Friendship lasts forever-மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
அன்பு தோழமைகளே,

சமீபத்தில் என்னோட பள்ளியில் படித்த தோழமைகளின் (12ம் வகுப்பு )கெட் டு கெதர் நடந்தது. எல்லோரும் வரணும்னு ரொம்ப கட்டாயப்படுத்தினாங்க. ஒரு நாள் காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரைன்னு டைம் பிக்ஸ் பண்ணாங்க. முன்னாடியே உண்டியல் குலுக்கி வசூல் பண்ணி பக்காவா , பிரம்மாதமா ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. தொலைவில் இருந்து வர்றவங்களுக்கு தங்குறதுக்கு ஏற்பாடெல்லாம் பண்ணி கொடுத்திருந்தாங்க. எங்க கிளாஸ்ல இருந்த 45 பேரும் அன்னிக்கு ப்ரெசென்ட். ஸ்கூல் டீச்சேர்ஸ் கூட வந்திருந்தாங்க . என்னோட செட் எல்லோரும் மீட் பண்ணது செம ஜாலியா இருந்துச்சு.

எல்லோருமே கொஞ்சம் பக்குவத்தோட, ஒரு முதிர்ந்த மன நிலையில், டீன் ஏஜ் விட்டு வெளிய வந்து, கொஞ்சம் உலக அனுபவத்தோட இருக்கோம்னு எங்களுக்கே புரிஞ்சுது. ஒரு ஆறு வருட இடைவெளி எவ்வளவு மாற்றங்களை தருகிறது .......பழங்கதைகள்,எங்களோட சின்ன சின்ன கனவுகள் நிறைவேறியது,இன்னும் விரிந்திருக்கும் கனவுகள்,அரட்டை கச்சேரி ,கேலின்னு பொழுது போனதே தெரியல. பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, மிமிக்ரி பண்ணி எங்கள் நினைவுகளை புதுப்பித்து கொண்டோம்.
இதை ஏற்பாடு செய்த அந்த நால்வர் குழு......(கணேஷ், அமல்தாஸ், செந்தில்வேல்,கேசி நிஷூதன்) படிக்கும் காலத்திலேயே செம காங்குன்னு பேர் வாங்கினவங்க. ஒவ்வொருத்தரும் உலகின் வெவ்வேறு மூலைகளில் இருக்கிறார்கள். ஒருத்தன் ஆஸ்ட்ரேலியா, ஒருத்தன் லண்டன், ஒருத்தன் அமெரிக்கா, ஒருத்தன் ஜெர்மனி ல இருக்கான். ஒருவருஷமா ட்ரை பண்ணி எல்லோரையும் காண்டக்ட் பண்ணி, ஒரு குரூப் form செய்து , அப்டேட் பண்ணி......எல்லோரையும் அசெம்பிள் பண்ணிட்டாங்க.இந்த முயற்சிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றே எல்லோரும் முயற்சி எடுத்து போயிட்டோம்.
Gulf ல இருக்க பிரெண்ட்ஸ் கூட வந்துட்டாங்க.

எங்க டீச்சர்ஸ்கு ரொம்ப சந்தோஷம். உங்களை எல்லாம் பார்க்கும் போது பெருமையா இருக்குன்னு சொன்னப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

இந்த பார்ட்டியில் எனக்கு பிடித்த விஷயங்கள்.

1. ஆரோக்கிய பழச்சாறு மட்டுமே அனைவருக்கும் வழங்க பட்டது.

2. சிறு தானிய உணவு வகைகள், பழங்கள், விதம் விதமான சாலட் வகைகள், எண்ணையில் பொரித்து எடுக்காத சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டது.

3.என்னுடைய யோசைனையாக எல்லோருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. எல்லோரும் எங்களோட இந்த சந்திப்பின் நினைவாகவும்,நட்பின் அடையாளமாகவும் அதை பராமரிக்கணும்னு முடிவு செய்திருக்கிறோம். அந்த மரத்தின் வளர்ச்சியை அப்பப்போ அப்டேட் பண்ணனும்னு சொல்லி இருக்கிறோம்.

4. அந்த நாலு பேரும் சேர்ந்து happy new year ஹிந்தி மூவில இருந்து indiawale சாங்குக்கு ஆடின டான்ஸ் கலக்கலோ கலக்கல். அதை விட அவங்க வணக்கம் சென்னையில் இருந்து பாடின சென்னை சிட்டி gangster சாங் செம தூள்.

