funny myths that 90s-kid believed

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,326
Likes
12,785
Location
chennai
#1
90s கிட்ஸ் நம்பி ஏமார்ந்த 10 கோமாளித்தனமான விஷயங்கள்!

ஏன் இந்த விஷயம் 90s கிட்ஸ்க்கு மட்டும் பொருந்தும்ன்னு சொல்றதுக்கு நிறைய காரணம் இருக்கு. முதல் காரணம், இந்த ஜெனரேஷன் குழந்தைங்க ரொம்பவே புத்திசாலிங்க. நாம ஏதாவது தப்பா சொல்லிட்டா கூட, போய் கூகுள் பண்ணி பாருங்கன்னு சொல்லி விரட்டி விட்டுறாங்க.

இன்னொன்னு, எது மூட நம்பிக்கை, எது சயின்ஸ் ரீதியான ரியாலிட்டின்னு இவங்க சரியா பிரிச்சு பார்க்குறாங்க. அதனால தான் WWE-க்கே ட்விட்டர்ல நல்ல நடிகரா தேர்வு பண்ணுங்க... வரவர நடிப்பு சரிப்பட்டு வரலன்னு கலாய்ச்சு தள்ளுறாங்க.

ஓகே! இப்போ விஷயத்துக்கு வருவோம்! நீங்கள் 90s அல்லது 80 டெயிலெண்டர் கிட்ஸா இருந்தா... உங்களுக்கு இது ஒரு நல்ல டைம் டிராவலா இருக்க வாய்ப்புகள் கொஞ்சம் இருக்குன்னு நெனைக்கிறேன்.


நாம் சின்ன பிள்ளையா இருந்தச்சே... நாமே ஏதாவது கலாட்டா பண்ணிடுவோம்ன்னு பயந்துட்டு... நம்மள சில விஷயம் பண்ண விடாம பயமுறுத்தி வெச்சிருப்பாங்க நம்மள பெத்தவங்க.

இப்போ அத எல்லாம் நெனச்சு பார்த்தா... அட கோமாளி பயலே... இத எல்லாமா நம்பி ஏமார்ந்தோம்ன்னு சொல்லி சிரிச்சுப்போம்.


மரம் முளைச்சிடும்!

பல 90s கிட்ஸ் தர்பூசணி பழம் சாப்பிட பயந்ததுக்கு ஒரே காரணம்.. அந்த விதைய விழுங்கிட்டா வயித்துக்குள்ள மரம் முளைச்சிடும்ங்கிற பயம் தான். விதைய விழுங்காம தர்பூசணி சாப்பிட பயமுறுத்த போயி, அந்த பழத்தையே விவரம் தெரியிற வரைக்கும் சாப்பிடாம இருந்தவங்க பலபேர். ஏன், அதுல் நீங்க கூட ஒருத்தரா இருக்கும் யாருக்கு தெரியும்...

வயிறு ஒட்டிக்கும்!

தர்பூசணி விதை போல, இன்னொரு விஷயம் இருந்துச்சு அதுதான் சூயிங்கம். சூயிங்கம் விழுங்குனா வயிறு ஒட்டிக்கும்ன்னு சொல்வாங்க. இது ரொம்பவே அரிதான விஷயம். ஆனா, இதுல உண்மையும் இருக்கு. ரொம்ப சின்ன குழந்தைகள் சிலருக்கு சூயிங்கம் தொண்டையில சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவங்களும் நம்ம உலகத்துல நடந்திருக்கு. ஆனாலும், வயிறு ஒட்டிக்கும்'ன்னு சொன்னது எல்லாம் ஆகாச புழுகல்!

எப்படி நான் பொறந்தேன்...?

90s கிட்ஸ்ல 99.99% பேர் இந்த கேள்விய கேட்டு அவங்க பெத்தவங்கள நச்சரிச்சிருப்பாங்க. ஆனாலும், அவங்களும் சங்கடமே இல்லாமா, எல்லாரும் ஒரே பொய்ய சொல்லி பரப்பிவிட்டாங்க. அதாவது, அம்மாவும் அப்பாவும் ராத்திரி படுத்து தூங்கிட்டு இருந்தாங்களாம்... அப்போ திடீர்ன்னு ஓர் தேவதை வந்து பாப்பாவ அவங்க நடுவுல வெச்சிட்டு போயிடுச்சாம்... இப்படி ஒரு புழுகல் பதில் கேட்டுட்டு சிலர் அந்த தேவதைய பார்க்கணும்ன்னு சொல்லி அழுத கதை எல்லாம் இருக்கு.

ஏழு உயிரு!

அண்டர்டேக்கருக்கு ஏழு உயிரு இருக்கு தெரியுமான்னு ஒருத்தன் சீறிட்டு வருவான்... உடனே இன்னொருத்தன் போடா... அவனுக்கு 100 உயிர் இருக்கு... ஏன் எனக்கு ஆயிரம் இருக்கு தெரியுமா என்று கத்திக் கூச்சலிட்டு சண்டைக் கட்டிக் கொண்ட காலமும் இருந்தது. அட! அதுவும் ஒரு சூதாட்டம்ங்கிறது வேலைக்கு போற வரைக்கும் தெரியில. ஏன் இன்னமும் சிலர் தங்களை கிட்ஸாவே நெனச்சு WWE பார்த்து வாழ்ந்துட்டு வராங்க. அவங்கள எல்லாம் என்ன பண்றது?

பாம்பு பழிவாங்கும்!

