Food itself is a medcine - உணவே மருந்து

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
ஹிப்போகிரேட்டஸ் என்கின்ற கிரேக்க மருத்துவர் ‘ மருத்துவ உலகின் தந்தை ’ என்று மதிக்கப்படுபவர் , தன்னுடைய வாழ்வையே மருத்துவ வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர்.
மருத்துவம் என்பது உயர்ந்த தனிமனிதத் தரத்தை கொண்டிருப்பது அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால் மருத்துவர்கள் எல்லாரும் ஒரு சபதமேற்ற பிறகு தான் பணியை தொடங்க வேண்டும் என்கின்ற நியதியை அவர் ஏற்படுத்தினார். அவர் எழுதிய மருத்துவக் குறிப்புகளில் ’Hyppocratic Oah ’ என்பதுதான் இறுதியாக இடம் பெற்று இருக்கிறது.
ஒவ்வொரு பணிக்கும் ஒரு தொழில் தர்மம் இருக்கிறது. அவர் எழுதிய அந்த சபதம் மற்ற எல்லாத் தொழில்களுக்குமே பொருந்துவதாகத் தானிருக்கிறது. தமிழகத்திலும் மருத்துவ முறைகள் நிறைய இருந்திருக்கின்றனர். இங்கு பல துறவிகள் தான் மருத்துவக் கலையை வளர்த்திருக்கிறார்கள்.
உடலின் மீது பிடிப்பு இல்லாமல் அதை ஒரு சாட்சியாக நின்று பார்க்க யாரால் முடிகிறதோ அவர்கள் தான் விருப்பு வெறுப்பில்லாமல் உடலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என்பது கிழக்கத்திய மரபு.
நாடி ஒன்றை வைத்துக்கொண்டே உடல்நலக் கோளாறுகளை அறியமுடியும்.
‘ நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ’
என்று கூறியதாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
பெருவிரலில் பூதநாடியும், ஆள்காட்டி விரலில் வாத நாடியும், நடுவிரலில் பித்தநாடியும், புவத்திர விரலில் கபநாடியும், சுண்டுவிரலில் பூதநாடியும், ஐந்துள்ளும் சேர்ந்து குருநாடியும் இருப்பதாகப் பஞ்சபூத நாடிகள் இருக்கும் விவரம் பழம் சித்த நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
நம் உடம்பு உணவுடம்பு எனவும், வளியுடம்பு என்றும், மன உடம்பு, அறிவுடம்பு, இன்ப உடம்பு, என்றும் ஐந்தாக ஆக்கப்பட்டிருக்கின்றது என்றும், மூலாதாரம், சுவாதிட்டாணம், மணிபூரகம், அனாகதம், வீசுத்தி, ஆக்கினை என்றும் ஆறு ஆதாரங்கள் அடங்கியிருக்கின்றன் என்றும், அக்னி, சூரிய சந்திர மண்டலங்கள் உண்டென்றும் அவர்கள் கண்டறிந்தார்கள்.
ஒவ்வொரு மனிதனுமே சின்னப் பிரபஞ்சம் என்பது தான் இன்றும் அறிவியல் கூறும் தத்துவம், அதை அந்த நாளிலேயே கண்டு அறிந்திருக்கிறார்கள் சித்தர்கள்.
உடல் உபாதைகளையெல்லாம் பஞ்ச பூதங்களின் அடிப்படையிலேயே தீர்த்துவிட முடியும் என்பதும், இவற்றின் சமத்தன்மை குறையும்போதுதான் நோய் நொடிகள் ஏற்படுகின்றன என்பதும் அவர்கள் எளிமையாகக் கண்டறியும் தத்துவம்.
இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் வலிமையோடு வாழ முடியும் – உழைப்புக்குப் பின் ஏற்படும் ஓய்வில்தான் சுகம் இருக்க முடியும்.
இன்று மருத்துவர்கள் குறிப்புச்சீட்டு எழுதும்போது பெரிய எழுத்தில் ’R’ என்று ஆங்கில எழுத்தை நீளமான வாலுடன் எழுதுகிறார்கள். அது ஆயிரமாண்டு பின்னணியைக் கொண்டது.
‘R’ என்பது லேட்டின் ரிசீப்பியைக் குறிக்கும்.
நீள வால் – கடவுள் ஜோவைக் குறிக்கும்.
“உங்களுக்குத் தெரிந்து எல்லா வியாதியையும் போக்கும் மருந்து ஏதாவது இருக்கிறதா?” என்று அனுபவம் வாய்ந்த ஒரு மருத்துவ நிபுணரைக் கேட்டார்கள்.
“தெரியும்! அது வியாதியைப் போக்காது. ஆனால் வியாதியே வராமல் பாதுகாக்கும். அதன் பேர் உழைப்பு!” என்றார்.
தகுந்த உணவு – சிறந்த உழைப்பு – தேவையான ஓய்வு – இனிய நினைவுகள் – எளிய வாழ்க்கை ஆகியவை, மனிதனின் உடல்நலம் சீராக இருக்க உதவுபவை.
ஒரு நோயாளியை வாயைத் திறக்கும்படி சொன்னார் மருத்துவர்.
அகில உலகமே உள்ளே போகுமளவு பெரிதாகத் திறந்தார் அவர்.
“ஏன் இவ்வளவு பெரியதாகத் திறக்கிறீர்கள்” என்றார் மருத்துவர்.
“அதை ஏன் இத்தனை முறை திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் அவர்.
“ஒருமுறைதான் சொன்னேன் – மற்றவையெல்லம் எதிரொலி” என்றார் மருத்துவர்.
நன்றி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.