Fathers Day Contest 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1


After the huge success of Our Penmai's Birthday Contest, here's yet another opportunity to showcase your creativity. This time, you have to Write about your Father. Father's Day on June 21st, is the special day to honor Our fathers who have devoted to our lives with their strength, wisdom, and love. Yes friends, Your dad is awesome. Most of them are!! They mean so much to us that they deserve something more.. And what better way to show your love & gratitude than giving your dedication..?

Our Contest divides into 2 Parts..
Part I: My Father is _____ (Complete the Blank in a Word or Two/Three.. Not More than 3 Words)
(Optional) If you like to share why, tell us!

Part II - A dedication to your Father..
- Your Write up Could be a Poem
- Article/Snippets
- Art & Craft Work
- Or in Some other Creative Way..

You'd Choose any one of these Options & Participate...

Let the Imaginations Soar! We are excited to see your heart-warming and memorable responses.

Happy Father's Day to all Great Fathers..

Rules

  1. Give your Own Write Ups..
  2. One Entry Per Member is Allowed.
  3. Your Write up Should be in Tamil or English
  4. Last Date of Submission, 30th June 2015 11:59 PM IST
 

Attachments

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#2


After the huge success of Our Penmai's Birthday Contest, here's yet another opportunity to showcase your creativity. This time, you have to Write about your Father. Father's Day on June 21st, is the special day to honor Our fathers who have devoted to our lives with their strength, wisdom, and love. Yes friends, Your dad is awesome. Most of them are!! They mean so much to us that they deserve something more.. And what better way to show your love & gratitude than giving your dedication..?

Our Contest divides into 2 Parts..
Part I: My Father is _____ (Complete the Blank in a Word or Two/Three.. Not More than 3 Words)
(Optional) If you like to share why, tell us!

Part II - A dedication to your Father..
- Your Write up Could be a Poem
- Article/Snippets
- Art & Craft Work
- Or in Some other Creative Way..

You'd Choose any one of these Options & Participate...

Let the Imaginations Soar! We are excited to see your heart-warming and memorable responses.

Happy Father's Day to all Great Fathers..

Rules

  1. Give your Own Write Ups..
  2. One Entry Per Member is Allowed.
  3. Your Write up Should be in Tamil or English
  4. Last Date of Submission, 30th June 2015 11:59 PM IST
Hi Penmai,
Superb contest.
My contest line.
"My Father is my driving force"

I say this because he has always been a driving force in my life. Whatever I am today is because of him, his teachings, his ideologies, his support, his philosophy, his guidance, his love affection and moral support.
Though he isnt with me physically, I do know for sure he is always within me driving me to achieve.
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#3
அன்று தோளில் சுமந்து என்னை நடத்தினாய்
பின் இரு பாதங்களில் நடை பழக வைத்தாய்
முன்னே நடக்கவிட்டு பின்னே தாங்கினாய்
விழுமுன் ஏந்தினாய்
வீழ்ந்தவளை எழுப்பினாய்
எழும்பியவளை மேலெழச் செய்தாய்
உயரே உயரே பறக்க கற்றுத் தந்தாய்
சாதனைகள் பல புரிய ஏணியானாய்
மேலேரியவளை கண்டு பெருமிதம் கொண்டாய்
என்றும் எப்போதும் எங்கும் தாங்கிட காத்திருந்தாய்
இனி சமாளிப்பேன் என்றா விட்டுச் சென்றாய்
என்றும் என்னுள்ளே வாழ பூவுலகை துறந்தாய்
இன்றும் என்னுள்ளில் வாழ்ந்து என்னை ஏற்றம் புரிய வைக்கிறாய்
உன் மகளாகப் பிறக்க புண்ணியம் என்ன செய்தேனோ... தந்தையே
 

femila

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 11, 2012
Messages
3,767
Likes
13,438
Location
Miracle World
#4


My Father is the Splendiferous Angel





தந்தை!
என்றதும் மனதில்
எழும் புனிதமான அன்பு!!


உனது கரத்தில்தான்!
நான் பாதுக்காப்பாய் இருப்பேன்
என்று கடவுள் நிர்ணயித்தானோ!


பிறந்ததும் என்னைக்கண்டு
நீ சிந்திய புன்னகை
இன்னும் உறையவில்லை
உனது முகத்தில்!!


நான் தத்தி தவழ்ந்து!
நடை துவங்கிய நாள் முதல்,
இன்றும் குறையவில்லை
உனது வழிநடத்துதல்!