வீட்டுக்குள்ள வர பாம்பு வந்துட்டா அடிக்க கூடாதும், அப்படியே அடிச்சுட்டாலும் கொன்னுடனும்... இல்லைன்னா அந்த பாம்பு நம்மள எத்தன ஜென்மம் ஆனாலும் வந்து பழிவாங்காம விடாதுன்னு சொல்லி பயமுறுத்தி வெச்சிருந்தாங்க. ஆனால், சில வகை பாம்புகள் பத்து வருடங்கள் வரையும், அதிகபட்சம் 20 - 30 வருடங்கள் வரை வாழும் பாம்பு வகைகள் சிலவன இருக்கின்றன என்பது தான் உண்மை. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு... பாம்பு மனுஷனா மாறி வரும்ங்கிறது!
 
Last edited:

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,326
Likes
12,785
Location
chennai
#2
கெட்ட கனவு!

தலையணைக்கு கீழ கத்தி இல்ல ஏதாவது இரும்பு பொருள் வெச்சு தூங்குனா கனவுல பேய் வராது. எத நெனச்சுட்டு படுக்குறமோ, அது தான் கனவுல வரும்கிறத தெரிஞ்சுக்கிட்டு... பேய் வராதுன்னு ஒரு நம்பிக்கைய கொண்டுவர இப்படி எல்லாம் புத்திசாலித்தனமா யோசிச்சிருக்காங்க... எது என்னவோ... இதெல்லாம் நம்பி ஏமார்ந்து பல்பு வாங்குனது நம்மைத்தானே!


பேய் வராது...

பெட்ரூம்ல சாமிப்படம் வெச்சா பேய் வராது...! பேய் இருக்கா, இல்லையாங்கிறதே பெரிய கேள்வி... இதுல சிலர் விஷ்ணு படம் வெச்சா தான் பேய் வராதுன்னு வேற சொல்வாங்க. வர பேய் முஸ்லிம் பெயாவோ, கிறிஸ்டியன் பேயாவோ... இருந்தா என்ன பண்ணுவீங்க?ன்னு அப்பவே கேள்வி கேட்டிருக்கணும். இந்த காலத்து குழந்தைங்க எல்லாம் ஐ-மேக்ஸ் தரத்துல எச்,டி குவாலிட்டியில பேய் படத்த ரசிச்சு பாக்குதுங்க.

சண்டை வந்திடும்!

வாசலுக்கு வெளிய செருப்ப தலைகீழா கழட்டி விட்டா குடும்பத்துல சண்டை வந்திடும். இது எத்தன பேருக்கு நினைவிருக்குன்னு தெரியல. இதெல்லாம், இந்தியா முழுவதும் நம்பப்பட்டு வந்த பொய். முக்கியமா 90s கிட்ஸ். செருப்பா ஒழுங்கா கழட்டிவிடாட்டி எப்படி கழட்டி விடனும்ன்னு டெமோ கொடுத்து பழகியிருக்கணும். அதவிட்டுட்டு குடும்பத்துக்குள்ள சண்டை வரும்ன்னு சொல்லி பச்ச மண்ண ஏமாத்துறது பேத்தனமா இல்ல...!


வெட்டுக்கிளி குட்டிபோடும்!

அதுபாட்டுக்கு அங்குட்டும், இங்குட்டும் குதிச்சு, குதிச்சு பறந்துட்டு இருக்கும்... அத வம்படியா பிடிச்சு... பென்சில் பாக்ஸ்குள்ள போட்டு மூடி வெச்சு.. இது குட்டி போடும்ன்னு நம்புனது... இன்னும் சிலர் மண்ணுல போட்டு புதைச்சு தினமும் தண்ணி அது பெரிசாகும்ன்னு நம்பினது எல்லாம் வேற லெவல். இப்ப இருக்குற குட்டீஸ்க்கு வெட்டுக்கிளின்னு ஒன்னு இருந்ததே தெரியாம போச்சு. அழிச்சுட்டோம். ஆனா, அதுக்கு பென்சில் பாக்ஸ் குள்ள போட்டு வெச்சது காரணம் இல்ல. எல்லாம் நம்ம அதிநவீன வாழ்க்கையோட தாக்கம்!


புளூ ரப்பர் இன்க் அழிக்க...
ஸ்கூல் படிக்கும் போது சிவப்பு, நீலநிறத்தில் இருந்த ரப்பர் நமக்கு மிகவும் பரிச்சயம். அதில் அந்த நீல நிற பகுதியான இன்க் அழிக்க உதவும் என்று நம்பி, எச்சில் தொட்டு அழித்து பேப்பர் கிழிந்தது மட்டும் தான் மிச்சமானது. ஆனால், உண்மையில் அந்த சிவப்பு நிற பகுதி அதற்கு பயன்படுத்த அல்ல. மட்டி ரக கடினமான பேப்பரில் எழும் போது சிவப்பு பகுதி சரியாக அழிக்காது, எனவே தான் நீலநிற பகுதி தரப்பட்டிருந்தது.
கால தாண்டக் கூடாது!

பெரியவங்க கால நீட்டி உட்கார்ந்து இருக்கும் போது, படுத்துட்டு இருக்கும் போது அவங்க கால தாண்டி நடக்க கூடாது. அப்படியே தாண்டி போனாலும், திரும்ப ரிவர்ஸ்ல அப்படியே வந்து சுத்தி போகணும். ஏன்னா, இது அவங்களுக்கு ஆகாது, கெட்டது நடந்திடும்ன்னு சொல்லுவாங்க. இன்னும் இந்த மாதிரி, என்ன எதுன்னு நாம கேள்வி கேட்காத ஒரே காரணத்துனால எம்புட்டு விஷயம் சொல்லி ஏமாத்தியிருக்காங்க.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#5
எங்க வீட்டுல எப்போவுமே நடக்கிற கிண்டல் தான் இது!!!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.