First Aid for Broken Bones & Fractures - எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? &#29

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? அதற்குரிய முதலுதவியை எப்படிச் செய்வது?

முதலுதவி

விளையாடும்போதும், ஓடும் வாகனத்திலிருந்து கீழே விழும்போதும், உயரத்திலிருந்து தவறி விழும்போதும் இடுப்பு, கை, கால், தொடை மற்றும் தாடை எலும்புகளில் முறிவு ஏற்படுவது வழக்கம். எந்த எலும்பில் முறிவு ஏற்பட்டாலும், அதற்குரிய முதலுதவியை எப்படிச் செய்வது?

அறிகுறிகள் என்ன?
அடிபட்ட நபருக்கு எலும்பு முறிந்துள்ளதா என்று தெரிந்துகொண்ட பின்னரே, முதலுதவியைத் தொடங்க வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் உதவும்:

1. விபத்து ஏற்பட்ட உடல் பகுதியில் வலியும், வீக்கமும் இருக்கும்.

2. அடிபட்ட பகுதியை அசைக்க முடியாது. அசைத்தால் வலி அதிகரிக்கும்.

3. முறிவுள்ள பகுதியைத் தொட்டாலே வலி அதிகரிக்கும்.

4. முறிவு உறுதியானால், அப்பகுதி எலும்புகள் உள்ளுக்குள் உராய்வதை பாதிக்கப்பட்ட நபர் உணர்வார்.

5. முறிவு ஏற்பட்ட பகுதியில் வளைவு அல்லது குழி தோன்றலாம்.

6. முறிவுக்குக் கீழ் உள்ள பகுதி பலமில்லாமல் இருக்கும்.

பொதுவான முதலுதவிகள் இவை:

அடிபட்டவரை அந்த இடத்திலிருந்து நகரவிடாதீர்கள்.
அடிபட்ட பாகத்தை அசைக்க விடாதீர்கள்.

அடிபட்டவரைப் படுக்க வையுங்கள்.

காயம் இருந்தால், ஈரத்துணியால் துடைக்கவும்.

ரத்தக்கசிவு இருந்தால், துணியைப் பல மடிப்புகளாக மடித்து, காயத்தின் மீது வைத்து, அழுத்தமாகக் கட்டுப் போடவும்.

கை எலும்பு முறிவுக்கு முதலுதவி:
கை எலும்பு முறிந்திருந்தால், கையின் இரு பக்கங்களிலும் மூங்கில் தப்பைகளை வைத்துத் துணியால் கட்டுப்போடவும். மூங்கில் தப்பைகள் கிடைக்காவிட்டால், சிறிய மரப்பலகை அல்லது அடி ஸ்கேல்களை வைத்தும் கட்டுப்போடலாம்.

முறிந்த உறுப்புகள் மேன்மேலும் அசைவதைத் தடுக்க, ஓர் ஆதாரம் தருவதுதான் இந்த முதலுதவியின் நோக்கம்.
அடுத்து,முறிந்த பாகத்தைத் தொங்கப்போடக் கூடாது.

ஏனென்றால், தொங்கப்போடும் போது, முறிவுக்குக் கீழே ரத்தம் தேங்கி வீக்கமும் வலியும் அதிகமாகும். இவற்றின் விளைவால், முறிந்த எலும்புகளை நேராக எடுத்துவைத்துக் கட்டுவதில் சிரமம் ஏற்படும்.

இப்போது, அடிபட்டவரின் முழங்கையை ‘l’ வடிவில் உள்நோக்கி மடக்கி, மார்போடு சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

இனி, கழுத்துக்கும் கைக்கும் சேர்த்துத் துணியால் ஒரு தொட்டில் போலக் கட்டுப்போட வேண்டும். இதற்குத் துணி கிடைக்காவிட்டால் சட்டையைப் பயன்படுத்தலாம்.

தொட்டில் போலக் கட்டுவது எப்படி?
ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு துணியை வெட்டிக்கொள்ளுங்கள். அதை ஒரு முக்கோண வடிவில் மடக்கிக் கொள்ளுங்கள். முறிவு ஏற்பட்டுள்ள பகுதியை உங்கள் கையால் தாங்கிக் கொள்ளுங்கள். பிறகு, முக்கோண பாண்டேஜின் ஒரு முனையை அடிபட்டவரின் மார்புக்கும் முழங்கைக்கும் இடையே கொண்டு செல்லுங்கள்.

முக்கோண பாண்டேஜின் மற்றொரு முனையை முன்னங்கை முன்புறமாகச் சுற்றிக் கொண்டு சென்று, அடிபட்டவரின் கழுத்தைச் சுற்றிப் பின்பக்கமாகக் கொண்டு சென்று, முன்புறமாகக் கொண்டு வாருங்கள். இப்போது மார்போடு சேர்ந்திருக்கும் முதல் முனையுடன் இந்த இரண்டாவது முனையை முடிச்சுப் போட்டுவிடுங்கள்.

