Fish can remember up to 12 days later!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
ஆடுகளால் உங்கள் முகத்தைப் படிக்க முடியும்'

சிரிக்கும் மனித முகங்களையும் கோப முகங்களையும் ஆடுகளால் வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்கிறது ஓர் ஆய்வு. மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்களின் படங்களை ஆடுகள் ஆர்வத்துடன் தேடும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவு பின்வருமாறு:
1535683187463.png


''இந்த ஆய்வுக்கு 20 வளர்ப்பு ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிடம் ஒரே மனிதரின் மகிழ்ச்சியான முகம் கொண்ட புகைப்படமும் கோபமான புகைப்படமும் காட்டப்பட்டன. 20 ஆடுகளுமே புன்னகை நிறைந்த முகத்தையே அணுக விரும்பின. தங்கள் மோவாயால் தொட்டன.

ஆடுகள் அனைத்தும் மகிழ்ச்சியான முகத்தைப் பார்க்கவும் அணுகவும் சராசரியாக 1.4 விநாடிகளை எடுத்துக்கொண்டன. கோபமான முகத்துக்கு 0.9 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொண்டன.

அதாவது ஆடுகள் கோபமான முகத்தை விட மகிழ்ச்சியான முகத்தைப் பார்ப்பதில், 50% அதிகமான நேரத்தைச் செலவழிக்கின்றன. இதன்மூலம் கால்நடை விலங்குகள் தங்கள் சூழலை விளக்கும் நவீன மனதைக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவருகிறது''.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் ராயல் சொஸைட்டி ஓப்பன் சைன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
Traffic noise may be making birds age faster

Traffic noise may make birds age more quickly than is natural, scientists have found. A study on
zebra
finches suggested those exposed to the sounds of road vehicles were less protected from damage linked with ageing. Previous research had concluded that urban birds have shorter lifespans than their rural counterparts, and academics believe high levels of artificial noise may play a role.

Researchers at the Max Planck Institute for Ornithology in Germany and
North Dakota State University
investigated the effect of traffic noise on the length of the
telomere
— caps on the ends of chromosomes that protect genes from damage — of offspring zebra finches, a species native to
Australia
. Shorter telomeres indicate accelerated biological ageing.

The study, published in Frontiers in Zoology, said that zebra finches exposed to traffic noise after they had left the nest had shorter telomeres at 120 days old even than those exposed to noise before they had left the nest and whose parents were exposed to traffic noise during courtship, egg-laying, and nesting. Finches exposed to noise after leaving the nest also had shorter telomeres than those that had not been exposed to traffic at all.

Dr Adriana Dorado-Correa, co-author of the study, said: “Our study suggests that urban noise alone, independent from the many other aspects of city life, such as light pollution or chemical pollution, is associated with increased telomere loss and may contribute to ageing in zebra finches.” The author suggested that the time between 18 and 120 days after hatching is a critical period during which birds are more affected by noise. This period is when zebra finches begin learning songs, which may make them more sensitive to noise.

Previous research has found birds sing differently in response to industrial or traffic noise, which potentially affects their ability to attract mates and defend their territory. A 2016 study suggested traffic noise may endanger wild birds by making it harder for them to hear alarm calls.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
டைனோசர்களின் நிறம் என்ன?

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த, டைனோசர்கள் இனத்தைப் பற்றி அவற்றின் எலும்புகளை வைத்துத்தான் நமக்குத் தெரியவந்தது.

பூமிக்கடியில் புதையுண்டு, கல்லாகிப் போன எலும்புகளை மட்டும் வைத்து, 'பேலியன்டாலஜி' என்ற டைனோசர்களை ஆராய்யும் துறை உருவானது.

இப்போது, டைனோசர்களின் நிறத்தைப் பற்றியும் ஆராய்வது அவசியம் என, டைனோசர் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஏன்? விலங்குகளின் தோல் நிறம் தெரிந்தால் அவற்றின் பழக்க வழக்கங்கள், பரிணாம வளர்ச்சி உட்பட பலவற்றையும் துல்லியமாக அறிய முடியும்.

தோலின் நிறத்தை விலங்குகள் இனக் கவர்ச்சி, இரை தேடல், இரையாகாமல் தப்பித்தல், ஆதிக்கத்தை நிலை நாட்டுதல் போன்ற பல நடத்தைகளுக்கு பயன்படுத்துகின்றன.

டைனோசர்களும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனவே, பச்சை, கருப்பு, பழுப்பு போன்ற நிறங்களில், டைனோசர்களை வரைவது வெறும் ஊகம்தான் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
யானைகளுக்கு மோப்ப சக்தி உண்டா?

