Fish can remember up to 12 days later!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
அட! மலைப்பாம்புக்கு ஸ்கேன்!அமெரிக்காவின் கொலம்பஸ் விலங்குகள் பூங்காவில் வசித்த ஹன்னா என்ற மலைப்பாம்புக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. நோய்த்தொற்றால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள் மருத்துவர்கள். மலைப்பாம்பை ஸ்கேன் செய்து பார்த்துவிட முடிவெடுத்தனர்.

19 அடி நீளமும் 63.5 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை 6 பேர் தூக்கி, ஒரு பெட்டியில் வைத்து, ஸ்கேன் மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கே மலைப்பாம்புக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, ஸ்கேன் கருவியில் வைக்கப்பட்டது.

மிக நீளமான மலைப்பாம்பு என்பதால் இரண்டாக மடித்து படுக்க வைத்தனர். முன்பக்கம் ஒன்றும் பின்பக்கம் ஒன்றுமாக இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட்டது. “எங்கள் ஊழியர்தான் மலைப்பாம்பின் முகம் வீக்கமாக இருப்பதைக் கண்டறிந்தார்.

அடிப்படை மருத்துவம் செய்து பார்த்தோம். சரியாகவில்லை. விலங்குகளுக்கு எக்ஸ்ரே மிகச் சிறந்த பலனை அளிப்பதில்லை. அதனால் சிஏடி ஸ்கேன் செய்ய முடிவெடுத்தோம். ஸ்கேனில் பிரச்சினை தெரிந்துவிட்டது.

இன்னும் இரண்டு வாரங்களில் குணப்படுத்திவிடுவோம். ஒரு மலைப்பாம்புக்கு ஸ்கேன் செய்தது இதுதான் முதல்முறை. அந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறாள் ஹன்னா” என்கிறார் பூங்காவின் நிர்வாகி.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
எதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு

1524228016322.png


ஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் புதியதாக 15 எறும்பு இனங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதில் வித்தியாசமான எறும்பு ரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எறும்புகளின் பாதுகாப்பு அமைப்பு மற்ற எறும்பு இனத்திடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.

கோலோபோசிஸ் எக்ஸ்ப்லோடன்ஸ் என்ற இந்த வகை எறும்புகள் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற தானாக முன்வந்து உயிர் தியாகம் செய்கின்றன. அதாவது மற்ற பூச்சி இனம் தங்களை தாக்க வந்தால் அவை ஒரு வித திரவத்தினை வெளியிடுகின்றன. நச்சுத்தன்மையுடன் இருக்கும் இந்த திரவம் எதிரிகளை தடுக்கும் அல்லது கொல்லும் திறன் கொண்டது. ஆனால் இதனை வெளியிட எறும்புகள் தங்கள் முழு சக்தியினை பயன்படுத்துவதால் அவை உயிரை விடுகின்றன.

உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனமானது போர்னியோ தீவுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு எறும்பு இனம் இருந்ததாக 1916-ம் ஆண்டு கூறப்பட்டது. ஆனால் அதனை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
நீண்ட தூரம் பறக்கும் பறவைகள் ``V" வடிவில் பறப்பதால் என்ன லாபம்?

மனிதன், சிறகு முளைத்தபின் அவன் தவழ்ந்த பூமியை விட்டு வீட்டைக் கட்டிக்கொள்கிறான். பறவைகள் கூட்டைவிட்டு பூமியைக் கட்டிக்கொள்கின்றன. அந்தப் பூமியைச் சுற்றிப் பறந்து திரியும் அவை அழகு மட்டும் அல்ல, அறிவியலும் கூட. கடந்த வருடம் சென்ற இடத்திற்கே மீண்டும் செல்வது தொடங்கி, குச்சிகளைக் குறுகிய அலகுகளால் கொத்திக் கொத்திக் கூடுகட்டும் அதன் மேஸ்திரி வேலை வரை எதுவுமே அவற்றுக்குக் கற்றுக்கொடுக்கப் படுவதில்லை. அவைதான் அவற்றுக்கு ஆசான். சுய பாடம் கற்கவேண்டும், புதுப் புது அனுபவங்கள் வேண்டும் என்பதை நொடிக்கொருமுறை தன்னைப் பார்க்கும் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் பறவைகள் நமக்கும் ஆசான்.

