Fibre rich food - நன்மை தரும் நார்ச்சத்து!

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
நன்மை தரும் நார்ச்சத்து!

நார்ச்சத்து என்பது, உணவை முழுமையாக ஜீரணிக்க முடியாத பகுதி. இது இரண்டு வகைப்படும். கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து.

திரவங்களில் கரையும் நார்ச்சத்து, கரைந்தவுடன் ஜெல்போல் ஆகிவிடும்.

இந்தக் கரையும் நார்ச்சத்து பெரும்பாலும் 'பெக்டின்' உள்ளவை. ஓட்ஸ், உமி பீன்ஸ், அரிசி உமி, ஓட்ஸ், வேர்க்கடலை, சாத்துக்குடி, பார்லி, ஆரன்ச், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், கோதுமை, தானியம், பருப்பு ஆகியவை கரையும் நார்ச்சத்து உள்ளவை.

இந்தக் கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
========================================


தானியங்கள், பழங்கள், காய்கறிகள், முட்டைக்கோஸ், பீட்ரூட், ஆப்பிள் தோல், காலிஃப்ளவர், கேரட் போன்றவற்றில் உள்ள கரையாத நார்ச்சத்து ஜீரணத்துக்கு மிகவும் உதவும்.

மலச்சிக்கலை துரிதமாக போக்கும்.
======================================


நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள்:

நார்ச்சத்துக்கள் உள்ள தானியங்கள் - அரிசி, ராகி, ஓட்ஸ், சோளம், பார்லி, முழு கோதுமை, கைக்குத்தல் அரிசி.

நார்ச்சத்துள்ள பருப்புகள்- பச்சைப்பயிறு, கடலைப்பருப்பு, சோயாபீன்ஸ், பாதாம், வாதாம்.

நார்ச்சத்துள்ள பழங்கள் - ஆப்பிள், பேரீட்சை, நெல்லி, வில்வம், திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு.

நார்ச்சத்துள்ள இதர உணவுகள் - தேங்காய், சூரியகாந்தி விதைகள், எள், வேர்க்கடலை

பலன்கள்

உண்ணும் உணவில் நார்ச்சத்து சேர்த்துக் கொள்வதால், நுரையீரல், பிராஸ்டேட், கணையப் புற்றுநோய்கள் தடுக்கப்படுகின்றன.

சைவ உணவு உண்பவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கிறது.








nandri;doctor vikatan/fb
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear sir, wonderful information you have shared about fiber content in food items and the important uses of fiber for human beings. thank you
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.