துதிக்கையை வைத்து யானைகளால் சுவாசிக்கவும், தகவல் பரிமாறவும், கனரகப் பொருட்களை துாக்கவும் முடியும். தென்னாப்ரிக்காவிலுள்ள பெல்லா பெல்லா யானைகள் காப்பகத்தில், விஞ்ஞானிகள், யானைகளின் மோப்ப சக்திக்கு துதிக்கை உதவுகிறதா என்பதை கண்டறிய முயன்றனர்.
யானைகள் உண்ணும், 11 வகை செடி, கொடிகளை மறைத்து வைத்தனர் விஞ்ஞானிகள். அந்த செடிகளில், 6 செடிகள் யானைகளுக்கு பிடித்தவை. மீதி, 5 செடிகள், அவ்வளவாகப் பிடிக்காதவை.

சோதனையின்போது, மூடப்பட்ட ஒரு பாத்திரத்தில் யானைகளுக்குப் பிடித்த செடிகளும் மறு பாத்திரத்தில் அவ்வளவாகப் பிடிக்காத செடிகளும் இருந்தன. யானைகள், தங்கள் துதிக்கையால் மோப்பம் பார்த்து, சரியாக, பிடித்த செடிகளையே எடுத்து அசைபோட ஆரம்பித்தன. இதிலிருந்து யானைகள், தும்பிக்கையை உணவு தேடவும் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

இந்த ஆய்வின் முடிவு, 'அனிமல் பிஹேவியர்' இதழில் வெளியாகியுள்ள
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
Why are humans generous? An ape's gift to an ape offers clues

How generous is an ape? It is a hard question for scientists to tackle, but the answer could tell us a lot about ourselves. While it is easy to dwell on our capacity for war and violence, scientists see our generosity as a remarkable feature humans.

To understand the origin of this impulse, researchers have turned to our closest living relatives. A new study involving bonobo apes suggests that the roots of human generosity run deep, but only came into full flower over the course of the evolution of our species. Roughly 7 million years ago, our lineage split from the ancestors of chimpanzees and their cousin species, bonobos.

These two closely related species have evolved some intriguing differences in their behavior, including which objects prompt them to behave with generosity. Christopher Krupenye, a primate behavior researcher at the University of St Andrews in Scotland and his colleagues tested the generosity of bonobos. They proved to be generous - to a point.

For their experiment, the researchers took advantage of the fact that the Lola Ya Bonobo apes have learned to crack open palm nuts with rocks. The scientists put one bonobo in a cage with five nuts. In an adjacent cage, a second bonobo had two rocks, but no nuts. The cages were connected by a window.

The researchers found that in 18% of the trials, the bonobos with the nuts handed one through the window to their neighbor. But the bonobos in the other cage refused to pass one of their rocks. In another experiment, each bonobo would sit in a cage with a stick. Then Krupenye would come to the doorway and beg for the stick. The bonobos rarely handed it to Krupenye.

Surprisingly, studies involving chimpanzees in the same situations gave the opposite results. They were willing to share their tools but not their food.

It is possible that the separate evolutionary paths of bonobos and chimpanzees have shaped their generosity. Chimpanzees live in habitats where food is often scarce. Bonobos, by contrast, live in forests where food is far more abundant.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
மூங்கில் தவளை

தவளைகள், பூமியின் ஆச்சரிய உயிரினங்கள். தவளைக்கும் தேரைக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய பலரும் திணறுவார்கள். சில நேரம் அனுபவம்மிக்க இயற்கையியலாளர்களால்கூட முதல் பார்வையில் வேறுபாட்டை அறிய முடிவதில்லை. அவற்றின் பண்புகள் பலவும் ஒத்திருக்கின்றன. ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் தேரைகளில் மிதமான நச்சுத்தன்மை கொண்ட உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படும். இந்தச் சுரப்பி தலையின் பின்புறம் உள்ளது.

பெரும்பாலான தவளைகளும் தேரைகளும் காற்று உட்புகும் திறன் கொண்ட தோல் மூலம் (cutaneous gas exchange) சுவாசிக்கின்றன. அதேநேரம் சுவாசிப்பதற்கு நுரையீரல்களையும் பெற்றுள்ளன. இவை நீருக்கடியில் மூழ்கியிருக்கும் நேரத்திலோ மண்ணுக்குள் புதைந்திருக்கும் நேரத்திலோ தோலின் மூலமாக மட்டுமே சுவாசிக்கின்றன.