எனது ஆசைகள்,
எளிதாயினும் வலிதாயினும்,
அதை பெற்றால்
சிரிப்பில் தவழும்
எனது முகத்திற்காய்,
உனது முகத்தில் பொய்மையின்
சிரிப்பைத் தரித்துக்கொண்டு
மனதில் வேதனையுடனும்
உடலில் வலியுடனும்
நீ சிந்தும் வியர்வைத் துளிகள்
ஒவ்வொன்றும் ரத்தினதிலும் பெரிது!


இதுதான் உனக்குச் சிறந்தது என்று
நீ எனக்கு அளித்த
அனைத்தும்
இவ்வுலகத்தில் இருக்கும்
எல்லாவற்றிலும் சிறந்தது!


குழம்பிய குட்டையாய்
நான் தவிக்கும்போது
உனது தெளிவான சிந்தனையால்
தேற்றினாய்!!!


சாப்பிட மறந்துத் தூங்கினாலும்,
இரவில் அயர்வில் வந்தாலும்
எனக்கு தூக்கத்திலேயே
உணவூட்டினாய்!!


நான் கோபப்பட்டாலும்,
சுடுசொற்களால் வதைத்தாலும்,
உனது வார்த்தையை மீறி
நடந்தாலும்!
எனது உயரத்திற்கு
உன்னைத் தாழ்த்தி
நண்பனாய் மாறி
தோளில் தட்டிக்கொடுத்து
உனது எண்ணங்களை
எனக்காய் விட்டுக்கொடுத்தாய்!!


நீ அளிக்கும் அரிதான முத்தத்திலும்,
எனக்காய் நீ சிந்தும் கண்ணீரிலும்
தெரியும்
என் மீது நீ கொண்டிருக்கும்
பிரியம்!


உனது கைப்பிடித்து
உன் ஆசீர்வாதத்தோடு,
உனது தெளிவான
அன்போடு
உன் கனிவான அரவணைப்போடு
நான் செய்த ஒவ்வொரு செயலிலும்
வெற்றியே!


வாழ்வில் சிறந்ததை
மட்டுமே எனக்கு அளித்த நீ,
உனக்காகக் கொண்டது,
கறைபடிந்த ஆடைகளும்,
ஓட்டை விழுந்த செருப்பும்
ஆசைகளை துறந்த எளிமை வாழ்க்கையும்!


எளிமையின் உருவாய்
நற்பண்பின் சிறப்பாய்
கடமையின் கடவுளாய்
அன்பிற் சிறந்த தோழனாய்
தியாகத்தின் செம்மலாய்
என் வாழ்வில்
வந்த நீ
என்றுமே மிகச்சிறந்த தேவதை!!


அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா!!
[h=3][/h]
 

Attachments

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#5
ஹாய் நண்பர்களே களத்தில் குதிக்க வந்துட்டேன் .. சுமி அக்கா இது தான் என்னோட article இந்த contest க்கு ...

தாயின் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வரிகளுக்கு ஏற்ப என் தந்தையின் சொல்லிற்கு மந்திரம் போல் அதை கடை பிடிக்கிறேன் .

என் தந்தை எனக்கு கற்றுக் கொடுத்தது நிறைய அதில் ஒன்று நான் இப்பொழுது வரைக்கும் கடை பிடித்து வருகிறேன் . அது எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் , என்று கூறியுள்ளார் .

தர்மம் தலை காக்கும் என்று அந்த பொன் மொழிகளுக்கு ஏற்ப அவரின் செயல்கள் இருக்கும் .

என் தந்தை படித்து மருத்துவம் , அவர் அப்பொழுது கிளினிக் வைத்து இருந்தார் நண்பர்களுடன் இணைந்து . அதன் பின் அவர் தாயின் சொல்லிற்கு ஏற்ப தன் தந்தையின் தொழிலை முன்னேற்றிக் கொண்டு வந்து அதை தன் சகோதரர்களுக்கு கொடுத்து விட்டு மீண்டும் இப்பொழுது ஒரு கிராமத்தில் கிளினிக் வைத்து அங்கு உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறார் .

இன்று அவரை பின் பற்றி என் தம்பி மருத்துவம் படித்து வருகிறான் , என் தந்தையின் பிரதிபலிப்பை அவனிடம் நான் காண்கிறேன் ..

என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம் நிறைய , அது யார் மனதையும் புண் படுத்த கூடாது , யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பது .

அது போல் இன்று வரை அவர் யார் மனதையும் புண் படுத்தாது அமைதியாக இருக்கிறார் ..

