Eyebrow Care for Women

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
perfect-eyebrow.jpg

சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும். இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். அல்லது சுத்தமான விளக்கெண்ணெய்யை தடவி வந்தாலும் புருவம் அடர்த்தியாக வளரும்.
 
Joined
May 7, 2012
Messages
7
Likes
1
Location
Bangalore
#2
Eyebrows are the most underappreciated feature of your face, but they have the power to dramatically improve your look and enhance your natural beauty if groomed properly. Pioneer of eyebrow design Eliza Petrescu gives us the lowdown on getting gorgeous brows.
 

vaishnav

Commander's of Penmai
Joined
Jan 21, 2012
Messages
1,819
Likes
2,148
Location
Thanjavur
#3
எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக,புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும்.

எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.

தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.

புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு.வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும்.

பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம். அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் திக்காக கன்னாபின்னாவென வளரும்.

புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காய வைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது அழகாக, இயற்கையாக இருக்கும்.

கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.