Exercise and Physical Fitness - உடலுக்கு உறுதி தரும் உடற்பயிற்சி

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
எனக்கு எதற்கு உடற்பயிற்சி, நான்தான் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை வேலை செய்து கொண்டே இருக்கிறேனே’ இதை நாம் பல முறை பிறர் கூறக் கேட்டிருப்போம். உங்கள் கேள்வியிலேயே பதிலும் அடங்கி இருக்கிறது. நீங்கள் செய்வது வேலை ஆனால் உங்களுக்கு தேவை உடற்பயிற்சி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இந்த உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமின்றி மனத்துக்கும் வலிமையை அளிக்கிறது.
பல நோய்களை உரிய காலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதால் முழுமையாக தடுத்துவிடலாம். சில நோய்களின் தீவிரத்தை குறைத்துவிடலாம். முக்கியமாக உடல் பருமனுடையவர்கள் எந்தவகை டயட் வழிமுறைகளை மேற்கொண்டாலும் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையைக் குறைக்க நினைப்பது சரியான ஆலோசனை அல்ல.
கடந்த இருபது ஆண்டுகளாக தினமும் அரை மணி நேரம் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் பலரைச் சந்தித்திருக்கிறேன். இந்த இருபது ஆண்டில் எடை கூடியதுதான் மிச்சம் என்று சலித்துக் கொள்வார்கள். ஏன் என்ற கேள்வி மனத்தில் எழுகிறதா. உடற்பயிற்சி உடலில் எண்டார்பின் என்ற ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டுவதால் ஆழந்த மனத்தளர்ச்சி ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் புத்துணர்ச்சி ஏற்பட்டு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்கிறது. இப்படி இருக்கும் பொருட்டு நடைப்பயிற்சியோ, வேறு பலவகை உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, ஏன் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிய மாற்றத்தை மக்கள் பார்ப்பதில்லை என்ற கேள்விக்கு நான் பரவலாக ஆராய்ந்து பதிலைக் கண்டுபிடித்தேன். எல்லா வகை உடற்பயிற்சியிலும் பயிற்சியை ஒரு வேலைப்பாடாக (activity) செய்கின்றோம். அதை விழிப்புணர்வோடு கூடி செய்யும் போதுதான் அதற்கான பலன் கிடைக்கிறது உதாரணமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது தொலைக்காட்சி, அல்லது செல்போனில் இசை என்று எதாவது பார்ப்பது. அல்லது கேட்பது என்று சுவாரசியமாக பொழுதைக் கழிக்கின்றோம். உடற்பயிற்சி செய்யும் போது மனம் வேறு விஷயத்தில் வைக்கும் போது உடற்பயிற்சிக்கான முழு பலன் கிடைக்காமல் போய்விட வாய்ப்பு உண்டு.
யோகாசனங்களின் மூலம் விழிப்புணர்வுடன் கூடிய உடற்பயிற்சி, மன அமைதி குறிப்பான உடலுறுப்புகளின் செயல்பாட்டுத் திறன் ஆகியவை அதிகரிக்கும். இதை நான் பல ஆராய்ச்சிகளின் மூலம் படித்து அறிந்த விஷயம் மட்டுமல்ல, அனுபவரீதியாக ஆராய்ந்து பயன் அடைந்த ஒரு சிறந்த உண்மை. ஆனால் யோகப் பயிற்சியை மட்டும் தானாகவோ இணையதளம் மூலமாகவோ, புத்தகம் படித்து அதில் இருக்கும் விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்று முயற்சித்தால் அது அபாயத்தில் முடியும். ஒரு நல்ல ஆசிரியரிடம் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சி செய்பவர்கள் கால்களுக்கு பாதுகாப்பான காலணிகளை அணிய வேண்டும். புதிதாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் முதலில் 10 நிமிடம் என்று வாரத்திற்உ மூன்று முறை உடற்பயிற்சியைத் துவங்கலாம். அதற்குப் பிறகு வாரத்திற்கு ஐந்து நிமிடம் என்று சேர்த்துக் கொண்டு நாற்பது நிமிடம் வரை நடக்கலாம். நீங்கள் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்ணாக இருந்தாலோ, நாற்பத்தி ஐந்து வயதைத்தாண்டிய ஆணாக இருந்தாலோ, இதுவரை எந்த வகை உடற்பயிற்சியும் மேற்கொள்ளாதவராக இருந்தால், ஒரு மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதற்கு காலை நேரம் உகந்த நேரம். சாப்பிட்ட பிறகு நான்கு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிட்ட பிறகு வாக்கிங் போகிறேன் என்று உடற்பயிற்சி மேற்கொள்வது, ஒரு தவறான பழக்கம். லேசாக நடந்து செல்வது தவறு இல்லை. உடற்பயிற்சி என்று கூறி வேகமான நடைப்பயிற்சியை மேற்கொண்டால் ஜீரணம் பாதிக்கப்படும்.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சி அல்லது வேறு உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேவைப்பட்டால் hypoglycemia ஏற்படாமல் தடுக்க ஏதாவது பழம் அல்லது நான்கு பாதாம் பருப்பு உட்கொண்டு உடற்பயிற்சி செய்வது நல்லது.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.