எல்லா பெண் குழந்தைகளுக்கும் என் தந்தையை பிடிக்கிறது கேட்பதை வாங்கிக் கொடுபதால் என்றா , அதுவும் ஒரு காரணமே தவிர , அதை தவிர்த்து வேறு காரணம் என்றால் தாய் தன்னை ஒரு கூட்டில் பொத்தி வளர்த்தால் , தந்தை அந்த பெண் குழந்தையை விட்டு சிறகடிக்க தன் சொல்லை மந்திரம் போல் செயல் பட வைக்கிறார் .

இன்று ஒரு பெண் தைரியமாக நின்று எதிர்த்து போராடினாள் என்றால் அது அவள் தந்தையின் அரவணைப்பும் அவர் சொல்லின் மந்திரமும் தான் .

என் பொண்னை பெரிய இடத்தில கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் , அவ எந்த குறையும் இல்லாம இருக்கணும் என்று பார்த்து செய்வது தாயை விட தந்தை தான் ..

என் தந்தை எனக்கு சிறந்த கல்வியை மட்டும் கொடுக்காமல் , எனக்கான சிறந்த துணையையும் தேர்ந்தெடுத்து கொடுத்து என்னை இன்று மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளார் .

என் தந்தையை நான் தலை வணகுகிறேன் ..
I LOVE MY DAD AND HE IS THE BEST ..
LOVE U DAD ..
HAPPY FATHERS DAY ...
I AM PROUD OF MY DADDY ...
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#6
My father is lovable person to me
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#7
Part I: Contest

My Father is My Real Hero :thumbsup:thumbsup:thumbsup:thumbsup
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#8
Hi Friends, come and wish me luck, yeah dearies I'm also ready to participate in this senti contest!!!!:):):):)

My Father is Indefinable Love Universe

தமிழில் சொன்னால் தான் எனக்கு திருப்தி என்பதால் சொல்லி விடுகிறேன்.

என் அப்பா வரையரைக்கடங்கா அன்பு பிரபஞ்சம்
:love::love::love:



ஓம் என்பது சக்தி வாய்ந்த இரண்டெழுத்து பிராணவ மந்திரம்
அப்பா என்பது சக்தி நல்கும் மூன்றெழுத்து பிராண மந்திரம்
என் போன்ற ஆசை மகள்களுக்கு

அப்பா - அரிச்சுவடி முதல் ஆன்மிகம் வரையான
என் அனைத்து தேடலுக்கும் மூலமான
முதல் ஆசான்.
என் பிஞ்சு இதய நிலத்தில் கனவு விதைகள் தூவி
நம்பிக்கை நீர் வார்த்து இலட்சிய பயிர் வளர்த்த
தொலைநோக்கு சிந்தையுடைய நவீன விவசாயி
எனது ஆயுட்கால தவமும் யோகங்களும்
என் அருட்தந்தையின் பெருமித புன்னகையோடான
எழில் வதனத்தின் தரிசனத்துக்கே.

அன்றொரு நாள் அழகு தேவதை கனாவில் தோன்றி
வேண்டும் வரம் கேள் என்றாள்
எந்தையின் பொன்விரலோடு என் பூவிரல் கோர்த்து
நடை பழகி நகர்ந்த வசந்த நாட்களும்
அவர் தோல் மீது கண்ணயர்ந்த காவிய பொழுதுகளுமே
யாம் வேண்டிய வரங்களாம்.

“தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்ற
அடியொற்றி நடக்கும் தகப்பன்சாமி பிள்ளையல்ல நான்
அவ்வப்போது கருத்து முரண்கள் முளைவிடும் போது
உண்ணாநோன்பு, மௌன விரதம், சத்தியாகிரகம் என
ஒத்துழையாமை போராட்டம் நடத்தி போர்க்கொடி உயர்த்தி
இம்சை செய்யும் அஹிம்சை அகராதியும் நானே தான்.

கோபம், வெறுப்பு, பாசம், பயம், பணிவு, மரியாதை, வருத்தம்,
என உணர்வுகளின் வானவில்லாய் நான் இருந்தாலும்
எப்பொழுதும் என் தந்தை அன்பை பொழியும்
வெண்ணிற வெள்ளி மழைமேகம் தானெனக்கு .
ஆதலால் தான்
“அப்பா என்ற அமுத பதம்" செவியுறும்
ஆனந்த தருணங்களில் அறியாமல் தன்னியல்பில்
விழிகளில் ஒளிரும் வைரத்துளிகளுக்கு
அர்த்தம் அறிய முயன்று தோற்கிறதோ எந்தன் மூளை ?
ஆம், இப்போது நுகர்கிறது என் இதயம்,
“அறியாமை ஆனந்தமே” என்ற அயல் தேசத்து கவியின்
அற்புத வாசகத்தின் வாசத்தை!!!!