அதைப் பார்த்தே நாமும் பறக்கத் துணிந்தோம் என்பது பழங்கதை. அவை பறப்பதும் மிகப் பழைமையான கதைதான். கண்டம் தாண்டும் பறவைகள் பல சமயங்களில் கடலைக் கடந்து பறக்கவேண்டி வருகிறது. அது எப்படி? பொதுவாகப் பறவைகள் கூட்டமாகப் பறந்தால் V வடிவத்தில் ஓர் ஒழுங்குமுறையோடுதான் பறக்கின்றன. அந்த ஒழுங்குமுறைக்குக் காரணம் என்ன? அது வெறும் ஒழுங்கு தானா? இல்லை; அதில் அவற்றின் பறக்கும் திறனை அதிகப்படுத்தும் ஆற்றல் ஒளிந்திருக்கிறது.இதைப் பற்றிய ஆய்வுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஹென்றி வெய்மர்ஸ்கிர்ச் என்ற ஒரு பறவையியல் அறிஞர். 2001 ம் ஆண்டு கூழைக்கடா என்ற பறவை பற்றிய ஓர் ஆய்வுக்காக அதன் உடலில் இதயத்துடிப்பை அளக்கும் கருவியைப் பொருத்தினார். அந்தப் பதிவுகள் அவர் கைக்குக் கிடைத்தபோது ஒரு வித்தியாசத்தைக் கண்டார். ஒரு பறவையின் இதயத்துடிப்பை விட மற்றொரு பறவையின் இதயத்துடிப்பு குறைவாக இருந்ததுதான் அது. அனைத்தும் ஒன்றாகவே பறக்கின்றன. சீரான வேகத்தில் செல்கின்றன. பிறகு எப்படி ஒன்றுக்கு ஒன்று மாறுபடும்?


பிறகு ஸ்டீவன் போர்ச்சுகல் என்பவர் இதைப் பற்றி முழுமையாக ஆராய முனைந்தார். லண்டனில் இருந்த ராயல் வெர்ட்டினரி கல்லூரியில் அவரது சகாக்கள் இதற்காகவே பிரத்யேகமாக டேட்டா லாக்கர்களை ( Data Loggers) உருவாக்கினார்கள். அதில் ஒரு சவால் இருந்தது. பறவைகளின் வலசைப் பாதை, வேகம், இருப்பு போன்றவற்றைப் பதிவு செய்யக்கூடிய அளவுக்குத் திறனோடு இருக்கவேண்டும். அதே சமயம் அதைப் பறவைகள் சிரமமின்றிச் சுமந்துசெல்லும் அளவுக்கு எடை குறைவாக இருக்கவேண்டும். அவர்கள் அதைச் சாத்தியப்படுத்தினார்கள்.


கருவி தயாராக உள்ளது. ஆனால் பறவை வேண்டுமே. ஏதாவது பறவையைப் பிடித்துப் பொருத்திவிடலாம் என்னும் அளவுக்கு இது எளிமை இல்லை. அவர்கள் பொருத்தும் பறவைகள் எங்கே தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. எங்கே போய்ச்சேரும் என்ற தகவல்கள் வேண்டும். அது தெரிந்தால்தான் அவற்றின் மீது பொருத்தப்படும் கருவியை அங்கே போய் எடுக்க முடியும். அதை எடுத்தால்தான் அவர்களின் கேள்விக்கான விடை கிடைக்கும். அப்போது வந்தவர்தான் ஜோஹன்ஸ் ஃப்ரிட்ஸ். அவர் ஆஸ்திரியாவின் ஒரு பறவைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர். வடக்கத்திய ஐபிஸ் பறவைகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்.

பிணந்தின்னிக் கழுகுகள் நம் பார்வைக்குக் கொஞ்சம் அழகாகத் தெரியவேண்டுமென்றால் அவற்றைப் பார்த்த பிறகு இதைப் பார்த்தால் போதும். சொட்டைத் தலையுடன், நீண்டு வளைந்து சிவந்திருக்கும் அலகோடும் கறுத்த உடலோடும் இருக்கும் இந்தப் பறவை மத்திய ஐரோப்பாவில் 17 ம் நூற்றாண்டிலேயே முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதை மீண்டும் அங்கே அறிமுகப்படுத்தத் தேவையான முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தார்.

