: General Health Problems

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
:நோய்களை குணப்படுத்தும் வெங்காயம் -- நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால்
பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.
மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#2
உடல் நலத்தை பாதுகாக்கும் முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் :-
முள்ளங்கி. வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் கொண்ட காய். இதிலுள்ள ஃபோலேட், நார்ச்சத்து, தாதுச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகிய அனைத்தும் முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான விஷயங்களில் இருந்து நம்மைக் காக்கக்கூடியவை. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய குணம் முள்ளங்கியில் உள்ளது. முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். மாவுச்சத்து இல்லாத காய் இது என்பது குறிப்பிடத் தக்கது. சாலட்டுகளில் சேர்க்கும் போது, ஒருவித காரத் தன்மையுடன், நறுக்கென்ற ருசியையும் கொடுக்கக்கூடியது.
நீரிழிவு உள்ளவர்களும் அல்லது எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு வரலாம் என்கிற நிலையில் இருப்போரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உச்சத்துக்குப் போகாமலிருக்க மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். முள்ளங்கிக்கு அதில் முதலிடம். ஆனால், ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை முள்ளங்கியை சாப்பிட்டு மட்டுமே சரிக்கட்ட முடியாது என்பதும் முக்கியமான தகவல்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
ஆற்றல் - 16 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட் - 3.4 கிராம்
புரதம் - 0.68 கிராம்
தயாமின் - 0.012 மி.கி.
ரிபோஃப்ளோவின் - 0.039 மி.கி.
நியாசின் - 0.254 மி.கி.
வைட்டமின் பி6 - 0.071 மி.கி.
வைட்டமின் சி - 14.8 மி.கி.
கால்சியம் - 25 மி.கி.
இரும்பு - 0.34 மி.கி.
மக்னீசியம்- 10 மி.கி.
மாங்கனீசு - 0.069 மி.கி.
பொட்டாசியம் - 233 மி.கி.
துத்தநாகம் - 0.28 மி.கி.