உள்ளத்தின் காயம் தொட்டு என் காயத்தின் காயம் வரை
என் அனைத்து துயர்களுக்கும் நான் கரைந்து துடிக்கும் போது
அன்பெனும் அஞ்சனம் பூசி என் வலிகள் போக்கி நலன் காக்கும்
உமக்கு நான் பட்ட கடன் என்ன என் அன்பு தந்தையே ?
“கடன் பட்டார் நெஞ்சம் கலங்கும்மென்றான்” கவி சக்கரவர்த்தி
எந்தைக்கு நான் பட்ட அன்பு கடனில்
என் நெஞ்சம் களிப்பதன் மாயமென்னவோ நான் அறியேன்
எம்பெருமான் அன்பே சிவமான முக்கண்ணனிடம்
எனது ஒற்றை வேண்டுதல்,
இந்த ஆசை மகள் அன்பு தந்தையின்
அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிய பின்
தன் பிறவி கடன் தீர்த்து உமது கமல திருவடி சேர
கரம் உயர்த்தி அருள் புரிவீர்களாக கருணை ஈசனே.


இப்பதிவின் பிரதியொரு வார்த்தையும் இந்த அவனியின்
ஒவ்வொரு அன்பு அப்பாவுக்கும் சமர்ப்பணம்....
 
Last edited:

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#9
Hi Hi here goes my entry!


I

My father is my biggest critic

தமிழில் சொல்வதானால் என் மிக நேர்மையான விமர்சகர் அப்பாதான்! முகஸ்துதி அவருக்கு தெரியாது!

2

அப்பா

நான் தோற்றத்திலும் குணத்திலுமாய் உங்களை கொண்டிருப்பதே என் அம்மாவுக்கு என்னை நிறைய பிடிப்பதற்கும் கொஞ்சம் வெறுப்பதட்கும் காரணமாய் இருக்கிறது. அம்மா ஜாடையாய் என்னை திட்டுவது போல உங்களை திட்டுவது புரிந்தும் புரியாமல் நடிப்பதில் என் குழந்தை வயதிலிருந்து நாமிருவருமே ஒரு கூட்டுக்கள்வர்களே! பெண்குழந்தைகளுக்கும் அப்பாக்களுக்கும் பொதுவாகவே ஒரு அழகிய பந்தம் இருக்கும், அதிலும் உங்களைப்போலவே நான் இருக்கிறேன் என்று பிறர் சொல்லக்கேட்கும் போது உங்கள் முகத்திலோடும் வெட்கம் கலந்த பெருமிதம் அவ்வளவு அழகு. இது என்னை அறியாமலே நான் உங்களுக்கு கொடுத்த முதல் சந்தோஷம்!


கண்டிப்புப்பக்கத்தை அம்மா பார்த்துக்கொள்ள பாசத்தையும் நட்பையும் அறிவையும் அள்ளித்தந்தீர்கள். என் ஆங்கில ஆசான்! எனது வெற்றிகளுக்கும் பரிசுகளுக்கும் பெருமிதச்சிரிப்போடு நீங்கள் தரும் குட்டிப்பரிசே எனக்கு அதிக மகிழ்வைத்தருவது! என் எல்லா முயற்சிகளுக்கும் சரியோ தவறோவென்ற உண்மை பிரதிபலிப்பு உங்களிடம் இருந்து தான் வரும்! நீங்கள் நன்றாயிருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டால் அதை கடவுள் வந்து நன்றாயில்லை என்று சொன்னாலும் நான் கவலைப்படுவதில்லை. குருவாய் மட்டுமா நீங்கள் நின்றீர்கள்? என் நண்பிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதில் முதல் நபர் நீங்களல்லவா? நாமிருவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்ட ரகசிய நகைச்சுவைகள் தான் எத்தனை! என் நண்பிகளும் உங்களோடு பேசுவதை விரும்புவது எனக்குத்தான் எவ்வளவு பெருமை! என் அம்மா மிகவும் அழுத்தம், உணர்வுகளை காண்பித்துக்கொள்ளவே மாட்டார். நாமிருவரும் அப்படியே நேர்மாறு இல்லையாப்பா? சட்டென கலங்கும் கண்களும் உடைந்து விடும் குரலையும் மறைக்க இருவருமே பரஸ்பரம் போராடிக்கொள்வோம். என்ன கலக்கம் வந்தாலும் உங்களை ஒண்டிக்கொண்டு கடந்து விடும் நாட்களை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.

