Foods That Fight Heartburn - நெஞ்செரிச்சலை போக்கும் உணவுகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நெஞ்செரிச்சலை போக்கும் உணவுகள்


நெஞ்செரிச்சல் பிரச்சினை இன்றைக்கு பலரையும் பாதிக்கிறது. வாயில் சுரக்கின்ற அமிலம் உண்வுப்பாதையில் திரும்ப வருவதால் வயிறு அல்லது நெஞ்சில் வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, உப்புசம் ஏற்படுகிறது.

சரியான உனவுப்பழக்கத்தின் மூலம் இந்தப்பிரச்சினையை சரியாக்கிக்கொள்ள முடியும். சில் சமயங்களில் மன* அழுத்தம், மாத்திரைகள் இவற்றாலும் கூட இந்த அசிடிட்டி உருவாகிறது. பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெயின் ஆகிய என்சைம்க*ள் அதிக அளவில் உள்ளன.

எனவே இந்தப்பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம். முட்டைக்கோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப்பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் என்னும் அமினோ அமிலம் முட்டைக்கோசில் நிறைய உள்ளது. எனவே முட்டைக்கோஸை சாறகவோ அல்லது சாலட் ஆகவோ அல்லது சூப்பாகவோ அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இஞ்சி டீ குடிப்பது நல்லது. செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி இது விடுகிறது. அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மசாலா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அமிலத்தன்மை நிறைந்த உண*வுகளான தக்காளி, சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

காப்பி, டீ போன்றவைகளை கண்டிப்பாக தவிர்த்து, க்ரீன் டீ குடிப்பது நல்லது. கொழுப்புச்ச்த்துள்ள பால், அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். சீரகம், சோம்பு, புதினா இவற்றை உணவில் அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.