Foods for new Moms

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,755
Likes
8,416
Location
India
#1
தோழிகளே,

New/nursing Mothersக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? உங்களுக்குத் தெரிந்ததை இங்கு ஷேர் செய்யுங்களேன். எல்லோருக்கும் உபயோகமாய் இருக்கும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine April 2017. You Can download & Read the magazines HERE.


 
Last edited by a moderator:

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,305
Likes
3,025
Location
Singapore
#2
Hi aparna,

Mostly wil take all foods. No restriction. First one week to ten days only dont use tamarind rasam. For that we can have tomato rasam.
Avoid brinjal.
For more lactation can eat bottlegourd, drumstick leaves, mutton liver,beetroot,carrot. All keerai s.except manathakali keerai.
Then can have al fruits too.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine April 2017. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,344
Likes
25,870
Location
Sri Lanka
#3
முதல் நாலு நாட்களுக்கு நிறைய சின்ன சீரகம், சிறிதளவு மல்லி, மஞ்சள் சேர்த்து அரைத்து (சரக்கு), பிஞ்சு முருங்கைக்காய் / பிஞ்சு கத்தரிக்காய், புளி, மிக சிறிதளவு உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து களி பருவத்தில் இறக்கி, கைக்குத்தரிசி கரையல் சாதத்துடன் இரு வேளை கொடுப்போம்.

ஐந்தாம் நாளிலிருந்து மரக்கறிக்குப் பதில் சிறிய மீன்/ கருவாடு இவற்றுடன் சிறிய துண்டு தேங்காய் சொட்டு, சிறிய பல் பூண்டு சேர்த்து அரைப்போம்.

பின் மெது மெதுவாக ஒன்று இரண்டாக மிளகும், சிறிது சிறிதாக மல்லியும் கூடுதலாக அரைப்பதற்கு சேர்ப்போம்.

முட்டை / கத்தரிக்காய், சின்னச் சீரக தூள் சேர்த்து நல்லெண்ணெயில் பொரித்து கொடுப்போம்.

மொத்தத்தில் சின்னச் சீரகம் எவ்வளவு கூடுதலாக சாப்பாட்டுடன் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்போம்.

************************************************

நன்றி கார்த்தி :).

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine April 2017. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,305
Likes
3,025
Location
Singapore
#4
Yes seeragam and garlic have to add more..
For me they gave fried garlic in ghee.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,358
Likes
77,399
Location
Hosur
#5
உபயோகமான திரி அபர்ணா.

  • வெந்தயத்தை இரவில் தண்ணீர் அல்லது தயிர் அவர்களை ஊற வைத்து, அதை வெறும் வயிற்றில் காலையில் உட்கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு புதிய தாய்மார்களும் பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் பால். ஏனெனில் பாலில் அவர்களுக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பாலானது தாயப்பாலின் சக்தியை அதிகரிக்கும். ஆகவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் 1 மணிநேரத்திற்கு முன், ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.
  • பால் வரத்தை அதிகரிப்பதற்காக அதிகளவில் தண்ணீரை பருக வேண்டும். அதனால் உங்களுக்கு தேவையான அளவில் தண்ணீரை நிரப்பி பாட்டில்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • காரமாய் சாப்பிட்டால் பிரசவித்த வயிறுக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்து பத்திய உணவு தயாரித்து கொடுப்பார்கள்.
  • பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் தயிரும் ஒன்று. இதனால் பிரசவத்தின் போது இழந்த கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்களை பெறலாம்.
  • ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் ஒரு கையளவு முந்திரி, உலர் திராட்சை, வால்நட் அல்லது பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும். மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, பாதாமை 10 நிமிடம் நீரில் ஊற வைத்து, தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine April 2017. You Can download & Read the magazines HERE.
 
Last edited:

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,423
Likes
16,833
Location
Singapore
#6
நிஜமாவே useful thread தான் இது அபர்ணா!

எங்கள் வீடுகளில் காரமே சேர்க்கமாட்டோம். புளிக்கும் தடா தான். தக்காளி, லெமன் ஜூஸ் வைத்து புளிப்பையும், காரத்துக்கு மிளகையும் வைத்து சமைப்பது வழக்கம்.