அதற்காக ஐபிஸ் பறவைகளில் 14 இளசுகளை நன்றாகப் பழக்கிக்கொண்டு ஒருவர் மட்டும் அமரும் சிறிய விமானத்தில் அவர் முன்செல்ல அவை பின்தொடர்ந்து வருமாறு செய்திருந்தார். இதன்மூலம் அவற்றின் முன்னோர்கள் வலசை வந்துசென்ற பாதையைப் பழக்கமாக்கி மீண்டும் தொடங்க வைக்கமுடியும் என்று நம்பினார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஸ்டீவன் போர்ச்சுகலுக்கு நுனிநாக்குத் தேனாய் இனித்தது. உடனே அவரது குழு ஃப்ரிட்ஸிடம் விரைந்தது. விவரத்தை எடுத்துக்கூறினார்கள். அவரும் ஒப்புக்கொண்டார். பறவைகளோடு ஃப்ரிட்ஸ் வானில் பறப்பது. அவர்களைத் தொடர்ந்து போர்ச்சுகலின் குழு தரைவழியே செல்வது எனத் திட்டம் தயாரானது.


ஒருவழியாகத் தேவையான தரவுகள் கிடைத்துவிட்டன. இனி நமது கேள்விக்கு விடை காண்போம் என்று அமர்ந்தார்கள். ஐபிஸ்களின் வேகத்தை ஆராய்ந்தபோது சீராகவே இருந்தது. இதயத்துடிப்பு ஹென்றி கண்டதுபோலவே வேறுபட்டது. தற்போது அவை சிறகுகளை அடிக்கும் முறையை ஆராய்ந்தார்கள். முன்னால் செல்லும் பறவை தன் சிறகைக் காற்றில் அடிக்கும்போது அதற்குப் பின்னால் காற்று கீழ்நோக்கிச் செல்லும், பக்கவாட்டுப் பக்கங்களில் காற்று மேல்நோக்கிச் செல்லும். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு சுழற்சி முறையில் சுழலும் அந்தக் காற்று அதற்குப் பின்னால் தனது பக்கங்களில் பறக்கும் பறவைக்கு எளிமையானதோர் உந்துவிசையைக் கொடுக்கும். அந்த உந்துவிசை பின்செல்லும் பறவைக்குப் பறப்பதைச் சுலபமாக்கிவிடும். உதாரணமாகத் தன் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பனிச்சரிவில் முன்னால் தந்தை செல்கிறார். அவரது காலடியைத் தொடர்ந்து குழந்தை செல்கிறது. அது தன் தந்தையின் கால்தடங்களிலேயே கால் வைத்துச் செல்லும்போது அதற்கு நடப்பது எளிதாகிவிடும். ஏனென்றால் அந்த இடத்தில் இருக்கும் பனியைத் தந்தை கால் வைக்கும்போதே விலகிவிடுகிறது. அதேபோல் முன்செல்லும் பறவை தன் முழுத்திறனிலும் காற்றைக் கிழித்துச் செல்வதால் அந்தக் கிழிந்த காற்றால் ஏற்படும் சுழற்சி பக்கங்களில் பறக்கும் பறவைகள் பறப்பதை எளிதாக்கிவிடும். ஆகையால் பின்னால் பறக்கும் பறவை சிரமம் ஏதுமின்றி ஓரளவுக்குப் பறந்தாலே போதும். முன்செல்லும் பறவையே அதன் வேகத்திற்கு இட்டுச்சென்றுவிடும்.
அதுவே பறவைகள் வரிசையாகச் சென்றால் அந்தச் சுழற்சியின் தன்மையை அவற்றால் உணர முடியாது. அவை எப்படி இந்த மாதிரியான காற்றின் சுழற்சியைப் புரிந்துகொள்கின்றன. இறகு நுனியில் படும் காற்று எத்தன்மையது, வேகம் என்ன ஆகியவற்றை உணர்த்திவிடும். பறக்கும் சமயங்களில் பறவைகளின் இறகு நுனி கிட்டத்தட்ட ஒரு சென்சார் போலச் செயல்படும். ஒருவேளை ஏதேனும் பறவை அந்த அமைப்பிலிருந்து பிறழ்ந்து விட்டால் என்ன செய்யும்?

காற்றின் தன்மையைப் புரிந்துகொண்டு உடனே அது முன்செல்லும் பறவையின் சிறகு அசைவுகளுக்கு முற்றிலும் எதிர்த்திசையில் அடிக்கத் தொடங்கும். அது காற்றின் வேகத்தால் அமைப்பை விட்டுப் பிரிந்து செல்லாமல் இருக்கவைக்கும். பிறகு தன்னைச் சமாளித்துக்கொண்டு சரிசெய்துகொள்ளும்.


