Foods to be avoided for sinus - சைனஸ் வந்துட்டா என்ன சாப்பிடனும்? எ&#2

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
சைனஸ் வந்துட்டா என்ன சாப்பிடனும்? என்ன சாப்பிட கூடாது?


பாரம்பரியத்தின் எச்சமான பாட்டியும், நவீனத்தின் உச்சமாக இருக்கும் பேத்தியும் நடத்தப்போகும் உரையாடலில் உங்களுக்கான மருத்துவத் தேடலும் கட்டாயம் கலந்திருக்கும்.

''பனிக் காலத்துல அடுக்குத் தும்மல் வர்றது... மூக்கடைச்சுப்போய் நீர் வழியறது... தலைவலி... முகமெல்லாம் அதப்பாய் வீக்கமா இருப்பது... இப்படி ஒண்ணா வர்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் அந்தக் காலத்துல 'பீனிசம்’னு சொல்வாங்க. இப்போ யாரைப் பார்த்தாலும், 'சைனஸ், சைனஸ்’னு சொல்றாங்களே... கிட்டத்தட்ட அதுதான் பீனிசம்.'

''பாட்டி, அது சைனஸ் இல்லை. சைனஸைட்டிஸ்; முக எலும்பில் உள்ள இயல்பான பதிவுக்கு சைனஸ்னு பெயர். அதுல அழற்சி வந்து நீரேற்றம் ஏற்பட்டு, சளி சேர்ந்து வதைப்பதுதான் சைனஸைட்டிஸ்.'

'சரி... அந்த சைனஸைட்டிஸ் வந்துட்டா... கொஞ்ச காலம் இனிப்பை மறந்திடணும். பால் கூடவே கூடாது. நீர்க் காய்கறிகளையும் தவிர்த்திடணும்.'

'அது என்ன நீர்க் காய்கறிகள் பாட்டி?'

''எந்தக் காயையெல்லாம் கத்தியால வெட்டறப்ப நீர் அதிகம் வருதோ, அதெல்லாம் நீர்க் காய்கறிகள்தான். சுரைக்காய், பூசணிக்காய், தடியங்காய், தக்காளி, பீர்க்கங்காய் இதையெல்லாம் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆசைப்பட்டு ஒரு வேளை சாப்பிட்டாலும், மிளகுத்தூள் தூவித்தான் சாப்பிடணும்.'

பால்லகூட மிளகு போட்டுச் சாப்பிடலாம்தானே பாட்டி?'
''ரொம்பவும் அவசியம்னு டாக்டர், பால் குடிக்கச் சொல்லியிருந்தா பரவாயில்லை. மத்தபடி தேவை இல்லைம்மா. அப்படி பால் சாப்பிடறபட்சத்துல அதில் மிளகு, மஞ்சள்தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடிக்கலாம். ஆனா, இன்னொரு விஷயம், அப்பக்கூட ராத்திரி, விடிகாலையில் சைனஸைட்டிஸ் தொந்தரவு இருக்கிறவங்க பால் சாப்பிடக் கூடாது.'

 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,989
Location
chennai
#2
Re: சைனஸ் வந்துட்டா என்ன சாப்பிடனும்? என்ன ச&a

tfs sis :thumbsup
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,938
Location
Chennai
#3
Re: Foods to be avoided for sinus - சைனஸ் வந்துட்டா என்ன சாப்பிடனும்? &#2958

Useful sharing sissy :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.