Face care with natural products - இயற்கையும்... இளமையும்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இயற்கையும்... இளமையும்!

ழகும், தோற்றப்பொலிவும் அனைவரையும் ஈர்க்கும் விஷயங்கள்! ஆனால் சிலர், 'அழகைப் பராமரிக்கிறேன்’ என்று கடைகளில் விற்கும் போலியான கிரீம்கள், ஸ்கிரப்களை வாங்கிப் பயன்படுத்தி, சருமத்தையும் உடலையும் கெடுத்துக்கொள்கின்றனர்.

''இயற்கைக்கு மாறான எந்தப் பொருட்களும், நிரந்தர அழகைத் தராது. காய்கறி, பழங்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும். என்றும் இளமையான அழகுடன் ஜொலிக்கலாம்'' என்கிறார் திருநெல்வேலி சித்த மருத்துவர் ரமேஷ்.


'நம் உடலில் வெப்பம் அதிகமாகும்போதுதான், உடல் அழகிலும் பிரச்னை ஏற்படுகிறது. கண்களுக்கு கீழ் கருவளையம், முகம் கருத்துப்போதல், தோலில் சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளி, மூக்கில் வெள்ளைப் புள்ளிகள் போன்றவை ஏற்படுகின்றன. செயற்கை அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தாமல், இயற்கையான முறையிலேயே இவற்றைப் போக்கலாம்' என்கிறார்.

முகச் சருமம்

ஆரஞ்சுப் பழத்தின் தோலைக் காயவைத்துப் பொடியாக்கவும். இந்தப் பொடியை, குளிர்ந்த நீருடன்


குழைத்து முகத்தில் பூசலாம். ஆரஞ்சுத் தோலில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் முகத்தில் சுருக்கம் நீங்கும்.

மாதுளம் பழ முத்துக்களைக் கையால் மசித்து, அந்த சாறை முகத்தில் பூசலாம். இது சருமத்துக்கு குளிர்ச்சியைத் தரும். பசும்பாலால் முகத்தைக் கழுவுவது, நல்ல பலன் தரும். கேரட் ஜுஸ் அருந்தினால், அதிலிருக்கும் வைட்டமின் மற்றும் அதிகப்படியான நுண்சத்துக்கள் முகத்தைப் பொலிவாக்கும். நிறத்தையும் கூட்டும்.

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணிப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். உடல் வெப்பம் குறையும். அதிகம் புரதச் சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது முக அழகைக் கூட்டும்.

வெள்ளை கருப்புப் புள்ளி

அதிகம் எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் மூக்கின் நுனியில் இந்தப் புள்ளிகள் வெளிப்படும். எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து மூக்கில் தேய்த்தால் வெள்ளைப் புள்ளிகள் மறையும். எலுமிச்சையில் வைட்டமின்-சி, ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால், அது நல்ல பலன் தரும். தக்காளியை அரைத்து, கரும்புள்ளி இருக்கும் இடத்தில் பூசி, கால் மணி நேரம் கழித்துக் கழுவினால் கரும்புள்ளி மறையும். ஆப்பிள், மாதுளை, வெள்ளரிக்காய், பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

உதடு வறட்சி

உதடுகள் காய்ந்துபோவதால் வெடித்து, வறண்டு நிறமும் மாறிவிடும். இதைத் தவிர்க்க பீட்ருட் சாறை உதட்டில் தேய்க்கலாம். கேரட் சாறு, எலுமிச்சைச் சாறும் உதட்டை சிவப்பாக மாற்றும்.

காய்ந்த திராட்சைப் பழத்தின் தோல் நீக்கி, உள்ளே இருக்கும் சதையுடன் தேன் கலந்து தடவுவது உதட்டுக்கு நல்ல பாதுகாப்பு.சருமப் பொலிவு

வாகனப் புகை மற்றும் வெயிலினால் சரும நோய்களும் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. தக்காளியில், உடலுக்கு அழகைக் கூட்டும் வைட்டமின், தோலுக்குப் பளபளப்பைத் தரும் பீட்டாகரோட்டின் அதிகம் உள்ளன. அதன் சாறை உடலில் தடவிக் குளிக்கலாம்.

பப்பாளிப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் சில நாட்களிலேயே சருமம் அழகாகத் தோற்றம் தரும். பழத்தைக் கூழாக்கி, இதனுடன் பால் சேர்த்து முகம், கைகளில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் மாசு மரு இல்லாமல் பொலிவுடன் இருக்கும். தினமும் இரண்டு நெல்லிக்காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையைத் தக்கவைக்கலாம்.

பருக்கள்

முகத்தில் அதிகம் அழுக்கு படிவதாலும் முகம் கழுவும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், எண்ணெய்ப் பொருட்களைச் சாப்பிடுபவர்களுக்கும் முகப்பரு அதிகம் வரும். தக்காளி, எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து பருக்களின் மேல் தடவலாம். அதீத எண்ணெயைப் போக்கும். மேலும் இதில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருப்பதால் பருக்களை நீக்கும். ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுவது பருக்கள் வராமல் பாதுகாக்க வழி.
 
Last edited:
Thread starter Similar threads Forum Replies Date
V Face Care 0
R Face Care 1
R Face Care 0
D Polling Booth 2
a_hat Face Care 6

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.