அந்த இளம் பறவைகளுக்கு யார் இதைக் கற்றுக்கொடுத்தது. அவை இப்போதுதான் இவ்வளவு தூரம் பறக்கின்றன. பிறகு எப்படிப் புரிந்துகொண்டன. இந்தக் கேள்விக்கு விடைகாணும்போது ஒன்று புரிந்துவிட்டது. இது மரபுரீதியாக வருவது இல்லை. பொதுவாக இளம் பறவைகள் மூத்த பறவையிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. ஆனால், இங்கே பறக்கும் அனைத்துமே ஒத்த வயதுடையவை. சொல்லப்போனால் இவை பறக்கத் தொடங்கியதும் ஆளுக்கொரு விதமாகத்தான் பறக்கத் தொடங்கின. நேரம் போகப் போகக் காற்றின் தன்மையும் இறகுகளின் திறனையும் படிப்படியாகப் புரிந்துகொண்டு அவை சுயமாகக் கற்றுக்கொண்டன. சில மணிநேரத்துக்கு ஒருமுறை அவை தம் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தன. முன்னால் வழிநடத்திச் செல்லும் பறவை சோர்வடையும்போது மற்றொரு பறவை முன்வந்துவிட அது பின்னால் சென்றுவிடும். இப்படி மாறி மாறிப் பயணம் செய்து காற்றைத் தனக்குச் சாதகமாக்கிப் பறக்கவே பறவைகள் அந்த அமைப்பில் பறக்கின்றன.

இவ்வாறு தன்னைக் கீழே தள்ளக்கூடிய காற்றைத் தவிர்த்து சாதுர்யமாக மேலே மேலே செல்வதோடு சோர்வின்றிக் கடல் கடந்து பறப்பதற்கும் அவை செய்யும் முயற்சிகள் அபூர்வம். சிறகு பலப்பட்டதும் வானத்தில் பாதைபோட்டுப் பறக்கும் பறவைகள் அந்தப் பாதையில் தன்னையே ஓட்டிக்கொள்ளத் தனித்திறன் கொடுத்திருக்கிறது இயற்கை.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
Snails made to remember things that never happened to them

1:58 IST


Highlights

  • David Glanzman, a professor of neurobiology at UCLA who is an author of the new paper, has been studying Aplysia Californica, a sea snail, for years.
  • The scientists realised that even when they interfered with their trained snails’ brain cells in a way that should have removed the memory completely, some vestige remained.

Transferring memories from one living thing to another sounds like the plot of an episode of “Black Mirror.” But it may be more realistic than it sounds at least for snails. In a paper published in the journal eNeuro, scientists at the University of California-Los Angeles reported that when they transferred molecules from the brain cells of trained snails to untrained snails, the animals behaved as if they remembered the trained snails’ experiences.


David Glanzman, a professor of neurobiology at UCLA who is an author of the new paper, has been studying Aplysia Californica, a sea snail, for years. In experiments by Glanzman and colleagues, when these snails get a little electric shock, they briefly retract their frilly siphons, which they use for expelling waste. Recently, the scientists realised that even when they interfered with their trained snails’ brain cells in a way that should have removed the memory completely, some vestige remained. They decided to see whether something beyond the brain cells’ connections to each other — namely RNA — could be hanging on to the memory.


You might remember RNA from high school biology: It is best known for ferrying messages between the genome and the rest of the cell. But scientists have gradually realised that there is more to RNA than playing messenger. There are some kinds of RNA that, instead of carrying messages, help switch genes on and off. They have been shown to be involved in long-term memory in snails, mice and rats, through their ability to influence chemical tags on DNA.


To understand what was happening in their snails, the researchers first extracted all the RNA from the brain cells of trained snails, and injected it into new snails. To their surprise, the new snails kept their siphons wrapped up much longer after a shock, almost as if they’d been trained. Next, the researchers took the brain cells of trained snails and untrained snails and grew them in the lab. They bathed the untrained neurons in RNA from trained cells, then gave them a shock, and saw that they fired in the same way that trained neurons do. Glanzman said that this is the first study since the flatworm work to propose that memories can be transferred in such a way.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
சைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா - 46 வயதில் உயிரிழந்த சோகம்

1529732969931.png

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உட்சைட் நகரின் காட்டுப்பகுதியில் பாதுகாக்கப்பட்டு வரும் மிகவும் பிரபலமான கொரில்லா கோகோ. 46 வயதான கொரில்லா சைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் திறமை உடையது. சான் பிரான்சிஸ்கோ மிருகக்காட்சி சாலையில் பிறந்த இந்த கொரில்லாவை மையமாக வைத்து பல ஆவணப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.


