Few Parenting tips

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ரிங்கா... ரிங்கா... ரிலாக்ஸ்!

‘நேரமாச்சு எழுந்திரு’, ‘பிரஷ் பண்ணு’, ‘சீக்கிரம் குளி’, ‘யூனிஃபார்ம் போட்டாச்சா?’, ‘மிச்சம் வைக்காம சாப்பிடு’, ‘ஸ்கூல் வேன் வந்துடுச்சு... பை’, ‘ஹோம்வொர்க் பண்ணு!’

- குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெரும்பாலும் காலையும் மாலையும் இப்படித்தான் பரபரப்பாக இருக்கும்.

‘‘குழந்தைகள் உலகம் அழகானது. அதை இயற்கையிலிருந்து புறந்தள்ளிவிட்டு செயற்கையாக அவர்களை இயந்திர மாக்கிக் கொண்டிருக்கிறோம்!’’ என்று வருத்தத்துக்குரிய உண்மையைச் சொல் லும் எழுத்தாளர், சமூகப் பணியாளர் ஞானசூரிய பகவான், குழந்தைகளுக்கான ரிலாக்ஸ் நேரத்தை எப்படி உருவாக்கித் தரலாம் என்று பேசுகிறார்...`நடமாடும் கூகுள்’... நம் வீட்டுப் பெரியவர்கள்!

‘‘இந்தத் தலைமுறை குழந்தைகளின் உலகம் ஐபாடிலும் ஆண்ட்ராய்டிலும் தான் கழிகிறது. கூட்டுக் குடும்பங்கள் தொலைந்து போனதால், நம் முந்தைய தலைமுறையைப் பற்றியும், பாரம் பர்யத்தைப் பற்றியும் சொல்லித்தர தாத்தாக்களும் பாட்டிகளும் இப்போது அரிதாகவே குழந்தைகளுக்குக் கிடைக் கிறார்கள். ஆண்ட்ராய்டில் பார்க்கும் உலகத்தைவிட, நம் குழந்தைகள் தாத்தா வின் தோள்களில் உட்கார்ந்து எட்டிப் பார்க்கும் உலகம் அழகாக இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால், வீட்டுப் பெரியவர்கள் ஒவ்வொருவருமே `நட மாடும் கூகுள்’ எனலாம். சின்னச் சின்ன அடிப்படையான விஷயங்களைக்கூட இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக் குச் சொல்லித் தருவதில்லை. குழந்தை களுக்கு முதலில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்துச் சொல்லித் தருவது மிகவும் அவசியம்.

பூ மலரும் அனுபவத்தை பரிசளியுங்கள்!
அறிவியலையும் சூழலியலையும் பற்றி நம் குழந்தைகள் பாடங்களில் படிக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் பலருக்கு கடல், மலை என்பதும், பூ காயாவதும், கனியாவதும், விதையாவதும் பாடமாக மட்டும் தெரியுமே தவிர, இயற்கையின் அந்த வித்தையை அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆறு, மலை, காடு, கடல் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு இயற்கையை சொல்லித்தரலாம்.

விளையாட்டாக குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுத்தரலாம். அருகம்புல், சோற்றுக்கற்றாழை, ஆடாதோடா, கற்பூரவள்ளி, கீழாநெல்லி என மூலிகைகளை வீட்டில் வளர்க்கச் சொல்லித் தரலாம். உங்கள் குழந்தைகள் பின்னாளில் என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும், படிப்புக்கேற்ற வேலைக்குப் போகட்டும். ஆனால், அவர்களுக்கு அடிப்படை விவசாயம் தெரிந்திருக்க வேண்டும். ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்’ என்று நம் சிறு வயதுகளில் விளையாடியிருப்போம். அந்தப் பூ மலரும் அனுபவத்தை அவர்களுக்குப் பரிசளிக்க, வீட்டில் செடி வைத்து, அவர்களை தண்ணீர் ஊற்றச் செய்யுங்கள்.

விடுமுறையைத் தின்னும் சம்மர் வகுப்புகள்!


குழந்தைகளுக்கு கோடையில் விடுமுறை விடுவதே அவர்களுக்கான ஓய்வையும் புத்துணர்வையும் கொடுப்பதற்குதான். இந்த நாட்களிலும்கூட அவர்களை சம்மர் கிளாஸ் என்கிற பெயரில் வாட்டுவது கொடுமை! இன்றைக்கு நடத்தப்படும் சம்மர் கிளாஸ்கள் பெரும்பாலும் வியாபார நோக்கில் நடத்தப்படுபவையே. பெற்றோர்கள் அவர்களை அங்கு அனுப்புவதற்குப் பதிலாக, தங்கள் நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டாலே மிகச்சிறப்பு. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.

