Find the hidden talent in your children - இவங்க எல்லாம் படிப்பில் தோற்று வா&

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
நம்ம பிள்ளைங்களை படிப்படின்னு சொல்லுவோம்.. பொதுவாகவே இந்த காலத்துப் பிள்ளைங்க கற்பூரம் மாதிரி எல்லாவற்றையும் கப்புன்னு பிடிச்சுக்குறாங்க.. ஆனால் அதிலயும் சில பிள்ளைகளுக்கு படிப்பு கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு.. அப்படிப்பட்ட பிள்ளைகளோட பெற்றோர் பாடு தான் திண்டாட்டம்.
தங்களது பெரிய பெரிய கனவுகளை ஈடுகட்ட முடியாமல் இருக்கும் அவர்களது பிள்ளைகளை நினைத்து கவலை கொள்வார்கள்.
அதிலும் ஏதேனும் பள்ளி அல்லது கல்லூரித் தேர்வு நுழைவுத் தேர்வுகளில் தோல்வி அடைந்து விட்டால் அதற்காக பிள்ளைகளைத் திட்டித் தீர்த்து விடுவோம்..
ஏன் படிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம். படிக்காமல் போனால் வாழ்க்கை வீணாகிவிடும் என்று நினைப்பதால் தானே.. அந்த சிந்தனையை மாற்றத் தான் இந்த கட்டுரை.
அதாவது, படிப்பு ஒன்று மட்டுமே வாழ்க்கையில் ஒருவர் உயர்ந்த நிலைக்குச் செல்ல அவசியம் என்ற நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.
அதற்கு சில உதாரண புருஷர்களும் இருக்கிறார்கள்.
முதல் உதாரணமாக கல்விக் கண் திறந்த காமராஜர் பள்ளிப் படிப்பை தாண்டாதவர் என்பதுதான். இவர் தான் பின்னாளில் தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர்.
டைனமோவைக் கண்டுபிடித்த மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானி பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர். பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே பைண்டிங் செய்யும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்தவர்.
பல கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த சார்புக் கொள்கையைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தொழிற்கல்வியில் சேர பாலிடெக்னிக் நுழைவுத் தேர்வு எழுதிய போது தோல்வி அடைந்தவர்.
உலக நாடகத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னருமான ஷேக்ஸ்பியர், பள்ளிப் படிப்பை தனது 13வது வயதிலேயே நிறுத்தியவர்.
நான்காவது வகுப்பு வரை மட்டுமே படித்த சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஏராளமான இலக்கிய நூல்கள்தான் இன்றும் இலக்கியத் துறையில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாட நூலாக உள்ளது.
பள்ளிக்குச் செல்லாமல், வெறும் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருந்த ரைட் சகோதரர்கள்தான் பின்னாளில் ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்து சாதனை படைத்தார்கள்.
கண்டுபிடிப்பே ஒரு சாதனைதான். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களைக் கண்டுபிடித்து சாதனையிலேயே ஒரு மகத்தான சாதனை படைத்த தாமஸ் ஆல்வா எடிசன் 8ம் வகுப்பு மட்டுமே படித்தவர்.
இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக ஒரு விஷயம் என்னவென்றால், தனது ஆங்கிலப் பேச்சாற்றலால் உலகையே தன் பக்கம் ஈர்த்த சுவாமி விவேகானந்தர் பள்ளி, கல்லூரியில் ஒரு சுமார் ரக மாணவர் என்பதுதான்.
இவர்கள் எல்லாம் வரலாற்றில் இடம்பிடித்தவர்கள்

எனவே, படிப்பையும் தாண்டி, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒரு திறமையை வெளிக் கொண்டு வந்தால் அவர்கள் நிச்சயம் நட்சத்திரமாக வானில் ஒளி வீசலாம்.
குழந்தைகளுக்குள் புதைந்திருக்கும் திறமையைக் கொண்டு வருவதே பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும் என்பதே

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Re: Find the hidden talent in your children - இவங்க எல்லாம் படிப்பில் தோற்று வ&#30

அவசியமான பதிவு . மிக்க நன்றி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.