Fat Burning Foods - கொலஸ்ட்ராலை கரைக்கும் உணவு

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால்;.

கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் நிறைந்துள்ளன.



இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டு

1;பார்லி :

தானியங்களுள் பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் ;
, இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.


2;கத்திரிக்காய் :

கத்திரிக்காயில் , கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

3;மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம்.
மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

4;ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால்,
உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம்.

5; nuts:

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமா
க வைத்துக் கொள்ளுங்கள்.

6;டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது ; இருப்பினும்,
அந்த டீயில்
ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

7;வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை.
வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால்,
கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

8;ஓட்ஸ் :

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

9;முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை உட்கொள்வது நல்லது.

10;சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

11;;பசலைக் கீரை :

லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை சேர்த்து வந்தால், கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
12;;சோயா பொருட்கள் :

சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

13;பூண்டு :

அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் '.
இதில்
நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும்.
தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், பலன் நன்கு தெரியும்.


14;;வெண்டைக்காய் :

கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க , இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

15;ரெட் ஒயின் :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால்,;
உட்கொண்டால், இது
உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும்.
ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள.

16;;சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் ;
, இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.


17;;பீன்ஸ் :

பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

18;;மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் ;
மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

19;;மார்கரைன் :

இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம்

20;;அவகேடோ :

அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்

maalaimalar
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#4
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#6
கொழுப்பை கரைக்கும் உணவுகள் - Top foods that burn fat

கொழுப்பை குறைக்கும் 20 உணவுகள்

தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் உணவுகள்



இன்றைய மன அழுத்தம் நிறைந்த உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இப்பொழுதெல்லாம் ஓடி ஆடி வேலை செய்பவர்களை விட, ஏசியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. அதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாகாமல், அதில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றில் தங்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன.

அதுமட்டுமின்றி, இப்போது ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் நிறைய உணவுகள் வந்துள்ளன. இவை அனைத்தும், பசியின் உணர்வை அடிக்கடி தூண்டுபவை. ஆகவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இவ்வாறு தொப்பை இருப்பவர்களுக்கு, நோய்கள் மிகவும் விரைவில் தாக்கும். மேலும் சிலருக்கு அவர்களது உடலையே சுமந்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் அத்தகைய தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவைகளை டயட்டில் சேர்த்து, தொப்பையைக் குறையுங்களேன்..




1. ஓட்ஸ்

ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.




2. முட்டையின் வெள்ளைக்கரு.

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையின் வெள்ளைகருவை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.



3. ஆப்பிள்

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.



4. மிளகாய்


மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.



5. பூண்டு


பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.




6. பருப்பு வகைகள்

பருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.



7.
சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.




8. மீன்


மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.




9. நட்ஸ்


நட்ஸில் வால்நட், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் நட்ஸில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் நிறைந்துள்ளது. இவை தொப்பையை ஏற்படுத்தாது. எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.




10. தேன்

தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.




11. க்ரீன் டீ


க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.



12. பட்டை

பட்டையை உணவில் சேர்த்து வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.



13. பப்பளிமாசு (Grapefruit)

தினமும் உணவு சாப்பிடும் முன் பாதி பப்பளிமாசு பழத்தை சாப்பிட்டால், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை தவிர்க்கலாம்.



14. கேரட்


கேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.



15. நீர்

தினமும் குறைந்தது 2 லிட்டர் நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.



16. நவதானியங்கள்

நவதானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். எனவே உடல் எடையை குறைக்க நவதானியங்களால் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்.



17. அன்னாசிப்பழம்

ஸ்நாக்ஸ் நேரத்தில், அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.



18. கொழுப்பில்லாத பால் பொருட்கள்

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் கொழுப்பில்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.



19. இஞ்சி

இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.



20. மஞ்சள் தூள்

மஞ்சள் தூளும் உடல் எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் ஒன்றாகும்.

 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#7
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம் :-
+++++++++++++++++++++++++++++++++++++++++++

உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது

ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு மாறாக இவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கனடா, டொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு முடிவு குறித்து அவர் கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தவிர்க்குமாறு கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியம். இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை. முறையான அறிவுரையின்றி மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும் உண்டு. சமீபத்திய எங்கள் ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், டோஃபு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில் அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13 சதவீதம் குறைந்திருந்தது.

ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம் பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#8
[TABLE]
[TR]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD]'கொலஸ்ட்ரால்'(Cholesterol) என்றால் என்ன ?


கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுபோன்ற, கொழுப்பு போன்ற பொருள். மனித உயிர் அனுக்கள் (நீமீறீறீ) உட்பட எல்லா விலங்கு உயிர் அளுக்களிளும் இது இருக்கும். இது உடல் முழுதும், குறை அடர்த்தி லிபோபிரோட்டீன் (LDL)அதிக அடர்த்தி லிபோபிரோட்டீன்(HDL)எனப்படும் லிபோபுரோட்டின்கள் மூலம் எடுத்துக்சொல்லப்படுகிறது. லிஞிலி என்பது அடிக்கடி 'கெட்ட' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு உங்கல் இதய நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும். என்றும் குறிக்கப்படுகிறது. பிஞிலி என்பது வழக்கமாக, 'நல்ல' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு இதயநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் குளிக்கப்படுகிறது. (இரண்டு சொற்களும் இரத்த கொலாஸ்ட்ராலையே குறிக்கும். இவற்றை உணவுப்பொருட்களை நீங்கள் பார்க்க முடியாது) விரும்பத்தக்க (வீபீமீணீறீ) இரத்த கொலாஸ்டிராலின் அளவு 200 mgm/dl (5.17 mmol/l)கு குறைவானதாகும்.

ஏன் கொலாஸ்டிரன் முக்கியமானது ?

உங்கள் உடல், கொலாஸ்டிராலை கீழ்க்கன்டவற்றுக்குப் பயன்படுத்துகிறது:


  • வளர்ச்சிக்கும், உயிர் அனுத்தகளைப் பபழுதுபார்க்கவும்.
  • பித்தப்பை பித்தநிறைச் சுரக்கவும் அதன் வழி உணவுப் பொருட்களில் உள்ள கொழுப்பைச் செரிக்கவும்.
  • ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும்.

அளவுக்கதிகமான கொலஸ்டிரால் ஏன் தீங்கானது ?


அளவுக்கதிகமான கொலஸ்டிரால், மற்றும் பிற கொழுப்புகள் தமணிகளின் சுலற்றில் படிந்து அவற்றை கொட்டி படுத்துகின்றன. இதன் விறைவாக:

  • இதய நோய்களும், இதய தடையும் ஏற்படும்.
  • பக்கவாதம் - இதன் விளைவாக பலலீனமும், உடலின் ஒரு பக்கம் செயலிழந்து போகும்.
  • கால்களில் உள்ளதைப்போல பெரிய தமணிகளில் நோய்கள் ஏற்படும்.

உடல் எங்கிருந்து கொலாஸ்டிரலைப் பெறுகிறது ?


i. உங்கள் உணவிலிருக்கும் கொழுப்புப்பொருட்கள், டிரோட்டீன், சர்க்கரை பொருட்களிலிருந்து உங்கள் ஈரல் குலை (றீவீஸ்மீக்ஷீ) யும் பிற இழைமங்களும் உங்களுக்குத் தேவையான கொலாஸ்டிரலைத் தயாரிக்கின்றன.

ii. உணவுசார்ந்த கொலாஸ்டிராலை நீங்கள் விலங்கு அடிப்படையான உணவுப்பொருட்களிலிருந்து பெறுகிறீர்கள் தாவர உணவுகளில் அரிதாக கொலாஸ்டிரால் பெற்றிருக்கும்.கொலாஸ்டிரலை அளிக்கும்

உணவுவகைகள்



  • முட்டைக்கரு
  • ஈரல், மூளை, சிறுநீரகம், குடல், இதயம் முதலான விலங்கு உடற்பகுதிகள்
  • மாமிசம், கோழியுணவு, மீன், இறால், மற்றும் பிற கடல் உணவுகள்
  • அதிக கொழுப்புள்ள பால் உற்பத்திகள்

உங்கள் உணவில் கொழுப்பு


உணவில் பலவகை கொழுப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடல் உடல் நிலையில் வெவ்வேறு தாக்குதல்களை ஏற்படுத்து கின்றன:

1. செறிவான (saturated) கொழுப்பு

இவை பெரும்பாலும் விலங்குகளிலிருந்து பெறப் படுகின்றன. தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், தோக்கோ, வெண்ணெய் போன்ற காய்கறி கொழுப்புகளும் சிறந்த ஆதாரங்களாகும் இவை வழக்கமாக தீய கொலஸ்டிரல் மட்டத்தை (LDL) அதிகரிக்கும்.

2. பல் நிறை செறிவூட்ட மில்லாத (poly unsaturated) கொழுப்பு

இவை முக்கியமாக காய்களி ஆதாரமாக கிடைத்து, உடலின் மொத்த கொலாஸ்டிரல் மட்டத்தைக் குறைக்க உதவுகின்றன. கூல எண்ணெய் (corn-oil) சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் முதலியலை சில உதாரணங்களாகும். சார்டின்ஸ் (sardines) எனப்படும். பத்னச் இறு கடல் மீண்டும் கானங்கொளுத்தி (mackerel) எனும் மீன் போன்ற சில வகை மீன் களிலும் பல்நிறை செறியூட்ட மில்லாத கொழுப்பு அதிகம் உள்ளது.

