Excess intake of Paracetamol is dangerous to health-பாராசிட்டமால் பாதுகாப்பானதா....?

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,550
Likes
40,173
Location
france
#1
பாராசிட்டமால் மாத்திரைகளையோ, சிரப் களையோ தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு லிவர் மற்றும் கிட்னி தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இனி மேல் பாராசிட்டமால் (அசிட்டமி னோபென்) மருந்துகளை தயாரிப்பவர்கள் தங்களது நுகர்வோர்களுக்கு இந்த மருந்தை உட்கொள்வதால் லிவர் ,கிட்னி டேமேஜ் மற்றும் அலர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒவ்வொரு மருந்து பாட்டில் ரேப்பர்கள் மற்றும் மாத்திரைப் பட்டைகளில் எச்சரிக்கை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரஸ்க்ரிப்சன் களை பேசன்டுகள் பெரும்பாலும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை.காய்ச்சல் என்று வரும் கைக்குழந்தைகளுக்கு டாக்டர்கள் 5 ml பாராசிட்டமால் சிரப்(டானிக்) பரிந்துரைத்தால் குழந் தையின் பெற்றோர்களில் சிலர் போதிய விஷய ஞானம் அற்று தவறுதலாக 5 ml அளவுக்கு பாராசிட்டமால் ட்ராப்ஸ் (சொட்டு மருந்து) கொடுத்து விடுகிறார்கள். சிரப்பை விட இந்த ட்ராப்ஸ்கள் அதிக செறிவானவை. இத்தனை செறிவான மருந்தை உட்கொள்வதால் குழந் தைக்கு அலர்ஜியாகி பக்க விளைவுகள் ஏற்பட்டு மறுபடியும் மருத்துவரை நாடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் இப்படியே தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து வந்தால் கடைசியாக அது கடுமையான ரீனல் டிஸ்ஆர்டர்களில் கொண்டு விடுகிறது. பெரும்பான்மையான லிவர் மற்றும் கிட்னி டேமேஜ்கள் ஏற்பட இப்படியான கவனக்குறைவே முதலும் முக்கியமுமான காரணமாகி விடுகிறது.

இவை தவிர லேசான காய்ச்சலுக்கும் கூட டெம்பரேச்சர் சோதித்துப் பார்க்காமல் டாக்டர்கள் கடுமையான காய்ச்சலுக்குப் பரிந்துரைத்த அதே அளவு பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வ தாலும் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படலாம். பெயின் கில்லர்கள் எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது கிட்னி ஆரோக்யமாக இருக்கிறதா எனத் தொடர்ந்து பரிசோதிக்கத் தவறக்கூடாது. ஏனெனில் இன்றைய நிலையில் சிறுநீரக பாதிப்பு என்று வரும் நோயாளிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேர்களுக்கு கடுமையான பாதிப்புகளுக்கு தொடர்ந்து பாராசிட்டமால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே காரணங்களாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,996
Location
Atlanta, U.S
#2
இது என்ன...?? நோயை குணமாக்கும் மாத்திரையில் கூட இவ்வளவு ஆபத்தா....?? anyway இனிமே கவனமா இருக்கலாம்... பயனுள்ள பதிவு glo... நன்றி
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,550
Likes
40,173
Location
france
#3
இது என்ன...?? நோயை குணமாக்கும் மாத்திரையில் கூட இவ்வளவு ஆபத்தா....?? anyway இனிமே கவனமா இருக்கலாம்... பயனுள்ள பதிவு glo... நன்றி
ஆமாம் ரேணு படிச்சதில் இருந்து பக்குன்னு இருக்கு நான் நிறைய எடுப்பேன்... இனி குறைச்சிக்கனும்...
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,996
Location
Atlanta, U.S
#4
ஆமாம் ரேணு படிச்சதில் இருந்து பக்குன்னு இருக்கு நான் நிறைய எடுப்பேன்... இனி குறைச்சிக்கனும்...

முதலில் அதை செய்.....
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#5
எந்த உடல் உபாதை வந்தாலும் நம் உடல் நம்மிடம் ஏதோ செய்தி சொல்கிறது என்று எடுத்துகொள்ள வேண்டும். காய்ச்சல் என்பது நம் உடல் உள்ளே புகுந்துள்ள கெட்ட கிருமிகளுடன் போராடும் போராட்டமே. அதற்க்கு தெரிந்த முதல் வழி, உடலின் வெப்பத்தை அதிகரிப்பதே. அதற்க்காக உடனே நாம் மருந்தை உட்கொள்ளாமல், அதற்க்கு முதலில் தேவையான ஓய்வை தர வேண்டும். முடிந்த அளவு அதற்க்கு துணை புரிய எளிதில் ஜீரணமாக கூடிய உணவு + சுடு தண்ணீர் குடித்து கொண்டிருக்க வேண்டும்.

அதே போல் நம்மிடம், வயிற்று வலி, அசதி, தலை வலி, சளி, இருமல்...... போன்ற ஏதோ ஒரு வழியில் உள்ளே ஏதோ பிரச்சனை என்று நமக்கு உணர்த்துகிறது. அதை நாம் உணராமல், உடனடியாக அந்த வழியை போக்க மருந்தை உட்கொண்டு அதன் வாயை மூடிவிடுகிறோம். ஒவ்வொரு முறையும் அதன் வாயை மூடிவிடுவதால் அது பொறுத்து பொறுத்து, ஒரு காலகட்டத்தில் ஒன்னும் சொல்லாமல் அமைதியாக இருந்து புற்று நோயாக மாறிவிடுகிறது.

இந்த அவசர யுகத்தில் எல்லாமே அவசரமாக சரியாக வேண்டும் என்று நினைப்பது தவறு. உடனடி நிவாரணிகளை தவிர்ப்பது நலம்.
 
umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#7

Sariya sonninga rathi.....ellame udane sari aaganum....nnu ninaththu naame vinaiyai vilai koduththu vagidurom...apparam kuththuthe..kudaiyuthe nna enna pandrathu....
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#9
Sariya sonninga rathi.....ellame udane sari aaganum....nnu ninaththu naame vinaiyai vilai koduththu vagidurom...apparam kuththuthe..kudaiyuthe nna enna pandrathu....
Yes we should understand that our body is capable of fixing itself, most of the time.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#10
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் . பகிர்வுக்கு நன்றி க்ளோரியா
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.