தவளைகள், தேரைகள் பழமையான முதுகெலும்புள்ள நீர்நில வாழ்விகள் குழுவைச் சேர்ந்தவை. வெப்பமண்டலங்கள், வறண்ட பகுதிங்களில் உள்ள ஈரப்பதமுடைய வாழிடங்களில் இவை அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் இலையுதிர், பசுமை மாறாக்காடுகளில் தவளைகள் அதிகம் வசிக்கின்றன. சில இனங்கள் மரங்கள், நிலத்துக்கு அடியில், பாறையில், மற்றும் சில புல்வெளிகளில், ஏன் பாலைவனம் போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில்கூட சில வகைகள் வாழ்கின்றன.

தவளைகள் சுற்றுச்சூழலுக்கு நன்மைபயக்கும் உயிரினங்கள். அதேநேரம், உலக அளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குத் தவளைகள் தற்போது அழியக்கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. வாழிட அழிவு, மனிதச் செயல்பாடுகளால் உருவாகும் மாசால் இவற்றின் சுற்றுச்சூழல் நஞ்சேறி கொண்டிருக்கிறது.

காக்காயம் தவளை

இந்தியாவில் தவளைகள் குறித்த ஆய்வுகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. காக்காயம் மூங்கில் தவளை மிகவும் சிறியது. சுமார் 2 முதல் 2.5 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. Raorchestes ochlandrae என்னும் அறிவியல் பெயரில் அறியப்படுகிறது. இவை கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தின், காக்காயம் என்னும் காட்டு பகுதில் கண்டறியப்பட்டதால் இந்தப் பெயரைப் பெற்றன.

மூங்கில் வளருமிடங்களில் மட்டுமே இவற்றைக் காண முடியும். மற்ற தவளைகளைப் போல, இவை இலைகளில் முட்டைகளை இடுவதில்லை. இவை மூங்கில் இடுக்குகளில் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை இடுகின்றன.

மழைக் கால மாலை வேளையில் அதிக எண்ணிக்கையில், சப்தமிடும் இந்தத் தவளைக் கூட்டங்களை காணலாம். அழகிய கண்களுடன், முக்கோண வடிவிலான தலைகளைக் கொண்டிருக்கும். தோல் பகுதி உலராமல் இருக்க, அடிக்கடி நீரைத் தேடி செல்கின்றன. ஆறுகளை ஒட்டிய காடுகளில் வளரும் ஓக்லாண்ட்ரா என்ற மூங்கிலைச் சார்ந்தே இந்த தவளைகளின் வாழ்க்கை அமைந்துள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
வித்தியாசமான வடிகட்டி!

1539225057054.png

திரவத்தில் உள்ள மாசுதுகள்களை பிரித்தெடுக்க வடிகட்டிகளை பயன்படுத்துவர். திரவத்தில் கலந்திருக்கும் மாசுத்துகள்களில் பெரிய அளவில் உள்ளவை வடிகட்டியின் துளைகளுக்குள் போக முடியாமல் மேலே தங்க, திரவம் எளிதாக துளை வழியே போய்விடும்.

இருந்தாலும், மேலே தங்கிய மாசுத்துகள்கள் துளைகளை அடைத்துக்கொள்ளும். இதை தவிர்க்க முடியாதா? இந்தக் கேள்வியுடன் விஞ்ஞானிகள் கடலில் வாழும், 'மந்தா ரே' என்ற அகண்ட வாய் கொண்ட மீனை கவனித்தனர். மந்தா ரே, மிகச் சிறிய உயிரிகளைத்தான் உண்டு வாழ்கிறது.
அதன் வாய் வழியே நீரை உறிஞ்சி அடக்கி, அதன் உடலின் அடிப்பகுதியில் உள்ள செவுள்களின் வழியே நீரை வெளியேற்றும்.

அப்போது, செவுள் பகுதியில் அதிநுட்பமான கொக்கி போன்ற அமைப்புகள், நீரிலுள்ள பெரிய உயிரிகளை வெளியேற்றிவிட, கொக்கியில் சிக்கிய நுண் உயிரிகளை உடலுக்குள் தள்ளுகின்றன.

இதே ஏற்பாட்டை செயற்கையாக செய்து, அதை வடிகட்டியாக பயன்படுத்த முடியுமா என, அமெரிக்காவிலுள்ள ஓரிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு, நகர்ப்புற சாக்கடை நீரை சுத்தி கரிக்க முடியுமா என, அவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அதேபோல, கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையை மட்டும் வடித்தெடுக்கவும், இத்தகைய தொழில்நுட்பம் பயன்படலாம்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.