Facts about babies - பேபி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பேபி

ஃபேக்ட் +

*1980களில் இருந்து இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு 76 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

*‘டவுன் சிண்ட்ரோம்’ பாதிப்புள்ள குழந்தை கருவாக இருப்பதை அறியும் பெற்றோரில் 90 சதவிகிதத்தினர், அதைக் கலைத்து விடவே செய்கின்றனர்.

*குழந்தைகள் தங்கள் உடலை பிறர் உடலில் இருந்து வேறுபடுத்தி பார்க்கும் சுய அறிதலோடுதான் பிறக்கின்றன.

*சீனாவில் 30 வினாடிகளுக்கு ஒரு குழந்தை குறைபாட்டோடு பிறக்கிறது.

*1920களில், அமெரிக்காவில் ஜன்னலுக்கு வெளியே தொங்கும் குழந்தை கூண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

*8/8/8, 9/9/9, 10/10/10 ஆகிய மூன்று தினங்களிலும், ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் மிக்சிகனிலுள்ள ஒரு தாய்!

*5 ஆயிரத்தில் ஒரு குழந்தை மலத்திறப்புத் துளை இல்லாமல் பிறக்கின்றன.

*கணிக்கப்பட்ட நாளன்று சரியாகப் பிறக்கும் குழந்தைகள் 4 சதவிகிதம் மட்டுமே.

*மொத்த குளுக்கோஸ் அளவில் 50 சதவிகிதத்தை குழந்தையின் மூளையே பயன்படுத்தி விடுகிறது. அதனால்தான் குழந்தை அதிக நேரம் உறங்குகிறது.

*3 மனிதர்களின் டிஎன்ஏக்களை பயன்படுத்தி கரு உருவாக்க அனுமதித்த முதல் நாடு - இங்கிலாந்து.

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.