குளிர்ச்சியானது
முள்ளங்கி குளிர்ச்சியான தன்மை கொண்டது. அதனுடைய கடுமையான வாசனையும் குளிர்ச்சியான தன்மையும் சீன மருத்துவத்தில் கொண்டாடப்படுபவை. வெயில் அதிகமுள்ள மாதங்களில் ஏற்படுகிற வெம்மையைத் தணிக்கும் மருந்தாகவே அங்கு முள்ளங்கியைப் பயன்படுத்துகிறார்கள்.
தொண்டைக்கு இதமானது
முள்ளங்கியின் காரத்தன்மையும் வாடையும் உடலிலுள்ள அதிகப்படியான சளியை விரட்டி, ஜலதோஷம் பிடிக்காமலிருக்க உதவும். சைனஸ் தொந்தரவிலிருந்து விடுதலை கொடுத்து, கரகரப்பான தொண்டைக்கு இதமும் தரக்கூடியது முள்ளங்கி.
செரிமானத்தை சீராக்கும்
இயற்கையாக ஜீரண மண்டலத்தை சுத்திகரிக்கக்கூடிய இயல்பு இதற்கு உண்டு. பல வருடங்களாக உடலில் படிந்த உணவு நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்றக் கூடியது.
வைரஸ் தொற்றைத் தவிர்க்கும்
இதிலுள்ள இயற்கையான சுத்திகரிப்புத் தன்மையும் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தும் வைரஸ் தொற்று ஏற்படாமல் காக்கக்கூடியவை.
நச்சுகளை வெளியேற்றும்
சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் முள்ளங்கிக்கு நச்சுகளை முறிக்கிற தன்மை உள்ளதாகவும் புற்றுநோய்க்குக் காரணமான தன்மைகளை வெளியேற்றும் குணம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
புற்றுநோயுடன் போராடும்
பிராக்கோலி, முட்டைகோஸ் போன்ற குறுக்கு வெட்டுக் காய்கறிக் குடும்பத்தைச் சேர்ந்ததால் முள்ளங்கியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ், தாதுச்சத்துகள், வைட்டமின்கள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியவையாக இருக்கின்றன.
அஜீரணத்துக்கு மருந்தாகும்
வயிற்று உப்புசத்தைப் போக்கி, வயிற்றுப் பொருமலை சரியாக்கி, இதமான உணர்வைக் கொடுக்கக் கூடியது. குறைந்த கலோரியும் அதிக ஊட்டமும் கொண்டது ஒரு கப் முள்ளங்கி எடுத்துக் கொண்டாலுமே அதில் 20க்கும் குறைவான கலோரிகளே இருக்கும் என்பதால், எப்போதும், எந்த உணவுடனும் இதைச் சேர்த்து உண்ணலாம். குறைந்த கலோரி கொண்டதானாலும் அதிக ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
உடல் வறட்சியை விரட்டும்
முள்ளங்கியில் நீர்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகச் சத்தும் அபரிமிதமாக உள்ளன. இது திசுக்களுக்கு ஊட்டமளிக்கவும் உடல் வறண்டு போகாமலும் சருமம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#3
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்:-
பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். பீர்க்கங்காயை முற்றிய பிறகு தான் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்!
சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன. 100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது.
கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.
நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். 100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான்.
எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது.
நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும். இதன் பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாய்த் திகழ்கின்றன.
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.
பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது. இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்;
ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும். கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#4
முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.
புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் தலா 100 மிலி அளவில் எடுத்து கால் கிலோ தேனுடன் சேர்த்து காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். இதை காலை மாலை இரு வேளையும் 15 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
கொத்தமல்லிச் சாறில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் உணவுக்கு முன் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
கை அளவு கறிவேப்பிலையை மூன்று மிளகு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.
வெங்காயத்தாளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.
முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை ஊற வைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
பிரண்டையின் இளந்தண்டை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட, சுவையின்மை, ருசியின்மை நீங்கி, நன்றாகப் பசி எடுக்கும்.
தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
முடக்கத்தான் கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
நல்வேளைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
ஆரைக்கீரையைப் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் நல்ல ருசியும் பசியும் உண்டாகும்.
புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
சுக்காங் கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
முள்ளிக்கீரையை மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
துயிலிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
பாற்சொரிக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து அதிகாலையில் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
சாணாக்கிக் கீரையை மிளகு, பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்