கோகோவின் பயிற்சியாளரான பட்டர்சன் சிறு வயது முதல் ஆங்கில வார்த்தைகளை கோகாவிற்கு பயிற்சி அளித்தார். இதன் மூலம் கோகோ 2 ஆயிரம் வார்த்தைகளை சைகை மூலம் பேசும் பழக்கம் கொண்டது. கோகோவை காண பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த இடத்தில் குவிகின்றனர்.

இந்நிலையில், உலகளவில் பிரபலமடைந்த கோகோ கடந்த செவ்வாய்கிழமை காலை மரணமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். தூங்கிக் கொண்டிருக்கும் போது கோகோவின் உயிர் பிரிந்ததாக கூறினர். கோகோவின் மரணம் அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
Revealed: Dogs are smarter than cats

Dog owners and cat owners may often disagree about which is the smartest — but it seems that one scientist has a definitive answer.

According to neuroscientist Suzana Herculano-Houzel from Vanderbilt University in Tennessee in the US, it’s the canines that come out on top.

Studies by researchers have shown that dogs have about 530 million neurons that calculate behaviour whilst cats only manage 250 million. So while cat owners may disagree, it seems that Fido and Rover (generic names for dogs in the US) have the upper hand when it comes to brains.


“I believe the absolute number of neurons an animal has, especially in the cerebral cortex, determines the richness of their internal mental state and their ability to predict what is about to happen in their environment based on past experience,” explained Herculano-Houzel.


What’s interesting is that even though dogs don’t have the biggest brains, they actually have the most neurons among any carnivore. While a brown bear has a far larger brain, it only has about the same number of neurons as a cat.


“But, with that disclaimer, our findings mean to me that dogs have the biological capability of doing much more complex and flexible things with their lives than cats can.”
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
கடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? கணிக்க முடியுமா?

’கடல் அட்டைகள் வைத்திருந்தவர் கைது'


'ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற கடல் அட்டைகள் பிடிபட்டன'.

இது போல பல செய்திகளை நாம் சகஜமாக கடந்திருப்போம். ஆனால் பிடிபட்டவற்றின் மதிப்போ பல லட்சங்கள் . இந்த வாரம் கூட 'ராமேஸ்வரம் அருகே வில்லாயுதம் என்பவருக்குச் சொந்தமான தோப்பில் 300 கிலோ கடல் அட்டையைப் பதப்படுத்தி, இலங்கைக்குக் கடத்த இருந்தபோது போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 20 லட்சம்’ எனவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு விலை மதிப்புள்ளவற்றுக்கு இந்தியாவில் மட்டும் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது? அட்டைகள் ஏன் அதிகம் கடத்தப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் புறப்பட்டோம்.

கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியாவிலும் கடல்அட்டைகளைப் பிடிக்க அனுமதி இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 16 வருடங்களாக அவற்றைப் பிடிக்க தடை இருந்து வருகிறது. இது மட்டுமல்ல, இதன் வரிசையில் மொத்தம் 53 கடல் வாழ் உயிரினங்கள் பிடிப்பதற்குத் தடை இருக்கிறது. ஆனால், அவற்றுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமோக வரவேற்பு உண்டு. இதை அந்நாட்டு மக்கள் உணவுக்காகவும், மருந்துக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவற்றில் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ராஜ கடல் அட்டையானது அதிகமான விலைக்குப் போகும் . தடை அமலில் இல்லாதபோது மீனவர்கள் அதிகமாக அவற்றை வணிகம் செய்து வந்தனர். இப்போது நீடிக்கும் தடையால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


இவை அதிகமாகப் பிடிக்கப்பட்டால் அந்த இனம் அழிந்துவிடும் என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ஆனால், அவை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளை பொறிக்கும் என மீனவர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது. இந்தத் தடையை நீக்குவதற்காக மீனவர்கள் சார்பாக கடந்த 16 வருடங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால், மத்திய அரசுதான் அசைந்து கொடுத்தபாடில்லை. இவற்றைப் பிடிப்பதற்குப் பின்னால் மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளது என்பது மீனவர்களின் கருத்து.


