Few words about C - Section - சிசேரியன் பற்றி சில வார்த்தைகள்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#1
ஆம் .....C – section பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன் .

பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்கள் , பிரசவ வலியைத் தாங்கும் , மனப்பக்குவத்தையும் , அந்த 10 மாதங்களில் , வளர்த்துக்கொள்ள வேண்டும் .

கண்டிப்பாக வலிக்கும் தான் , பிரசவ நேரத்தில் .
பெண்கள் வலியைத் தாங்க முடியாது என்று சிசேரியன் செய்ய வற்ப்புறுத்தாமல் இருப்பது நலம்

இப்போதெல்லாம் , பெரிய ஹாஸ்பிடல்களில் இந்தப் பிரசவ வலியைத் தாங்குவதற்க்கான பயிற்சிகள் பலவும் , கருவுற்று இருக்கும் பெண்களுக்குத் தரப்படுகின்றன .

இதில் முக்கியமானது ,
Conscious Relaxation exercise என்பதாகும் . இது , அந்த நேர வலியைத் தாங்கும் சக்தியையும் , பக்குவத்தையும் , நமக்குக் கண்டிப்பாகத் தரும் .

Normal டெலிவரி ஆவதற்கும் , பற்பல exercises சொல்லித் தரப்படுகின்றன.

அவ்வப்போது , குழந்தையிடம்(வயிற்றில் இருக்கும்போது ) , “அம்மாவுக்கு கஷ்டம் கொடுக்காம, நீயும் கஷ்டப்படாம , ஈசியா வெளிய வரணும் “ என்று , பேசிக்கொண்டே இருப்பதும் , பலன் தரலாம் .

இவை எல்லாவற்றையும் , நீங்கள் 10 மாதங்களாக நடைமுறைப் படுத்தினால் , நீங்கள் தாங்கும் விதத்தில் , சுகப்பிரசவம் நிகழ வாய்ப்புகள் அதிகம் .

தொடரும் ....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
இப்போதெல்லாம் , ஒரு பேச்சு அடிபடுகிறது . நிறைய டாக்டர்கள் , சிசேரியன் செய்வதைத்தான் prefer செய்கிறார்கள் என்று .

ஆனால் , 10% - 15% டாக்டர்கள் இப்படி பணம் ஒன்றே பிரதானம் என்று இருக்க வாய்ப்புண்டு . எல்லாரும் இப்படி இருப்பதில்லை .

முடிந்தவரை நார்மல் டெலிவரி யைத்தான் prefer செய்கிறார்கள் .

சில வலி தாங்க முடியாத பெண்களின் வற்ப்புறுத்தலால் , கூட , இதைச் செய்கிறார்கள் .

முன்பெல்லாம் , வலி எவ்வளவு நேரமாக நீடித்தாலும் ,இன்னும் சில பிரச்சைனகள் இருந்தாலும் , நார்மல் டெலிவரி மட்டுமே செய்து கொண்டு இருந்ததால் , குழந்தைக்கு பற்பல ஆபத்துக்கள் நிகழ்ந்துள்ளன .

பனிக்குடம் உடைந்து , மேலும் நல்ல வலி எடுக்காவிட்டால் , கர்ப்பவாய் திறப்பு சரியாக இல்லாவிட்டால் , சிலசமயம் , கிடுக்கி போட்டு எடுத்தாலோ , vaccuum உதவியுடன் எடுத்தாலோ , பிரச்சினை உருவாகும் என்று டாக்டருக்குத் தோன்றினால் , குழந்தையின் நலன் கருதி (நெற்றியின் நரம்புகள் பாதிப்படையலாம் ), மேலும் , குழந்தை , வயிற்றில் , மலம் சிறுநீர் கழித்து , அதை உட்கொண்டு விட்டால்(இது emergency சிசேரியன் ) ,

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் , இப்போது சிசேரியன் செய்கிறார்கள் .