3. ஒரே நிறை செறிவூட்டமில்லாத (monounscturcted) கொழுப்பு

ஆலிவ், பட்டாணி, என், மற்றும் கேனோலா (canola) எண்ணைய்களில் இது இரக்கும். இந்தக்கொழுப்புப்பொருட்கள் கொலாஸ்டிராலைக் குறைக்க உதவலாம். ஆய்வுகள், இவை நல்ல கொலாஸ்டிரால் அளவை அதிகரிக்கும் என்றும் காட்டுகின்றன.

உங்கள் இரத்த கொலஸ்டிரால் அழலைக் குறைத்தல்

உஙக்ள் உண்ணும் பழக்கத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கீழே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன:

1. உங்கள் எடையைக் கவனியுங்கள்


  • உங்கள் எடை கூடினால் குறையுங்கள்.
  • வாரத்தியுடு மூன்று முறையாவது, சீராக உடற்பயிற்சி செய்யுங்கள்.

2. குறைந்த கொழுப்புப்பொருட்களை (முக்கியமாக விலங்கு கொழுப்புகளை உண்ணுங்கள்


  • கொழுப்புப் பொருட்களை கொள்ளையக் குறையுங்கள் 1 ரிரீ கொழுப்பு / எண்ணைய் = 9 காலேரிகள்.
  • குறைந்த கொழுப்புள்ள பால் உற்பத்திகளைத் தேர்ந்தெடுங்கள். நிறைந்த கொழுப்புள்ள பால் உற்பத்திகளுக்கும் வெண்ணெய்க்கும் பதிலாக, செயற்கை வெண்ணொயைப் பயன்படுத்துங்கள்.
  • சாக்லேட்டுக்கள், ஐஸ்கிரீம்களை உண்ணுதலைக் குறைக்கவும்.

3. உங்கள் உட்கொள்ளும்காலோரிகளைப்பரிசீலியுங்கள்


  • கொழுப்பில்லாத இறைக்கிகளை மட்டும் உண்ணுங்கள். கோழி, வாத்து முதலியவற்றின் கொழுப்பையும், தோலையும் நீக்கிவிடுங்கள்.
  • சில முட்டைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். அவ்வப்போது, இறால், நண்டை உண்ணுங்கள். ஈரல் மற்றும் பிற விலக்கு அவயவங்களை உண்ணுவதைத்தலிகுங்கள்.
4. வாரத்திற்கு ஒரு முறை என்று பொரிக்கப்பட்ட (fried)உணவு என்று குறைத்துக் கொள்ளுங்கள்


  • உங்கள் உணவுப்பொருட்களை எண்ணொயில் பொரித்தலைக் காட்டிலும், அவித்தல், வேகலைத்தல், சுடுதல், நெடுப்பில் லாட்டுதல், வதக்கல் மைக்ரோலேலில் கடுதல், புழுக்கல் செய்யலாம்.
5. தேங்காய் பால் நிறைந்த உணவுப்பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ளுங்கள்.


  • உதாரணம் : நசிலெமக் (Nasilemak), லக்ஷ£ (laksa), லாண்டாங்க (lontong), லொடெ (lodeh), கூட்டு, காயா (kaya)

6. கீழ்க்கண்டவைற்றை அதிகமாக உண்ணுங்கள்


  • நாளுக்கு இரண்டு அல்லது அதற்கும் அதிகமான வேளைகளில் பழங்களையும், காய்களஇகளையும் பயன்படுத்துங்கள்.
  • தானியங்கள், புல்லரிசி (oats), கைக்குத்தல் அரிசி, ரொட்டி, பிஸ்கட்.
  • உலர்ந்த அவரை, பட்டாணி, மொச்சை, முழுகடலையை உபயோகியுங்கள். அவற்றுள் கரையும் நார் பொருட்கள் அதிகமாக உள்ளது. இவை குடலில் கொடுப்புப்பொருட்கள் கலக்குமாறு செய்து கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

7. அளவோடு கீழ்க்ண்டவைற்றை உண்ணுப்வன்


  • உப்பும், உப்பு உணவுப் பொருட்களும்.
  • மதுவகைகள், குடித்தே தீரவேண்டுமென்றால் நாளைக்கு ஒரிடு கோப்பையோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
  • சர்க்கைரை கலந்த உணவுப்பொருட்கள்

சில உணவுப்பொருட்களில் கொலஸ்ட்ரால் உள்ள அளவு



உங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் CGH டைடெக்டிஸ் மற்றும் கேடரிஸ் (dietetics & catering) தூறையோடு 6850 3333 எனும் தொலைபேசி என்னில் தொடர்பு கொள்ளுங்கள்.[/TD]
[/TR]
[/TABLE]
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#10
ஹாய் மைதிலி, அருமையான விளக்கங்கள் கொடுத்து இருக்கிறீங்க. தேங்க்ஸ்.
very very useful to me.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.