பிரசவம் ஆனால் வயிறு புண்ணாகி இருக்கும் என்பார்கள். என் முதல் பிரசவத்தின்போது என்னுடைய அம்மா வழி பாட்டி தாத்தா உயிரோடு இருந்தார்கள். முதல் பேத்தி பிரசவம்னு ரொம்ப ஆர்வமாவே வந்து கவனிச்சுகிட்டாங்க....இன்னிக்கும் அதே மாதிரி பத்திய சாப்பாடு செய்து அடுத்த தலைமுறையினருக்கு தந்தா சாப்பிடுவாங்களா தெரியாது. அப்படி பல restrictions இருந்தது சாப்பாட்டில்.

பிரசவ லேகியம்னு தருவாங்க. வாய்க்கு சுவையாதான் இருக்கும் ஆனா உடல் சூடு ஏற்படும். நிறைய பால் சாப்பிடனும். டம்ளர்ல எல்லாம் தரமாட்டாங்க... பஞ்சாயத்துகாரர்கள் மாதிரி சொம்புல வரும். ரொம்ப பிடிவாதம் பண்ணினா கொஞ்சமே கொஞ்சம் காபி டிகாஷன் கலந்து காபின்னு பேரில் வரும். சூடாவும் சாப்பிடக் கூடாது, பூனை மூத்திரம் மாதிரிதான் சூடு இருக்கணும்னு சொல்லிவேற தருவாங்க எங்க பாட்டி.

காலையில் தூக்கத்திலேயே ஒரு எலுமிச்சை அளவு லேகியம், (அப்புறம் எங்கே தூங்கறது?) பிறகு காபி. ரெண்டாவது முறை பூண்டு போட்டு காய்ச்சின பால். இது பால் அதிகம் சுரக்க உதவுமாம். சாப்பிடும் கொடுமைதான் பயங்கரம்.

இட்லி வித் பால் காலை உணவு. இது அடுத்த கொடுமை.

அப்புறம் பருப்பு தண்ணியில் தக்காளி போட்டு ரசம். அடுத்த நாள் மிளகு ரசம் (பேருக்கு புளித்தண்ணியில் செய்வார்கள்) ஆனா அது கொஞ்சம் புளின்னாலும் தேவாமிர்தமா இருக்கும்.

பீர்க்கங்கா துகையல் தருவாங்க. முதலில் சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி அதில் சாதம் பிசைந்து தருவாங்க. இது உடம்புக்கு குளுமை + பால் சுரக்கும் உணவு. அடுத்து கூட்டு சாதம். புடலங்கா, அவரைக்கா, சௌசௌ போல கொடுத்ததா நினைவு.

கீரை, பழம் எல்லாம் கொடுத்தாங்களா தெரியல...மறந்துட்டேன்.

மதியம் புளிப்பு இல்லாத தயிரு. இரவு பால் சாதம்தான்...பயங்கர கொடுமையா இருந்தது அப்போ.

நிறைய தண்ணி குடிக்கக் கூடாதுன்னு என் பாட்டி தண்ணியே கண்ணில் காட்ட மாட்டாங்க. இஞ்சி சொரசம்ன்னு ஒரு கார சார ஜூஸ் சொல்லுவாங்க...நான் சாபிடாமலேயே டபாய்ச்சிட்டேன். (இங்கே சீனர்களும் பிரசவித்தவர்களுக்கு இஞ்சி நிறைய தருவதைப் பார்க்கிறேன்) எப்படியும் சமையலில் இஞ்சியை எப்படியோ சேர்த்துடுவாங்க.

snacks போல வேணுமானா இலைவடாம்ன்னு அரிசி மாவில் வீட்டிலேயே செய்வாங்க...அதை காய்ச்சித்த்தான் தருவாங்க. எண்ணெய் அதிகம் சேர்க்க மாட்டாங்க. நெய்...நெய்...நெய்தான்.
(மொத்தத்திலே உடம்பு பீப்பாய் ஆகணும்ங்கறதுதான் கணக்கா?ன்னு சண்டை போடுவேன்)

எல்லாத்துக்கும் சிகரம் வைச்ச மாதிரி கொடுமை என்னன்னா, வெத்தலை போடணும். சும்மா இல்லை. முதலில் ரெண்டு வெத்தலைன்னு ஆரம்பிப்பாங்க, அடுத்தநாள் (எல்லாம் ரெண்டு வேளைன்னு தெரிஞ்சுக்கோங்க) மூணு, நாலுன்னு பதினைஞ்சு வரை போகும். மாடு மாதிரி வெத்தலை தான் மெயின் கோர்ஸான்னு கேக்கத் தோணும்.

