Give Priority to your Spouse - கணவன்மார்களே மனைவிக்கு முன்னுரி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கணவன்மார்களே மனைவிக்கு முன்னுரிமை தாருங்கள்




இல்லறம் சிறக்க மணமக்களுக்கு எளிய சில ஆலோசனைகள். இதில் இரண்டு விதமான ஆலோசனைகள் அவசியம் ஆனது. ஒன்று

மனோரீதியானது இன்னொன்று உடல் ரீதியானது.

• தம்பதிகள் இருவரும் கருத்தொருமித்தவர்களாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டுதான் நம் பெரியவர்கள் ஈருடல்

ஓருயிர் என்றார்கள். வாழ்க்கை யெனும் ஒரு வழிப்பாதையில் இருவர் பயணிக்கும்போது ஒருமித்த கருத்து அமைந்திருக்கு மெனில்

வாழ்க்கை இனிக்கும். அன்பு மணக்கும். கருத்து ஒற்றுமை நிகழமணமான புதிதில் தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசவேண்டும்.

ஒருவர் பேச்சை இன்னொருவர் கேட்க வேண்டும்.

• நாம் எப்படி உணர்வுகள் கொண்டிருக்கின்றோமோ, அதே உணர்வு, தனது வாழ்க்கை துணைக்கும் தனது வாழ்க்கை துணைக்கும்

உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்பத்திலும் துன்பத்திலும்

சமமாக பங்கேற்க இயலும்.



• இன்றைய மணமக்கள்தான் நாளைய தம்பதிகள். இருவரும் இல்லறம் தொடங்கிய நாள் தொட்டு அன்பின் அடிப்படையில் ஒருவர் மீது

ஒருவர் நம்பிக்கை கொள்வது அவசியம். பல தம்பதிகளிடம் நடைபெறும் சண்டைகளில் பிரதானமாக பரஸ்பரம், நம்பிக்கையின்மை

இல்லாததை காண முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை வீண் சந்தேகத்தை விரட்டி அடிக்கும்.

•கணவனோ, மனைவியோ, ஒருவர் மீதான இன்னொருவரின் பாராட்டுதல்கள், விமர்சனங்கள், ஊக்கமளித்தல் அவசியம் ஆகும். இதன்

காரணமாக ஒருவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகளை ஜீரணித்து கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும்.

•கணவன்தான் ஆண், தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்கிற ரீதியில் செயல்பட கூடாது. மனைவியும் அற்பதனமான விசயங்களை

தனது பிரச்சினையாக்கி, அதற்கு கணவன் செவிமடுக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஒருவர் பிரச்சினையை இன்னொருவர்

பொறுமையாக கேட்க வேண்டும். விவாதிக்க வேண்டும். சரியான முடிவை நோக்கி ஆலோசிக்க வேண்டும்.

• கணவனோ, மனைவியோ அழகுணர்ச்சி அவசியம். பெரும்பாலான தம்பதிகள் திருமணமான புதிதில் பாதுகாக்கும் தங்கள் அழகை,

உடம்பை நாளடைவில் அக்கறையின்றி விட்டுவிடுவார்கள். இது தவறு. தங்கள் உடம்பை, அழகை பேணி பாதுகாப்பது தம்பதியருக்கு

இனிமையான நிமிடங்களையும், நல்ல எண்ணங்களையும் உருவாக்கி தரும்.

• நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சனைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது.

அந்தப் பிரச்சனைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல், அல்லது தெரியாமல் நாம் கஷ்டப்படும் போது தீர்வுகளை

நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள்

சிக்கல்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள்.

பெண்களிடம் ஆலோசனைகளை கேட்க கூடாது, கேட்பது அபசகுணம், அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும்

போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் முதலில் மனைவியின் அறிவுரை கேட்பது

மிகவும் நல்லது. இது உங்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதலை உருவாக்கும்.
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#2
Re: கணவன்மார்களே மனைவிக்கு முன்னுரிமை தார&#300

Very nice article. I wish this message reaches the husbands. TFS Lakshmy sis.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.