கடல் அட்டைகளுக்கு எனத் தனியாக வலை கிடையாது. மீன் பிடிக்கும் வலையில் கடல் அட்டைகள் மாட்டிக் கொண்டு கரைக்குக் கொண்டு வந்தால் மீனவனுக்கு 7 ஆண்டு சிறைவாசமும் ரூபாய் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மீன்களைப் பிடிக்கும்போது, எதிர்பாராமல் வலையில் மாட்டிக் கொள்ளும் அவற்றால் சிறைவாசம் அனுபவித்த மீனவர்கள் ஏராளம். ஆனால், தடை செய்யப்பட்ட ஒன்றைத் திட்டமிட்டு விற்பனை செய்ய ஒரு கூட்டம் இயங்கத்தானே செய்யும். அதேபோலத்தான் தமிழ்நாட்டிலும் இதற்கு ஒரு நெட்வொர்க் இருக்கிறது.

இந்த அட்டைகள் பல ஆசிய நாடுகளில் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவற்றை உணவாக எடுத்துக் கொள்வதால் உடலிலுள்ள நோய்கள் குணமாகும் என சீனாவில் மரபு வழி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிகமாக சோர்வு, இயலாமை, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மூட்டு வலி இந்த வகை நோய்களுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், கடல் அட்டைகளில் உள்ள காண்டிரைட்டின் சல்பேட், கீழ்வாத நோயையும் குணப்படுத்த உதவும் என்கிறார்கள் சீனர்கள். இத்தகைய சிறப்பு கொண்ட அட்டைகளைப் பிடிப்பதற்கு உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பக்கத்து நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இவற்றைப் பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவற்றைப் பண்ணை முறையில் வளர்க்க அந்நாட்டு அரசு மானியமே வழங்குகிறது. ஆனால், ஆரோக்கியமான கடல் அட்டைகள் கிடைப்பது என்னவோ தமிழக கடற்பகுதிகளில்தான். அதனால்தான் தமிழகத்தில் இருந்து இலங்கைப் பகுதிகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் அவை கடத்தப்பட்டு வருகின்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
மின்மினிப் பூச்சியின் லவ்வுக்கும் அதன் ஒளிக்கும் என்ன தொடர்பு தெரியுமா?


மார்க் பிரென்ஹாம் (Mark Branham) என்பவர் மின்மினிப் பூச்சிகளைத் தனது ஆய்வுக்காகச் சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் பிடித்த ஒரு பூச்சியைக் குப்பியில் போடவேண்டும். ஒரு கையில் பூச்சி, மற்றொரு கையில் குப்பி. குப்பி மூடியைத் திறக்கவேண்டுமே!மின்மினிப் பூச்சியைத் தன் உதடுகளுக்கிடையில் வைத்துக்கவ்விக்கொண்டார். அதை அழுத்திவிடாதவாறு ஜாக்கிரதையாகத்தான் வைத்திருந்தார். இருப்பினும் அந்தப் பூச்சியின் உடலிலிருந்து வெளியான ரசாயனம் அவர் உதடுகளில் பரவியதை அவரால் உணரமுடிந்தது. அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் குப்பியைத் திறந்து பூச்சியைப் பத்திரப்படுத்தினார். அதன்பிறகு சில நிமிடங்களில் அவரது உதடுகள் அரிக்கத் தொடங்கின. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த அரிப்பைத் தொடர்ந்து உணர்ச்சிகளை இழந்து உதடுகள் மரத்துப்போயின. தொண்டையின் அளவு சுருங்கியதைப் போன்றதோர் உணர்ச்சிக்கு ஆளானார் பிரஹான்.

உதடுகளில் பட்ட சில துளிகளே அவரை அடுத்த 30 நிமிடங்களுக்குத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. இனி அதை எந்தக் காலத்திலும் வாயில் வைக்கவே மாட்டேனென்று அவர் அன்று முடிவு செய்தார்.