உங்கள் கையெழுத்து அவ்வளவு பிடிக்கும் எனக்கு! ஆங்கிலத்தில் தொடுத்து எழுதும் உங்கள் ஸ்டைலை அப்படியே காப்பி அடித்து உங்களைப்போலவே நானும் எழுதி வைத்துகொள்வதில் எனக்கொரு தனி மகிழ்ச்சி! உங்களுக்கும் அம்மாவுக்கும் இடையில் இழையோடும் காதல் தான் எந்த காதல்காவியங்களையும் விட உயிரோட்டமானது எனக்கு! என் கன்னி வயதில் ரகசிய மணாளனோடு கனவில் டூயட் பாடும் போது அந்த முகம் தெரியா மணாளன் கூட நீங்கள் அம்மாவிடம் பேசும் வசனங்களையே காப்பி அடிப்பதுண்டு!

நான் ஒரு எழுத்தாளரென முதலடி எடுத்து வைத்த போது நாவல்கள் படிக்கும் பொறுமையே இன்றிய நீங்கள் எனக்காக அதை பொறுமையாய் ஒருமாதம் படித்தீர்கள்! இதற்கெனவே திருமணமானபின்பும் உங்கள் பெயரை என் பெயரின் பின்னிட்டு என் புத்தகம் ஒன்றை பதிப்பித்து தந்தேன்! உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி! நீங்கள் படித்தும் திருப்தியின்றி வரலாற்று நாவல்களில் சிறப்புப்பெற்ற ஒருவரிடம் கொடுத்து படிக்க வைத்து பாகத்துக்கு பாகம் கருத்துக்களை வாங்கி சிவப்பு மையிலெழுதி அனுப்பி வைத்தீர்கள்! என்னை புகழ்ந்து வந்த ஆயிரம் கருத்துக்களில் சரிக்கு சமமாய் என் தலையில் குட்டிய அந்த கருத்துக்களை பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன் நான்!

இசைக்காதலர்கள் நாமிருவரும்! அதிலும் குன்னக்குடியை கேட்டுக்கொண்டு காரோட்டி விபத்தை சந்தித்தவர் நீங்கள்! கர்நாடக சங்கீத காதலர் உங்களுக்கு நான் வாங்கிக்கொடுக்கும் இசைப்பேழைகளை காது வழி நீங்கள் சுவைக்க எப்போதும் அமைதியை விரும்பும் அம்மா கடுப்பாகி எனக்கு போன் செய்ய நடக்கும் குட்டிக்குட்டி சண்டைகள் அவ்வப்போது நான் விரும்பி ரசிப்பன! படிக்கும் நாட்களில் நாமிருவரும் சேர்ந்து இசை கேட்கும் பொழுதுகள் இன்றும் எனக்கு பொக்கிஷமே! நான் வீடு வரும் நாட்களில் பொன்னான அந்த பொழுதுகளுக்கான எதிர்பார்ப்பு இப்போதும் என் மனதில்!

எனக்குத்தெரிந்து நான் உங்களுக்கு தர முடியாதது இரண்டே இரண்டு! நீங்கள் விஞ்ஞானம் கற்றவர், வாழ்க்கையோ உங்களை வியாபாரத்தில் தள்ளி அதில் முதல்வராய் அழகு பார்த்தது. உங்கள் புகழ் கல்வியால் வரவில்லை என்பதுதான் உங்களுக்கு எவ்வளவு மனக்குறை? எங்களை கல்வியின் பால் வழிகாட்டினீர்கள். நான் மருத்துவராகவேண்டும் என்பது உங்களுக்கு அவ்வளவு ஆசை . ஆனால் சகலத்திலும் உங்களை ஒத்திருந்த நான் அதை வெறுத்தேன். உங்கள் ஆசை நடக்காததையிட்டு கொஞ்சமும் வருத்தம் காண்பித்துக்கொள்ளவில்லையே நீங்கள்! அடுத்து என்னை நிர்வாக அலுவலர் ஆக்க ஆசைப்பட்டீர்கள்! நானோ மக்களோடு வாழ ஆசை கொண்டேன். ஆக அதுவும் நடக்கவில்லை. உங்கள் மனதில் என்னால் நிறைவேற்றி வைக்க முடியாத ஆசை ஒன்று உள்ளதெனில் அது இதுவாகத்தான் இருக்கும்! என்ன செய்ய? சாதனை என்பது உங்கள் ரத்தத்தில் இருந்தது, எனக்கோ அதில் ஆத்ம திருப்தி தான் இருக்கிறது! என்னை மன்னித்து விடுங்கள்! காலம் உங்களுக்கு கொடுத்த அறிவைப்போல் எனக்கும் வந்து ஒருவேளை இனிமேல் கூட நான் ஒரு அரச நிர்வாக அதிகாரி ஆகக்கூடும். யார் அறிவார்!

