FRIENDS - Help you GOT and GAVE

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#1
Hi Friends,

A FRIEND IN NEED IS A FRIEND INDEED.

We all know this famous saying.

How far it worked for you?

You all may share your experiences, the kind of help towards your friends,
either you got help from them or you gave your help to them.

The help might have been offered to you or to any of your family members.

This may be helpful for others, who would know the kinds of help, which can be offered to others.
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Dear Jayanthy, Very good initiative you have taken on this great friendship day. thank you very much.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#4
முதலில் நான் , என் கணவருக்கு கிடைத்த அரிய உதவியைப் பற்றி கூறுகிறேன் .

6 வருடம் முன்பு நடந்தது இது .

ஒரு நாள், என் கணவர் , ஆஃபிசிலிருந்து, வருவதற்கு இரவு 1 மணி போல ஆகி விட்டது . அதற்குப் பிறகு , லைட்டாக சாப்பிட்டு விட்டு ,படுத்து விட்டார் .

மறு நாள் , நானும் , என் மகனும் சென்னை செல்வதர்க்காக , அவரிடம் சொல்லி விட்டு , டிரைன் ஏறி சென்று விட்டோம் (காலையில் ).

பிறகு , ஒரு 7 மணிக்கே கிளம்பி , ஆஃபிஸிற்கு, பைக்கில் சென்று கொண்டு இருந்தார் . இரவு அவ்வளவு லேட்டாக வந்ததற்க்கு , மறுநாள் லேட் டாகவே போய்ருக்கலாம் .

ஆனால் , வேலை ஜாஸ்தி என்று, கருமமே கண்ணாக , கிளம்பிப் போய்ட்டார் .

வழியில் , ஒரு highway ல போய்ட்டு இருந்த போது, ஒரு செகண்ட் கண்ணயர்ந்து விட்டதால் , அப்படியே தடுமாறி , நடு ரோட்டில் விழுந்து விட்டார் . அது highway என்பதால் , பெரிய பெரிய வண்டிகள் அதிகம் வந்து கொண்டு இருந்து இருக்கும் .

அந்த சமயம் , எதேச்சையாக , பக்கத்தில் ஒரு டீக்கடை இருக்கவும் , அதிலிருந்த கடைக்காரர் , மிகவும் சமயோசிதமாக , ஓடி வந்து , இவரை அவசரமாக இழுத்து , ரோட்டின் ஓரத்தில் போட்டு விட்டு , பிறகு , பைக்கையும் ஓரமாக போட்டு விட்டு, அவசரமாக இவரை ஆராய்ந்து , கழுத்தில் போட்டிருந்த tag இலிருந்து , இவருடய office, பெயர் எல்லாம் தெரிந்து கொண்டு, உடனே , ஆஃபிஸ்க்கு போன் செய்து (இவர் விழுந்தது ஆஃபிஸ் பக்கத்தில் தான் ),அவர்கள் உடனே ambulance எடுத்துக் கொண்டு வந்து , ஹாஸ்பிடல் எடுத்துச் சென்று விட்டார்கள் .

இவருக்கு நினைவே இல்லை . போகும் வழியில் , அவர் ஃபிரண்ட்ஸ் (ambulance இல் கூடவே வந்தார்கள் ) மீது vomit எல்லாம் செய்து இருக்கிறார் . பாவம் அவர்கள், ஒன்றும் கண்டு கொள்ளாமல் , இவரைக் காபற்றவே முனைந்து இருக்காங்க .

ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு , எனக்கு ஃபோன் செஞ்சாங்க . (நல்ல வேளையா, ஃபோன் ல என் பேரை wife னு போட சொல்லி இருந்தேன் நான் .....அவசரத்துக்கு உதவும்னு ). அதைப் பார்த்துட்டு , அவங்க எனக்கு ஃபோன் செய்ய, அப்போ மணி 10.30 க்கு மேல ஆயிடுச்சு . நாங்க டிரைன் ல அரக்கோணம் தாண்டி போயிட்டு இருக்கோம் .

திடீர்னு ஃபோன் ல அவங்க ஃபிரண்ட்ஸ் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் , இவரோட ஃபோன் லேர்ந்தே பேசுறாங்க. டிரைன் ல சிக்னல் சரியா கிடைக்காம , அவங்க எல்லாரும் என்கிட்ட பேச தவிச்சு , ஒரு வழியா, ஒருத்தர் என்கிட்ட பேசி , விவரத்தை சொல்ல, நான் ஆடிப் போயிட்டேன் .

கையில எக்கச்சக்க லக்கேஜ் . சரினு , அவங்க கிட்ட , நீங்களே, இன்னிக்கு ஒரு நாள், யாராவ்து பார்த்துக்க முடியுமா , நான் சென்னை லேர்ந்து , night கிளம்பி , விடிய காலைல வரேன் . இப்போ மதியம் கிளம்பி வந்தா , நடுராத்திரி தான் வர முடியும் , அப்போ சேஃப்டி இல்லை அப்டினு சொல்ல , உடனே அவரோட ஃப்ரெண்ட் ராஜீவ் சரினு சொல்லிட்டார் .

நல்லவேளையா , அவர்க்கு , உயிருக்கு ஆபத்தில்லாம பொழைச்சு வந்துட்டார் .

அந்த டீக்கடைக்காரரை நாங்கள் உயிருள்ளவரை மறக்க முடியாது . எத்தனை பெரிய உதவி . உடல் நிலை சரியானப்புறம் , அவரைப் பார்த்து , பண உதவி செய்யப் போனா , அவர் மறுத்துட்டார்.


 

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#8
ஜெயந்தி கா எங்க இருந்து இப்படி பட்ட topic தேடி எடுத்து இருக்கிங்க....

சூப்பர்...

Everyone must to came out with any incident related to friends…..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#9
Happa Dhik Experience Aunty!! Athum Pakkaththulla neengallum illama..

Tea Kadaikarar um Sari, Uncle Friends um Sari, Great than!

Aamaa da , naan train laye oru 5 min. azhudhuttu, tak nu sudharichu next enna nu seyal pattadhaala, avanga friends kitta help ketka mudinchadhu.

Yes.....avangalai ellam ennikume maraka mudiyadhu.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.