Fasting Tips - விரதம்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
விரதமிருக்க முடிவு செய்கிறவர்கள், முதலில் மருத்துவரை கலந்தாலோசித்து, உடல்நலத்தை பரிசோதித்த பிறகு, எப்படி விரத மிருக்க வேண்டும் என்பதை தெரிந்து, விரதம் ஆரம்பிப்பதே சரியானது.

வாரத்துல ஆறு நாள் கண்டதையும் சாப்பிடுகிறோம். ஒரு நாள் சாப்பிடாம, ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் ஓய்வு கொடுக்கிறதால, விரதங்கிறது ரொம்ப நல்ல விஷயம். உடம்புல உள்ள கழிவுகள், நச்சுப் பொருட்கள் வெளியேற இது உதவும். ஹெச்.டி.எல் என்ற நல்ல கொலஸ்ட்ராலோட உற்பத்தி அதிகமாகும். ஆனாலும், யார் விரதம் இருக்கலாம், யாருக்கு அது கூடாதுன்னு சில வரைமுறைகள் இருக்கு. அதன்படி கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்போர், ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளோர் விரதம் இருக்கக் கூடாது.
விரதம் என்றால், காலையில்இருந்து ராத்திரி வரை ஒண்ணுமே சாப்பிடாம இருக்கிறதுன்னு அர்த்தமில்லை. ராத்திரி முழுக்க எதையுமே சாப்பிடாம இருக்கிற தால, காலையில் எனர்ஜி அளவு கம்மியா இருக்கும். காலையில் எதுவும் சாப்பிடாம விரதத்தை தொடங்கறப்ப, அந்த எனர்ஜி இன்னும் குறையும். ஏற்கனவே வேற ஏதாவது சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு,

இதனால், இன்னும் பிரச்னை அதிக மாகும். விரதமிருக்கிறதுன்னு முடிவு பண்றவங்க, காலை உணவை தவிர்க்கவே கூடாது.
காலைலயும், மதியமும் சாப்பிடாம இருக்கிறதால, ராத்திரி அதிகமா சாப்பிடுவோம் நம்மையும் அறியாமலேயே. எடையை குறைக்கணும்ன்னு விரதம் இருக் கிறவங்களுக்கு இது நேரெதிரா வேலை செய்து, உடல் எடையை கூட்டும். அதனால், உயரத்துக்கேற்ற எடை, ஆரோக்கியம், சரி விகித சாப்பாடு, உடற்பயிற்சி, யோகா செய்யறவங்க மட்டும் தான் விரதம் இருக்க தகுதியானவங்க.
விரதத்தை முடிக்கிற போது, நாள் முழுக்க பட்டினி இருந்ததுக்கெல்லாம் சேர்த்து, ஒரு பிடி பிடிக்கிறது தப்பு. முதல்ல கொஞ்சமா ஏதாவது உணவு, கொஞ்சம் ஜூஸ் எடுத்துக்கிட்டு,

அப்புறமா வழக்கம் போல சாப்பிடலாம். தினசரி பயன்படுத்துகிற, டூவீலரோ, காரோ மக்கர் செய்யாமல் தொடர்ந்து இயங்க, குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை சர்வீஸ் செய்கிறோம். உடலும் அதன் இயக்கமும் கூட அப்படித் தான். இயக்கத்தை சுத்தம் செய்து, ஓய்வு கொடுக்கிற அற்புதமான விஷயமே விரதம். மேற்சொன்ன தகவல்களை நினைவில் கொண்டு விரதம் தொடங்குவதும், தொடர்வதும் பாதுகாப்பானது!
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear Subhasreemurali, wonderful information you have shared about vratham. thank you
 

indiragandhi28

Citizen's of Penmai
Joined
Dec 31, 2011
Messages
598
Likes
711
Location
mumbai
#4
wonderful information you have shared about viratham.thank you sree.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#7
Very useful tips about viradham....thanks subha
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.