Eye Exercises - கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பய

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#1

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உட*ல் உறு*ப்*பி*ல் *மிக மு*க்*கியமானது க*ண். சாதாரணமாக நா*ம் பா*ர்**ப்பதா*ல் *க*ண்களு**க்கு எ*ந்த பா*தி*ப்பு*ம் ஏ*ற்படுவ*தி*ல்லை. ஆனா*ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை*த் தொட*ர்*ந்து பல ம*ணிநேர*ங்க*ள் பா*ர்*த்து*க் கொ*ண்டிரு*ப்பதா*ல் கண் பாதிக்கப்படுகிறது.

க*ண்களு*க்கு ஓ*ய்*வு எ*ன்றா*ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.

பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ*ய்வாக அமையு*ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அ*ப்படி செ*ய்யு*ம்போது உ*ள்ள*ங்கைகளை எடு*த்து*வி*ட்டு *சி*றிது நேர*ம் க*ழி*த்து மெதுவாக க*ண்களை*த் *திற*க்க வே*ண்டு*ம்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படிச் செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
 

Attachments

Joined
Sep 17, 2014
Messages
7
Likes
18
Location
USA
#2
Re: கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி&#299

Very informative and learnt new exercises for eyes.. This would also be applicable for mobile users....
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Re: கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி&#299

Hi Vaishnavi, wonderful information! Very essential and important facts you have brought out! Excellent post! thank you !
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#6
Re: Eye Exercises - கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் ப&#2

இரண்டாவது பத்தியில் ஒலிக்கு பதில் ஒளி என்று வரவேண்டும் இல்லையா?


குத்தம் சொல்றவன் எவண்டா டேய் ன்னு நீங்க அதிக ஒலியுடன் கத்திட்டு வரதுக்கு முன்னாடி நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)
 
Joined
Sep 14, 2012
Messages
42
Likes
52
Location
chennai
#7
Re: Eye Exercises - கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் ப&#2

Hi,

Really useful info :)
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#8
Re: Eye Exercises - கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் ப&#2

Useful information.Thank u.
 

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#9
Re: Eye Exercises - கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் ப&am

இரண்டாவது பத்தியில் ஒலிக்கு பதில் ஒளி என்று வரவேண்டும் இல்லையா?


குத்தம் சொல்றவன் எவண்டா டேய் ன்னு நீங்க அதிக ஒலியுடன் கத்திட்டு வரதுக்கு முன்னாடி நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)
neenga sonnadhu correct dhan...niraiya vishayangal padichu niraya share panradhaala mistakes paaka time illa...naan enaku save pannitu penmaikum share panniduvaen...porumaiya 2nd time padichu follow panradhu vazhakam...mistakes thiruthra porupu neenga ethundaalum sandhosham:humble:anyways thankyou...unga placela temperature evlo?
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#10
Re: Eye Exercises - கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் ப&#2

தப்பா நெனச்சுக்காதீங்க - தப்ப தப்பாம தப்புன்னு டப்புன்னு சொல்லிட்டா தப்பு தப்பா கூட வராதில்ல அதான் :)


34 டிகிரி இன்று - அதிகம் இல்லையே அப்புறம் இவனுக்கு எப்படி மூளை இளகிடிச்சுன்னு தோணுமே? :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.