இது நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. மின்மினிப் பூச்சிகள் தங்கள் உடலிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி, வேட்டையாடிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே. அதன்பிறகு நடந்த ஆராய்ச்சிகள் முந்தைய அறிஞர்களின் அந்தக் கூற்றை உறுதி செய்ததோடு மற்றுமோர் அரிய தகவலையும் அளித்துள்ளது. மின்மினிப் பூச்சிகள் இனப்பெருக்கக் காலங்களில் தங்கள் பெண் துணையை ஈர்க்க இது மாதிரியான ஒளியினை அதிகமாக வெளிப்படுத்தும். வெளிப்படுத்தும் ஒளியின் நீளமும் நேரமும் எந்தப் பூச்சிக்கு அதிகமாக உள்ளதோ அதை வைத்தே பெண் பூச்சி தன் துணையைத் தேர்வுசெய்யும். அதிக நேரத்துக்கு நீளும் ஒளி அளவை வெளியிடும் பூச்சிகளிடம் அதிகமான கருக்களை உருவாக்குவதற்கேற்ப அதிகமான உயிரணுக்கள் இருக்குமாம். அதன்மூலமே பெண் பூச்சிகளால் அதிகமான முட்டைகளை உற்பத்தி செய்யமுடியும். 2 வாரங்களே நீளும் அவற்றின் இனப்பெருக்க காலத்துக்குப் பின் அவை இறந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமான முட்டைகளை இடுவதற்கான முறைகளில் ஒன்றாகவே இந்த ஒளி வெளியிடும் முறை நடைபெறுகிறது.

உலகில் 2000 வகை மின்மினிப் பூச்சிகள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் பனி மற்றும் வசந்த காலங்கள் முழுவதும் முடங்கிக் கிடக்கும் முட்டைகளிலிருந்து கோடைக்காலத்தின் மே மாத இறுதியிலிருந்து ஜூன் மாத இறுதிவரை பூச்சிகள் வெளிவரத் தொடங்கும். பொதுவாக அனைத்து வகைகளுக்குமே ஆயுட்காலம் சராசரியாக 2 மாதங்களே. அதற்குள் அவை வளர்ந்து தன் அடுத்த சந்ததிக்கான கருக்களை உருவாக்கிட வேண்டும். அந்த முட்டைகள் அடுத்த ஓர் ஆண்டுக்கு அப்படியே செயலற்றுக் கிடந்து அடுத்த ஆண்டின் கோடைக்காலத்தில் மீண்டும் உயிர்கள் பிறக்கத் தொடங்கும்.


தங்கள் குழந்தைகளின் பிறப்பைக் காணும் பேரின்பமோ, தங்கள் பெற்றொரைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்போ அவற்றுக்குக் கிடைப்பதேயில்லை என்பதே வேதனை. மிகவும் மென்மையான, அமைதியான, யாரையும் காயப்படுத்தாத மின்மினிப் பூச்சிகளின் கடந்த ஆண்டு முட்டைகளிலிருந்து இந்த ஆண்டுக்கான வாரிசுகள் பிறக்கத் தொடங்கிவிட்டன. வழக்கமான கோடையைப் போலவே இந்தமுறையும் மெக்கார்டின் வீட்டுத் தோட்டத்தில் மின்மினிப் பூச்சிகளின் அழகான வரவு அவரை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.


பெவெர்லி மெக்கார்டு (Beverly McCord) என்பவர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் டல்ஹஸீ (Tallhassee) என்ற பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதியில் அதைப் போலவே அவர் தனது வீட்டுத் தோட்டத்தைப் பார்த்தவாறு வீட்டுக்குள் கண்ணாடிக் கதவுகளுக்கு அருகே அமர்ந்திருந்தார். அந்தச் சமயத்தில் கண்ணாடிக் கதவில் வந்து ஒட்டிக்கொண்ட தவளை ஒன்று அதைக் கடந்துசென்ற ஒரு மின்மினிப் பூச்சியை லபக்கென்று நாக்கை நீட்டிச் சுழற்றியிழுத்து விழுங்கிவிட்டது.

அந்தத் தவளை அவரது அந்தக் கண்ணாடிக் கதவில் எப்போதுமே வந்தமரும் ஒரு சாதாரண மரத் தவளைதான். அது அன்று அங்கே அமர்ந்ததையோ, மின்மினியை வேட்டையாடியதையோ அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதை வேட்டையாடிய பிறகு தவளையின் தொண்டையில் மினுக்கிக்கொண்டிருந்த மின்மினிப்பூச்சியே அவரது கவனத்தை ஈர்த்தது.


மரத் தவளை தொண்டையில் மினுக்கிக் கொண்டிருந்த மின்மினியைத் தன் கைபேசியில் காணொளியாகப் பதிவுசெய்துள்ளார். 20 ஆண்டுகளுக்குமுன் பிரான்ஹாமின் உதடுகளை மரத்துப்போக வைத்த மின்மினிப் பூச்சிகளின் திரவம் இந்த மரத் தவளையை ஒன்றும் செய்யமுடியவில்லையோ என்ற கேள்வி அந்தக் காணொளியைப் பார்த்த ஆய்வாளர்களுக்குத் தோன்றாமலில்லை.


