Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்தசோகை, இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம். விஷகிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாபழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அலற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும் சிறுநீர்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு இருமலை குணப்படுத்தும்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
ஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பழித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
திராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் பயிறு, மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
எலுமிச்சை: எலுமிச்சை சாற்றுடன் சிறிய இஞ்சித்துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறியபிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல் நின்றுவிடும். சூடான டீயில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை சிறுநீர் தொந்தரவுகள் வராது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
பேரீட்சை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீட்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும் புதிய ரத்தம் உண்டாகும்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.