இன்னுமொரு விடயம் சொல்ல வேண்டும்! என் கணவரை நீங்கள் கைகாட்டிய போது என்னை பட்டென்று சம்மதிக்க வைத்தது ஒரே ஒரு விடயம் தான். அவரும் உங்களுடைய அதே ராசி நட்சத்திரம் என்பதுதான் அது! போன மாதம் நீங்கள் என் வீட்டுக்கு வந்திருந்தீர்கள் முதன்முதலாய்! உங்களுக்காய் என் வீட்டை தயார் செய்ய நான் நினைக்க எனக்கு முன்னே மொப்பரும் கையுமாய் உங்களுக்கென அறையை ஒரு தூசு கூட இன்றி ஏற்கனவே தயார் செய்ய ஆரம்பித்திருந்தார் என் கணவர்! என்னைப்போலவே என் கணவரிடமும் உங்களுக்கான அன்பைக்கண்டதும் நெஞ்செல்லாம் ஆனந்தப்படபடப்போடு இறைவனுக்கு நன்றி சொன்னேன். நானில்லாத பொழுதுகளில் கூட என் கணவர் உங்களைபார்த்துகொள்வார் என்ற உறுதிக்கு மேல் ஒரு மகளுக்கு என்ன வேண்டும்?

இறுதியாய்...

திருமணத்துக்காய் சர்ச்சில் மணப்பெண்ணாய் ஏசைலின் நடுவே உங்கள் கைபிடித்து நடந்தேனே? அப்போது பட படவென்று நடுங்கிய என் கரங்களுக்கீடாய் அதே பதற்றத்தையும் நடுக்கத்தையும் உங்கள் கரங்களிலும் முகத்திலும் கண்டபோது... ஓ அப்பா உங்களை நான் உயிராய் நேசிக்கிறேன்! என் வாழ்வில் வரக்கூடிய எந்த ஆண்மகனும் உங்கள் பின்னிருக்கும் வரிசையிலே நின்று தான் வரவேண்டும் என்பது அப்போது தான் புரிந்தது!

I Love you Appa..

அன்பு முத்தங்களுடன்
உங்கள் மகள்


(இதுவரை அவருக்கு இதையெல்லாம் நான் சொன்னதில்லை. இதையும் என்னால் அவருக்கு தர முடியுமா என்று தெரியவில்லை!)

 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#10
My father is a God's Gift.


கண்டிப்பும் கனிவும் தந்து
புகட்டினீர் பாடங்கள் எமக்கு...

ஒழுக்கத்துடன் நேர்வழியில் வாழ்ந்து
காட்டினீர் வாழ நல்வழி எமக்கு...

கல்விதனில் வெற்றி பெற்றிடவே
தந்தீர் சிறந்த ஊக்கமதை எமக்கு...

தொழில் வாய்ப்பினை பெற்றிடவே
வழங்கினீர் தக்க ஆலோசனை எமக்கு...

அதிக நேரம் உழைப்பிலும் மிகுதி நேரம் வழிநடத்தலிலும்
வாழ்ந்தீர் தந்தையே தன்னலமின்றி எமக்காகவே...

மனம்போல் மாங்கல்யம் பெற்றிட
சமைத்தீர் வழி எமக்கு...

நல்லாசிகள் ஆலோசனைகள்
இன்றும்
வழங்குகின்றீர் நீர் எமக்கு...

பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் பார்த்தாலும்
சிந்திக்கின்றீர் எம்மை சிறு பிள்ளைகளாக...

சரியான பாதையில் வாழ்க்கைப்படகு சீராகச் செல்வதற்கு
வாழ்கின்றீர் கலங்கரைவிளக்கமாக எம் குடும்பத்திற்காக...

எம் அன்புத் தந்தையே நீர்
கடவுள் தந்த பரிசு எமக்கு...

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.