அதற்கும் முன்னால் அன்று பிரன்ஹாம் உதடுகளைத் தாக்கிய ரசாயனம் என்ன என்பதைப் பற்றி நாம் சிறிது தெரிந்துகொள்வோம். உயிருள்ளவை வெளியிடும் ஒளி வகைகளில் மின்மினிகள் என்றுமே தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றின் அடிவயிற்றிலிருக்கிறது லூசிஃபெராஸ் (Luciferase) என்ற வேதியியல் பொருள். அது வெளியிடும் லூசிஃபெரின் (Luciferin) என்ற ரசாயனமே இந்த ஒளி வெளிப்பாட்டுக்கு மூலகாரணம். அந்த ஒளிக்கான ஆற்றலைத் தருவது வேதியியல் பொருளில் லூசிஃபெரினோடு கலந்து வெளிப்படும் அடினோசின் டிரைபாஸ்பேட் (Adenosine Triphosphate) என்ற மூலக்கூறு. இவை இரண்டும் கலந்து வெளியாகும் சமயத்தில் அவற்றோடு ஆக்சிஜன் கலக்கும்போது இத்தகைய ஒளியை வெளிப்படுத்துகின்றன.


அந்த ஒளி பெண் துணைகளை இனப்பெருக்கத்துக்காக ஈர்ப்பதையும் தாண்டி, தற்காப்புக்காகவும் பயன்படுத்தப்படுவதாக முன்னரே பார்த்திருந்தோம். ஏனென்றால் அதே திரவத்தை அவற்றால் ஒளி ஏற்படுத்துவதைப் போலவே வெளியிடவும் முடிகிறது. விஷத்தன்மை நிறைந்த திரவம் 20 ஆண்டுகளுக்கு முன் பிரன்ஹாமுக்குச் சுமார் 30 நிமிடங்கள் மிகுந்த சிரமங்களைக் கொடுத்தது. அந்த அளவு ஒரு தவளைக்குத் தந்திருந்தால் அது மடிந்தே போயிருக்கும். அப்படியிருக்க தவளை இறக்காமலிருந்தது அனைவருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

மின்மினிகளின் ஒளி தனக்கான துணையை ஈர்ப்பதுபோக அவற்றிடமிருக்கும் விஷத்தன்மை வாய்ந்த தற்காப்பு யுக்திகளைப் பற்றிய மிரட்டலாகவும் பார்க்கப்பட்டது. அனைத்து வகையான பூச்சிகளையும் அவற்றின் விஷத்தன்மையை முறித்து உணவாக எடுத்துக்கொள்ளும் பல்லிகளுக்கே மின்மினிகள் யமனாக வாய்த்த சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு. ஆய்வுக்கூடத்தில் ஒருமுறை பொகோனா என்ற வகையைச் சேர்ந்த பள்ளிக்கு மின்மினியை உணவாகக் கொடுத்திருக்கிறார்கள். அதைச் சாப்பிட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்தப் பல்லி விஷத்தன்மையால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.


ஆனால், இந்த மரத் தவளையின் உடலில் சுமார் 15 நிமிடங்கள் மினுக்கிக்கொண்டிருந்த மின்மினிப் பூச்சி சிறிது சிறிதாகத் தன் உயிரைவிட்டது. ஆனால், அதைச் சாப்பிட்ட தவளைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. உலகின் அனைத்து வகையான உயிர்களுக்கும் அவற்றுக்கேற்ற வேட்டையாடிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒருவேளை அதைப் போன்றதொரு வேட்டையாடியாக இந்த மரத் தவளை இருக்கலாமென்கிறார்கள் ஆய்வாளர்கள். அதே சமயம், அதைத் தொடர்ச்சியாக நாம் கவனிக்கவில்லை. ஒருவேளை அது அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களில் இறந்தும்கூட இருக்கலாமென்கிறார்கள் மற்றுமொரு குழுவினர்.


உண்மை என்னவென்பது அந்தத் தவளையை மீண்டும் பார்த்தால்தான் தெரியும். ஆனால், அதற்கு அடுத்த தினங்களிலிருந்து இன்றுவரை அந்தத் தவளை தனது வீட்டின் கண்ணாடிக் கதவுகளை நோக்கி வரவேயில்லை என்கிறார் பெவெர்லி மெக்கார்டு.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.