கால்சியம் சேரணும்னு சுண்ணாம்பு சேர்ப்பது taste budsஐ கொலை பண்ணிடும். ஏற்கனவே காரம் இல்லாத சப்பு சப்புன்னு சாப்பாடு. வெத்தலை போட்டா நாக்கு மரத்தேதான் இருக்கும்.

"பார்க்க காந்திமதி மாதிரி அப்படியே இருக்கியே...ரெண்டு விரல் மத்திலே வெத்தலையை துப்ப கத்துக்கோ...பக்காவாயிடும்..."ன்னு என் அண்ணன்கள் பண்ண கலாட்டாவும் நினைவுக்கு வருது.

"உனக்குத்தான் நாக்கு மரத்திருக்கே...அப்படியே அள்ளிப் போட்டுக்கோன்னு அட்வைஸ் வேறே..."

ஆனா, எல்லாம் நல்லதுக்குத்தான். வாழைப்பழம் படத்திலே கூட காட்ட மாட்டாங்க. சீசன் ன்னாலும் மாம்பழம் எல்லாம் ஏக்கமா பார்க்க மட்டுமே முடியும். சம்சார சுகமாம் அது.

Jokes Apart!
நெய்யில் சின்ன வெங்காயம் வதக்கி சாப்பிடுவது,
பாலில்பிரட் ஊறவைத்து சாப்பிடுவது,
பூண்டுப் பால் இது மூணும் Nursing mothersக்கு ரொம்ப effectiveஆ இருக்கும்.

நிறைய கால்சியம் எடுக்கணும். அவங்கவங்க வீட்டுப் பெரியவங்க சொல்படி நடப்பதும் நம் த்யாகம்தான். செரிமானம் ஆகாத எந்த உணவும் கூடாது. நம் உணவு நம்மை ஒண்ணுமே செய்யாது, குழந்தையைத்தான் பாதிக்கும். அது ஒழுங்கா வளரும் வரை நம் நாக்கை கட்டுப் படுத்துவதுதான் சரி.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine May 2017. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,298
Likes
149,889
Location
Madurai
#7
Hhahahahaha Jiiii :p

//"பார்க்க காந்திமதி மாதிரி அப்படியே இருக்கியே...ரெண்டு விரல் மத்திலே வெத்தலையை துப்ப கத்துக்கோ...பக்காவாயிடும்..."//
 

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,423
Likes
16,833
Location
Singapore
#8
Hhahahahaha Jiiii :p

//"பார்க்க காந்திமதி மாதிரி அப்படியே இருக்கியே...ரெண்டு விரல் மத்திலே வெத்தலையை துப்ப கத்துக்கோ...பக்காவாயிடும்..."//
Rolling on the floorRolling on the floor

என்னை வைச்சு நிறையவே காமெடி பண்ணியிருக்காங்க... இப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வருது....
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,298
Likes
149,889
Location
Madurai
#9
Ha Ha... Athu thaane Jii Memories :p

Rolling on the floorRolling on the floor

என்னை வைச்சு நிறையவே காமெடி பண்ணியிருக்காங்க... இப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வருது....
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,333
Location
Puducherry
#10
நல்லெண்ணெயிில் உறித்த பூண்டு நிறைய வதக்கி் breadன் நடுவில் வைத்து சாப்பிட்டாாள் நிறைய பால் சுறக்கும். சுறா புட்டு் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். மீன் குழம்பு காரம் இ்ல்லாமல் வீட்டீில் செய்த்த துாள். சேர்ப்பபது நல்லது. பீட்ருட் நிறைய சேர்க்க வேண்டும். பொதுவாக சாப்பாட்டிள் காரம் தவிர்க்க்கவும் நிறைய நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்ககவும் வயிறு புண்ணு ஆறும். எங்க ஆயா நிறைய filter coffee குடிிக்க சொல்வாங்க பால் சுுறக்க்க உதவுுமாம்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.