 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#5
பூண்டு என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது, இதயம் காக்கும், கொழுப்பைக் கரைக்கும் சிறந்த உணவுப் பொருள் என்பதுதான். பூண்டுக்கு இந்தச் சிறப்பு மட்டுமல்ல, மேலும் ஏராளமான, தாராளமான மருத்துவக் குணங்கள் பூண்டுக்குள் உறைந்திருக்கின்றன.
வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பூண்டில் உள்ளஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சினைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.
இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தொண்டை பிரச்சினைகளுக்கு விடைகொடுக்கும் பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள், தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.
தொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன. அதேவேளையில் பூண்டை பச்சை யாகச் சாப்பிட்டால், ஈறுகளில் சிறிது எரிச்சலை உண்டாக்கும் என்பதும் ஞாபகமிருக்கட்டும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#6
மூட்டு வலிக்கான காரணங்களும், குழந்தைகளை பாதிக்கும் மூட்டு வலி:-
ஜுரம், அடிபடுதல், காசநோய், அம்மை நோய் போன்ற நோய்கள் வந்த குழந்தைகளுக்கு இந்த மூட்டு வியாதி வரலாம். 16 வயதுக்கு குறைந்தவர்களை இவ்வியாதி தாக்குகிறது. ஒரு மூட்டு அல்லது பல மூட்டுகள் பாதிப்படையலாம்.
ஆரம்ப அறிகுறியாக குழந்தைகள் இரவு நேரத்தில் மூட்டு வலி ஏற்பட்டு கத்துவார்கள். நடக்க சிரமப்படுவார்கள். இந்த வியாதியை சரியான முறையில் கண்டறிந்து குணப்படுத்தா விட்டால் மூட்டுகள் அழிந்து அதன் வலுவையும், செயலையும் இழக்க கூடும். எனவே நோயை சரியான முறையில் நிர்ணயம் செய்து மருத்துவம் புரிய வேண்டும்.
ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்:-
இந்த வாதம் 20 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரக்கூடியதாகும். இதில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இதன் அறிகுறிகளாக அதிகாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக காணப்படும்.
முதலில் கை, கால்களில், விரல் மூட்டுகளில் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட மூட்டுகளை பாதிப்படைய செய்கின்றன. ரத்தத்தில் ஆர்ஏஎப் சோதனை மூலம் நோய் நிர்ணயமாகி இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக இது பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் கூட வரலாம்.
மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்கள் இவற்றிலும் பாதிப்பு உண்டாக கூடும். இவ்வாதத்தில் முக்கிய அறிகுறியாக மூட்டுகளில் சிறு, சிறு கட்டிகள் உண்டாகி மூட்டுகளின் அசைவற்ற தன்மைக்கு ஒரு காரணமாகிறது.
மூட்டுகளின் அமைப்பு மாறி வாத்து கழுத்து போல் ஆகும். கட்டை விரல் `இசட்' வடிவில் ஆகும். இது ஒரு கொடிய வியாதி. இதற்கு முறையான மருந்துகள் நீண்டநாள் எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுப்படுத்த முடியும்.
பெரியவர்களை பாதிக்கும் மூட்டு வலி:-
பெரியவர்களை பாதிக்கின்ற மூட்டு வலியை தேய்வு வாதம் என்றும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் என்று அழைக்கிறோம். பொதுவாக 55 முதல் 70 வயதுள்ளவர்களை பாதிக்க கூடிய இந்நோய் தற்போது 35 வயதுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது.
இந்த வாதம் அடிபட்டதினால், எலும்பு முறிவினால், ஹார்மோன் கோளாறுகளினால், அதிக நடையால், அதிக எடையால் வரக்கூடும். சில பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்திலும் பாதிக்கப்படுகிறார்கள்.
மூட்டுப்பகுதி வெளிப்புறமாக வளைந்து நடக்க முடியாமல் வலியால் துடிப்பது நோயின் முற்றிய நிலை ஆகும். பரிசோதனைகளால் நோய் நிர்ணயிக்கப்பட்டு தகுந்த ஓய்வுடன் கூடிய மருந்துகள் கொடுத்து இந்த வியாதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இளவயதினர் பூரணமாக சுகம் பெறுவர்.
சோரியாட்டிக் ஆர்த் ரைடிஸ்:-
காளாஞ்சக படை என்ற தோலில் உண்டாகும் செதில் உதிர்வு நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை பெறாமல், பராமரிக்காமல் இருந்தால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட்டு அசைக்க முடியாமலும், எலும்பு தோற்றத்தில் நெளிந்தும் குறுகியும், விகாரமாக தோன்றும். நகக்கண் நிறம் மாறியும், சதை துருத்தியும் காணப்படும்.
சோரியாஸ் வந்தவர்கள் அதற்கு முறையான சிகிச்சை செய்யாத போது இந்த கொடிய வியாதியின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். ஆகவே இதற்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் நல்ல சுகம் பெற முடியும்.
முடக்குவாதம்:-
மூட்டு எலும்புகளின் உள்ளேயும், வெளியேயும் யூரிக் அமிலத்தின் படிமங்கள் படிவதின் காரணமாக முடக்குவாதம் ஏற்படுகிறது. தொடக்க நிலையில் இந்த வியாதி இரவு நேரங்களில் கால் பெருவிரல் வீக்கம் உண்டாகி சிவந்த பளப்பள தோற்றத்துடன் கடுமையான வலிகளுடன் ஏற்படுகிறது.
நாளடைவில் பிற மூட்டுக்களையும் பற்றி மூட்டுகள் செயல் இழந்த நிலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்த வியாதி பியூரன்களால் இப்படி ஆகிறது. மனித உடலில் சராசரியாக 70 சதவீதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.
இந்த அளவு குறைகின்றபோது இவ்வியாதி வர வாய்ப்பாகிறது. இவ்வியாதி பெண்களை விட ஆண் களுக்கே அதிகமாக காணப்படுகிறது. எனவே மூத்திர நாளங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும், யூரிக் அமிலம் உடலில் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
எளிய வழிமுறைகள்:
மூட்டு வலிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எளிய வழிமுறைகள்:-
இயற்கை உணவு முறை பழக்கவழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.
அதிக புளி, காரம், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மதுபானம், மாது, மாமிசத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது.
. வாழைக்காய், உருளைக்கிழங்கு, முட்டை போன்ற வாயுவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குடிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீரையும், குளிப்பதற்கு வெது வெதுப்பான நீரையும் பயன்படுத்த வேண்டும்.
தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.
. நோயின் தன்மை அதிகமாய் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை கலந்து ஆலோசித்து மருத்துவம் செய்யவேண்டும்
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#7
கீரையில் உள்ள சத்துக்கள் ....
வெந்தயக் கீரை : கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)
புளிச்ச கீரை :
இரும்புச் சத்து 2.28 மி.கி. வைட்டமின் ஏ 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். (கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும்)