இன்னொரு விஷயம் கவனித்தேன். பொண்ணுங்க எல்லோரும் தங்களுக்குன்னு ஒரு துறையை தேர்ந்து எடுத்திருந்தோம். ரொம்ப குறைந்த சதவீதம்தான் திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார்கள். எல்லோருக்குமே தன் காலில் நிற்க வேண்டும்னு எண்ணம். பெற்றோர்கள் அனுமதித்தது குறித்து ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு தெளிவோட இருக்கோம்னு மனசுக்கு நிறைவாகவும் இருந்தது.

காலையில் எல்லோரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து மாலையில் frame போட்டு கொடுத்துட்டாங்க. பிரியும் நேரம் மனதில் கனமான உணர்வு......அதையும் மீறிய மன நிறைவு.


அந்த நால்வர் குழுவிற்கு நெகிழ்ந்து நன்றி சொல்லி நிதர்சன உலகிற்கு பயணித்தோம்.

@Alagumaniilango @bharathi saravanan @deepikarani @durgasakthi @gkarti @jv_66 @kodiuma @Mary Daisy @Parasakthi @rifan @saidevi @salma @sarayu_frnds @Subhasreemurali @sumathisrini @sumitra @umasaravanan @Vimalthegreat @kkmathy @S.B.Chaithanya @saveetha1982 @laddubala @lathabaiju @RathideviDeva @thenuraj @sarayu_frnds @jash @rosei @selvipandiyan @naanathithi @ishitha @selvipandiyan @ponschellam @sujivsp
 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#2
Re: மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்

Hey Jaya,

Super da... sema jolly-ah irundhu irukkum illa? Indha get together arrange pannina andha 4 youths-kkum neenga kadippa thank pannanum.


1. ஆரோக்கிய பழச்சாறு மட்டுமே அனைவருக்கும் வழங்க பட்டது.

2. சிறு தானிய உணவு வகைகள், பழங்கள், விதம் விதமான சாலட் வகைகள், எண்ணையில் பொரித்து எடுக்காத சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டது.

3.என்னுடைய யோசைனையாக எல்லோருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. எல்லோரும் எங்களோட இந்த சந்திப்பின் நினைவாகவும்,நட்பின் அடையாளமாகவும் அதை பராமரிக்கணும்னு முடிவு செய்திருக்கிறோம். அந்த மரத்தின் வளர்ச்சியை அப்பப்போ அப்டேட் பண்ணனும்னு சொல்லி இருக்கிறோம்.Migagum paarattapada vendiya vishyam idhu.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
Re: மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்

Hey Jaya,

Super da... sema jolly-ah irundhu irukkum illa? Indha get together arrange pannina andha 4 youths-kkum neenga kadippa thank pannanum.
Migagum paarattapada vendiya vishyam idhu.
aamaam sis.....

naanga sonna thanks la avanga kannum kalangiduchu.....

yellorum varuvaangannu avangaley expect pannala......

yen vaazhkkaiyil marakka mudiyaadha naal sis.....

yengalai pathi yengalukkey chinnadha oru perumai kalandha santhosham kidaithadhu.......:)
 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#5
hi j machi!

thanks for tagging!

Friendship is not a big thing; but it's a million little things

nalla enjoy panirupa kalakku :cheer:

intha get together arrange panna antha four friends ku :yo:
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#7
வாவ் ..சூப்பர் ஜெயா...

கேட்கவே ரொம்பவும் சந்தோசமா இருக்கே..
 

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,045
Location
Theni
#8
Hai jai clm..apo kuda thinguratha paathi tha list ah d..alasu d..kalakiyatchhu pola.un msg'laye hapy,varuthum'nu pala kalava therithe clm......:cool::cool:...apo jai happy thana machi....
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#10
நாம் கால சக்கரம் வழியாக பின்னோக்கி செல்ல முடியா விட்டாலும், இது போன்ற சந்திப்புகள், நம் நினைவை பின்னோக்கி இட்டுச்சென்று ஒரு உயோரோட்டமான சந்தோஷ நிகழ்வாக்குகின்றன.


செம்ம கலக்கல் சந்திப்பு, அந்த நான்கு பேரின் பெருமுயற்சி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.