஆணையம், இந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், படுகொலை செய்யப்பட்ட மின்கே திமிங்கலங்களில் 122 திமிங்கிலங்கள் கர்ப்பமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
ம்

Photo - Social Every Things
ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 8 முதல் பிப்ரவரி 28 வரை கோடை ஆராய்ச்சி நடத்துவது வழக்கம். இந்த வேட்டையில் "அண்டார்டிக் கடல் சுற்றுச்சூழல் கட்டமைப்பு மற்றும் இயக்கவியல்" அமைப்பானது உயிர் மாதிரிகளை எடுப்பது வழக்கம்.

இம்முறை ஜப்பானைச் சேர்ந்த ஐந்து கப்பல்கள் திமிங்கில ஆராய்ச்சிக்காக தனது வேட்டையைத் தொடங்கின. வேட்டையைத் தொடங்கிய 83 நாட்களுக்கு பின்னர், முதல் இரண்டு கப்பல்கள் முன்னர் வர, மூன்று கப்பல்கள் பின்னால் அணிவகுத்து ஜப்பானின் ஷிமோனோசேகி துறைமுகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்து சேர்ந்தது. இந்த ஐந்து கப்பல்களிலும் சென்றவர்கள் 333 திமிங்கலங்களை வேட்டையாடி கரைக்குக் கொண்டுவந்தனர். 120 கர்ப்பிணித் திமிங்கிலங்கள் போக 114 திமிங்கிலக் குட்டிகளும் வேட்டையாடப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வைப் பற்றி ஜப்பான் கடல் ஆய்வாளர்கள் " திமிங்கிலங்கள் கொல்லப்படுவது அவசியமானது.

திமிங்கலங்களின் வயதினை அதன் உள்காதுகளில் இருந்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இதற்காக திமிங்கிலங்களைக் கொல்வது மட்டுமே சரியான செயல். மிங்கே வகை திமிங்கிலத்தின் இனப்பெருக்கம் மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி உள்ளிட்ட ஆராய்ச்சிக்காக மட்டுமே வேட்டையாடுகிறோம். வேட்டையாடப்பட்ட திமிங்கலங்கள் அனைத்தும் வயதில் முதிர்ச்சி அடைந்திருக்கின்றன. அதனால் அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் நிகழாது" என்று பதிலளித்திருக்கிறார்கள். இவர்களின் பதில் கடல்வாழ் ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

"வெடி மருந்துகளை திமிங்கலங்களின் உடலில் செலுத்தி வெடிக்கச் செய்து மிகவும் மோசமான வகையில் திமிங்கிலங்கள் கொல்லப்பட்டுகின்றன. ஜப்பான் நெடுங்காலமாக இந்த முறையைத்தான் கையாண்டு வருகிறது. சர்வதேச அளவில் இதற்காக பல கண்டனங்கள் எழுந்தும் ஜப்பான் இந்த முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவர்கள் காலநிலை மாற்றம் பற்றி புரிந்து கொள்ளவோ, கடலுயிரினங்களின் இனச்சேர்க்கை பற்றி ஆராயவோ செல்வதாக தெரியவில்லை.

அறிவியல் ஆராய்ச்சிக்காக இவை கொல்லப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், மீன் சந்தைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் திமிங்கலங்களின் கறி விற்பனைக்கு கிடைக்கிறது. எனவே திமிங்கிலங்கள் கறிகளுக்காக கொல்லப்படுகின்றன என்பதிலும் உண்மை இருக்கிறது" என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Photo - Eco News
கடந்த 2014-ம் ஆண்டு திமிங்கில வேட்டை என்ற பெயரில் ஜப்பான் திமிங்கிலங்களை படுகொலை செய்வதை சர்வதேச நீதிமன்றம் கண்டறிந்தது. அதன்பின்னர் ஜப்பான் திமிங்கில வேட்டையில் ஈடுபடக்கூடாது என தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான ஒரு வருடம் மட்டும் தனது வேட்டையை நிறுத்திக் கொண்ட ஜப்பான் அடுத்த ஆண்டிலிருந்து தனது வேட்டையைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய திமிங்கில சரணாலயமானது, திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வேலையைச் செய்து வருகிறது. அண்டார்டிக் பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவின் திமிங்கில பகுதி பரவியுள்ளது. இதற்கு உரிமை கோரிய ஆஸ்திரேலியாவின் வாதத்தை ஜப்பான் ஏற்றுக் கொள்ளவில்லை.

எதையுமே ஏற்றுக் கொள்ளாத ஜப்பான், ஆராய்ச்சி நிகழ்விற்காக அடுத்த 12 ஆண்டுகளில் 4,000 திமிங்கலங்களை வேட்டையாடத் திட்டமிட்டுள்ளது. தற்போது நடந்திருக்கும் வேட்டைக்கு 'சர்வதேச மனிதாபிமான சொஸைட்டி' தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. திமிங்கலத்தை வேட்டையாடுவதில் எந்தவித வலுவான அறிவியல் காரணங்களும் இல்லை என அதன் நிர்வாகத் துணை தலைவர் கிட்டி பிளாக் கூறியிருக்கிறார்.

மக்கள் இந்தச் செயலை 'கொடுமையான செயல்' என்று விமர்சித்தாலும், ஜப்பானிய ஆய்வாளர்கள் 'விஞ்ஞான ஆராய்ச்சிக்காக' எனவே வாதாடுகின்றனர். இந்தியா உட்பட சர்வதேச அளவில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் மக்களுக்கு எதிராக வைக்கும் பொதுவான வாதம்தான் இது!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.