அந்தப் பெண்ணுக்கு , முன்னரே டெஸ்ட் செய்து , diabetes இருந்தாலோ , வேறு குறிப்பிட்ட உபாதைகள் இருந்தாலோ , அல்லது , கர்ப்ப வாய் சிறிதாக இருந்தாலோ , இடுப்பு எலும்பு சரியானபடி இல்லாவிட்டாலோ , இந்த சந்தர்ப்பங்களில் , முன்னரே , டாக்டர் சொல்லி விடுவார் , சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று . ஒருவேளை , உங்களிடம் காரணத்தை சொல்லாமல் இருக்கலாம் .

இப்போதெல்லாம் , தாய் –சேய் நலனை , கருத்தில் கொண்டே , குழந்தைக்குப் பிற்காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் மட்டுமே , சிசேரியன் செய்யப் படுகிறது .

முன்காலத்தில் ரிஸ்க் எடுத்தார்கள் . இப்போது நலனை முன்னிட்டு ரிஸ்க் எடுப்பதில்லை .

தொடரும் .....
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
அப்படி சிசேரியன் செய்யும்போது , ஆபரேஷனுக்குப் பிறகு , தையல் போடும்படி சொல்லவும் .

இப்போதெல்லாம் stapler முறையிலும் செய்கிறார்கள் . நிறைய பேருக்கு இந்த முறை , பற்பல கஷ்டங்களைப் பின்னர் தருகின்றது . உட்காருவது கடினமாக இருக்கலாம் .

வெகு சிலருக்கே , இந்த முறை சகாயமாக இருக்கலாம் . பழைய முறையில் , தையல் போடுவதே நலம் .

காயம் ஆற , சிறிது காலம் எடுத்தாலும் , பின்னர் வரும் கஷ்டத்தைத் தவிர்க்கலாம் .


சிசேரியனுக்குப் பிறகு , டாக்டர்கள் , நம்மை நார்மலாக இருக்கச் சொன்னாலும் , நாம் ஒரு மாதத்திற்க்காவது , அதிகம் மாடிப்படி ஏறாமல் , sternous exercise செய்யாமல் இருக்கவும் .

3 மாதங்களுக்கு ,குனிந்து நிமிராமல் , வெயிட் எதுவும் தூக்காமல், அதிகம் கஷ்டம் இல்லாத , வயிற்றுக்கு அதிகம் பாதிப்பிலாமல் செய்யும் exercise களை மட்டுமே செய்யவும் .

இதெல்லாம் கூட , ஹாச்பிடலிலேயே சொல்லித் தருவார்கள் .

இப்படி எல்லாம் செய்தால் ,சிசேரியன் செய்ததால் , வரும் பாதிப்புகள் எதுவுமே இருக்காது , பிற்காலத்தில் .

இந்த ஆபரேஷன் செய்ததாலோ , sterilization செய்வதாலோ , மட்டுமே , உடம்பு குண்டாகிவிடும் என்பது உண்மையே அல்ல .

6 மாதத்திற்குப் பிறகு , நீங்கள் active ஆக இருந்தாலே , உடம்பு குண்டாகாது .

எனக்கு emergency சிசேரியன் செய்துதான் குழந்தையை எடுத்தார்கள் .

இப்போது 24 வருடங்கள் ஆகின்றன . இதுவரை , இதனால் ,ஒரு பிரச்சினையும் எனக்கு இல்லை .

எனக்கு 20 மணி நேரம் பிரசவ வலி எடுத்தது . நான் தாங்கிக் கொண்டுதான் இருந்தேன் .

ஆகவே தோழிகளே ,
சிசேரியன் செய்தால் , கண்டிப்பாகக் கஷ்டம்தான் , என்று பயப்படவும் வேண்டாம் . வேறு வழி இல்லாததால் தான் , டாக்டர்களும் இதை prefer செய்கிறார்கள் என்பதும் உண்மை .

x------x----x​


 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#4
தோழிகளே ,

இது பற்றி , உங்களுக்கு ஏதேனும் அனுபவங்கள் இருந்தாலும் தயவு செய்து கூறவும் . பல கருவுற்று இருக்கும் தாய்மார்களுக்கும் உதவியாக இருக்கலாம் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#6
Aunty.. Thriller Story Read Pandra Pola Dhikk nnu Irukku.. Well, Very Very Very Useful Posts..:hug: Keep Rocking..:thumbsup Cheers!!
Thanks da chellam......sila misconceptions clear pannanum nu thonichu....adhaan.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.