Exercise Benefits Children's Brain Function - குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள்
மு.ஸ்டாலின் நாகராஜன்
உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பெற்றோர்களின் ஒரே குறிக்கோள் தங்கள் குழந்தைகள் நல்ல உடல்நலத்தோடு வளர்ந்து, சிறப்பாகப் படித்து, சமுதாயத்தில் தலை நிமிர்ந்து, தலைசிறந்து கவுரவமாக வாழ வேண்டும் என்பதே!


நாடு வளர வேண்டும் என்றால் வீடு வளர வேண்டும்... வீடு வளர வேண்டும் என்றால் வீட்டில் உள்ள நம் குழந்தைகள் வளர வேண்டும். குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது... அனைத்து துறைகளிலும் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதற்காக எத்தனை லட்சங்களும் செலவு செய்ய பெற்றோர் தயாராக உள்ள காலம் இது.

2 பேர் கூட சேர்ந்து படி ஏற முடியாத, காற்று கூட புக முடியாத, இருண்ட அடுக்குமாடிகள் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக் கூடாது, குழந்தைகள் ஓடி விளையாட பரந்து விரிந்த திறந்தவெளி உள்ள, விசாலமான அறைகள் கொண்ட, மரம் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்த, பல விளையாட்டு வசதிகள் கொண்ட, விளையாட்டுப் பயிற்சியாளர்கள் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது மிகவும் அவசியம்.

குழந்தைகள் வளர்ந்து வேலைக்கான தேர்வுக்குச் செல்லும்போது, அவர்களின் கல்வித்தகுதியோடு, எல்லாவித திறமைகளுக்கும், நல்ல உடல்நலமும், சிறந்த உடல்வாகும் (All Round Development) கணக்கில் எடுக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டுகள், உடற்பயிற்சிக் கூடங்களில் சிறப்புப் பயிற்சியில் பங்கேற்று, கோடை விடுமுறையிலும் சிறந்த உடல் மற்றும் மனநிலையோடு வளர்வது நமது நாட்டின் வளர்ச்சியாகும். அனைவரும் உடற்பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, இந்திய அரசு,

‘நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு அவசியம்’ என்ற குறிக்கோளின் அடிப்படையில், 2001ல் தேசிய விளையாட்டுக் கொள்கை மூலம் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் உடற்பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற உறுதி எடுத்தது. பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளில் குழந்தைகளை ஆர்வத்தோடு கலந்து கொள்ள வைப்பதால் நல்ல உடல்நலம் ஏற்படுவதோடு, படிப்படியாக வளரும் பருவங்களில் பலவித நன்மைகளும் மறைமுகமாகக் கிடைக்கின்றன.

விளையாட்டு / உடற்பயிற்சியினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்...

*உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, மூட்டு சேரும் இடங்களில் உறுதி.

* அதிக ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வதால் பரந்து, விரிந்த ஆரோக்கியமான நுரையீரல்.

* வலிமையான இதயம்.

* சீரான ரத்த ஓட்டம்.

* நன்றாக பசி எடுத்து, ஒவ்வொரு வேளைக்கும் நன்றாக உணவு உட்கொள்ளுதல்

* உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், ஒன்றோடு ஒன்று இணைந்து சிறந்த செயல்பாடு.

* எல்லோரோடும் சேர்ந்து விளையாடுவதால் மனிதநேய உணர்வு ஏற்படுதல்.

* சாதி, மத பேதமில்லாமல் நல்ல நண்பர்கள் கிடைத்தல்.

* முன்னேற்றத்தின் காரணமாக நல்ல போட்டி மனப்பான்மை உண்டாகுதல்.

* மனம், உடல் இரண்டையும் விளையாட்டு/உடற்பயிற்சிகளில் செலுத்துவதால் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவது தவிர்க்கப்படுதல்.

* சாதனைகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணரச் செய்யும் வாய்ப்புகள்.

* சுத்தத்தோடு கூடிய ஒழுக்கம்.

* உறுதியான தன்னம்பிக்கை.

* அதிக சந்தோஷம்.

* புதுமையாக செய்து நல்ல பேரும் புகழும் வாங்க வேண்டும் என்ற உத்வேகம்.

* மிக முக்கியமாக நாட்டுப்பற்று ஏற்படுதல்.

உடற்பயிற்சியால் குழந்தைகளின் மூளைக்கு கிடைக்கும் 5 நன்மைகள்...


1. உடல் வளர்ச்சியோடு கூடிய நல்ல மன வளர்ச்சி காரணமாக பள்ளிப் பாடங்களை நன்றாக புரிந்துகொண்டு, மனதில் பதிய வைத்து நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.

2. எந்த முடிவு எடுக்கும்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். உடற்பயிற்சி/ விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகளின் மூளை, மற்ற குழந்தைகளைவிட 25% அதிகம் செயல்படுவதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளார்கள்.

3. உடற்பயிற்சி உறுதியான இதயத்தை, மூளையை சிறப்பாக செயல்பட தூண்டிக்கொண்டே (Regular release of key hormones of SEROTONIN, DOPAMINE and NOREPINEPHRINE) இருக்கிறது.

4. குழந்தைக்கு ஒரு வரப்பிரசாதமாக நினைவாற்றலை அளிக்கிறது.

5. மனவலிமை, நடை, உடல் அமைப்புகள் சிறப்புப் பெற்று, மூளை வளர்ச்சியும் தெளிவாக இருப்பதால், உடற்பயிற்சியில் ஈடுபடும் குழந்தைகள் எப்போதும் உலகின் உச்சியில் இருப்பதுபோல உணர்கின்றனர்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.