Family Fewd may affect the Embryo-குடும்ப வன்முறை கருவையும் பாதிக்க&#3

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]குடும்ப வன்முறை கருவையும் பாதிக்கும்[/h]குழந்தைகள் நுட்பமானவர்கள்... விஷயங்களை உடனடியாக கிரகித்துக்கொள்கிற புத்தியும், அதை நமக்கே செய்து காட்டும் திறனும் இயல்பாகவே அவர்களிடம் அதிகம் உண்டு. அதனால்தான், குழந்தைகள் முன்பு பெற்றோர் சண்டை யிட்டுக் கொள்வது போன்ற எதிர் மறை செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் ஒரு நுட்பமான காரணத்தை சமீபத்தில் தங்களது ஆய்வில் கண்டறிந்திருக்கிறது அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழகம்.

கர்ப்பிணிகள் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது என்பதை தங்களது ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். ‘‘குறிப்பாக, வாழ்க்கைத் துணைவரால் ஏற்படும் குடும்ப வன்முறைதான் பெண்களை இன்னும் கடுமையாக பாதிக்கிறது’’ என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான அலிசியா லெவன்டோஸ்கி. இவர், மெக்சிகன் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

18 முதல் 34 வயது வரை உள்ள 182 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. இவர்களில் குடும்ப வன்முறைக்கு ஆளான கர்ப்பிணிகளின் உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் அதிக அளவில் சுரப்பது தெரிய வந்தது. இது வயிற்றில் இருக்கும் குழந்தையின் கார்டிசோல் சுரப்பையும் அதிகமாக்கியிருப்பதைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

‘கருவிலேயே ஏற்படும் இந்த பாதிப்பின் எதிரொலியாக இரவைக் கண்டு பயப்படுவது, எளிதில் அதிர்ச்சிக்குள்ளாவது, வெளிச்சங்களையும் சத்தங்களையும் ஏற்றுக் கொள்ளாதது, பெற்றோர் தொடுவதைக் கூட தவிர்ப்பது, மிரட்சியாகவே இருப்பது போன்ற மோசமான அறிகுறிகள் பிறந்த ஒரு வருடத்திலேயே குழந்தைகளிடம் தெரிந்தன’ என்று வருத்தத்துடன் இந்த ஆய்வின் முடிவைப் பதிவு செய்திருக்கிறார்கள். Child Abuse - Neglect இதழில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் ஆசைப்படுவதை வாங்கிக் கொடுக்க வேண்டும், அவர்களின் மனம் கோணாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நம் ஊரில் பெரியவர்கள் சொல்வது இதற்குத்தானா?
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: Family Fewd may affect the Embryo-குடும்ப வன்முறை கருவையும் பாதிக்&#2965

Thanks for the caution.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.