சக குழந்தைகளுடன் விளையாடவிடலாம். ரயில் பயணம், படகு சவாரி என புதிய உலகை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம். வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்துச் சென்று விலைவாசியை சொல்லித் தரலாம். வண்ணத்துப் பூச்சிகளின் உலகத்தை முடிந்தவரை கூட்டில் அடைக்காமல் சுதந்திரம் கொடுங்கள். மதிப்பெண்ணைத் தாண்டியும் விரிந்து கிடக்கும் வாழ்க்கையை அவர்களைத் தரிசிக்கச் செய்யுங்கள்.

ஆடம்பரம் தவிர்ப்போம்!
குழந்தைகளை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கான உற்சாகமான பொழுதுபோக்கு என்று பெற்றோர்கள் பலர் நினைக்கிறார்கள். ஆனால்... அங்கே விற்பனைக்கு இருக்கும் பல பொருட்களும், அந்தப் பொருளின் மதிப்பைவிட பல மடங்கு விலையில் இருக்கும். `குழந்தைகள் அடம்பிடித்து எப்படியும் தங்கள் பெற்றோரை வாங்க வைத்துவிடுவார்கள்’ என்பது, அந்த வணிகர்களின் வியாபார உத்தி, நம்பிக்கை. அதுவே, பிளே ஸ்டேஷன் முதல் உணவு வகைகள் வரை குழந்தை சம்பந்தப்பட்ட அனைத்தும் அங்கு அதிக விலையில் இருக்கக் காரணம். பொம்மைகள், சாக்லேட்டுகள் என பலவும் தாறுமாறான விலையில் விற்பனையாகின்றன.

ஆரோக்கியம் இல்லாததும் அவசியம் இல்லாததுமான பொருட்களை குழந்தை களுக்கு வாங்கித் தராமல் எளிமையான விளையாட்டுப் பொருட்களை வீட்டிலேயே குழந்தைகள் செய்யவும், அதை வைத்து விளையாடவும் சொல்லித் தரலாம். காய்கறி அலங்காரம், பூ கட்டுவது என்று அவர்களை சுவாரஸ்யப்படுத்தலாம். நம்மால் முடிந்த பொருட்களை நாமே உருவாக்குவோம் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து, சேமிப்புப் பழக்கத்தை வலியுறுத்துங்கள்.

நீதி போதனை... நிச்சயம் தேவை!
‘பாட்டி கதை சொன்னால்தான் தூங்குவேன்’ என்ற தலைமுறை அழிந்து, இப்போது தொலைக்காட்சிகளிலும் கார்ட்டூன்களிலும் சீரியல்களிலுமே நேரத்தைத் தொலைக்கிறார்கள் நம் குழந்தைகள். ஆயா வடை சுட்ட கதையைப் போன்ற நீதிக்கதைகள், இப்போதும் அவர்களின் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. முன்பு பள்ளிகளில் இருந்த நீதி போதனை வகுப்புகள் இப்போது அரிதாகிவிட்டன. குழந்தைகள் செய்யும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதனால் கதைகள் சொல்ல முடியாவிட்டாலும், நல்ல நூலகத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

மதிப்பெண் புத்தகங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, மனிதம் சொல்லித் தரும் புத்தகங்களை குழந்தைகள் கைகளில் தாருங்கள். செய்தித்தாள் படிப்பது, நல்ல கருத்தரங்கங்களுக்கு அழைத்துச் செல்வது, கண்காட்சிகளுக்கு அழைத்துச் சென்று அவர் களுக்குப் புதிய விஷயங்களை புரிய வைப்பது, தரமான திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது என அவர்களின் அழகான நேரத்தை பொக்கிஷம் ஆக்குங்கள்!’’
குழந்தை பாதுகாப்பு டிப்ஸ்!

தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். பெற்றோரின் கவனம் இழந்த சில நிமிடப் பொழுதிலும், குழந்தை அதில் தவறி விழ நேரலாம். அதேபோல, குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு சமைப்பதையும் தவிர்க்கவும். தாளிக்கும் பொருட்கள் குழந்தையின் மேனியிலோ, கண்களிலோ பட வாய்ப்பிருக்கிறது.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
வீட்டில் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க &

வீட்டில் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவை


குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ….

* எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.

* சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

* குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும்.

* எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.

* குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.

* எல்லோருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.

* குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.

* பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.

* குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.

* ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது.[/FONT]
[/FONT]
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுங்க

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுங்க


புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும்.

உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும்.

வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும். அதுவே மிகவும் முக்கியம். அவர்களுடைய குழந்தைத்தனத்தை ரசியுங்கள். அவர்களை சீக்கிரம் பெரியவர்களாக தூண்டாதீர்கள். இழந்த இளம் பருவத்தை மீண்டும் பெற இயலாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாக, நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது. இதை இப்போதே நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையின் மீது உண்மையான அன்பு செழுத்துங்கள்.

உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை அனுபவித்து ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குட்டி தேவதையைப் போன்ற ஊர்ந்து போவதாகட்டும் அல்லது ஒரு பிடித்த பாடலை பாடுவதாகட்டும். அதை எப்பொழுதும் அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணருங்கள்.

உங்களுடைய குழந்தை உங்களால் இந்த உலகிற்கு வந்தது என்னும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் நீங்கள் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் அனைத்து காரியங்களிலும் துணை புரியுங்கள். அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உள்ளது என்பதை தெரிவியுங்கள்.

உங்களின் நிறைவேறாத கனவுகளை உங்களுடைய குழந்தையின் மீது சுமத்தி அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் விருப்பம் எது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால், குழந்தைகள் உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற உங்களிடம் வருவதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெற்றோராகிய நீங்கள் குழந்தைகளின் முன் கெட்ட வார்த்தைகள் மற்றும் அசிங்கமான சண்டை போட வேண்டாம். ஏனெனில் குழந்தையின் கிரகிப்புத் திறன் என்பது மிகவும் அபாரமானது.
[/FONT]
[/FONT]
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?


உங்கள் குழந்தையை அதன் போக்கில் வளரவிடுவது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]* குழந்தைகளின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பதோடு அவர்களது உணர்வுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்.

* சிரித்தால் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வேண்டும். அழுதால் ஏன் அழுகிறாய்? என்று காரணம் கேட்க வேண்டும். மாறாக குழந்தைகளைத் திட்டுவதோ, அடிப்பதோ கூடாது.

* குழந்தைகளிடம் அன்பு காட்டுவதால் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். அதைத் தவிர்த்து அவர்களை உதாசீனப்படுத்தினாலோ, மனதைக் காயப்படுத்தினாலோ அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகக் காரணம் ஆகிவிடும்.

* குழந்தைகளைப் பகட்டாகவோ, ஆடம்பரமாகவோ வாழவிடாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.

* நாம் குழந்தையாக இருந்தபோது நமக்குக் கிடைக்காத சந்தோஷம் நமது குழந்தைகளுக்குக் கிடைக்கும் போது அதை நாம் பகிர்ந்து கொண்டு ஆனந்தப்பட வேண்டும்.

* குழந்தைகள் தங்களைப் பாராட்டுவதைத்தான் பெரிதும் விரும்புவார்கள். அடுத்தவர் முன் தலைகுனிவதை குழந்தைகள் விரும்புவதில்லை. அதே நேரம் அவர்களிடம் பிழைகள், தவறுகள் இருந்தால் அன்பாக எடுத்துக் கூறி அவற்றைத் திருத்த பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

* குழந்தைகளுக்குத் தோல்விகளையும் சந்திக்கப் பழக்க வேண்டும். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதோ, சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பதோ மிகவும் தவறானது. அத்தகைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் சின்னச் சின்ன தோல்விகளையும், தாங்க முடியாமல் முடங்கிப் போவார்கள்.

* மற்ற குழந்தைகள் போல் நமது குழந்தைகளும் படிப்பில் முன்னேறவில்லை என்று அடிப்பதாலோ, திட்டுவதாலோ, பயன் கிடைத்துவிடாது. அதனால் குழந்தைகளுக்கு மன உளைச்சல், பயம், விரக்தி, எரிச்சல்தான் வரும் என்பதைப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் சாதுரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

* உங்கள் குழந்தையை அதன் போக்கில் வளரவிடுவது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அவர்களைக் கட்டுப்படுத்தினால் அச்செயலைச் செய்வதில் எல்லாரையும் விட குழந்தைகள் ஆர்வமாக இருப்பார்கள் என்று மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள்.
[/FONT]
[/FONT]
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#7
Re: குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

yes u r right....my nine month old baby also like to encourage her.....i clap my hands when she do some naughty and good things..she will correctly notice my hands.........
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#8
Re: குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

Wonderful sharing :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.