Foods to Fight Cancer - புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுக&#2995

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!

புற்றுநோய் வராமல் தடுக்க, வந்த பின்னும் புற்று செல்களை அழிக்கவல்ல உணவு வகைகளைத் தெரிந்துகொள்வதுடன், தினசரி உணவில் அதை வாடிக்கை யாக்குவதும் அவசியம்.

* திராட்சையின் தோலில், குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவேதான், திராட்சை சாப்பிடுவது புற்று செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள்.

* தக்காளியில் உள்ள விட்டமின் `சி' ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

* புரொக்கோலி, மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துணவு. புரொக்கோலியில் உள்ள ‘இன்டோல் 3-கார்பினோல்’, பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.

* பூண்டு... குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

* தினமும் கேரட் எடுத்துக் கொண்டால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படு வதைத் தவிர்க்கலாம்.

* காளான், உடலில் உள்ள செல்களை வலுவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

* புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி அளிப்பதில், நட்ஸ் மிகச் சிறந்த உணவு. இவற்றில் உள்ள க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.

* பப்பாளியை தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் வரும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வலு தரும். தொடர்ந்து சாப்பிடும்போது, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றும்.

* ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும் இது ஆல்கஹால் என்பதால் அளவாகப் பருகவில்லை எனில் எதிர்விளைவுகள் ஏற்படும்.



புற்றுநோய் சிகிச்சையும்... சில புரிதல்களும்!
* மருத்துவத் துறையில் பெருகியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, புற்றுநோய் குறித்த அச்சத்தை விலக்கி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

* சருமப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களை முழுவதுமாக எளிதில் குணப்படுத்திவிடமுடியும்.

* புற்றுநோயை பொறுத்தவரையில் விரைவில் கண்டறியப்படுவதும், உடனடி சிகிச்சையும்தான் மிக முக்கியம்.

* ஆரம்பநிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்கள் உண்மையில் அதிர்ஷ்டக்காரர்கள். உடனடியாக சிகிச்சையைத் தொடங்கி குணம் பெறலாம்.

* ‘முதல் வாய்ப்பு... சிறந்த வாய்ப்பு!’ என்பது புற்றுநோயின் தாரக மந்திரம் எனலாம்.

* புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின், அது எந்த நிலையென்றாலும் நம்பிக்கை இழக்காமலும், ஒரு நிமிடம்கூட தாமதம் செய்யாமலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: Foods to Fight Cancer - புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுக&a

புற்றுநோயைத் தடுக்கும் ஜூஸ்!

தேவையானவை: கேரட் -1, செலரி - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி -3, எலுமிச்சை -1, தேன் - தேவையான அளவு, தண்ணீர் - 300 மி.லி.

செய்முறை: நறுக்கிய கேரட், செலரி, கொத்தமல்லி, தக்காளியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு மிக்*ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பின்னர் சிறிதளவு எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து, வடிகட்டிப் பருகவும்.

பலன்கள்
*கேரட்டில் பீட்டாகரோட்டின் அதிக அளவு இருப்பதால், கண்களுக்கு நல்லது. பாலி அசிட்டிலீன், ஃபால்கார்சினால், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.

*வைட்டமின் ஏ, ஃபோலேட் சத்து உள்ளது. தயோசயனேட்ஸ், சல்பரோஃபேன் முதலான நுண்ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஃபிளேவனாய்டு சத்துக்களும் உள்ளன.

*தக்காளியில் லைக்கோபீன் உள்ளது. எலுமிச்சைச் சாறு சிறிதளவு சேர்க்கப்படுவதால் வைட்டமின் சி அதிகம் கிடைக்கிறது.

*செலரி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தரும்.

*இந்த ஜூஸை அனைவரும் அருந்தலாம். வாரம் இருமுறை குடித்துவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*இதய நோயாளிகளுக்கு, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நல்ல பலன் தரும், மறதி நோய் தடுக்கப்படும். உடலில் வளரும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும்.
 
Last edited:

vasanthi

Friends's of Penmai
Joined
May 18, 2011
Messages
417
Likes
168
Location
chennai
#3
Re: Foods to Fight Cancer - புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுக&a

payanulla pagirvu
vasanthi
mct
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.