Fish Spa - புத்துணர்வு தரும் ஃபிஷ் ஸ்பா

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
புத்துணர்வு தரும் ஃபிஷ் ஸ்பா

த்தை, அட்டைப்பூச்சி, பாம்பு, மீன், யானை போன்ற உயிரினங்களும்கூட இப்போது மருத்துவ உதவிக்கு ஓடி வந்துவிட்டன. அட்டைப் பூச்சியைப் பயன்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் வழக்கம் ஆயுர்வேதம் உள்ளிட்ட பல மருத்துவமுறைகளில் இருந்துவருகிறது. ஜப்பானிலும் ஐரோப்பாவிலும் முகத்தில் நத்தையை ஊர்ந்துபோகச் செய்து ‘நத்தை ஃபேஷியல்’ செய்கின்றனர். தாய்லாந்தில் பாம்பு மற்றும் யானைகள்கூட மனிதர்களுக்கு மசாஜ் செய்கின்றன. துருக்கியில் மீன்கள் ‘பெடிக்யூர்’ மற்றும் ‘மெனிக்யூர்’ செய்வது பிரபலம். இந்த சிகிச்சை இப்போது, இந்தியாவிலும் பிரபலம் அடைந்துவருகிறது. இந்த மீன்களுக்கு ‘டாக்டர் ஃபிஷ்’ என்று பெயா்.


டாக்டர் ஃபிஷ் என்ன செய்யும்?

இந்த மீன்களுக்குப் பற்கள் கிடையாது. வாயால், நம் கால்களில் உள்ள வெடிப்புப் பகுதி, இறந்த செல்கள், அழுக்கு போன்றவற்றைச் சுத்தம் செய்யும். வலி, எரிச்சல் எதுவும் இருக்காது. கைகள், கால்களை நீரில் வைத்த சில நொடிகளுக்கு கூச்சமான உணர்வு இருக்கும். பிறகு, மசாஜ் போல மென்மையாக இருக்கும்.

ஃபீல் அண்டு ரிலாக்ஸ்
ஃபிஷ் ஸ்பா சிகிச்சை, 10-15 நிமிடங்களில் முடிந்துவிடும். மாதம் ஒருமுறை செய்துகொள்ளலாம். தினமும் செய்துகொள்ளக் கூடாது. அப்படியே செய்தாலும், இறந்த செல்களைத்தான் உண்ணும் என்பதால், டாக்டர் மீன்கள் நம் கை, கால்களின் அருகில் வராது.


பலன்கள்

கை, கால்களில் இருக்கும் கிருமிகளை மீன்கள் சாப்பிட்டுவிடும். வெடிப்புகள் சரியாகும்.

இறந்த செல்கள் நீங்கும். பாதங்கள் மென்மை ஆகும்.

ஒரு மீன் கடிக்கும்போது, எந்த உணர்வும் தெரியாது. ஆனால், நிறைய மீன்கள் கடிக்கும்போது, அக்குபிரஷர் செய்தது போன்ற உணர்வு கிடைக்கும். நுண்ணிய மசாஜ் உணர்வைப் பெறலாம்.

கால் மற்றும் கைப்பகுதிகளில், சீரான ரத்த ஓட்டம் நடைபெறும்.

கிச்சுகிச்சு மூட்டும் உணர்வால் (Ticklish sensation) மூளையில் உள்ள எண்டார்பின் சுரப்பு அதிகரித்து, மகிழ்ச்சியான உணர்வு மேலிடும்.

கரும்புள்ளிகள், தழும்புகளின் நிறம் மாறும்.

டென்ஷன், மன அழுத்தம், மன உளைச்சல் மறையும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.