Food products which act against Cancer-புற்றுநோயைத் துரத்தும் அஞ்சறைப்&#2986

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
புற்றுநோயைத் துரத்தும் அஞ்சறைப்பெட்டியும் அசத்தல் பொருட்களும்!புற்றுநோய் செல்களை அழிக்கும் மசாலா பொருட்கள்...

நாள்தோறும் சமையலில் ஒரு சிட்டிகை, அரை டீஸ்பூன் என்ற அளவிற்கு இந்த மணமூட்டிகளை சேர்த்தால் போதும். உடல் ஆரோக்கியமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நவீன வாழ்வியல்முறை நம்மிடையே நிகழ்த்தி இருக்கும் மாற்றங்களும் தவறான உணவுப் பழக்கமும் நமக்குத் தந்த துயரப் பரிசு, புற்றுநோய். ‘பிளாஸ்டிக் தவிர்ப்போம், மது, புகை வேண்டாம், ஆர்கானிக் ஃபுட்ஸ் நல்லது’ என புற்றுநோயைத் தடுப்பதற்கான அறிவுரைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வு அதிகரிக்க அதிகரிக்க, மறுபுறம் பயமும் அதிகமாகிறது. ‘நமக்கும் வந்துவிடுமோ எனும் பய உணர்வே நோயாளியாக மாற்றிவிடும். தேவையற்ற பயத்தைக் கைவிட்டு, ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுங்கள்’ என்கின்றனர் டாக்டர்கள்.


இதற்காகப் பிரத்யேக உணவுமுறையைத் தேடி அலைய வேண்டியது இல்லை. நமது அஞ்சறைப் பெட்டியில் உள்ள லவங்கம், பட்டை, சீரகம், தனியா, மஞ்சள் போன்றவை வெறும் மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் மட்டும் அல்ல; புற்றுநோயைத் தடுக்கும் போர்வீரர்கள். ஆரோக்கியம் பேணும் அருமருந்துகள்.

மஞ்சள்... மகிமை
மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ என்ற பாலிபினால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். தினசரி உணவில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்துக்கொள்பவர்களுக்கு, சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

தனித்துவம் மிக்க தனியா
உடலில் இருக்கும் கிருமிகளை அழித்து, உணவால் உருவாகும் நோய்களைத் தடுக்கிறது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, பித்தநீர் வெளியேறத் தூண்டுகிறது. இதனால், பெருங்குடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கப்படுகிறது.

பலே லவங்கம்
நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் லவங்கத்துக்கு உண்டு. தொடக்க நிலை எனில், புற்றுநோய் செல்களை மேலும் பரவாமல் அழிக்கும். இதை, ‘கீமோ ப்ரிவென்டிவ்’ என்றே சொல்வதுண்டு.

சீரகம்... சிறப்பு

செரிமானத்தைச் சீராக்குவதுடன் புற்று நோயையும் தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதில் உள்ள கியூமினால் டிஹைட் எனும் சத்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மிளகு... மிரட்டல்
மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) புற்றுநோய் செல்களைத் தடுக்கும். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். இது, மஞ்சளோடு சேரும்போது பலன் இரட்டிப்பாகும். பைப்பரின் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும் ஆன்டிஇன்ஃபிளாமேட்டரியாகவும் செயல்படுகிறது.

சபாஷ் திப்பிலி
இதனை ‘நீட்டு மிளகு’ எனச் சொல்வார்கள். எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்; கிருமிகளை அழிக்கும்; ரத்தத்தைப் பெருக்கும். தொற்று, கட்டி உருவாகு தல் போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.

சுக்கு அல்ல... மருந்து
பெருங்குடல், மலக்குடலில் புற்றுநோய் செல்கள் தோன்றுவதையும் பரவுவதையும் தடுக்கிறது. சினைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

அதிசய அதிமதுரம்

அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகளைத் தீர்க்கும். ப்ராஸ்டேட், மற்றும் சருமத்தில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

மாசிக்காய்... மகத்துவம்
வாய்ப் புண்களைச் சரிசெய்யும். கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும். கிருமிகளை அண்டவிடாது.

ஜமாய்க்கும் ஜாதிக்காய்
வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ்,சி, ஃபோலிக் ஆசிட், பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ஒரு சிட்டிகை அளவு சேர்த்தாலே போதும்.


நெல்லி... சக்தி

எதிர்ப்பாற்றலைக் கூட்டும். தொற்றுக்களைக் குணமாக்கும். பாதிக்கப்பட்ட செல்களையும் சரிசெய்யும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

கலக்கல் கறிவேப்பிலை
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள ‘ஃபீனால்ஸ்’ எனும் ரசாயனம் ரத்தம், ப்ராஸ்டேட், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும். மேலும், இதில் உள்ள கார்பஸோல் ஆல்கலாய்ட்ஸ் (Carbazole alkaloids) புற்றுநோயை எதிர்க்கக்கூடியது.

கருஞ்சீரகம் காக்கும்
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள திமோக்யுனான் (Thymoquinone) ரத்தப் புற்றுநோய் செல்களை அழிக்கும். மார்பகம், மூளை, கணையம், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும்.

நித்யகல்யாணி காப்பு
ரத்த அணுக்கள் குறைபாட்டைச் சரிசெய்யும். சிறுநீர் போக்கைச் சீராக்கும். இதன் இலைகள் மற்றும் பூக்கள் ரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாகின்றன.

தான்றிக்காய் தடுப்பு

வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் வராமல் தடுக்கும். எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.

பட்டை... பலம்
பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.

கச்சிதக் கடுக்காய்
செரிமான சக்திக்கு உதவும். குடல் நோய்கள் வராமல் காக்கும். புண்கள் சரியாகும். எரிச்சல், வீக்கம் போன்றவை குணமாகும்.

ஜாதிபத்திரி... ஜோர்
செரிமான சக்திக்கு உதவும். வாயில் உள்ள கிருமிகளை அழிக்கும். வாய், நுரையீரல் தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும்

துளசி... துன்பம் தீர்க்கும்
புற்றுநோய் செல்களை எதிர்க்கும் மிகச்சிறந்த மூலிகை. மார்பகம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கற்றாழை காப்பாற்றும்
உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்றும். எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். கர்ப்பப்பை தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும். கர்ப்பப்பையில் உருவான புற்றுநோய் செல்களை அழிக்கும்.

சோம்பு... சூப்பர்
கல்லீரலைச் சுத்தப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கி, நச்சுகளை வெளியேற்றும். வயிறு, குடல் தொடர்பான தொற்றுக்களைச் சரிசெய்யும்.

பிரம்மி... பிரமாதம்
நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல் பிரச்னையைச் சரிசெய்யும். உடல் புத்துணர்வுடன் இருக்க உதவும். மூளை செல்களை ஆரோக்கியப்படுத்தும்.

 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
Re: Food products which act against Cancer-புற்றுநோயைத் துரத்தும் அஞ்சறைப்&a

Thanks for all these details.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.