தொங்கிக் கொண்டிருக்கும் பேண்டேஜின் மீதமுள்ள பகுதியை மடித்து ஒரு ஊக்கு அல்லது குண்டூசி கொண்டு பாதுகாப்பாகக் குத்திக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்வரை இந்தத் தொங்குக் கட்டை கழற்றாதீர்கள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? அதற்கு&#2

இடுப்பு எலும்பு முறிவுக்கு முதலுதவி:

விபத்தில் மட்டுமல்லாமல், சாதாரணமாக கால் வழுக்கி விழுந்தாலே இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, கீழ்க்கால் எலும்பு மற்றும் பாத எலும்புகளில் முறிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.இடுப்பு எலும்பு முறிந்திருந்தால், முதலில் அடிபட்டவரைப் படுக்க வையுங்கள். கால்கள் நேராக நீட்டி யிருக்க வேண்டும். ஓர் அகலமான துணியால் இடுப்பைச்சுற்றிக் கட்டுப் போட வேண்டும். பிறகு, இடுப்புக்குக் கீழே தொடைகள் தொடங்கும் இடத்தில் மற்றொரு கட்டுப் போட வேண்டும். இந்த இரண்டு கட்டுகளிலும் முடிச்சு, பக்கவாட்டில் இருந்தால் நல்லது.

தொடை எலும்பு முறிவுக்கு முதலுதவி:
தொடை எலும்பு முறிந்திருக்குமானால், மிருதுவான துணி மடிப்புகளை இரண்டு தொடைகளுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு தொடைகளையும் சேர்த்து மூன்று இடங்களில் துணிக்கட்டுப் போட வேண்டும்.

கீழ்க்கால் முறிவுக்கு முதலுதவி:
இதற்கான முதலுதவி, தொடை எலும்பு முறிவுக்குச் செய்வதைப் போலவேதான் செய்ய வேண்டும். அதாவது, மிருதுவான துணி மடிப்புகளை இரண்டு கால்களுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கால்களையும் சேர்த்து மூன்று அல்லது நான்கு இடங்களில் துணிக்கட்டுப் போட வேண்டும். கட்டுகளின் முடிச்சுகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும்.

இடுப்பு, தொடை மற்றும் கால் எலும்பு முறிந்துள்ள நபரை, ‘ஸ்ட்ரெச்சரி’ல் தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஸ்ட்ரெச்சர் கிடைக்காதபோது, ஒரு கனமான போர்வையில் அவரைப் படுக்க வைத்து, போர்வையின் இரு முனைகளை ஆளுக்கு ஒருவராகப் பிடித்துத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

பாதங்களில் எலும்பு முறிவு:
பாதத்தின்மீது கனமான பொருள்கள் விழுதல், வழுக்கிவிழுதல், வாகனங்கள் பாதத்தில் ஏறுதல், உயரமான இடத்திலிருந்து விழுதல், தாண்டிக் குதித்தல் போன்றவற்றால் பாத எலும்புகளில் முறிவு ஏற்படலாம்.

மெத்தென்று துணியை மடித்து, பாதத்தின் கீழே அணைப்புக் கொடுங்கள்.

அந்தத் துணி அணைப்பைச் சேர்த்து ஓர் அகலமான பாண்டேஜ் துணியால் பாதம் முழுவதும் கட்டுப் போடுங்கள்.
பாண்டேஜ் துணியின் முனைகளை ‘8’ போல கணுக்காலின் பின்பக்கமாகக் கொண்டு சென்று, பிறகு முன்பக்கமாகக் கொண்டுவந்து முடிச்சுப் போட வேண்டும்.

முடிச்சு பாதத்தின் மேற்புறம் மத்தியில் வர வேண்டும்.
எலும்பு முறிந்த பாதத்தைத் தரையில் ஊன்றக்கூடாது.
அவரை ‘ஸ்ட்ரெச்சரி’ல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

கீழ்த்தாடை முறிவுக்கு முதலுதவி:
முறிவு ஏற்பட்ட தாடையை உங்கள் கையால் தாங்கிக் கொள்ளுங்கள்.

துணியை மடித்துத் தாடைக்குக்கீழ் அணைப்புக் கொடுங்கள்.
ஒரு பாண்டேஜ் துணியால் தாடையோடு அழுந்தும்படி கட்டுப்போட்டு,முனைகளைத் தலைக்கு மேலே கொண்டுவந்து உச்சித்தலையில் முடிச்சுப் போடுங்கள். இனி, அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

டாக்டர் கு.கணேசன்

 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
Re: First Aid for Broken Bones & Fractures - எலும்பு முறிவுக்கு என்ன செய்வது?

good sharing friend.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.