முட்டைகோஸ் : வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.
முருங்கைக் கீரை : வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
கறிவேப்பிலை : வைட்டமின்ஏ 75000 மைக்ரோகிராம் கால்ஷியம் 830 மி.கி. ·போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.
புதினா கீரை : போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.
கொத்தமல்லி : கால்ஷியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது.
மணத்தக்காளி: இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன. வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும்
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#8
கால் ஆணி நீங்க - இயற்கை வைத்தியம்
பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.
அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு.
கால் ஆணி ஏற்படக் காரணம்:
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.
கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ம் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
காலுக்குப் பொருந்தாத சிறிய அள வு செருப்புகளைப் பயன்படுத்தவ தாலும், வெறும் காலில் நடப்பதா லும் கூட கால் ஆணி ஏற்படும்.
கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.
கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:
வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்.
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக் கும் இடங்களில் தடவி வரவும்.
அம்மான் பச்சரிசி செடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் செடியை உடைச்சு, அதில் இருந்து வரும் பாலை எடுத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.
மருதாணி இலை கொஞ்சம், மஞ்சள் துண்டு கொஞ்சம் இரண்டையும் எடுத்து நன்றாக மையாக அரைக்கவேண்டும் . ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதிற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்தால் குணமாகிவிடும்.
இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.
மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்








 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#9
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ*ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
உதடு வெடிப்புக்கு...

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#10
தலைவலி,தலைபாரம் குறைய
துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
தலை வலி...குறைய:
ஒற்றை தலைவலி...குறைய
துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.

தலைசுற்றல் குறைய
நெல்லி வற்றல், பச்சைபயறு இரண்டையும் 200 கிராம் அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க தலைசுற்றல் குறையும்.

இஞ்சி சாறு, தேன் கலந்து தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.
ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
தலைவலி தீர
கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்.
எலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.
இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.
ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.
மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.
இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.
சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.
மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.
அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.
எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .
குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.
இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க
தலைவலி குணமாகும்.

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .
உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.
தீராத ஒற்றைத் தலைவலி.
விடாத தலைவலி.
எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

தீராத தலைவலி.
பயணத்தின் போது தலைவலி.
வேலையின் போது தலைவலி.
சிந்தனையின் போது தலைவலி.

குப்பைமேனி இலை மற்றும் பூ - 1 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவவும்.
சளித் தொல்லை
ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.